தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2018

மகளுக்கு திருமணம்...லைப்பூ உறவுகளுக்கு எனது மகள் ரூபலாவுக்கும், எனது அன்புத் தங்கையின் மகன் விவேக்கிற்கும் கொடுமலூர் குமரய்யா கோவிலில் திருமணம் மற்ற வைபவங்கள பரமக்குடி லேனா திருமண மஹாலில் சிறப்புற நடக்க இருக்கிறது. தங்களது மனப்பூர்வமான ஆசிகளை வேண்டி....

23.08.2018
Vivek weds Roobala

இப்பெயர்களைப் பார்த்தவுடன் திருச்சிகாரவுங்களுக்கு ஆச்சர்யமான சந்தோஷம் வந்து இருக்கலாம் இவைகளை விளக்கி விரைவில் பதிவிடுவேன் தற்பொழுது நான் பிஸி என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே வாழ்க நலம். விவேக் சமீபத்தில் நடித்த மூன்றாவது குறும்படத்தை காண இதோ...அன்புடன் கில்லர்ஜி

94 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  விபரங்கள் படித்தறிந்தேன். தங்கள் மகளுக்கு திருமணம் என்று அறிந்தவுடன் மிகவும் சந்தோஸமடைந்தேன். தாங்கள் மனமுவந்து அளித்த திருமண பத்திரிக்கையையும் படித்துப் பார்த்தேன். மணமக்கள் சகல விதமான நலன்களும் பெற்று நீடூழி வாழ வேண்டுமென ஆண்டவனை மனமாற பிரார்த்திக்கிறேன். மணமக்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களையும் கூறுங்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உங்களது சந்தோஷமான வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 2. இனிய மனம் நிறைந்த மகிழ்வான வாழ்த்துக்கள் கில்லர்ஜி.. மணமக்களுக்கு. அனைத்தும் இனிதே நல்லபடி நடந்தேறிட நம் பிரார்த்தனைகள்.

  குறும்படம் பார்த்தேன், நன்றாக நடித்திருக்கிறார். நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கும், குறும்படம் கண்டமைக்கும் நன்றி அதிரா.

   நீக்கு
 3. அன்பு மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ கில்லர்ஜி .மணமக்களுக்கு எல்லா சந்தோஷம் ஆசீர்வாதம் அனைத்தும் அதிகமதிகமாய் கிடைக்கட்டும்.என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் .
  குறும்படம் பார்க்கிறேன்

  முக்கியமாக இந்த சந்தோஷமான விஷயத்தை எனக்கு தெரிவித்த தேம்ஸ் கரை பூஸாருக்கு நன்றீஸ் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   ஜேம்ஸ் ஊரணிக்காரருக்கும் நன்றி

   நீக்கு
 4. மணமக்களுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அவர்கள் எல்லா நலன்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்திட ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ஆசிகளுக்கு நன்றி ஜீவி ஸார்.

   நீக்கு
 6. மணமக்களுக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள். ஆசிகள். பெயர்களைப் படிச்சதும் ராஜேஷ்குமார் கதை/க்ரைம் நாவல் பத்திய ஏதோ விமரிசனம் என்றே நினைச்சேன். கடைசியில் பார்த்தால் உண்மையாவே திருமண அழைப்பிதழ். மணமக்கள் நீண்டநாட்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து விரைவில் உங்களைத் தாத்தாவாகவும் ஆக்கி மகிழ்ந்திடப் பிரார்த்தனைகள். உண்மையாவே திருச்சிக்காரவுகளை நினைச்சதுக்கு நன்னிங்கோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் ஒரு கணம் அப்படி நினைத்தேன்.

   நீக்கு
  2. வாங்கோ, வாங்கோ நான் நினைத்தபடியே திருச்சிகாரவுங்க குழம்பிட்டீங்கோ ஹா.. ஹா.. ஹா..

   வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 7. மணமக்களுக்கு வாழ்த்துகள் 🎊.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி மிக்க நன்றி வாழ்த்தியமைக்கு...

   நீக்கு
 8. குறும்படம் திறக்கலை. பையர் வீட்டில் திருமணம் என்பதால் அவங்க வேலையிலே மும்முரமா இருப்பாங்க போல! மத்தியானமா வந்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் பாருங்கள் நல்லதொரு சமூக கதை.

   நீக்கு
 9. மணமக்களுக்கு எங்களின் வாழ்த்துகள். திருமணம் நன்றாக நடைபெறட்டும். இறைவனின் அருள் அவர்கள் வாழ்க்கையில் தங்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழரின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 10. 23 ஆம் தேதி. இங்கேயும் ஓர் முக்கியமான நிகழ்ச்சி. :) மீண்டும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது மீள் வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 11. தங்கள் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் எங்களின் இனிய வாழ்த்துகள் கில்லர்ஜி. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி வாழ்த்தியமை கண்டு மகிழ்ச்சி

   நீக்கு


 12. மணமகளாரே மணமகனாரே
  இணைந்தின் புற்றுநன் மக்களை ஈன்று
  பெரும்புகழ் பெற்றுநீ டூழி
  இருநிலத்து வாழ்க இனிது

  என்னும் பாவேந்தரின் வரிகளால் மணமக்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றேன் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பாவேந்தரின் வாழ்த்துகளோடு வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 13. மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைத்தமிழரின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 14. தங்கள் அன்பு மகளின் திருமணம் அறிந்து மிக்க மகிழ்ச்சி! தங்களின் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆசிகளும் வாழ்த்துகளும்! மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ஆசிகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 15. அழைப்பிதழ் கண்டோம். மகளின் திருமண அழைப்பிதழ் கண்டு மகிழ்ச்சிடைந்தோம். மணமக்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். வலையுலகத்திற்கு முகவரியிட்டு அழைப்பிதழ் அனுப்பிய உத்தி பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கும், அலைபேசியில் அழைத்து வாழ்த்தியமைக்கும் நன்றி.

   நீக்கு
 16. மணமக்களுக்கு வாழ்த்துகள் உங்கள் உண்மைப் பெயரே கில்லர்ஜியா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.
   என்ன ஐயா இப்படி கேட்டுப்புட்டீங்க... இன்னுமா சந்தேகம் ?

   நீக்கு
 17. அன்பின் ஜி....

  தாமதம் ஆகி விட்டது..
  மன்னிக்கவும்...

  விருந்து உபசரிப்பில் விட்டு விடாமல்
  எல்லாவற்றையும் தனியே எடுத்து வைக்கவும்...

  மணமக்கள் எல்லா நலனும் பெற்று
  வாழ்வாங்கு வாழ்ந்திட
  அன்னை அபிராமவல்லி அருள் பொழிவாளாக...

  என்றென்றும்
  அன்புடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களது வரவு தாமதமானாலும் உள்ளன்புடன் வாழ்த்தியமை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 18. மணமக்களுக்கு, மிக்க மகிழ்ச்சியுடன் என் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 19. உங்கள் மகளுக்கு திருமணம் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. மணமக்கள் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் மணமக்களை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 20. ஜி.எம்.பி. சாருக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்தது. உங்கள் உண்மையான பெயரே கில்லர்ஜி தானா??!!🤔
  பேரனோ,பேத்தியோ பிறப்பதற்குள் மீசையை எடுத்து விடுங்கள். குழந்தை உங்களைப் பார்த்து பயப்படும். ஏன் சொல்கிறேன் என்றால் நான் பதிவுகள் எழுதும் பொழுது ஆங்கில வார்த்தைகள் வந்து விட்டால், எதிரே பெரிய மீசையோடு கில்லர்ஜி நிற்பது போல் தோன்றும். உடனே பொருத்தமான தமிழ் வார்த்தையை போட்டு விடுவேன். ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நான் எதற்கு மில்லியன் மதிப்புள்ள மீசையை இழக்க வேண்டும் ?

   நீங்கள் இதையே மாற்றி தமிழ் வார்த்தைகளுக்கு பதிலாக ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்தலாமே.... எப்பூடி ?

   நீக்கு
  2. நான் உங்களிடம் வியக்கும் விடயம் தூய தமிழில் எழுதுவது. பெரும்பாலானோர் ஆங்கிலம் கலக்காமல் எழுதும் பொழுது நாம் மட்டும் நிறைய ஆங்கில வார்தைகள் கலந்து எழுதுகிறோமே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. உங்களை முன்மாதிரியாக கொள்ள நினைகின்றேன் அது வேண்டாம் என்கிறீர்களா?

   நீக்கு
  3. ஓ... நான் தூயதமிழில் எழுதுகிறேனா ? மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது மேடம்.

   நீக்கு
 21. மிக மகிழ்ச்சி...


  வாழ்த்துக்கள் மணமக்களுக்கு...என்றும் மகிழ்வுடன் சிறப்புடன் வாழ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 22. அனைத்து வளங்களுடன் அருமையான இல்வாழ்க்கை அமைய, மணமக்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!

  அழைப்பிதழுக்கு இனிய நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி சகோ.

   நீக்கு
 23. அன்புள்ள திரு கில்லர்ஜி அவர்களே

  இன்று உங்கள் அன்புமகள் திருமணவிழா!
  மங்கல மழை பொழிய‌
  வளங்கள் பெருக வேண்டும் என்ற‌
  வாழ்த்துக்கள் குவிய‌
  எல்லாருடைய நெஞ்சங்களும்
  பூரித்து வாழ்த்த‌
  யானும் ஒருவனாய் அவர்களோடு
  வாழ்த்துகின்றேன்.
  சீரும் சிறப்புமாய் மணமக்கள்
  நீடூழி நீடூழி நீடூழி வாழியவே!

  அன்புடன்
  ருத்ரா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 24. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
  இருவரும் இறைவன் அருளால் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!
  பேர குழந்தைகள் மீசையை பிடித்து இழுத்து விளையாடடுவது தானே தேவகோட்டை ஜிக்கு இன்பமாய் இருக்கும் பானு.

  பதிலளிநீக்கு
 25. மணமக்களுக்கு எங்கள் ஆசீர்வாதங்கள்.

  பதிலளிநீக்கு
 26. வாழ்த்துக்கள் கில்லர்ஜி... குறும்படம் பார்த்தேன்.. மிக அருமை, பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி நண்பா.

   நீக்கு
 27. அளவான மழலை செல்வத்தோடு எல்லா வளமும் பெற்று நீள் ஆயுளும், குறைவில்லா ஆரோக்கியத்தோடும் மகளும், மருமகனும் வாழ இறைவனை வேண்டிக்கிறேன். மாப்பிள்ளை சூப்பர்ண்ணே

  பதிலளிநீக்கு
 28. வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்தியமைக்கு நன்றி

   நீக்கு
 29. மகிழ்ச்சியான விஷயம். மணமக்களுக்கு வாழ்த்துகள். வீடியோவை எத்தனை முறை சொடுக்கி (Click) பார்த்தும், திரையில் நகரவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   பலரும் காணொளி கண்டு இருக்கின்றார்களே...

   நீக்கு
 30. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 31. மணமக்களுக்கு வாழ்த்துகள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ ஆசிர்வாதங்கள். நீண்ட ஆயுளுடன், நோய் நெடி இன்றி மகிழ்வுடன் வாழ இறைவன் துணை இருப்பான். உற்சாகமாய் கல்யாண வேலைகளை முடித்து விட்டு வாருங்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துகள் சார் தங்களது மகள் எல்லாம் வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 33. இனிய வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு. சீரும் சிறப்பும் பெற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 34. மணமக்கள் நீடுழி வாழ்க. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 35. வாழ்த்துக்கள் கில்லர்ஜீ அவர்களே

  பதிலளிநீக்கு
 36. இன்று திருமண விழா நடந்து கொண்டிருக்கும். அன்பு தேவ கோட்டையாரின் மகள்
  திருமணம் சிறக்கவும் அவர்கள் வாழ்வு எப்பொழுதும் இனித்திருக்கவும்

  என் மனமார்ந்த ஆசிகள். மீசையைப் பிடித்திழுக்கச் சீக்கிரமே
  பேரனோ பேத்தியோ வரட்டும். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் சகோதரரே

  நலமா? இன்று திருமணநாள் காணும் தங்கள் அன்பு மகளுக்கும், அன்பு மாப்பிள்ளைக்கும் என்மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவியுங்கள். சகல சௌபாக்கியங்களோடு பல்லாண்டு, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  தங்கள் மருமகன் நடித்த குறும்படம் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கும், குறும்படம் பார்த்து ரசித்தமைக்கும் நன்றி

   நீக்கு
 38. மணமக்கள் எல்லா வளமும் நலனும் பெற்று நீடூழி வாழ மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 39. அழைப்பிற்கு மனமார்ந்த நன்றி, நண்பரே.

  மணமக்கள் இருவரும் இறைவனருளால் எல்லா பேறுகளையும் பெற்று இனிதே வாழ்வார்களாக.

  பதிலளிநீக்கு
 40. அன்புள்ள அய்யா ,

  மணமக்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்
  எல்லா நலனும் பெற எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வேண்டுதல் நடக்கட்டும நண்பரே

   நீக்கு
 41. மணமகள் ரூபலா மணமகன் விவேக் திருமணம் சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 42. இல்லறம் நல்லறமாய் அமைய எனது கோடானு கோடி வாழ்த்துகள்.இறைவன் அருள் புரியட்டும். அனைத்து நலமும் வளமும் பெற்று மணமக்கள் வாழ என்னுடைய மணப்பூர்வமான வாழ்த்துகள்..! வாழ்க மணமக்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 43. மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
  திருமணம் இனிதே நடந்தேறியிருக்கும். இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கோ அண்ணா ஜீ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ வாழ்த்துகளுக்கு நன்றி பதிவு விரைவில்...

   நீக்கு