தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜூன் 27, 2016

தெக்ஷ்ணாமூர்த்தி விரதம்


நிருபர் நிருபமாராவ்-
ஐயா நம் நாட்டில் நல்லவர் ஆட்சி எப்பொழுது வரும் ?
Killergee -
உலகம் அழியும் நாள்வரை, அதற்கு சாத்தியமில்லை.
நிருபர் நிருபமாராவ்-
முன் கூட்டியே வருவது போல் தங்களது யோசனையில் ஏதாவது.....
Killergee -
ஹிட்லரைப் போல நான்தான் பெரியவன் என்ற அகந்தையுடனும், காமராஜரைப் போல நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதொன்றே குறிக்கோள் என்ற எண்ணத்துடனும், கக்கனைப்போல எந்த நிலையிலும் எளிமையாய் வாழ்வது என்ற மனப்பக்குவத்துடனும், இந்த மூன்று குணங்களும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு குழந்தையை இன்றாவது ஜனிக்க''வை'' இறைவா ! என நம் நாட்டு புதுமணத்தம்பதிகள் அனைவரும் மும்மூர்த்திகளிடம் வேண்டி வியாழக்கிழமை தோறும் தெக்ஷ்ணா மூர்த்திக்கு விரதம் இருந்து வந்தால் ? ? ? ஒரு வேளை நமது அடுத்த சந்ததியினருக்கு நல்வாழ்வு கிடைக்கலாம்.
நிருபர் நிருபமாராவ்-
ஐயா இது எல்லோரும் கடைப்பிடிப்பது சாத்தியப்படவில்லை, காரணம் மதவேறுபாடு நிறைந்தது நமது நாடு.
Killergee-
அதற்காகத்தான் ''மும்மூர்த்தி'' களிடமும் என்று சொன்னேன்.
நிருபர் நிருபமாராவ்-
ஐயா மாற்று யோசனை ஏதாவது...
Killergee -
உலக அழிவை உடனே கொண்டுவர ஒரு விரதம் இருக்கிறது, அதா... 
நிருபர் நிருபமாராவ்-
ஐயோ வேண்டாம் ஐயா போன வாரம்தான் எனக்கு கல்யாணம் ஆச்சு கேள்வியை இத்தோடு முடித்துக் கொள்கிறேன் நன்றி.
  
CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
கல்யாணத்துக்கு கத்திரிக்கா கேட்டா ? காடாத்துக்கு முருங்கக்கா வாங்கி கொடுப்பான் போலயே இந்த ஆளு.

 காணொளி

38 கருத்துகள்:

 1. உள்ளங்கை நெல்லிக்கனி - போல உண்மையைக் காட்டும் பதிவு..

  அரே.. சதாசிவம்!.. ஓட்டை சட்டியில் கொழுக்கட்டை வேக வேண்டும்..

  அதெப்படிங்க முடியும்?...

  அப்போ - கடற்கரைக் கொக்கு மாதிரி குடல் காய்ந்து கருவாடாகப் போக வேண்டியது தான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஓட்டைச்சட்டியில் தண்ணீரே நிற்காதே ஜி என்ன செய்வது.... விதியின் வழியே செல்வோம்

   நீக்கு
 2. காடாத்துக்கு முருங்கக்கா...அதிகம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. உலகம் அழியும்வரை நம்கதி இதேதானா..
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே மாற்றம் இருக்கட்டும் அந்த எண்ணங்களைப் பற்றிய சிந்தனைக்கே இன்னும் மக்கள் வரவில்லையே.... பிறகு வழி ?

   நீக்கு
 4. பழம்பெருமை பேசிக்கொண்டே இருந்தால் நாடு எப்படி முன்னேறும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பழமை வேண்டாம் என்றே வைத்துக்கொள்வோம் புதுமை என்ற பெயரில் நல்ல உடையை கிழித்துக்கொண்டு போடுகின்றானே இன்றைய இளைஞன் அவன் திரைப்பட மோகத்தை விட்டு வெளியேறினால் போதுமானது நாடு முன்னேறும்.

   நீக்கு
 5. மும்மூர்த்திகள் அருள் புரியட்டும்!

  பதிலளிநீக்கு
 6. ‘நடக்கமுடியாத ஒன்றை நடக்கும்’ என நினைப்பது சரியல்ல என்பதை தங்களின் வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறீர்கள். காணொளியை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இது நடக்காது என்பதைத்தான் இன்றைய மக்களின் செயல்பாடுகள் எனக்கு அறியப்படுத்துகின்றது.

   நீக்கு
 7. நம் காலத்தில் இல்லாட்டியும் என்றாவது வராமலா போகும்? நம்பிக்கையுடன் இருப்போம். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ 69 வருடமாகத்தான் நம்பிக்கொண்டு வாழ்கிறோம் மாற்றம் இல்லையே நம்மை ஏமாற்றுகின்றார்கள் என்று சொல்லிக்கொண்டு ஏமாந்து கொண்டே வாழ்கிறோம் இதுதான் உண்மை.

   நீக்கு
 8. அட கில்லர்ஜி பேட்டி!கொடுக்கற சாமியாராகிட்டீங்க போல எல்லாம் உங்க கைக்கு வந்த 4 1/2 பவுன் கேஷ் தானே

  அதைத்தான் பார்வதி எடுத்துக்கிட்டாங்களே..

  ஹலோ நீங்களும் சிவனும் போட்ட டீல் தெரியாதா என்ன எங்களுக்கு? 4 1/2 பவுன எங்க கிட்ட கொடுத்துரு. கேஷ நீ வைச்சுகனு

  சரி முக்காலம் தெரிந்த ஞானியானாலும் ஆனீங்க ஒரு நல்ல வார்த்தை சொல்லக் கூடாதா....ஹும் தெரியலைனா ஸ்ரீபூவுகிட்ட கேக்க வேண்டியதானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சாமியார் பேட்டி மாதிரியாகவா இருக்கு அப்படினாால் உடனே ஒரு பேட்டியைக் கொடுத்திட வேண்டியதுதான்.

   நீக்கு
 9. நல்ல காலம் வரும் வரை காத்திருப்போம் ஐயா.இரசித்தேன் நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோ நம்பிக்கையே வாழ்க்கை

   நீக்கு
 10. வா..என்றால் வந்துவிடுமா? போ...என்றால் போய்விடுமா?? நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுகூட சோசியரின் வாக்கு போல்தான் நண்பரே

   நீக்கு
 11. உலகம் அழிந்த பின் தோன்றும் மறு உலக உயிரினங்கள் எப்படி இருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக வேறுரூபங்களுடன் இருக்கலாம் காரணம் அழிந்த பல உயிரினங்களை மனிதன் கண்டு பிடித்து இருக்கின்றானே..... வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 12. வரும் ஆனா வராது.... அதே தான்.

  பதிலளிநீக்கு
 13. கல்யாணத்துக்கு கத்திரிக்கா , காடாத்துக்கு முருங்கக்கா இதுநாள்வரை கேள்விப்படாதது தலைப்பைப் பார்த்து தாவிவிட இருந்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா
   கல்யாணத்துக்கு முருங்கைக்காய் போட மாட்டாங்க,
   காடாத்துக்கு கத்திரிக்காய் போட மாட்டாங்க,
   இதுவொரு பழஞ்சொல் தங்களுக்கு தெரியாததையா நான் சொல்லி விட்டேன்.

   நீக்கு
 14. பெயரில்லா6/28/2016 12:38 PM

  நல்வ சுவை சகோதரா
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 15. நண்பா,

  நல்ல கேள்வி பதில்.

  மும்மூர்திகளா, அப்போ முப்பத்து முக்கோடி என்பவரெல்லாம் யாராம்?

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா அவங்களெல்லாம் மேல் டிபார்ட்மெண்ட்

   நீக்கு
 16. இன்னும் கொஞ்ச நாளில் கோயில் எல்லாம் குறைந்து விடும். கட்சி அலுவலகங்கள் எல்லாம் பெருகி விடும். கட்சி தலைவர்தான் தட்சிணாமூர்த்தி ஆகிவிடுவார் அவரை கும்பிடுவார்கள் மக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான வார்த்தை சொன்னீர்கள் நண்பரே இதுதான் நடக்கும்

   நீக்கு