தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 13, 2018

கொங்காச்சிறுக்கிசில நேரங்களில் தொலைக்காட்சிகளில் புதுமுக நடிகைகள் பேட்டி கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள் அவர்கள் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்களை சொல்லி அவருக்கு ஜோடியாக நடித்து விடவேண்டும். இதுதான் என் ஆசை என்று சொல்வார்கள்.

இதில் நடித்து முடித்து விட்ட நடிகை சொல்வாள் அவருக்கு ஜோடியாக நடித்தது பூர்வஜென்ம புண்ணியம் என்று ஏண்டி கொங்காச் சிறுக்கிகளா... நான் தெரியாமல்தான் கேட்கிறேன் நீ காசுக்காக நடிச்சே, அவனும் காசுக்காக நடிச்சான் மொள்ள மாறிப்பயலும், முடிச்சவித்த சிறுக்கியும் சேர்ந்ததில் புண்ணியம் எங்கே வந்துச்சு ? தயாரிப்பாளர் அப்படினு ஒருவர் இருக்கின்றாரே அவர் முதல் போடவில்லை என்றால் திரைப்படம் வெளியாகுமா ? இதில் இன்னொரு கூத்து தெரியுமா ? இவளும் தனது திறமையை முன்னுக்கு காட்டி பெரிய நடிகை ஆகி விட்டால் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது அந்த நடிகன் சாதாரணமானவன் ஆகி விடுகின்றான் காசுக்காக முக்கியமானதை இழந்தவள்கள் எப்படியும் பேசலாம்தானே... இதற்கு அடிப்படை காரணமென்ன ? இந்தக் கூட்டங்களுக்குதானே சமூகத்தில் மரியாதை கொடி கட்டிப்பறக்கின்றது.

பண்டைக் காலங்களில் இவர்களை கூத்தாடி என்று சமூகம் இழிவாக ஒதுக்கி வைத்திருந்தது இன்று இவர்களைக் கண்டு ஆத்தாடி என்று சொல்லும் அளவுக்கு இவர்களின் நிலைப்பாடு உயர்ந்து விட்டது இன்றைய இளைஞர்கள் படிக்காத பட்டிக்காட்டு பெரியவர்களை மதிப்பதில்லை இவர்கள் ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல அதேநேரம் படிக்காத பட்டிக்காட்டு மனிதர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டுவதில்லை படித்தவர்கள்தான் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் என்று ஏதோ அப்பாமார்கள் உழைத்து வைத்த பணத்தில் இந்த மாதிரியான இழிவான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் விஞ்ஞான வளர்ச்சி படிப்பறிவின் வழியாகத்தானே இவ்வளவு உயரத்துக்கு உயர்ந்து வளர்ந்து இருக்கின்றது ஆனால் நமது தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மட்டும் இப்படியான சிந்தனை போவதற்கான காரணம் என்ன ? வளர்ப்பு முறை சரியில்லையா ? இருக்கலாம் என்பதே எமது கணிப்பு இதற்கு ஒரேயொரு விடயம் சொல்கிறேன் நமது நாட்டில் பெரும்பாலானோர் ஏதாவது கட்சியில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர் அவர்களுக்கு இது தவறாக தோன்றவில்லை ஆகவே மகனின் இந்தப்போக்கு அவர்களுக்கு தவறாக தெரியாத காரணத்தால் மகனைப்பற்றிய கவனிப்பு முறையில் சறுக்கல் இதன் காரணமாக நாட்டில் ரசிகர் மன்றங்கள் பெருகி விட்டது இதை தடுப்பதற்கு முதலில் தந்தையர்கள் கட்சி உறுப்பினர் என்ற நிலையிலிருந்து வாழ்க்கைக்கு அவசியமான தனது குடும்பத்தைப் பற்றிய உணர்வுகள் வரவேண்டும் தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்றும், அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு என்றும் சொல்வது இதனால்தான் சிந்திப்போம் செயல் படுவோம் நமது நலனுக்காக...

64 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  அழகாக சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள். இவை அனைத்துக்கும் காரணம் பணம். பணமிருந்தால், வாழ்க்கையில் வசதியாக வாழலாம் என்ற சுயநல வேட்கைகள். தங்கள் மனதில் ஏற்படும் ஆதங்கத்தினால்,தாங்கள் நல்ல நல்ல கருத்துகளை போதிக்கிறீர்கள்.மக்கள் மனம் மாறி திருந்தினால் நன்று. அருமையான பதிவு.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வினிவான கருத்துரைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 2. கருத்தும் அதற்குச் சொல்லியுள்ள தீர்வும் மிகச்சரி

  பதிலளிநீக்கு

 3. இளைய தலைமுறைகள் இப்படியாவதற்கு ரஜினிகாந்த சொன்னதுதான் சரி நமது சிஸ்டமே சரியில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படிப் பார்த்தால் நிறைய டிக்கெட் இங்குதானே இருக்குதுக...

   நீக்கு
 4. கட்சியில் இருப்பதும் ரசிகர் மாற்றம் வைப்பதும் ஒருவகை பிழைப்பாகவும் பார்க்கலாம். லாபம் பார்க்கும் விஷயங்கள் (பெரும்பாலும்) அரசியலையே பிழைக்கும் இடமாகத்தான் - பணம் சேர்க்கும் இடமாகத்தானே - பார்க்கிறார்கள்?

  ஆமாம், கொங்காச் சிறுக்கி என்றால் என்ன?!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்ஜி அரசியலே பிழைப்பாகி விட்டது.

   தத்துவார்த்தமான வார்த்தைகள் சொன்னால் ரசிக்கணும் இப்படி குறுக்கு விசாரணை பண்ணப்படாது.

   நீக்கு
  2. ஆங்ங்ங் அதைத்தான் மீயும் கேய்க்க நினைச்சேன்ன்ன்.. அதானே.. ஏதோ கொங்குறாக் கீரை என்பதுபோல இருக்கே கர்:)) ஒருவேளை புளிக்குமோ?:))

   நீக்கு
  3. கீரையா ? சரியாப்போச்சு.

   நீக்கு
  4. 'கொங்கு' என்னும் சொல்லுக்கு மணம்[வாசம்] என்று பொருள். 'கொங்குச் சிறுக்கி'தான் 'கொங்காச் சிறுக்கி' என்று திரிந்துவிட்டதோ!?

   நீக்கு
  5. இருக்கலாம் நண்பரே...

   நீக்கு
  6. ஸ்ரீராம் எனக்கும் அர்த்தம் தெரியலை நு சொல்லிருக்கேன் ஹா ஹா ஹா அதான் கில்லர்ஜி சொல்லிட்டாரே தத்துவ வார்த்தை ரசிக்கணும்னு....

   ஸ்ரீராம் கொங்கா பகுதியிலிருந்து புதுசா ஒரு ஹீரோயின் இறங்கியிருக்காங்க போல அதான் கொங்காசிறுக்கினு தலைப்பு. பாருங்க கில்லர்ஜிக்கு மட்டும் இந்த ரகசியம் எல்லாம் தெரிஞ்சுருக்கு.... ஹா ஹா ஹா ஹா...

   எனக்குத் தெரிந்து கொங்கா எனும் கணவாய் இமயமலை பகுதியில் இருக்கும் உயரமான கணவாய் பகுதி இடம். (லடாக் பகுதி கிட்ட) . வழக்கம் போல சைனா அது வரைக்கும் உள்ளது தன்னோடதுனு சொல்லுது. இதுக்கும் அப்பால தள்ளி இருக்கற லனாக் பாஸ் தான் உங்களுக்கும் எங்களுக்கும் எல்லை நு இந்தியா சொல்லுது. சைனா இந்த கொங்கா பகுதில தன்னோட கொடிய நட்டு எங்க ஏரியானு வம்பு பண்ணிச்சு இன்னும் எங்க ஏரியானு பார்டர் போடறதுல ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கருத்து. நானும் மகனும் இந்த லகாக் பிரதேசம் பற்றி அறிய முற்பட்ட போது அறிந்த தகவல்கள். இந்த ஏரியா மிகவும் மர்மமான பிரதேசமாகக் கருதப்படுகிறது. ஏலியன்கள் நடமாடுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு பள்ளமே அங்கு இருப்பதாகவும் அண்டர்க்ரவுண்டில் ராணுவத் தளம் இருக்குமோ என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டது கூகுள் மேப் ஏதோ காட்டியதால். ஆனால் இந்தப் பகுதி முழுவதும் மின்சார வேலி போடப்பட்டு மக்கள் யாரும் அங்கு செல்ல அனுமதி இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. இங்கு யாரும் வாழவும் முடியாதாம். அதீத வெப்பம் மிகு பகுதியாம். மழை வெரி வெரி ரேர்.

   ஸ்ரீராம் அப்ப கில்லர்ஜி சொல்லிருக்கற இந்த கொங்காசிறுக்கி ஏதேனும் ஏலியன் ஹீரோயினா இருக்குமோ அதான் ரகசியம் போல...ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  7. "கொங்காச்சிறுக்கி" என்ற வார்த்தை இவ்வளவு இராணுவ விடயங்களை வெளிக்கொண்டு வருமென நான் நினைக்கவில்லை.

   நீக்கு
 5. சினிமா மோகத்திலிருந்து இளைஞர்களை மீட்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லை. பெற்றோர் தான் தங்கள் குழந்தைகளைத் திருத்த வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் பெற்றோர்களே பொருப்பு நன்றி சகோ.

   நீக்கு
  2. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க கீசா மேடம். பெரும்பாலான வீட்டுல பெற்றோர்கள்தானே சினிமாவுக்கு அடிமையா இருக்காங்க....

   நீக்கு
  3. ஆம் சீரியல் அடிமையும்கூட...

   நீக்கு
  4. பெற்றோர்கள் சினிமாவுக்கு அடிமையானதன் காரணத்தால் வழி தவறிப் போன சில பெண்களை அறிவேன். அப்படி என்ன இருக்கு அந்த சினிமாவில் என்று தான் புரியவில்லை. இப்போது இருக்கானு தெரியலை. முன்னெல்லாம் மாட்னி ஷோ என்றால் மதியம் இரண்டு மணி தான்! ஆனால் பின்னர் எண்பதுகளுக்குப் பின்னர் குடும்பப் பெண்களை சினிமா பக்கம் திசை திருப்புவதற்காகப் பதினோரு மணிக்கு ஒரு சினிமா ஷோ அறிமுகம் செய்தார்கள். அதன் மூலம் பல குடும்பப் பெண்களும் சினிமா மோகத்தில் மூழ்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்றதையும் பார்த்திருக்கேன்.

   நீக்கு
  5. உண்மைதான் சகோ இந்த சீரழிவுக்கு ஊடகங்களும் முக்கிய காரணம்.

   நீக்கு
 6. உங்கள் கணிப்பு சரியானதே. பெற்ற பிள்ளைகளைச் சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்குவதே பெற்றோரின் தலையாய கடமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

   நீக்கு
 7. வளர்ப்பு சரியாக இருந்தால் வளர்ந்த விதமும் சரியாக இருக்க வாய்ப்பு உண்டு...

  பதிலளிநீக்கு
 8. சினிமா பார்த்துக் கொண்டும் அரசியல் தலைவர்களுடையவும் சினிமாக் காரர்களின் பேச்சுகளையும் கவனிப்பதால் தானே இதெல்லாம் தெரிகிறது எனக்கும் கொங்கா சிறுக்கி அபுரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா நான் எல்லா விடயத்தையுமே கூர்ந்து நோக்குபவன்.

   கூறு வாரு புரியாமல் பேசுபவர்களை கொங்காப்பயல் என்றும், கொங்காச்சிறுக்கி என்றும் சொல்வது கிராம வழக்குச்சொல் ஐயா.

   நீக்கு
  2. கேரளப் பகுதிகளில் தமிழரைக் கொங்கன் என்பார்கள் கொங்கு நாட்டவர் என்றுபொருள் பாண்டி என்றும் சொல்வார்கள் தமிழ் பேசுபவரை

   நீக்கு
  3. பாண்டி என்றால் தமிழர்கள் என்பது தெரிந்த விடயமே ஐயா.

   நீக்கு
 9. சரியாகச் சொன்னீர்கள் சகோ.

  பேர்,புகழ், ஆசை, பணம்...என மோகத்தின் காரணமாய்....தொலைத்துவிடுகிறார்கள்...பிள்ளைகளையும்...தொலைத்து விடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உண்மைதான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 10. அது என்ன கொங்காச் சிறுக்கி? வழக்கம்போல் உங்களுடைய சமூகப்பிரக்ஞையை வெளிப்படுத்திய பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
   அதுவொரு கிராமியச்சொல் மேலே ஜியெம்பி ஐயா அவர்களுக்கு விளக்கம் சொல்லி இருக்கிறேன்.

   நீக்கு
 11. ஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்ன்.. அது சரி.. தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே:) தலைப்பு பெண்பால்:) படம் ஆண்பால்தானே?:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சம்பந்தம் இல்லையா ? இந்த மாதிரி கசா'நாயகனோடு நடிக்கத்தானே ஆசைப்பட்டு இப்படி பேசுகின்றார்கள்.

   நீக்கு
 12. நீல எழுத்துக்களை மீயும் படுபயங்கரமா வழிமொழிகிறேன்ன்:)).. அதானே காசுக்காக நடிச்சுப் போட்டு இதில பெருமை வேறு:)).. இனிமேல் புதுசா ஏதும் சொல்லச் சொல்லுங்கோ கில்லர்ஜி:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுசா இனிமேல் நாமதான் எழுதிக் கொடுக்கணும்.

   நீக்கு
 13. இப்போ நாட்டுல சிந்திப்பதேயில்லை..நண்பரே..! . கண்ணு பார்க்க..காது கேட்க..கை வாங்க...எல்லாம் செயல்பாடுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேச்சைக் குறைத்து செயலை பெருக்கி விட்பார்களோ நண்பரே...

   நீக்கு
 14. சினிமா ரசிகர்கள் கட்சி தொண்டர்களாக ஆகி போவது அவர்களுக்காக உயிரை விடுவதும் வருத்தம் அளிக்க கூடியது.
  பணம் சம்பாதிக்க தெரியா உண்மை அன்பு வைத்த அப்பாவி தொண்டர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இவர்கள் ஏன் ஏமாறணும் ? தனது வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே...

   நீக்கு
 15. ஆத்தாடி... இந்த வாங்கு வாங்கீட்டீங்களே கூத்தாடிய...!! தொலைக்காட்சிகள் பெருக்கத்திற்குப் பின் தான் இது போன்ற நிலை ஏற்பட்டுவிட்டது நண்பரே.. அதற்கு முன் வரை ஒருசில நிகழ்வுகள் தவிர்த்து நிலைமை கட்டுக்குள்ளேயே இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே மிகவும் சரியான கருத்தை சொன்னீர்கள்.

   நீக்கு
 16. வளர்ப்பு சரியில்லை என்பது தான் உண்மை....

  சவுக்கடி போல பதிவு...

  ஆனாலும்
  யாரும் திருந்த மாட்டார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஊதுவதை ஊதி வைப்போம் நமது கடமையென...

   நீக்கு
 17. 'புண்ணியம் எங்கேயிருந்து வந்தது' - என்ன இப்படிக் கேட்டுட்டீங்க கில்லர்ஜி..

  ஒரு நடிகை, முன்னணி நடிகரோடு நடித்தால், அதை வைத்து அவங்களுக்கு நிறைய படம் புக் ஆகும். அதனால்தான் முன்னணி நடிகரோடு நடிப்பது பூர்வ ஜென்ம புண்ணியம் என்றெல்லாம் பில்டப் கொடுப்பாங்க. (காசு நிறைய வரும் இல்லையா?)

  இன்னொண்ணு, புதுப் படம் புக் ஆகலைனா, வேற வழியில்லாம சாதா நடிகர்களோடுலாம் நடிப்பாங்க, ஃபீல்டுல இருக்கணுமே.

  தனக்கு ரொம்ப வயதாகிவிட்டால், அதைக் காண்பித்துக்கொள்ளக்கூடாதுன்னு சின்னப் பசங்களோடெல்லாம் நடிப்பாங்க (படத்துல அக்கா மாதிரி தெரிந்தாலும்... நயனதாரா போன்றவர்கள்)

  தலைப்பு என்னைக் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே இதுவும் மஸ்க்கா (காக்கா) வேலைதானே... காரியம் முடியும்வரை.

   தலைப்பு பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 18. உங்கள் ஆதங்கம் கோபமாக வெளிப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மோகங்கள் நம் நாட்டில் மட்டும் அல்ல. மேலை நாடுகளிலும் இருக்கிறது. அங்கும் சினிமா பிரபலங்கள் பயன்படுத்திய பொருள்களை லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுத்தவர்கள் உண்டு. அங்கெல்லாம் நற்பணி மன்றங்கள் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் மேடம் ஏலம் எடுப்பவர்களை கண்டாலே எனக்கு கோபம் வரும்.

   நீக்கு
 19. மிக சரியான சாடல் பாராட்டுகள் பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 20. அருமையான பதிவு...
  நாம் திருந்தலாம்,
  நம் மக்களை திருத்துவது தானே
  நாய் வாலை நிமிர்துவது போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே திருத்த முயற்ச்சிப்பது நமது கடமையும்கூட...

   நீக்கு
 21. காலப்போக்கில் மாற்றம் வரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கு நன்றி நண்பரே...

   மாற்றம் வந்தால் மகிழும் முதல் தமிழன் நானாக இருப்பேன்.

   நீக்கு
 22. சமூகத்தில் மிகுந்த அக்கறை கொண்டதால்தான் இது போன்ற பதிவுகள் தங்களிடமிருந்து வருகின்றன. கொங்காச் சிறுக்கி பற்றியும் சிந்தித்துள்ளீர்கள். Take it In the Lighter Vein:கொங்கன் என்றால் கொங்கு நாட்டான். கர்நாடகாவில் தமிழர்களை கொங்கா என்று சொல்லுவதுண்டாம். கொங்கான் அறிவிலி என்றும் பொருள் உள்ளது. கொங்கனவர் என்ற சித்தர் இருந்தார். இவருடைய ஜீவ சமாதி திருப்பதியில் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே புதிய தகவல் தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 23. கில்லர்ஜி எந்தத் தொழிலுமே மோசமானது இல்லை. ஆனால் அதை நாம் எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தரம் அமைகிறது. அந்த வகையில் சினிமா என்பதை விட ஒலி ஒளிக் காட்சி என்று சொல்லலாமா? அது நல்லதோர் ஊடகம், ஆனால் அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு அங்கும் அரசியல், பணம் ஒழுக்கக் கேடு என்று மிகவுமே தரம் தாழ்ந்து விட்டது. பெரிய திரையும் சரி சின்னத் திரையும் சரி இரண்டுமே அப்படியாகிப் போனது மிகவுமே வியாபாரமாகிப் போனதால். எனவே பெற்றோரின் வளர்ப்பில்தான் குழந்தைகள் வருவது இருக்கிறது.

  --இருவரின் கருத்தும்

  கீதா: கில்லர்ஜி எனக்குச் சில வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை!!!!!!!!! ஹிஹிஹிஹி....

  பதிலளிநீக்கு
 24. கில்லர்ஜி எனக்கு இப்பவே ஒரு ரகசியம் தெரிஞ்சாகணும்....நீங்க அந்தக் கொங்காசிறுக்கிய தானே ஃபோட்டோ ஷூட் எடுக்கறீங்க!!!! ஹா ஹா ஹா ஹா....எந்தப் படத்துக்கோ?!!!!ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே அந்தப்படம் நான் எடுப்பது அல்அய்ன் ஜுஃபைல் அல்ஹஃபீப் என்ற மலை உச்சியில் மலைமேல் ஏறிக்கொண்டு இருப்பவர்களை எடுக்கும்போது... ஃபர்ஹானாவின் அப்பா தனது செல்லில் என்னை எடுக்கின்றார்.

   நீக்கு