தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 09, 2018

புர்ஜ் கலீஃபாவில்...புதாபியில் இருக்கும் பொழுது ஒரு முறை இந்தியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்தினரோடு துபாய் புர்ஜ் கலீஃபா வேர்ல்ட் டவருக்கு மேலே செல்வதற்கு போயிருந்த பொழுது எத்தனை முறைதான் போய் வருவது என்ற அலுப்பால் அவர்களை மேலே அனுப்பி விட்டு நான் மாலில் சுற்றிக்கொண்டு வந்தேன்

பிரமாண்டமான புக் ஸ்டாலை கண்டதும் சரி இன்றைக்கு வேண்டிய புக்குகளை அள்ளி விடலாம் என்று உள்ளே நுழைந்தேன் ஒரு நகரும் ட்ராலியை எடுத்துக் கொண்டேன் தொடக்க வரிசையில் நுழைந்தேன் எல்லாம் அரபு நூல்கள் இதை வாங்கி என்ன செய்வது ? சரியென்று அடுத்த பக்கம் போனேன் எல்லாம் ஆங்கில நாவல்கள் ஜோன் க்ரீன் எழுதிய பேப்பர் டௌன்ஸ் இருந்தது எடுத்து ட்ராலியில் போட்டேன் பிறகு ருபாஸி எழுதிய யங் சாமுராய் எடுத்துக் கொண்டேன் மற்றவை எனக்கு உடன் படவில்லை பிறகு அடுத்த பகுதியில் நுழைந்தால் எல்லாம் ஹிந்தி மலையாளம் நாவல்கள் சரியென்று...

காந்திஜியுடே டயரி, நவீன் சாவ்லா எழுதிய மதர் தெரேஸா, ஏ.பி.ஜே.அப்துல்கலாம் எழுதிய அக்னிச்சிறகுகள், மற்றும் யுவத்யம் கொதிக்குன்ன இந்தியா, டாக்டர். டி.எம். கோபிநாதபிள்ளை எழுதிய ஹிர்தய ஆரோக்கியம், அமீஷ் எழுதிய நாகன்மாருடெ ரகஸியம், எம். முகுந்தன் எழுதிய நிரித்தம் (NRITHAM),  வி.டி. நந்தகுமார் எழுதிய ரெண்டு பெண்குட்டிகள், உண்ணி ஆர். எழுதிய ஒரு பயங்கர காமுகன், ஆஹா நமக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் காக்கநாடன் எழுதிய உஷ்ண மேகலா.


எடுத்துக் கொண்டேன் சரி தமிழ் நாவல்கள் எங்கே ? நாம் உள்ளே நுழைந்ததே எழுத்தாளர் தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவலுக்காகத்தானே இதைப்படித்து விட்டுத்தானே எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பட்டுக்கோட்டை வீதிகளில் திரிந்ததாக சொல்லி இருந்தார் நாமும் வாங்கி படித்து விட்டு அபுதாபி சாலைகளில் நடந்து பார்ப்போமே என்று தேடினேன் தேடினேன் கடைசிவரை கிடைக்கவே இல்லை ஸ்டாலில் இருந்தவனிடம் கேட்டேன் தமிழ் நாவல்கள் எங்கே ? அது இல்லை என்றான் அப்பொழுதுதான் எனக்கு நினைவு வந்தது ஆங்கிலம் படித்தால் எனக்கு முதுகுவலி வரும் ஆகவே வேண்டாம் என்று எடுத்து வைத்தேன் பிறகுதான் ஞாபகம் வந்தது தமிழ் நாவலே கிடைக்காதபோது மலையாள நாவல் எதற்கு ? அந்த நேரம் செல் அழைத்தது தொடுதிரையை எடுத்து வடக்கு திசை நோக்கி தள்ளி விட்டு என்ன ? என்றேன் நாங்கள் டவரின் மேலிருந்து இறங்கப் போகின்றோம் நீங்கள் லிப்ட் அருகே வாருங்கள் என்றார்கள் டிராலியை ஓரமாக பார்க் செய்து விட்டு நடையைக் கட்டினேன் ஃபுர்ஜ் கலீஃபா லிப்டை நோக்கி... 54 கருத்துகள்:

 1. ஹா.... ஹா... ஹா...

  சும்மா சுற்றி வந்ததை இப்படியும் சொல்லலாம்! நான் சமீபத்தில் - மிக சமீபத்தில் - மோகமுள் ரீ ரீடிங் செய்தேன்!

  பதிலளிநீக்கு
 2. கடைசியில் எந்தப் புத்தகமும் வாங்கலையா? மோகமுள் இப்போ இங்கே இந்தியாவில் கிடைக்குமே, வாங்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வேண்டும் இன்னும் சூழல் அமையவில்லை.

   நீக்கு
 3. தமிழ் புத்தகங்கள் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது நண்பரே
  தமிழ் நூல்கள் இல்லாதபோது வேறுமொழி நூல்கள் எதற்கு,
  தங்களின் கொள்கை போற்றப்பட வேண்டிய கொள்கை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நாம் தமிழர் ஆகிவிட்டோமே... அதன் பெருமையை காப்பாற்ற வேண்டும்.

   நீக்கு
 4. நல்ல வேலை செய்தீர்கள். உங்கள் முகம் போட்டு ஒரு புத்தகம் இருந்ததே. வாங்கவில்லையா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா அது எனது புத்தகமே "தேவகோட்டை, தேவதை தேவகி"

   கடந்த வருடம் கோயமுத்தூர் புத்தக திருவிழாவில் கடையில் எடுத்த புகைப்படம்.

   நீக்கு
 5. ஹாஹா.... புக் எதுவும் வாங்கலையா கடைசில! எடுத்து வைக்கப் போகும் மனிதர் உங்களைத் திட்டி இருப்பார்!

  இங்கே புத்தகத் திருவிழா நடக்கும். கஷ்டப்பட்டு போனால் ஒரே ஒரு ஸ்டாலில் மட்டும் தமிழ் புத்தகம் இருக்கும். அதிலும் எனக்குத் தேவையானது கிடைக்காது! அதனால் நொந்தபடி திரும்புவேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி நமக்கு தேவையானதுக்கே முதலிடம்.

   நீக்கு
  2. வெங்கட்- அங்கெல்லாம் 5 மணிநேரம் கடைக்குள் இருந்து ஒன்றும் வாங்கலைனாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. மால்களில் விண்டோ ஷாப்பிங் செய்வது எல்லோருக்கும் பொழுதுபோக்கு

   நீக்கு
  3. இந்தியர்களுக்கு பொழுதுபோக்கே பெரும்பாலும் மால்தானே,,,

   நீக்கு
 6. தமிழ் நூல்கள் இல்லையா? வியப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லாததால் வாங்கவில்லை முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 7. தமிழ் புத்தகங்கள் வந்தவுடனே விற்று விடுகிறது ஜி... அதனால் உங்களுக்கு கிடைக்கவில்லை...!

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் அயல் நாட்டில் வாழ்ந்தபோதும் தமிழை மறக்கவில்லை. அங்குள்ள மற்ற தமிழர்கள் எப்படி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நான் இறுதிவரை இப்படிய்தான் இருப்பேன்.

   மற்றவர்களைப்பற்றி....
   என்னைப் போன்றவர்கள் ஏராளமானோர் உண்டு. ஆகவேதானே தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள் உருவாகி உள்ளது.

   அதேநேரம் குப்பம்பட்டியில் பிறந்ததை மறந்து விட்டு நாலு வார்த்தை ஆங்கிலம் பேசுவதால் தன்னை ஆங்கிலோ இண்டியனாக பாவித்துக் கொள்ளும் அரைவேக்காடுகள் ஏராளம், ஏராளம், தாராளமாய் உண்டு.

   தமிழன் உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி, தனது குழந்தைகள் சூழ்நிலையால் எதையும் படிக்கட்டும். ஆனால் தமிழ் மொழியை பேசவும், எழுதப்படிக்கவும் சொல்லி விட்டு செல்வதால்தான் தமிழ் மொழியை வாழ வைக்க முடியும்.

   நான் எனது கடமையை சரியாக செய்து விட்டேன் நண்பரே...

   நீக்கு
 9. தமிழ்ச் சங்கத்தில் தமிழ் நூல்கள் இல்லையா?

  மேல் நாட்டில் வாழும் குழந்தைகளுக்கு வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் தமிழ் பேசினால்தான் தமிழ் வரும்.

  வேறு மொழி பேசும் குழந்தைகள் வீட்டில் அவர்கள் தாய் மெழியில் வீட்டில் பேசுகிறார்கள் அதனால் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் தாய் மொழி தெரிகிறது. அது போல் தமிழர்களும் வீட்டில் தமிழ் பேசலாம்.

  பேரன் தமிழ் பேசுகிறான், எழுதுகிறான். படிக்கிறான்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நான் புக் ஸ்டாலுக்குதானே போனேன்.
   உண்மைதான் சகோ வீட்டில் தமிழ் பேசினால்தான் தமிழ் வளரும்.
   உங்கள் பெயரன் தமிழ் எழுதுவது அறிந்து மகிழ்ச்சி இதுதானே நமது கடமை.

   நீக்கு
 10. ஆங்கிலம் படித்தால் முதுகுவலி வரும் உண்மைதான் நண்பரே.... நான் பத்தாவதில் ஐந்து வருடம் படித்தது..இந்த ஆங்கிலத்தால்தான்................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உங்களுர்ரும் முதுகுவலி வருமா ? அப்படீனாக்கா... நீங்களும் நம்ம ஜாதி

   நீக்கு
 11. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நானும் என்னடா ஏகப்பட்ட நூல்களை அங்கே விலை அதிகமாக வாங்கியிருக்கிறாரே என்று படித்துக்கொண்டு வந்தேன்.

  விண்டோ ஷாப்பிங்கை இவ்வளவு இயல்பா சொல்லியிருக்கீங்க. படம் அங்கு எடுத்ததா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே ரசித்தமைக்கு நன்றி புகைப்படம் அங்கு எடுத்ததே,,,,

   நீக்கு
 12. ஹாஹாஹா நல்லவேளை காசு மிச்சம். இப்படித்தான் பலதை விட்டு விட்டுப் போகும்படி நேர்கிறது. ஆனால் இப்போதெல்லாம் துணிந்து வாங்கி விடுகிறேன். ( அநேகம் தமிழ்தானே. அதனால் எப்போதாவது படித்தேவிடுவோம் என்ற நப்பாசையில் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 13. தமிழ் நூல்கள் இல்லாதது வியப்பாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 14. தமிழ் புத்தகங்கள் இல்லையென்றால் புத்தகம் வாங்கவே தோணாது. சிறிய அளவில் வைத்திருந்தால் தமிழ் புத்தகம் வாங்கும் போதே மற்ற புத்தகங்கள் வாங்க தோணும்

  பதிலளிநீக்கு
 15. ஆங்கிலத்தில் ஆரம்பிக்கும்போதே நினைத்தேன். கதையில் ஒரு சுஜாதா ட்விஸ்ட் வரப்போகிறது...!

  பதிலளிநீக்கு
 16. காகிதப் பூக்களுக்கு
  இடையில் - யாராவது
  கமலப் பூவினை
  வைப்பார்களா!....
  (!?...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமரைப்பூ (கமலம்) தண்ணீரில் மிதந்து ஜொளிக்கும். காகிதப்பூ தண்ணீரில் வதங்கி விடுமே...

   நீக்கு
 17. இப்படியெல்லாம்
  பதிவு எழுதுவதற்கு
  யோசிப்பது எப்படி!..

  என்று, பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எனக்கு அம்பூட்டு தெறமே இருக்கா ?

   நீக்கு
 18. முதுகுவலி வருவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விட்டோம்..ஹாஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொன்னதால்தானே கண்டு பிடித்தீர்கள்... வருகைக்கு நன்றி.

   நீக்கு
 19. //ஆங்கிலம் படித்தால் முதுகு வலி வரும்!// - ஹாஹ்ஹாஹா! "செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாண்டா" என்ற துணுக்குக்குப் பிறகு, அந்த வகையறாவில் இப்படி ஒரு துணுக்கு இப்பொழுதுதான் பார்க்கிறேன்! :-D

  பி.கு: ‘மோகமுள்’ நூல் இங்கு கிடைக்கும் = http://www.noolulagam.com/product/?pid=9501#details. நான் இந்த இணையத்தளக் கடையில் நூல் வாங்கியிருக்கிறேன். மின்னல் வேக வருகை! ஏமாற்ற மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   தங்களது தகவலுக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 20. மாலில் புத்தக உலா......ஆனால் புத்தகம் மட்டும் கடையிலே...தமிழ் இல்லைனா என்ன செய்றது...ஹஹஹா...சுவாரஸ்யமாய் எதையும் சொல்லி விடுகிறீர்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலமா ? தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 21. புரிஜ் கலிஃபாவில் ஏறிப்பார்த்ததில்லை துபாய்க்கு சென்றிருந்தும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துபாய் போயிருந்தும் இதை தவற விட்டு விட்டீர்களே ஐயா.

   நீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  நல்லவிதமாக புத்தகங்களை தேர்வு செய்து, பின் அதில் ஒன்று கூட எடுத்துக் கொள்ளாமல் தமிழை முக்கியமாக கருதி வெளியில வந்ததை வியந்து ரசித்தேன்.
  வியந்தது... தங்கள் தமிழ் பற்றை பார்த்து.
  ரசித்தது...எங்களின் எதிர்பார்ப்புகளை சுவாரஸ்யமாக தூண்டியபடி எடுத்த நிறைய புத்தகங்களை தமிழ் இல்லாத காரணத்தால், அனைத்தையும் தவிர்த்து விட்டதாக கூறி அதை ஒரு அருமையான பதிவாக்கியதை..

  தங்களின் பெயரிட்ட, தாங்கள் எழுதிய புத்தகங்கள் நிறைய வெளி வந்துள்ளனவே.... புத்தக வெளியீட்டிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  தாங்கள் இந்த பதிவை வெளியிட்டதும் ஒரு கருத்துரை எழுதி விட்டேன். (முதல் கருத்துரை) வெளியிடும் போது கரெக்டாக நெட் கட்.. நேற்றெல்லாம் வலை பக்கம் வர இயலவில்லை. ஆயினும் இப்போது கடைசியில்... தலையெழுத்தை என்ன முயன்றாலும் மாற்ற முடியாது. இது ஒரு உதாரணம். இல்லை,நான் ஒரு உதாரணம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 23. முதுகு வலிக்கு மருந்து கண்டு பிடித்து விட்டீர்களா நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே முதுகுவலி வந்தால் ஆங்கில நாவலை மூடி வைத்து விடுவேன்.

   நீக்கு
 24. ஆங்கிலத்தில் புத்தகம் படிக்குறதுக்கும், முதுகு வலிக்கும் வாட் சம்பந்தம்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தத்துவம் சொன்னால் ரசிக்கணும். இப்படி குறுக்கு கேள்வி கேட்கப்படாது.

   நீக்கு
 25. புஸ்தகம் கிடைக்கவேயில்லையா?ஆச்சரியம்/

  பதிலளிநீக்கு
 26. ஹ ஹா தமிழ் இல்லாத இடத்தில் வேற்றுமொழி எதற்கு என்றுதானே...!!!

  பதிலளிநீக்கு