தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், பிப்ரவரி 08, 2018

கோட்டையூரிலிருந்து - 50


கோட்டையூர்
கோட்புலிநாயனார்
கோவில்
கோலாகலமான அலங்காரம் காரணம்
கோடீஸ்வரர்கள் இல்லத்திருமணம்
கோபாலபட்டணம்
கோவிந்தன் ஊடகழி
கோமளம் அம்மாள் புதல்வன்
கோச்சடையானுக்கும்,
கோயமுத்தூர்
கோபால்சாமி ஊடகழி
கோசலை அம்மாள் புதல்வி
கோகிலாவுக்கும் திருமணம்
கோகிலாவுக்கு அவனது தம்பி
கோபிநாத் மட்டுமே...
கோச்சடையானின்
கோடிக்கணக்கான சொத்துகளுக்கும் இனி
கோகிலாவும் வாரிசு
கோவில்பட்டி
கோடாங்கி
கோமுட்டியின் வேதவாக்கே இந்த
கோலாகலமான திருமணம்
கோச்சடையான் வீரனும்கூட
கோல்ஃப் விளையாட்டில்
கோல்ட் மெடல் வாங்கியவன்
கோச்சடையான் நல்ல திறமைசாலி
கோபப்படாமல் பேசி யாரையும் தனது
கோட்டுக்குள் நிறுத்தி விடுவான்
கோலப்பொடியிலிருந்து...
கோலா டீலர்வரை தொடாத பிசினஸே இல்லை
கோட்டூர் முதல்
கோடியக்கரை வரை
கோபால்சாமிக்கு உறவினர்கள் உண்டு வலைப்பதிவர்
கோமதி அரசு குடும்ப நண்பரும்கூட கணவர் அரசு
கோட்-ஸூட் போட்டு மிடுக்காக நின்றிருந்தார்
கோவிந்தனும் சாதாரண ஆளில்லை
கோபாலபுரம்வரை அரசியல் செல்வாக்கு உள்ளவர்
கோடீஸ்வரர்களின் வரவுக்கு பஞ்சமில்லை
கோவில் இருக்கும்
கோப்பெருந்தேவி நகரின் தெருவின்
கோடிவரை உயர்ரக கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
கோலாலம்பூரிலிருந்து
கோச்சடையானின் உயிர்த்தோழன்
கோதைமாறன் தனது மனைவி
கோவழகியுடன் வந்திருந்தான்
கோயில்பிள்ளை in செதுக்கல்கள் தள அதிபர்
கோ அவர்கள் லண்டனிலிருந்து வந்திருந்தார்
கோடீஸ்வரர்களின்
கோட்டையூர் திருமணத்தை வாழ்த்துவோமே...

வலைப்பதிவர் திருமதி. வல்லிசிம்ஹன் அம்மா கேட்டுக் கொண்டதற்காக இப்பதிவு அவர்கள் விரைவில் நலமடைய எமது பிரார்த்தனைகள் - கில்லர்ஜி

காணொளி

37 கருத்துகள்:

  1. காணொளியில் கோவில் ஸூப்பர். பதிவில் தினத்தந்தி ஸ்பெஷலான 'கோ வென்று கதறி அழுதார்' தவிர அனைத்து "கோ" வும் வந்துவிட்டது போலவே .்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி
      இருந்தாலும் ஆதித்தனார் ஐயா பேரன்களை இப்படி நக்கல்ஸ் பண்ணலாமா ?

      நீக்கு
  2. கோ எழுத்தில் வழமைபோல் சூப்பரா எழுதியிருக்கிறீங்க. எழுத்துக்கள் இன்னும் எழுத இருக்கா. காணொளியில் கோவில் அழகா இருக்கு. ஏன் சங்கு ஊதும் சத்தம்!!! கோமதி அக்காவையும் விட்டு வைக்கவில்லை.
    ஊட கழி என்றால் என்ன.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இரண்டு கேள்விகள் எனது பதிவை தொடர்ந்து வந்திருந்தால் ஊடகழி என்றால் என்னவென்று கேட்டிருக்க மாட்டீர்கள்.

      ஊடகழி அவர்களது ஜாதி மேலும் சங்கு ஊதுவது அவர்களது ஜாதி வழக்கப்படி மரபு.

      சங்கின் ஒலி செல்லும் திசையெல்லாம் அறியப்படும் செல்லச்சீமான்களாக வாழ்வில் வளம் பெற்று, வலம் வருவர்.

      இவ்வளவு பணம் படைத்த கோடீஸ்வரர்கள் ஸ்டார் ஹோட்டலில் திருமணம் வைக்காமல் எதற்காக சிறிய ஊரான கோட்டையூர் கோட்புலிநாயனார் கோவிலில் வைக்கின்றார்கள் ?

      அவர்களது குலதெய்வம் இதுதான் இங்குதான் கோச்சடையானின் பெற்றோர்களுக்கும் 18.06.1989-ல் திருமணம் நடந்தது இதை அப்பொழுதே பதிவில் போட்டேனே படிக்கவில்லையோ...

      ஐயோ.. ஐயோ... உங்களுக்கு நிறைய சரித்திரம் தெரியவேயில்லை.

      நீக்கு
  3. ஆஜர்....ஆஜர்....ஆஜர்...மொபைல் வழி....

    கோ...கோ...கோ...
    கோழி கூவும் நேரத்தில்
    கோச்சடையான்
    கோகிலாவுக்கு
    கோடானு
    கோடி தேவர்களும் வாழ்த்த
    கோயில் பூசாரி தாலி எடுத்துக் கொடுக்க
    கோதைகளின் குலவை ஒலிக்க
    கோர்த்து வைத்த தாலியை முடிந்தான்..
    கோடானு கோடி வாழ்த்துகள் சொல்லிக்
    கோயிலை விட்டு வெளியில் வந்தோம்...

    முகூர்த்த நேரம் சொல்லலை...தேதி சொல்லல..இருந்தாலும் நாங்க வந்துட்டோம்ல....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே நீங்களும் "கோ" கவிதையை தந்து விட்டீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. கோயில் மிக அருமை! நல்ல கற்பனை வளம். "கோ"வில் வரும் வார்த்தைகளைக் "கோ"ர்வையாகக் "கோ"ர்த்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. திருமணம் இனிதாக நடைபெற்றதும், அதில் நாங்களும் கலந்து கொண்டதும் அருமை.
    வல்லி அக்கா என்றால் நான் இல்லாமலா?
    'கோ' என்றதும் சகோவிற்கு என் நினைவும் வந்தது மகிழ்ச்சியை தருகிறது.
    அன்பு உறவில் எங்களை இணைத்தமைக்கு நன்றி சகோ.
    வல்லி அக்கா விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. கீதாவின் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் விரிவான" மகிழ்வான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. கோபாலபுரத்தையும், முன்னாள் அமைச்சர் கோவேந்தனையும், கோடாங்கியையும்தான் காணவில்லை.

    காணொளியில் கங்கைகொண்ட சோழபுரக் கோவிலா?

    கலக்கறீங்க கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கோபாலபுரமும், கோடாங்கியும் வந்து விட்டதே...

      நீக்கு
  8. உங்கள் திறமையையும் நேரத்தையுமிப்படி செலவழிக்கலாமா மனதில் பட்டதுசொல்லிவிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொழுது போக்குக்காகவும், மனதிருப்திக்காகவும்தானே ஐயா எழுதுறோம் இதை வேறென்ன செய்ய இயலும் ?

      மனதில் பட்டதை சொல்வதே உண்மையான கருத்து ஐயா.

      நீக்கு
  9. ஆஹா கோ வில கவிதை எழுதி கில்லர்ஜி கோமகன் ஆகிட்டாரோ:))/... கில்லர்ஜி க்கு “கோ கவிஞர்” எனப் பட்டம் தந்து கெளரவிக்கிறோம்:))..

    இருப்பினும் விடமாட்டேன்ன்ன் அப்போ நீங்க ஏன் ஸ்ஸ்ஸ்ஸ் ல ஆரம்பிச்சு ஒரு கவித கவித எழுதக்கூடாது?:).. அதாவது ஸ்கொட்லாந்து:)) ஹா ஹா ஹா...

    கவிதையில் ஒரு டப்பு இருக்கிறது புலவரே.. அது கோல்ஃப் அல்ல.. கொல்ஃப் ஆக்கும்:))... அதனால தந்துவிட்ட பட்டத்தை வாபஸ் வாங்கிடுறேன்:)..
    இப்படிக்கு:- குற்றம் கண்டு பிடிக்க வென்றே உலாவரும் கூட்ட சங்க செயலாளர்:):))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க செயலாளரே...
      நாங்கள் கோல்ஃப் என்றுதான் எழுதுகிறோம்.

      எவ்வளவு பிழை இருக்கிறதோ.. தகுந்தாற்போல் பரிசை குறைத்துக் கொள்ளலாமே...

      நீக்கு
  10. வீடியோவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பெரீஈஈஈஈஈஈய பில்டப் எல்லாம் கொடுத்து ஆரம்பிச்சதும் ஆஹா கல்யாண வைபோகம் பார்க்கலாமே என நினைச்சால்.. வாழ்த்துக்கள் கில்லர்ஜி ஆம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    மணமக்கள் வாழிய வாழியவே!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பில்டப் கொடுக்கவில்லையே... வாழ்த்து சொன்னேன்.

      நீக்கு
    2. ////நான் பில்டப் கொடுக்கவில்லையே... வாழ்த்து சொன்னேன்.////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... வீடியோவின் ஆரம்பமே கோச்சடையான் கோகிலா திருமணவிளா எனப்போட்டு.. நம் எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டமை ... நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குத்த்த்தம் குத்த்தமேஏஏஏஏஏ:)... இப்போ அந்த திருமண வீடியோவைப் போடுங்கோ:) ஹா ஹா ஹா

      நீக்கு
    3. இது கல்யாண கேஸட் பார்க்கும் பொழுது எனது மொபைலில் சுட்டது.

      பெண்-மாப்பிள்ளையை எடுக்ககூடாதுனு பெண் வீட்டார் சொல்லிட்டாங்க...

      நீக்கு
  11. வணக்கம் சகோ!

    கோடியில் ஒருத்தருக்குத்தான் இப்படி அரிய சிந்தனைகள் கோர்வையாய் எழுதவரும்!..:)

    வாசித்து மகிழ்ந்தேன்! நல்ல முயற்சி!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அருமை. கோ.வில் வார்த்தைகளை தொகுத்து இறுதியில் கோவிலின் காணொளி வரை மிக அருமையாக இருந்தது. மிகவும் ரசித்துப் படித்தேன். தங்களின் அற்புத சிந்தனை தந்த உழைப்பிற்கு பரிசாக என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    தங்கள் கற்பனையில் உதித்த மணமக்களுக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசனைக்கும், விரிவான கருத்துரைத்து வாழ்த்தியமைக்கும் நன்றி.

      நீக்கு
  13. வாழ்த்துக்கள். கோ வரிகள் அருமை ஜி. விரைவில் இதுக்கு பதில் கவிதை எழுத வேண்டும்)))))

    பதிலளிநீக்கு
  14. கோர்வையாய் எழுதியது வியக்க வைக்குதுண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது "கோ"வில் பதிவுகளை விடவா ?
      வருகைக்கு நன்றி ச'கோ'

      நீக்கு
  15. கோட்டையூர் மிகவும் பிடித்த ஊர் போல தெரிகிறது. 'கோ' என்ற முதல் எழுத்தைப் பயன்படுத்தி எழுதிய கதை சவாலாக ஏற்று எழுதியுள்ளீர்கள். வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு மனம் நிறைந்த நன்றி

      நீக்கு
  16. அன்பு கில்லர்ஜி,
    கோட்டையூர் நாங்கள் தங்கி இருந்த
    அழகப்பா யுனிவர்சிடி காம்பஸிலிருந்து எங்களுக்கு பைக்கில் சென்று வரும் தூரம். மிகப் பிடித்த்த ஊர்.
    கோவெழுத்து எழுத்துக் கோ என்று உங்களை அழைக்க வைக்கிறது.
    மிக அருமை. திருமண் அருமையைச் சொல்வதா. மற்ற சுபங்களிச் சொல்வதா.
    அன்பு சகோதரரே ஆசு கவி நீங்கள்.

    கணினியில் உட்கார் உடல் அனுமதித்தது.
    அன்புடன் வாழ்த்துகள். கோமதி அரசுவும் வந்தது
    இன்னும் மகிழ்ச்சி.
    என்று காண்பேனோ .
    நன்றிகள். அன்புகள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அம்மா தங்களது விரிவான கருத்துரை கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.

      வாழ்த்துகளுக்கு நன்றிகள் கோடி.

      நீக்கு
  17. கோர்வையாக வந்திருக்கிறது. பாராட்டுகள்.

    வல்லிம்மா விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  18. வழக்கம்போல் சொற்சிலம்பம் ஆடிவிட்டீர்கள்! பதிவை இரசித்தேன்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு