தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 09, 2016

½ கிலோ கவலை


தனம் என்னும் பணம், என்னிடம் சிறுகச் சிறுக சேரும்போது என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கனம் ஆகத் தொடங்கி விட்டது இதனால் என் குணம் மாறி விடுமோ ? என நான் தினம் பயந்து வாழத் தொடங்கி விட்டேன், வனம் செல்ல வேண்டிய காலமும் நெருங்கி விட்டதே ! போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை சிறிது காலம் நான் மறந்து விட்ட காரணத்தால் இந்த பரந்து விரிந்த பூமியில் நானும் பறந்து திரிய மறந்து விட்டேன், இதனால் என் வாழ்வில் அருந்தி பருக வேண்டிய சிறந்த காலத்தையும் நான் துறந்து விட்டேன், இப்பொழுது வருந்தி என்ன பயன் ? எனது வாழ்வில் பணம் என்ற குறிக்கோளை அடையத்தான் நான் நினைத்தேனே தவிர வாழ்ந்து அனுபவிக்க வேண்டுமென நான் ஒருபோதும் நினைத்ததில்லை காரணம், 
(ஒரு காலம் சில நபர்களால் என்னை அவமானம், வேதனை, கவலை, துக்கம் என்ற வட்டத்தை விட்டு வெளியேவிட மறுத்து விட்டது) 
கோபமும், ஆத்திரமும் எனது கண்ணை மறைத்து கொண்டது, இருப்பினும் யாருக்குமே தீங்கு செய்யாமல் பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற கொள்கை மட்டும் இன்றுவரை என்னை விட்டு விலகவில்லை.

சுவாமி விவேகானந்தரின் கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு.
என்ற போதனையை முன்னிருத்தி பணம், பணம் என தனம் சேர்த்தேன் ½ கிலோ பணம் சேர்க்கும் போது ஒரு கிலோ கவலையும் சேரும் என்பது பணம் சேர்த்து பார்த்த பிறகுதான் என் அகக்கண்ணுக்கு தெரிந்தது, இப்பொழுது என்ன செய்வது ?

ஐயா அப்துல்கலாம் அவர்களின் துன்பத்தை, துன்புறுத்து.
என்ற போதனையை முன்னிருத்தி இந்த துன்பங்களை துன்புறுத்த துணிந்தேன், இதற்கு தேவைப்பட்டதோ பணம் என்ன விந்தை இது ? அப்படியானால் சுவாமி விவேகானந்தர் சொன்ன, கஷ்டப் படாமலிருக்க, கஷ்டப்படு. என்ற போதனையின் அர்த்தம் என்ன ? 

இந்த பணத்தை நாம் தேடுவது தவறா ?  தேடாமலிருப்பது தவறா ? 

இந்த குழப்பம் கூட எனக்கு ½ கிலோ கவலையை கொடுத்தது, பசிக்கிறது உணவகம் சென்று உணவருந்தி பணம் கொடுக்கிறோம், மறுநாள் பசித்துப் புசித்ததை வெளியேற்றப் போனால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது, அதற்காக புசிப்பது அவசியமில்லாதது என கருத முடியுமா ? இரண்டில் எதை நிறுத்தினாலும் வாழமுடியாது பிறகுதான் எனக்கு தோன்றியது

சுவாமி விவேகானந்தர் சொன்னதும் சரி, ஐயா அப்துல்கலாம் அவர்கள் சொன்னதும் சரி.


அப்படியானால் துன்பம் வரும்போது என்ன செய்வது ?

வள்ளுவரின் போதனையை முன்னிருத்தி,
துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க !

காணொளி

37 கருத்துகள்:

  1. பணம் சேர்க்கிறீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறதுகவலையை ஏன் சேர்க்கவேண்டும் கழிவுப்பொருள் அல்லவா அது மகிழ்ச்சி துக்கம் கவலை என்பதெல்லாம் நிலையானதல்ல பணம் போலவே நேரத்துக்கு நேரம் மாறும் போகும்போது பணத்தையோ மகிழ்ச்சியையோ துன்பத்தையோ கொண்டு செல்லப் போவதில்லை/ எல்லாமே ஒரு ஸ்டேட் ஆஃப் மைண்ட் தான் கவலையாய் இருக்கிறதென்று அளந்து பார்த்துக் கவலைப் படாதீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அருமையாக சொன்னீர்கள் தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  2. உண்மைதான் பணம் சேரும் போது துன்பமும் சேருகிறது! நல்லதொரு பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. சந்தோஷம் என்பதும், கவலை, துக்கம் என்பதும் இடத்துக்கு இடம் மாறக் கூடியது.. காலங்களால் கடந்து போகக் கூடியது.. போதும் என்று சொல்லத் தெரிந்தவன்தான் பெரிய பணக்காரனாம்! யாரோ சொல்லியிருக்காங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதொரு கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  4. ஜாக்கிரதை ,இரக்க மனத்தைக் கெடுக்கும் அரக்கன் பணம் :)

    பதிலளிநீக்கு
  5. கருத்தும் தலைப்பும்
    வார்த்தை விளையாட்டும்
    காணொளியும் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  6. அன்பின் ஜி..
    பதிவு வெளியானதுமே படித்து விட்டேன்..
    உண்மையைப் பிடித்து விட்டேன்..

    ஆனாலும்,
    இணையத்தின் இளைப்பால்
    கருத்துரைக்கக் களைத்துப் போனேன்..

    பதிலளிநீக்கு
  7. ஆக -
    தவலை நிறைய கவலை!..

    ஒரு தட்டைப் போட்டு மூடி -
    ஓரமாக வைக்க வேண்டியது தானே!..


    உப்புக்குள்ள மாங்காயைப் போட்டாலும் -
    மாங்காய் மேல உப்பைப் போட்டாலும் காணாமல் போது எது?..

    அடுத்த பதிவில் விரிவாகக் கூறுவீர்கள் என நினைக்கின்றேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி உண்மைதான் பாதிப்பு உப்புக்குத்தான் கவலையை ஒதுக்குவோம், மகிழ்ச்சியை பெறுக்குவோம்.

      நீக்கு
  8. மிக ஆழமான கருத்து

    பதிலளிநீக்கு
  9. பதிவு முழுவதும் அருமையான ஆழமான வரிகள்!

    பதிலளிநீக்கு
  10. நிதான ஆசையும் எதிர்பார்ப்பும் இருந்தால் மன நிம்மதியான வாழ்வு. இல்லாவிட்டால் சிக்கல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே நல்ல கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. பணம் இல்லேன்னா ... இப்படி தமிழ்மணத்தில் பதிவுகள் போட முடியுமா..??? ஒருவலைச்சுற்றல்..நெட்க்கு பணம் கனணிக்கு கரண்டுக்கு..தொடர்ச்சி.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பணம் இல்லாமல் இயங்கவே முடியவில்லையே என்னவொன்று தரம் ஏற்றஇறக்கம் ஆகலாம்.

      நீக்கு
  12. பணத்தை நாம் துரத்தக் கூடாது! அது நம்மைத் தேடி வர வேண்டும். ஆனால் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலை என்பது தனி! பணம் அதிகமானால் கவலை என்பது அதை எப்படிப் பாதுகாப்பது என்பதால் வரலாம். ஆனால் பொதுவாகக் கவலை என்பது எல்லோருக்குமே இருக்கும். மனம் நிறையக் கவலைகளோடு தான் படிக்க வந்தேன்! இப்போது மனம் லேசாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனது பதிவால் மனக்கவலை அகன்றது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  13. அருமையான பதிவு நண்பரே
    தேவைக்குஉரிய பணம் நிறைவான வாழ்க்கை வாழ்வோம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. சில நாட்களுக்கு முன்தான் சுவிஸ் கணக்கு எண் தெரிந்தது. இப்போது போதுமென்ற அளவிற்கு சம்பாதித்துவிட்டதும் தெரிகிறது. இனி வேலைய ஆரம்பிச்சிற வேண்டியதுதான்.!
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறப்பட்டு விட்டேன் ஸ்விஸுக்கு கணக்கை மூடுவிழா நடத்த...

      நீக்கு
  15. யாருக்கும் தீங்கு செய்யாமல் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற உங்களின் நல்ல குறிக்கோள் போற்றத்தக்கதே! ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழியே வெளி நாடு சென்றாவது செல்வத்தை சம்பாதி என்று சொல்லும்போது பணம் தேடுவது தவறா என்ற எண்ணமே உங்களுக்கு வரக்கூடாது. எனவே கவலையை விட்டு மகிழ்ச்சியுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரை விளக்கத்திற்கு நன்றி

      நீக்கு
  16. நண்பரே! உங்களுக்காக ஒரு பொன்மொழியை மட்டும் இங்கே தருகிறேன்.

    “வாழ்க்கையில் பணத்தைவிட முக்கியமான பொருட்கள் பல இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு தொல்லை, அத்தனைக்கும் பணம் தேவையாய் இருக்கிறது. – எலிஸபெத் கூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான பொன்மொழி சிந்திக்க வைத்த விடயம் நன்றி நண்பரே

      நீக்கு
  17. நண்பரே நான் துன்பம் வரும்போது
    சிரிக்கும் கிறுக்கு மனிதன்.....
    எப்பவுமே சிரிப்பவன் துன்பத்தை மறக்க...

    பதிலளிநீக்கு
  18. கில்லர்ஜி சுக துக்கங்கள் மாறி மாறித்தானே வரும்...பணம் வந்தால் கவலை வரணும்னு இல்லை. நீங்கள் படுத்தீங்கனா தூக்கம் வருதா? அவ்வளவுதான்....நீங்கள் தான் இந்த உலகத்துலேயே பணக்காரர்!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையே எனது தூக்கம் குறைந்து விட்டது நானும் மாடி வீட்டு ஏழைதான்.

      நீக்கு