Just click one time photo inside
கணவன் கனகரத்தினம்
கனகாவுக்கு கனகாம்பரம் பூ வாங்கி தலையில் வைத்துவிட்டான் திடீரென மூஞ்சியில்
தண்ணீர் அடிக்க விழித்துப் பார்த்தால் சே... கனவு. மாமியார் கனகவள்ளி எதிரில்
கையில் தண்ணீர் வாளியுடன் நின்றிருந்தாள் யேன்டி மூதேவி கனவா காணுரே கனவு
எந்திரிச்சி வாசலைத் தெளிடி நெற்றிக்கண் இன்றி சுட்டெறிக்கும் பார்வை பார்த்தாள்
கனகவள்ளி கனகா எந்திரித்து தனது வேலைகளை தொடங்கினாள் கணவன் கனடாவில் எஞ்சினீயராக
வேலை பார்க்கிறான் கூடிய சீக்கிரம் கனகரத்தினம் அவளையும் அழைத்துப் போவதாக
சொல்லிக் கொண்டே இருக்கிறான்.... கனகவள்ளியோ பிறகு பார்க்கலாமென நாட்களை தள்ளிக் கொண்டே
இருக்கிறாள் மாமனார் கனகசுப்புவோ கனரா பேங்கில் வேலை செய்கிறார் ஆனால் ஒண்ணும் தெரியாத
பச்சமண்ணு நமது மன்மோகன்சிங் போல அவரால் இவளுக்கு ஒண்ணும் செய்யமுடியாது வேணும்னா
ஒண்ணு செய்வார் அவளுக்கு கேணியில ரெண்டு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுப்பார்
அதையும் கனகவள்ளி இவள் மூஞ்சியில இறைஞ்சு விடுவாள்.
காலையில் வேலை முடிந்து குளித்து விட்டு அவள்
பூஜையறையில் நுழையும் போதுதான் மாமியார் குளிக்கப் போவாள் பூஜையில் பெருமாளிடம்
மெதுவாக முணுமுணுத்து பிரார்த்திப்பாள், கணவன் கனடாவுக்கு சீக்கிரம் அழைத்துப் போக
வேண்டுவதற்கு மறந்தாலும் தன் மாமியாளை சீக்கிரம் அழைத்துப் போய்விடு என வேண்டுவதற்க்கு
மறக்க மாட்டாள் அத்தனை ஞாபகசக்தி உள்ளவள் எப்படியோ பிரார்த்தனை ஒருநாள் பலித்தும் விட்டது கனகரத்தினம் ஒருநாள்
விசாவோடு வந்து விட்டான் கனகா சந்தோசமாக புறப்பட்டாள் அப்பா கனகராஜனும் மனைவி
கனகாம்பாளுடன் வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் கனடாவில் அவனது கம்பெனி பெரிய அளவு
பிளாட் கொடுத்திருந்தது அதிலொரு அறையை பூஜை அறையாக்கினாள் கணவன் காலை 8.00 மணிக்கு வேலைக்கு போனதும்
குளித்து விட்டு பூஜை அறையில் நுழைந்தா(ள்)ல் ? ஒருமணி நேரமாவது மனமுருகி சத்தமாக
பிரார்த்திப்பாள் வீட்டில் யாரும் இல்லாததால் ஊரில் போலமெதுவாக முணுமுணுப்பதில்லை
ஆறு நாட்களும் ஆனந்தமாக போனது வரும் ஞாயிற்றுக்கிழமை கனகாவை முக்கியமான இடத்திற்கு
அழைத்துப் போவதாக சொல்லி இருந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை ஆபீஸ் விடுமுறை
கனகரத்தினம் காலை 9.00 மணிவரை தூங்கிக் கொண்டிருந்தான்
பூஜையறையிலிருந்து கனகாவின் பிராத்தனை ஒலி காதில் நுழைந்து உறக்கத்தை கெடுத்தது
கேட்டதும் அர்த்தம் வலித்தது எழுந்து வந்து பூஜையறையின் வாசலில் நின்றான் உள்ளே
கனகா மெய் மறந்து கண்மூடி சத்தமாக வழக்கம் போல 108 தடவை...
‘’பெருமாளே என் மாமியாளை சீக்கிரமே
கூட்டிட்டு போயிடு’’
என ஸ்லோகம் சொல்லிக்
கொண்டு இருந்தாள் ஒரு நிமிடம் நின்று கேட்டவன் தீர்மானத்திற்கு வந்தவனாய் உள்ளே போய் Laptop எடுத்து Open செய்து Google போய் AIR CANADA வை Click செய்தான் பிறகு என்னமோ செய்தான் English என் உடம்புக்கு ஒத்து வராததால் படிக்க முடியவில்லை அடுத்த
ஒருமணி நேரத்தில் இருவரும் CANADA HALIFAX STANFIELD INTERNATIONAL AIRPORT
டில்
நின்றிருந்தார்கள் அவன் கையில் ஒரேயொரு TICKET இருந்தது என்னவோ
யாருக்குத் தெரியும்
எல்லாம் அந்த பெருமாளுக்கே
வெளிச்சம்.
சாம்பசிவம்-
ஞாயிற்றுக்கிழமை
முக்கியமான இடம்னு சொன்னது AIRPORTடா ?
CHIVAS REGAL சிவசம்போ-
மாமியாருடைய பிரார்த்தனையும்
பலிச்சுடுச்சோ...
காணொளி
என்ன தான் நடந்தது
பதிலளிநீக்குகாணொளியே விளக்குமே நண்பரே
நீக்குபாவம்.
பதிலளிநீக்குயாரு... கனகாவா ? கனகவள்ளியா ?
நீக்குகனகா இனி இருக்க வேண்டியது பிறந்தகத்திலா ,புகுந்த வீட்டிலா :)
பதிலளிநீக்குஎன்னைக்கேட்டால் ? பகவானுக்கே தெரியும்
நீக்குபாவம்தான்
பதிலளிநீக்குதம +1
உண்மைதான் நண்பரே
நீக்குஎன்ன நடந்தது என்று மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டாமோ! இப்படியா திடீர் முடிவு எடுக்கிறது! பாவம் அந்தப் பெண்! :( ஆனாலும் அவள் வேண்டுதல் எனக்கு உள்ளூரப் பிடிக்கவில்லை தான். மாமியாரிடமிருந்து காப்பாற்று என வேண்டி இருக்கணும்.
பதிலளிநீக்குவாங்க இப்படித்தான் சிலபேர் அம்மா மேல பாசம் உள்ளவனாக இருப்பாங்கே.... என்ன செய்யிறது அவளோட நேரம்.
நீக்குஅடடா.. கனகம் வாழ்க்கை கலகம் ஆயிடிச்சே..
பதிலளிநீக்குவாங்க ஜி மேலத்தெரு முண்டக்கன்னி அம்மன் முளக்கொட்டுக்கு கரகம் எடுத்து ஆடி வந்தால் வைகாசியோட கிரகம் தீரும்னு நினைக்கிறேன்.
நீக்குகனகா என்றாலே கரகம் தானா?..
நீக்குகரகம் எடுத்தாலும் கெரகம் தொலையனுமே!..
அதுசரி... ஆடியிலே கரகம் எடுத்து ஆடி வந்தாலும் கெரகம் தொலைய வைகாசி வரைக்கும் காத்திருக்கணுமா?.. அதுக்கு இன்னும் ஒரு வருசம் கிடக்குதே!..
செய்த தவறை உணரவேண்டுமே அதற்குதான் ஜி ஒரு வருஷம்
நீக்குகனகவள்ளியின் பிரார்த்தனைதான் கடவுள் காதுக்கு எட்டியது போல. படங்களிலும் காணொளியிலும் புகுந்து விளையாடுகிறீர்கள் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குவாங்க ஐயா காணொளியை கூர்ந்து கவனித்து பாராட்டியதற்கு நன்றி
நீக்குஹாஹாஹா! தனக்குத்தானே ஆப்பு வைச்சிக்கிட்டாளே கனகா!
பதிலளிநீக்குஆமாம் நண்பரே அவளுக்கு நேரம் சரியில்லை.
நீக்குஅடடா...தன் வாயாலேயே...கெட்டுப் போயிட்டாளே...கனகா...
பதிலளிநீக்குவாங்க சகோ இதைத்தான் நாக்குல சனி அப்படினு சொல்வாங்களோ....
நீக்குஎன்ன இருந்தாலும் அவனைப் பெற்றவள் அல்லவா!வேண்டுதல் தவறுதானே!
பதிலளிநீக்குவாங்க ஐயா தவறுதான் அதற்குதானே உடனே திருப்பி அனுப்பி விட்டான் கனகரத்தினம்
நீக்குநடிகை கனகாவை காணோமேன்னு நிணைச்சேன்...!!!!!!
பதிலளிநீக்குஹாஹாஹா இன்னும் கனகா நினைப்புதானா ?
நீக்குபாவம் கனகா))))
பதிலளிநீக்குஆம் நண்பரே நீங்களும் ஜெர்மனியில் இருக்கீங்க... கனடாவில் இருந்தாலும் நேரில் ஆறுதல் சொல்லலாம்
நீக்குமுன்வந்து மாட்டிக்கொள்ளல் என்று கொள்ளலாமா?
பதிலளிநீக்குவருக முனைவரே நாக்குதானே மனிதனுக்கு முதல் எதிரி.
நீக்கும்ம்ம்.... கெட்ட நினைவு தனக்கே கெடுதலை கொடுத்திருக்கிறது.
பதிலளிநீக்குவருக ஜி வருகைக்கு நன்றி
நீக்குஇதைத்தான் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்று சொல்லுகிறார்களோ....கனகவள்ளியின் கொடி பறக்கிறது!!!
பதிலளிநீக்குவாங்க ஆமாம் தன்வினை தன்னைச்சுடும்.
நீக்குஅதற்குத்தான் கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்போது மனதிற்குள் வேண்டிக்கொள்ளவேண்டும்.நுணலும் தன் வாயால் கெடும என்பது போல் கனகா தன் வாயால் கெட்டார்.
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே இது சிலருக்கு புரிவதில்லை.
நீக்கு