தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 02, 2016

காந்’’தீ’’க்கு ஜெயந்தி


இன்று, எனக்கு பிறந்த நாள் என்று கொண்டாடும் அரசியல்வாதிகளுக்கு, என் சிலையை கழுவி இருப்பீர்கள், சிலைக்கு மாலை போட்டு பத்திரிக்கைக்காரர்களுக்கு போட்டோவுக்கும், வீடியோவுக்கும் போஸ் கொடுத்து அழகு பார்த்திருப்பீர்கள். சேனல்காரர்கள் திரைப்பட நடிகைகளை அழைத்து என்னைப்பற்றி கேள்வி கேட்டிருப்பார்கள், அவர்களும் என்னைப் போலவே உடையணிந்து கொண்டு அலகு டமிலிள் என்னைப்பற்றி சொல்லி இருப்பார்கள் நாட்டு மக்களும் ரசித்துப் பார்த்திருப்பீர்கள் அவளை.

 எல்லாம் சரிதான் என் அஹிம்சையை மட்டும் மறந்து விட்டீர்களே... ம்... நான் இருந்தும் பயன், இறந்தும் பயன்.


 ஒரு வேளை நானும் யானை வகைதானோ ?

 

ஒரு வகையில் நண்பன் கோட்ஸேவுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும் இந்த அவலங்களை எல்லாம் பார்க்க வேண்டாமென அனுப்பி வைத்தானே...

35 கருத்துகள்:

 1. காந்தியின் கொள்கைகளை மட்டுமா மறந்தோம்? மனிதத் தன்மையையே இழந்து கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 2. இதற்கு மேலும் சவுக்கடி கொடுக்க முடியாது..
  காந்தி ஜயந்திக்கு ஏற்ற பதிவு இதுதான்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஜி

   நீக்கு
 3. அருமையான தகவல்
  நினைவில் உருளும் மகாத்தமா காந்தி

  பதிலளிநீக்கு
 4. காந்தி ஜெயந்தியான இன்று அருமையான பதிவு கொடுத்திருக்கீங்க சகோ.

  பதிலளிநீக்கு
 5. காந்தி ஜெயந்திக்கு ஏற்ற பதிவு.... அவரின் நல்ல பல கொள்கைகளை மறந்து விட்டோம்.

  பதிலளிநீக்கு
 6. கம்ஹ்டியின் முக்கியக் கொள்கை அகிம்சை. ஆனால் அகிம்சையை அவரோடு போய்விட்டது

  பதிலளிநீக்கு
 7. காந்தி முழுக்க முழுக்க அஹிம்சாவாதினு சொல்ல முடியலை! :) பதிவுக்கும் தகவல்கள் பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மாறுபட்ட கருத்துவாதிகளும் இருந்தனர்.

   நீக்கு
 8. காந்திஜி கொள்கைக்கு எங்கே மதிப்பு ?அவர் படம் போட்ட ரூபாய்க்குத்தான் மதிப்பு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி இல்லையெனில் நிச்சயம் மறந்து விடுவார்கள்.

   நீக்கு
 9. காந்தியின் பல நல்ல அம்சங்களை நாம் இழந்துவிட்டோம். மனித நேயம் என்பதே இல்லையே இப்போது. எல்லையில் பதட்டம்...என்ன சொல்ல என்று தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதிர்காலங்களில் இன்னும் நாம் நிறைய இழக்க வேண்டியது வரும்.

   நீக்கு
 10. காந்தி பிறந்த நாளில் அவரது கொள்கைகளை மறந்துவிட்டாலும் அவரையாவது நினைவில் வைத்து கொண்டாடுகிறார்களே என்று சந்தோஷப்படவேண்டியதுதான். நல்ல பதிவு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதுவும் உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. பதில்கள்
  1. வருக ஐயா நன்றி

   தங்களது தளம் கணினியில் திறக்க மறுக்கின்றதே... ?

   நீக்கு
 12. அவரை அனுப்பி வைத்த கோட்சேயின் நோக்கமே வேறு அல்லவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா உண்மை இது சலிப்பின் அடையாளமாக கொள்வோம்.

   நீக்கு
 13. காந்தியின் அமைதி தத்துவத்தை நாடே மறந்து அல்லவா போய்விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 14. காந்தி படம் போட பணமே என்னிடம் வர மாட்டேன்குது.... காந்தீ நிணவா வரப்போகுது... ஆமா காந்தீ யாரு... பாத்திர கடை வச்சிருந்தாரே...அந்தக் காந்தியா...????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே பாத்திரக்கடை வச்சிருந்தவரு... காந்திநாதன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. பெயரில்லா10/02/2016 11:19 PM

  ஆகா கோட்சேக்கு நன்றி....
  என்னு காமெடி ஐயா.....

  பதிலளிநீக்கு
 16. நல்லது பிறந்த தினத்தையாவது நினைத்து இருக்கின்றார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தமைக்கு நன்றி

   நீக்கு
 17. உங்களால்தான் இப்படி வித்தியாசமாக சிந்திக்க முடியும் போலுள்ளது.

  பதிலளிநீக்கு