தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 06, 2016

மன்னிப்பு Sorry മാപ്പ് மன்னிசிமிந்தா माफ Nagsisisi క్షమించు أســف சமாவென்னே


பஞ்சாயத்துகள் நடக்கும்போது சிலபேர் மன்னிப்பு கேட்க வேண்டும், என்கிறார்கள் இதனால் ஏதும் பிரயோஜனம் உண்டா ? பலபேர் மத்தியில் தன்னை அவமானப் படுத்தி விட்டானே ? என மேலும் பகை வளர்வதற்குத்தான் வழி உண்டாக்குமே தவிற வேறு பயனில்லை, அவர்கள் ஆத்மார்த்தமாய் தான்செய்தது தவறு என உணர்ந்தார்கள் என்றால் அதுதான் எதிராளிக்கு வெற்றி இந்த மாதிரி அகிம்சை வழியில் வென்றவர்கள் குறைவானவர்களே ! மேலும் பகை வளர்த்துக் கொண்டவர்களே ! அதிகம்.

என்னைப் பொருத்தவரை நான் தவறுதலாக செய்து விட்டு இது தவறுதான் என என் மனசாட்சிக்கு பட்டு என்னைவிட சிறியவர்களிடம் கூட நான் மன்னிப்பு கேட்டு அப்பொழுதே அந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டியிருக்கிறேன் இதில் நான் துளியளவும் வெட்கப்பட்டதில்லை அதே நேரம் பல பிரச்சனைகளில் நான் மன்னிப்பு கேட்க முடியாது என ஆணித்தரமாய் எதிர்த்திருக்கிறேன் காரணம் தவறு என் மீது இல்லை என்பது 100 % உண்மையென என் அறிவுக்கு பட்டதால் அதே வேளையில் எனக்கு துரோகம் செய்தவர்களிடம் நான் மன்னிப்பை எதிர் பார்த்ததில்லை காரணம் அவர்கள் ஆத்மார்த்தமாய் தனிமையில் உணரட்டுமென மன்னிப்பை தவிர்த்ததனால் அவர்கள் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள் இதுகூட ஒரு வகை தண்டனைதான் அவர்கள் மன்னிப்பு கேட்பதால் என் வயிறு நிறைந்து விடுமா ? இல்லை எனது SWISS BANK A/c  No : SF 5465 * * * * 3851 * * * * 6994 டில் FIFTY THOUSANDS $ DOLLAR தான் விழுந்து விடுமா ? மேலும் பகை இதுதானே பலன் மனிதனின் மரணம் எந்த நிமிடமென நிர்ணயிக்க முடியாத இவ்வுலக வாழ்வில் இது அவசியம்தானா ? 

மன்னிப்பு கேட்பது என்பது இருபுறமும் தேய்ந்து போன நாணயம் போன்றது.

காணொளி

40 கருத்துகள்:

 1. //மன்னிப்பு கேட்பது என்பது இருபுறம் தேய்ந்துபோன நாணயம் போன்றது//
  இந்த கருத்து புதிதாய் இருக்கிறதே.நீங்கள் சொல்வது சரியே. தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டுவிடவேண்டியதுதான்.
  அதுசரி. மன்னிப்பு என்ற சொல்லை காணொளியில் பல மொழிகளில் வெளியிட்டு நடிகை தமன்னா சொல்வதுபோல் காட்டியிருக்கிறீர்களே! அது ஏன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ரமணா சொன்னதாக நினைத்து விடக்கூடாதே... அதற்காகத்தான் இப்படி உல்டாவாக எழுதினேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. பரஸ்பரம் மன்னிப்புக்கேட்ட்பனும்
  மன்னிக்கத்தெரிந்தவனும் மாமனிதன்
  என்கிறார்கள்./

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தையும் ஏற்கிறேன் இருப்பினும் மன்னிப்பு கேட்க வைக்காமலேயே மன்னிப்பவன் நிச்சயம் மாமனிதனே..

   நீக்கு
 3. தவறை தானாய் உணரட்டும் என்ற பரந்த மனப்பான்மை பலரிடமும் இல்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 4. மன்னிப்பு கேட்பவன் மனிதன். மன்னிக்கத் தெரிந்தவன் கடவுள்!

  பதிலளிநீக்கு
 5. அருமை! மன்னிப்பு என்பது மனதிலிருந்து பிறக்க வேண்டும். சிறப்பாக சொன்னீர்கள்!

  பதிலளிநீக்கு
 6. ஸ்விஸ் பேங்க் கணக்கு எண் சரிதானே. நான் கவனிச்சுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா நான் தேவையில்லாமல் உளறிவிட்டேனோ....

   நீக்கு
 7. உண்மைதான்...பெரும்பாலும் கட்டாயத்திற்காகத்தான் மன்னிப்பு கேக்குறாங்க..சகோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ கட்டாய மன்னிப்பு கேட்க வைப்பதில் பலன் இல்லை என்பது எனது கருத்து வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. மனதில் உணர்தலே சிறந்த மன்னிப்பு! சரியாக புரியவைத்தீர்கள்.
  உங்கள் சுவிஸ் கணக்கு எனக்கு தெரிந்ததால் சில பல கோடிகள் ஓரிரு நாளில் குறையலாம்..? எனக்கு மன்னிப்புண்டா..!
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பக்குவமாக பாக்கு வைக்கிறீங்களே.... வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் மனிதன் பேப்பரில உண்டாக்கியதுதானே...

   நீக்கு
 9. மன்னிப்புக் கேட்கக்கூட பெருமனது வேண்டும் என்பதை மனதில் கொள்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே மிகவும் சரியான வார்த்தை சொன்னீர்கள்.

   நீக்கு
 10. மன்னிப்பு பொறுமையின் அடுத்த கட்டம்

  பதிலளிநீக்கு
 11. இருபுறமும் தேய்ந்து போன நாணயம் - செல்லாக் காசு!..

  ஒருபுறம் தேய்ந்திருந்தாலே நம்ம ஆளு கையில வாங்க மாட்டான்.. ரெண்டு பக்கமும் என்றால் - சொல்லவே வேண்டாம்!..

  அப்புறம் எதுக்கு அதைக் கையில வைத்துக் கொண்டு வேடிக்கை!..

  தூக்கிப் போட்டு விட வேண்டியதுதான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது பாணியில் அழகிய உண்மை வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. அருமையான எண்ணங்கள்

  மாற்றார் வேண்டுதலுக்கு
  மன்னிப்புக் கேட்டுப் பயனில்லை
  தன் தவறை உணர்ந்து
  மன்னிப்புக் கேட்டால் பயனுண்டு
  பிறர் மன்னிப்புக் கேட்டால் - அதனை
  ஏற்றுக்கொள்பவர் பெரியவர்
  பிறர் மன்னிப்புக் கேட்டால் - அதனை
  பொருட்படுத்தாதோர் சிறியவர்
  மன்னிப்புக் கேட்போரும்
  மன்னிப்பை ஏற்போரும்
  இணைந்து நல்லுறவைப் பேணினால்
  மக்களாயம் (சமூகம்) மேம்படுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அற்புதமான விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி நண்பரே...

   நீக்கு
 13. மன்னிப்பு என்பது இரு புறமும் தேய்ந்துபோன நாணயமா..?,இருக்காது அப்படி எதுவும் இருக்காது.அடாது .அநியாயம் செய்தவனை மன்னித்துவிடலாமா..??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நாம் பேசிக்கொண்டு இருப்பது மனிதநேயம் உள்ள மனிதர்களைப்பற்றி...

   பிறந்து தொப்புள்கொடி அறுபடாத குழந்தையை பற்கள் படாமல் கவ்விக்கொண்டு வந்து தனது எஜமானர் வீட்டில் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய ஐந்தறிவு நாயும் உண்டு.

   அதே குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றது ஆறறிவு என்று சொல்கின்றார்களே இவர்களை மன்னிக்க முடியுமா ?

   நீக்கு
 14. எத்தனை மொழிகளில் கேட்டால் என்ன / மன்னிக்க மனம் வேண்டும் To err is human ,to forgive is divine

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. நல்ல கருத்து. மன்னிப்புக் கேட்பவர்களை மன்னித்துவிடலாம். உறவு பலப்படுமே! நாம் தவறு செய்தாலும் மன்னிப்புக் கேட்டுவிடணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 16. மன்னிப்பு கேட்பதற்கும் பெரிய மனது வேண்டும்....... உண்மை தான்.

  பதிலளிநீக்கு
 17. அன்புள்ள ஜி,

  ‘மன்னிப்பு பரிகாராமல்ல...’ கவிஞர் வைரமுத்துவின் கவிதை தலைப்பு.

  மாப்பு வச்சிட்டாய்யா ஆப்பு...!

  த.ம. 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மணவையாரே நலம்தானே.... வருகைக்கு நன்றி

   நீக்கு
 18. வணக்கம் ஜி !  என்'நிலை வந்த போதும்
  ....இயல்பிலே மாற்றம் இன்றி
  நன்னிலம் போற்றும் வண்ணம்
  ....நாளுமே வாழ்ந்தால் இங்கே
  சென்னியைத் துளைக்கும் கோபம்
  ....சிறிதுமே வாரா மேலும்
  மன்பதை மகிழும் ஆன்றோர்
  ....மறையென வாழ்க்கை மேவும் !

  தனத்திலே மிதக்கும் பிள்ளை
  ....தலைக்கனம் கொள்ளும் நாளும்
  மனத்திலே தோன்றும் ஆசை
  ....மடிவர வேண்டும் ! தன்னின்
  இனத்திலே இறைவன் போலும்
  ....இருந்திட எண்ணும் வாழ்க்கை
  கணத்திலே போகும் என்னும்
  ....கருப்பொருள் அறியார் போலே !

  அருமையான பதிவு ஜி இடைக்கிடை என்றன் குணங்களையும் கொண்டுள்ளீர்கள் நன்றி ( தவறுக்கு மட்டும் மன்னிப்பு தாழ்ந்தோரிடத்தும், தவறில்லையேல் தலைபோனாலும் மன்னிப்பில்லை !
  ஆமா எல்லா மொழியிலும் மன்னிப்பை சொல்லிவிட்டு கடைசியாய் தமனா பெயரை மட்டும் சூம் பண்ணி இருக்கீங்களே என்ன விளக்கம் ஹா ஹா ஹா நன்றி ஜி !
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே அழகிய ''பா''வரிகள் நன்று
   ரமணாவைவிட தமனாவுக்கு ஒரு மயக்கம் உள்ளது உண்மைதான்.

   நீக்கு
 19. அருமையான பகிர்வு அன்பரே...

  நானும் மன்னிப்பு கேட்க
  தயங்கமாட்டேன் என் மீது
  தவறுகள் இருந்தால்...
  தவறு இல்லை என்றால்
  தலையே போனாலும்
  யாருக்கும் பணியமாட்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நண்பரே இதுதான் நல்ல மனிதருக்கு அழகு

   நீக்கு
 20. ஷமா ஹி சத்ய ஹை!! இது தர்மர் சொல்லுவதாக மஹாபாரதம் சொல்லுவது. உண்மைதான்! உங்கள் பாலிசிதான் இங்கும்!!!! அப்படியே.

  (ச்சே இந்தச் சமயத்துலயா இந்தக் கீதாவுக்கு தூ புகழ் மனிதரின் பஞ்ச் டயலாக் நினைவுக்கு வரணும்..."மன்னிப்பு! எனக்குத் தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா ஒரு மனுஷனை இப்படியா துப்பியே விரட்டுவது பாவம்.

   நீக்கு