தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

கலாச்சாரம்


என்இன தமிழ்ப் பெண்கள் மற்றவர்களிடம் பேசும்போது ''அண்ணா'' என அழைத்து விட்டால் கடைசிவரை தன் சகோதரனை போல்தான் நினைப்பார்கள் அந்தப்பேச்சில் வேறு கள்ளம் கபடம் இருக்காது அதே நேரம் அண்ணா எனச் சொல்லவில்லை என்றால் ? எண்ணங்கள் வேறு விதமாக போக சாத்தியம் உண்டு, ஆனால் அரேபியப் பெண்கள் பேசும் பொழுது வார்த்தைக்கு வார்த்தை அஹூ ஓலத் (சகோதரன்) என்பார்கள் ஆனால் பேச்சின் தொணி ஒரு கொழுந்தனிடம் பேசுவது போல்தான் இருக்கும் இப்படி ஒருவர் இருவர் அல்ல ! நான் சந்தித்த, பழகிய பழகிக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுமே ! இப்படித்தான் இது அவர்களுடைய தவறு என சொல்லவில்லை அவர்களது கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது அப்படி, நமது தமிழ்க் கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது இப்படி
எனது வாழ்வில் ஒரேயொரு அரேபியப் பெண்ணை என்னைவிட ஒருவயது குறைந்தவர் எனது சொந்த சகோதரியாக இன்றுவரை கருதுகிறேன் காரணம் எனது வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் தகுதியற்ற என்னை உன்னால் முடியுமென எனது திறமையை வெளிக் கொணர்த்தியவர் அந்தச் சகோதரி அலுவலகத்தை விட்டு ஓய்வு பெறும்போது வாழ்த்துச் செய்தியில் எல்லோரும் அரபு மொழியில் வாழ்த்தி எழுதியிருந்தபோது நான் மட்டும் ஒரு மாற்றத்திற்காக ஆங்கிலத்தில் எழுதினேன் இப்படி...
I WILL NEVER FORGET YOU'RE HELP IN MY LIFE
நான் சகோதரியாக நினைத்தால் அதில் துளியளவும் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுப்பதில்லை கொடுக்கப் போவதுமில்லை இதுவரை மட்டுமல்ல ! இனியெனும்...
இந்த U.A.E க்கு வந்தும் கூட இதுவரை பத்மா தொடங்கி.... பாத்திமா வரைக்கும் பத்துக்கும் மேற்பட்ட சகோதரிகள் எனக்கு கிடைத்து
இருக்கிறார்கள் நாளையோ ? என்றாவது ஒருநாளோ ? எனது மரணச்செய்தி கேட்டால் அந்தச் சகோதரிகளிடம் கண்ணீர்த்துளிர்த்திடும் என்பதில் துளியளவும் ஐயமில்லை எமக்கு. 

19 கருத்துகள்:

 1. இதுபோன்ற சகோதரியைப் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும் நண்பரே
  தாங்கள் அதிர்ஷ்டசாலிதான்
  தம 1

  பதிலளிநீக்கு
 2. புதிய நட்புகளையும் உறவுகளையும் பெறுவது பாக்கியமே.

  பதிலளிநீக்கு
 3. சகோதரிகள் சிறப்புப் பதிவு - மனம் நெகிழ்ந்தது..

  பதிலளிநீக்கு
 4. தங்களின் சகோதரப்பாசம் நெகிழ்வினைத் தந்தது.

  பதிலளிநீக்கு
 5. பத்துக்கும் மேற்பட்ட சகோதரிகளை கொண்ட தங்களை பாக்கியவான் என்று சொல்ல என் மனம் ஒப்பவில்லை... என் ஒரு சகோதரிக்காக என் பாக்கியத்தை இழந்தவன் அதனால்தான்.

  பதிலளிநீக்கு
 6. நல்ல விஷயம் கில்லர்ஜி!!

  பதிலளிநீக்கு
 7. நல்லாக் கொண்டுபோன டாபிக்கில் கடைசியில் ஏன்.....

  பதிலளிநீக்கு
 8. பெண்களை மதிக்க தெரிந்த ஆண்களை பெண்களும் விரும்புவார்கள் நம்புவார்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. நமது கலாச்சாரம் அழகான ஒன்று....சகோ
  தம 7

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  நலமா? சகோதர பாசம் என்றுமே நிறைவைதான் தரும். நமது நாட்டின் கலாச்சாரம் அதைத்தானே வலியுறுத்துகிறது.விடுமுறையை சந்தோசமாக கழிக்க வந்தவிடத்தில் மனக்குழப்பங்கள் ஏன்? மகிழ்ச்சியோடிருக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. 'நம் முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களை நாம் எப்போதும் மறக்க இயலாது. நிறைய நட்பைப்பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. சில தவறுகள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறது,இதில் எம்மினம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் டூ மச் :)

  பதிலளிநீக்கு
 13. மரணம் வருவது இயற்கை என்றாலும், மகிழ்ச்சியான செய்தி சொல்லும்போது மரணம் பற்றி சொல்லவேண்டுமா?

  பத்து சகோதரிகளைப் பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. நாட்டுக்கு நாடு கலாசாரம் வேறுபடும்

  பதிலளிநீக்கு
 15. தாய் தாரம் தவிர அனைவருமே சகோதரிகளே

  பதிலளிநீக்கு