தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 11, 2017

விழித்தெழு தமிழா...


நண்பா பேரூந்திலோ, ரயிலிலோ பயணம் போகிறோம் பொழுது போக்கிற்காக ஏதாவதொரு பத்திரிக்கை வாங்குகிறோம் பத்திரிக்கை எதற்காக நேரத்தை கழிப்பதற்காக பத்திரிக்கை சுமார் முப்பது பக்கம் என்று வைத்துக் கொள்வோம் அதில் சரிபாதி விளம்பரம். முன் புறமும், பின்புறமும் திரைப்படத்திலும், தொல்லைக்காட்சியிலும் நாம் அன்றாடம் பார்த்துப் பார்த்து சலித்துப் போன திரைப்பட நடிகர் நடிகையரின் புகைப்படம். எல்லா பத்திரிக்கையுமே வருடத்திற்க்கு ஒருமுறை மை விலையேற்றம், பேப்பர் விலையேற்றம், மின்சாரக் கட்டணஉயர்வு, போக்குவரத்துக் கட்டணஉயர்வு, தொழிளாலர் சம்பளஉயர்வு என்று விலை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நமக்கு இதைப்பற்றி எல்லாம் சிந்திக்க நேரமில்லை ஏன்னா நமக்கு தூங்கணும்.
சரி மறுபாதியில் என்ன இருக்கு அதைக்காண்போம்,

01. தூ.... வில் தொடங்கும் அந்த மூன்றெழுத்து நடிகையின் நாய்க்கு சுகமில்லை அதனால் நடிகை மூட்அவுட்.
02. உஜாலா நடிகை கொடைக்கானலில் குஜாலா
03. மீன் குழம்பு எனக்கு உயிர் கைலாஞ்சி நடிகையின் சுவையான பேட்டி.

இந்த மாதிரியான அறிவுப்பூர்வமான விசயங்கள் நண்பா, நண்பி சிந்தித்துப்பார் இவையெல்லாம் தேவையா ?
கரும்பு தின்னக்கூலியும் கேட்ட பரம்பரையில் வந்தவர்கள் நாம். நான் ஒருவன் வாங்காமல் இருந்தால் இவர்கள் திருந்தி விடுவார்களா ? என்று கேட்காதே சிறுதுளி பெருவெள்ளம் ஒருகை தட்டினால் ஓசை வராது மறு கையும் தட்டவேண்டும் மறுகை தட்டினால் பல கைகளும் தட்டும். வேறு என்னசெய்வது பொழுது போக வேண்டுமே என்கிறாயா ?
இயற்கையை ரசித்துப்பார்... இல்லையேல்...
உன்சக பயணிகளிடம் பேசிப்பார்...
விஞ்ஞானம்பேசு
மெய்ஞானம்பேசு
அஞ்ஞானம்பேசு
ஏன் உன் ஞானமும்பேசு
பேசு நண்பா உன் வைரத்திற்கு (மூளைக்கு) பட்டை தீட்டு இல்லையேல் இவர்கள் உன் நெற்றியில் பட்டை போட்டு விடுவார்கள். ஏமாந்து விட்டு ஏமாற்றியவனை குறை சொல்லாதே அது கையாலாகாதவன் பேச்சு.

ஏமாற்றியவன் அயோக்கியன்
ஏமாறுபவன் அப்பாவி
இது அந்தக்காலம்.

ஏமாற்றியவன் அறிவாளி
ஏமாறுபவன் முட்டாள்
இது இந்தக்காலம்.

நண்பா... ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்.
ஏமாறுபவன் முதல் இலக்கம் ஏமாற்றுபவன் இரண்டாம் இலக்கம் முதலாமாவன் இல்லையேல் உலகில் இரண்டாமாவன் தோன்றவே முடியாது ஆகவே இரண்டாமாவனை உருவாக்கிய முதலாமாவனே குற்றவாளி எல்லாவற்றிலும் முன்னோக்கிப் போகும் நீ இதில் மட்டும் பின்னோக்கிப் போவதேன் ?

44 கருத்துகள்:

 1. சிலர் ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை உணரவே ரொம்ப காலம் ஆகிவிடும். சில உணரப்படாமலேயே போவதுண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 2. இப்போது யார் புத்தகம் வாங்குகிறார்கள்? இரயிலி ஏறி அமர்ந்ததும் இறங்கும் இடம் வருவது கூட தெரியாமல் கைப்பேசியில் அல்லவா ஆழ்ந்துவிடுகிறார்கள்?

  பதிலளிநீக்கு
 3. அன்பு நண்பரே மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. புத்தகம் வாங்குவது போய் செல்போனுக்குள் சிறையாகி விட்டோம் அண்ணா...

  பதிலளிநீக்கு
 5. ஏமாற்றியவன் அறிவாளி
  ஏமாற்றியவன் முட்டாள்
  இந்தக்கால பழமொழி உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 6. புத்தகம் போய்விட்டது டும் டும் டும்
  செல்போன் வந்துவிட்டது டும் டும் டும்

  பதிலளிநீக்கு
 7. இதையெல்லாம் படிப்பது சிலகாலம் மட்டுமே !நடுவயதுக் காரர்கள் படிக்கிறார்களா ,நீங்களே சொல்லுங்கள் ஜி :)

  பதிலளிநீக்கு
 8. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 9. வார மாத இதழ் கள் வாங்குவது old style.

  பதிலளிநீக்கு
 10. தினசரிகளைப் படிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலான தொலைக்காட்சி சானல்கள் செய்தியைச் சரிவரச் சொல்லுவதில்லை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எந்த சேனலுமே நடுநிலையில் இல்லை உண்மையே

   நீக்கு
 11. ஜி!இப்பவும், இன்னமும் இதழ்கள் வாங்குகிறார்களா? ஜி? அதிசயம்தான்...இப்போது எல்லோரும் கையடக்கமாகத்தானே இருக்காங்க!!! நீங்கள் சொல்லுவது சரிதான் ஜி ஆனால் விளம்பரம் இல்லாமல் எந்தப் பத்திரிக்கையும் நடத்த முடியாது என்பதுதான் வியாபார உலகில் நடக்கும் உண்மை. ஒரு நல்ல பத்திரிக்கை சரியான விளம்பரதாரர்கள் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. எல்லாமே பணம் தானே ஜி! பத்திரிக்கை உலகிலும் போட்டி டி ஆர் பி ரேட் என்பது போல் எனவே நீங்கள் சொல்லுவது போல் செய்திகள் போட்டால் தான் போகும் என்று தரமும் தாழ்ந்து வருகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான விளக்கத்திற்கு நன்றி
   எல்லாம் சரிதான் இவர்களின் முன்னேற்றத்திற்கு நாமேன் பலியாக வேண்டும்

   நீக்கு
  2. நாம் பலியானால்தான் இவர்கள் முன்னேறமுடியும்

   நீக்கு
  3. வாங்க ஐயா உண்மை

   நீக்கு
 12. நீங்கள் சொல்வதுபோல இதழ்களை வாங்கிப்படிப்பது அந்தக் காலம்.இப்போதுஅது குறைந்துவிட்டது.இருந்தாலும் உங்களின் கருத்து ஏற்கப்படவேண்டியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 13. மேயிற மாட்டை நக்குற மாடு கெடுத்ததாம்.. என்று சொல்வழக்கு உண்டு..

  மாடுகளுக்கு சொறிஞ்சி விட்டா சுகமோ சுகம்!..
  ஆனால், மடியில் உள்ளதைக் கறந்து விடுவது தெரியாது..

  இந்த வாரம் இது நல்லது.. ந்னு சொன்னால்
  அடுத்த வாரங்களில் அதுவே கெட்டது.. என்கிறான்..

  ஒருத்தங்கிட்டயே ஏகப்பட்ட பத்திரிக்கைகள்..

  தஞ்சாவூர் ஆற்றோரத்தில் வீட்டு மனை அமோகம்!.. - என்று இதில் போட்டால்,

  இன்னொன்றில் - ஐயகோ.. தஞ்சாவூரில் விவசாயம் அழிகின்றதே.. - என்று அவனே ஓலமிடுகின்றான்..

  நம்மிடம் மிச்சம் மீதியாய் இருக்கும் பணத்தின் மீதே கண்..

  நாம்தான் புத்திசாலியாக பிழைத்துக் கொள்ள வேண்டும்..
  ஆனாலும் - இவங்களிடம் மக்கள் முட்டாள்களாக ஆவதையே விரும்புகின்றார்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..ஹா..ஹா..வவிரிவான நடைமுறை உண்மையை சொன்னீர்கள் ஜி

   நீக்கு
 14. சிலர்தான் பயணத்தின்போது பத்திரிக்கைகள் வாங்குகிறார்கள். அது நேரப் பொழுதுபோக்குக்குத்தானே. அதுலபோய் இலக்கியக்கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்? இப்போது வரும் பத்திரிகைகளில் லைஃப் (குமுதம்) பரவாயில்லை.

  பதிலளிநீக்கு
 15. Nobody talking with co passengers now a days, as everyone got addicted with mobile phones.

  Anyway, yr post is very good.

  பதிலளிநீக்கு
 16. தரமான இதழ்கள் இல்லை என்பது உண்மை.வாங்குவதை நிறுத்திவிட்டேன். வாய்ப்புக் கிடைத்தால் நூலகத்தில் புரட்டிப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 17. அந்த காலத்து சதக் சதக் என்ற தந்தி பத்திரிகை முதல் இந்தக் கால டைம்பாஸ் வரை, எல்லாவற்றிற்கும் சர்குலேஷன் தான் முக்கியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

   நீக்கு
 18. பெயரில்லா2/23/2017 9:37 PM

  வரிகள் மிக நன்று. ரசித்தேன் சகோதரா.

  பதிலளிநீக்கு
 19. அதைக்கூட படிக்க வாய்ப்பில்லை நண்பரே...

  பதிலளிநீக்கு