இருப்பதின் பெருமை சிலரின்
கண்களுக்கு தென்படுவதில்லை தாயை அருகில் இருந்து கவனித்து கொள்ள முடிவதில்லையே
என்று ஏங்கும் பலரும் அயல்நாட்டில் வசிப்பர் உள் நாட்டிலேயே வசிக்கும் மகன்கள்
சிலர் தாயின் அன்பை உணர்வதில்லை இது இறைவனின் சூழ்ச்சியா ? மனிதன்
தெளிவு பெறாத அறியாமையா ? அல்லது சூழ்நிலைகள் இப்படியான
வாழ்வை அமைத்து விடுகின்றனவா ? பெரும்பாலானவர்கள் இழந்த பிறகே அதன் அருமையை
உணர்கின்றார்கள் பிறகு வருந்தி பயன் என்ன ?
தாய் மட்டுமல்ல நண்பர்களே.... தந்தையும்கூட, ஏன் ? சிலருக்கு
மனைவியும்கூட வாழும் காலம் என்பது கொஞ்ச நேரமே... போகும் தூரமோ... அறியாதது
இருக்கும்வரை சந்தோஷமாக வாழ்வோம் நமக்கு மீண்டும் இதே தாயும். இதே தந்தையும் ஏன் ? இதே
மனைவியும், குழந்தைகளும் கிடைப்பார்கள் என்று உறுதி சொல்ல முடியாது காரணம்
மீண்டும் மறுபிறவி உண்டா ? இல்லையா ? என்பது நமக்குத் தெரியாது பிறர் மீது நாம் அன்பு
செலுத்துவதால் நமக்கு நஷ்டம் வரப்போவதில்லை கண்டிப்பாக லாபமே இருக்கும் எத்தனையோ
மேதைகள் இறந்தும் மக்கள் மனதில் வாழ்கின்றார்கள் அவர்கள் அனைவருமே அன்பே வடிவமாக
வாழ்ந்தவர்களே... பெற்றோர்கள் மீது அன்பு செலுத்தாமல் வாழ்ந்தவர்கள் நிச்சயமாக
அவர்களை இழந்த பிறகு நினைத்துப்பார்த்து வருந்தும் நிலைக்கு கண்டிப்பாக வருவார்கள்
இதை ஆழ்ந்து தங்களின் உறவினர்கள், நண்பர்களை கணக்கு எடுத்துப்பாருங்கள் இந்த உண்மை
விளங்கும்.
சிலர் திரைப்பட நடிகர்கள் மீது
வைத்திருக்கும் அன்பில் பகுதியாவது பெற்றோர்கள் மீது செலுத்திப்பாருங்கள் நடிகனின்
பதாகைகளில் ஏறி பாலூற்றுகின்றாய் கீழே தவறி விழுந்து உனக்கு மறுநாள் உன்னைப்பெற்று
வளர்த்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோர்கள் உனக்கு பாலூற்றுகின்றார்கள்
அவர்களுக்கு நீ பாலூற்றுவாய் என்பதுதானே அவர்களின் எதிர்பார்ப்பு அவர்களுக்காக தீ
குளிக்கின்றாய் ரசிகருக்காக எந்த நடிகனாவது தீ குளித்ததாக சரித்திரம் உண்டா ? இதுவரையில்
ஏதோ தெரியாமல் வாழ்ந்து விட்டாய் சரி மறந்து விடுவோம் நேற்று நம் சகோதரன் தீ
குளித்தானே அவனுக்கு கிடைத்தது என்ன ? அவனது குடும்பத்தின் நிலையென்ன ? இது
உனது அறிவுக்கண்ணுக்கு தென்படவில்லையா ? பெற்றோர்களுக்காக தீ குளிக்க வேண்டாம்
அவர்களுக்கு தீ மூட்டும் காலம்வரையிலாவது அன்பு செலுத்துங்கள் நடிகர்களின் பெயரை
உங்களது பெயரோடு இணைத்து போடுகின்றீர்கள் இதன் அர்த்தம் தெரியுமா ? நண்பர்களே...
விரிவாக எழுத எனது கைகள் நடுங்குகின்றன... காரணம் உனது தாய் எனக்கும் தாய்
போன்றவளே.
இப்படிப் பெயர்களை
சுவரொட்டியில் அடித்து வீதிகளில் ஒட்டியவர்கள் அனைவருமே பெயருக்குப் பிறகு தங்களது
பட்டப் படிப்பையும் போடுகின்றீர்களே... அந்த பட்டத்தை உங்களுக்கு வாங்கி கொடுத்ததற்கு பின்னால்
தங்களது தந்தையின் உழைப்பு மறைந்திருப்பது தெரியுமா ? ஒருவேளை மறைந்திருப்பதால்தான்
தெரியவில்லையோ ? அதேநேரம் படிக்காத எத்தனையோ (என்னையும் சேர்க்கவும்) பேருக்கு இப்படி தனது பெயருடன்
நடிகரின் பெயரை இணைப்பது தவறு என்று தெரிகின்றது படித்த பட்டதாரியான உனக்கு விளங்காதது
ஏன் ? பெற்றோரை காப்பது கடமை என்று
அனைத்து மதங்களுமே போதித்து இருக்கின்றது தாயை நடமாடும் தெய்வம் என்றும் சொல்வார்கள் படிப்புக்கும், அறிவுக்கும் இடைவெளி உண்டு என்பது மெய்தானோ ? இளைஞர்களே... கொஞ்சம்
சிந்திப்பீர்.
ஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)).. சிறீ சிவசம்போ அங்கிளைக் காணம் கர்:)
பதிலளிநீக்குஉண்மை.. மிக நிஜமான போஸ்ட். இந்தப் பிறவியில் அன்பு செலுத்தாதவர்களுக்கு அடுத்த பிறவி இருந்தென்ன விட்டென்ன.. அப்போ மட்டும் திருந்திடுவார்களோ என்ன.
பதிலளிநீக்குகோப தாபம் வருவது இயல்புதான், சண்டைபோடலாம் திட்டலாம் ஆனா நம் பெற்றோரை, நம் குடும்பத்தைக் கவனிக்காமல் ஊருக்கு உழைச்சு என்ன பயன்...
வருக முதல் வருகை தந்து முத்தாய்ப்பான கருத்துரையை வைத்தமைக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துகளோடு நன்றி.
நீக்குவணக்கம் சகோ!
பதிலளிநீக்குஉள்ளத்திலுள்ள ஆதங்கத்தை அப்பட்டமாகப் பதிவாகத் தந்தீர்கள் சகோ!
சில சினிமாக்களாலும், அரசியலாலும் சிதறிப் போகுது எங்கள் சமுதாயம்...
வேதனைதான் விளைச்சலாகிறது!..
சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு. நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!
கவிஞரின் வருகைக்கும்,
நீக்குஅழகிய கருத்துரைக்கும் நன்றி.
இப்போ தூங்கினா காலை எழும்புவோமான்னே நிச்சயமில்லை வாழ்க்கையில் ..அது புரியாம பலர் வெறுப்பு கோபத்தை வளர்த்து குப்பையாக்கிக்கறாங்க அவங்களையே :(
பதிலளிநீக்குஎதுவும் இல்லாதபோது தான் அருமை புரியும் .உயிருடன் இருக்கும்போது கவனிக்காதவங்க செத்த பின் என்ன செஞ்சி என்ன பயன் :(
வாழ்க்கை ரொம்ப சின்னது அதை புரிந்தால் அனைவருக்கும் நல்லது .
தீ குளிப்பு :( இப்போ ரீசண்டா நடந்ததா ஏதாவது .
இந்த அரசியல் வியாதிகளும் நடிகர்களும் சிலரின் மூளையை மழுங்கடிக்க வைக்கிறார்கள் .எந்த இடத்திலும் தலைவன் தீக்குளித்தோ இல்லை அட்லீஸ்ட் தீ குளிக்கிறமாதிரி சீன போட்டோ பார்த்திருக்கிறீர்களா :( லேசா ஒரு சிறு கீற்று பட்டாலும் உயிர் போகும் இந்த தீ . இந்த அளவுக்கா வெறியூட்டப்படுகிறார்கள் இளைஞர்கள் .:(
வருக சகோ...
நீக்குதீக்குளிப்பு சமீபத்தில் இல்லை ஆனால் அதிராவின் அங்கிளும், உங்களது சித்தப்பாவும் ஏதோ ஜேம்ஸ் ஊரணியில் குதிப்பது போல... அரசியலில் குதித்ததால் அடிதடியை தொடங்கிட்டானுக...
சீக்கிரமே நிறையபேர் குளிப்பாங்கே...
ஹா ஹா நானும் மறைமுகமா சொல்லிப்பார்த்தேன் சித்தப்பா என் பேச்சை கேக்கலை பாருங்க :)
நீக்குஆஜர்.....வரேன்.. கம்ப்யுயூட்டர் பக்கம் வந்ததும்
பதிலளிநீக்குகீதா
படிப்பும் அறிவும் இணைந்திருந்தால் மிக மிக நன்று.....ஆனால் இரண்டும் இணைவது என்பது பெரும்பான்மையில் இல்லை....
பதிலளிநீக்குபடிப்பு என்பது வேறு அறிவு எனவது வேறு...ஏட்டு ச்சுரைக்காய் கறிக்கு உதவாது எனவது சும்மா சொல்லப்பட்டது அல்ல...அறிவு மழுங்குவதால்தான் படித்தவரும் மோசமாய் நடந்து கொள்கிறார்கள்...
நம் வாழ்வு இமைப் பொழுதுதான்...அடுத்த நொடி நாம் இருப்போமா என்பது..நிச்சயமில்லை...வாழும் நாட்களை சந்தோஷமாக..புத்திசாலித்தனமாக வாழ்வது நன்று...சரிதான் .சொல்வது எளிது..நடைமுறைப்படுத்துவது அவரவர் சிந்திப்பதில்...நல்லாருக்கு ஜி
கீதா
ஆம் இன்றைய நிலைப்பாடு படிப்பும், அறிவும் நேர்கோட்டில் இல்லை.
நீக்குமுட்டாள்கள் பெறுகி வருவது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையே...
அருமையான பதிவு. இருக்கும் இந்தப் பொருளின் அருமையையும் உணர்வதில்லை நாம். இழந்த பின்தான் சிந்திக்கிறோம். நடிகனின் பெயரை தன் பெயரோடு இணைத்துக்கொள்ளும் வழக்கம்எவ்வளவு ஆபத்தானது! வல்லிம்மா அடிக்கடி சொல்வார். சொல்லாமல் எதையும் மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது. இருக்கும்போது சந்தோஷமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு மகிழ்வாழ்வு வாழவேண்டும் என்பார். அதுவும் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி வல்லிம்மா சொல்வது சிறந்த வாழ்வியல் உண்மை.
நீக்குநடமாடும் தெய்வங்களைப் போற்றுவோம்
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி.
நீக்குஇன்றைய படிப்பு பணம் சம்பாதிக்க மட்டுமே சொல்லிக் கொடுக்கிறது
பதிலளிநீக்குவருக சகோ மிகச்சரியான சொல்லாடல் வருகைக்கு நன்றி.
நீக்குஇன்றைய கல்வியினால் நல்ல சிந்தனையும் செயலும் வளர்கின்றனவா!....
பதிலளிநீக்குசில்லறையை எண்ணுவதிலும் கத்தை கத்தையாகப் பதுக்குவதிலும் அல்லவா கல்வி கற்றவர்கள் முன்னேறியிருக்கின்றார்கள்!..
வருக ஜி
நீக்குஇதன் தொடக்கம் நம்மிடமே... பணத்தை வாங்கி கொண்டு ஓட்டுப்போடுவதால் அவன் போட்ட முதல் எடுத்து பணமுதலை ஆகிறான்.
நல்ல ஓர் ஆதங்க பதிவு நண்பரே.
பதிலளிநீக்குதங்களது வருகை கண்டு மகிழ்ச்சி நண்பரே...
நீக்குஅருமையான நெகிழ்வான பதிவு.
பதிலளிநீக்குநல்ல விழிப்புணர்வு பதிவு.
இருக்கும் வரை அன்பை கொடுத்து அனபை பெற்று வாழ்வோம்.
வாழ்க வளமுடன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி
நீக்குஉங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குவருக சகோ வாயை வலிக்கும்வரை ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பதிவு. இளைஞர்கள் சினிமா வெறும் பொழுது போக்கு என்பதை புரிந்து கொள்ளாமல், பெற்றவர்களை ஏன் தன்னைத்தானே உணர்ந்தறியாமல் வருத்திக்கொள்வது வேதனைக்குரியது. இனியாவது
இந்த செயல்களை நிறுத்திக் கொண்டால் நல்லது. பெற்றவர்களை மதித்து அன்பு காட்டினால் நம் வாழ்க்கை உயரும் என அனைவருக்கும் புரிந்தால் நன்று.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி
நீக்குஎப்போதுமே ஆடு காணாமல் போன பிறகுதான் அதன் மீதுள்ள அன்பு அதிகமாகும் இது இயற்கை.
பதிலளிநீக்குதமிழ் நாட்டில், சிவாஜி, கருணானிதி, எம்.ஜி.ஆர் மூவரும் தங்களின் தாயின்மீது அளவுக்கு அதிகமான பாசத்தைச் செலுத்தியவர்கள். (சிவகுமாரும்தான்). அப்படிப் பட்டவர்கள் பெரிய நிலைக்கு வந்ததற்கு அந்தக் குணமும் காரணமாகும்.
வருக நண்பரே நல்லதொரு கருத்து தாயின் வாழ்த்து நிச்சயம் வாழவைக்கும் என்பது உண்மையே...
நீக்குஅருமையான பதிவு நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பா நன்றி
நீக்குஇருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை பலருக்கு. இல்லாவிட்டால் முதியோர் இல்லம் ஏன்,?எதற்கு.? எத்தனை பேர் பெற்றார்கள் எமக்காக தான் கஷ்டப்பட்டார்கள் நாம் அவர்களுக்கு எங்கள் கடமையை செய்யவேண்டுமென நினைக்கிறார்கள்.
பதிலளிநீக்குஇருக்கும்போது ஒருவேளை உணவு ஊட்ட முடியாதவன், இறந்தபின் ஊரையே கூட்டி உணவளிக்கிறான்.. என்ன மனிதர்கள் இவர்கள்.
சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு அண்ணா ஜீ.
வருக தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி.
நீக்குசிந்தனை செய் மனமே...என்று பாடத்தான் தோன்றுகிறது நண்பரே..
பதிலளிநீக்குபாட்டு உடலுக்கு நல்லது நண்பரே...
நீக்குநல்ல உறவு அமைவதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் அது கிடைத்துவிடுவதில்லை.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஉண்மை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குசரியாக சொல்லியிருக்கிறீர்கள். என்று தணியும் இந்த திரைப்பட மோகம் ? என்று நம் மக்கள் பெற்றோரை கண்ணில் வைத்து காப்பாற்றுவார்கள் என்ற கவலை உங்களைப்போலவே எனக்கும் உண்டு.
பதிலளிநீக்குபதிவுக்கு பாராட்டுகள்!
பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே
நீக்குகுடும்பச் சிக்கல்கள், சூழ்நிலைச் சிக்கல்கள் எல்லாம் கடந்து தாய் தாய்மை இரண்டுமே உரிய மதிப்புடன் நடத்தப்பட வேண்டும். Value system / Priority system இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வது பற்றிய தங்கள் கருத்து பிடித்திருக்கிறது.
பதிலளிநீக்குநண்பரின் அழகிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்கு