நட்பூக்களே... எனக்கு
புரியாத விடயங்கள் நிறைய இருக்கிறது தங்களிடம்தானே கேட்டு தெளிவு பெறமுடியும்.
ஆகவே தாருங்கள் பதிலை...
திரைப்படங்களில் நடிக்கும் கசாநாயகர்
மிகவும் அறிவாளியாகவும், நேர்மையாளராகவும், கீழே விழப்போகும் கிழவிகளை சட்டெனப்
பிடித்து காப்பாற்றுபவராகவும், பலசாலியாகவும், அரசியல்வாதிகள் செய்யும்
அட்டூழியங்களை தைரியமாக எதிர்த்து கேட்கின்றார்.
(சித்தரிக்கப்படுகிறார்
என்பதே உண்மை)
இதைப்பார்த்த ரசிக குஞ்சுகள் அப்படியே
உண்மையென நம்பி விடுகின்றனர்
(இவர்களில் பலரும்
பட்டதாரிகள் என்பதும் இவர்களுக்கு பிரம்மன் மூளையை சிருஷ்டிக்க மறந்து விட்டாரோ
என்ற ஐயமும் உங்களுக்கு வரலாம் என்பது வேறு விடயம்)
இந்த வெட்டிக்கூ.......களுக்கு வேலை இல்லாத
காரணத்தால் வாழ்க கோஷம் போட்டுக் கொண்டே இருக்க, கசாநாயகரின்
வாழ்க்கைத்தரம் உச்சாணிக் கொம்பில் போய் நின்றவுடன் சேர்த்து வைத்த பணத்தை
பாதுகாக்க அரசியல் பின்புலம் தேவைப்படுகிறது. அந்த நேரம் பார்த்து இந்த வெ.கூ.
தலைவா வா அரசாள... உமது பிறப்பு தமிழகத்தின் சிறப்பு... நாளைய சிம்மாசனமே...
(அவன் தமிழனாக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை)
எழுந்தோடி வா
என்பார்கள்
(அவரால் நடக்ககூட முடியாது
என்பது வேறு விடயம்)
அவரும் சரி இவனுகள்
இருக்கும்வரை நமக்கு நல்லகாலம்தான் நம்மிடம்தான் பணம் இருக்கிறதே... வந்தால்
மேலும் லாபம் போனால் லாபத்தில் நஷ்டம் என்று கட்சியை ஆரம்பிக்கின்றார்கள். இதில்
சிலரை சுக்கிரன் உச்சத்தில் வைக்கிறான். சிலரை உக்கிரத்தில் பார்க்கிறபோது எல்லாம்
இழந்து ஜட்டி சுட்டதடா கை விட்டதடா என்று பாட வேண்டிய நிலையாகி விடுகிறது. இப்படித்தான்
ரசிக குஞ்சுகள் காலங்காலமாக கூத்தா(டி)சிகளை முதல்வராக்கி விட்டு தமிழக மக்களை கை ஏந்தும் நிலைக்கு வைத்து விட்டனர்.
இது இன்னும் எத்தனை காலம் தொடருமோ... ?
சரி அதுதான் கேள்வியைக்
கேட்டு பதிலை சொல்லி விட்டாயே பிறகு எங்களிடம் எதற்கு பதில் கேட்கிறாய் ?
என்று என்னைக் கேட்டு விடாதீர்கள்.
எனது சந்தேகமே
இனிதான்...
அதாவது
திரைப்படத்தில் கசாநாயகரின் பிம்பத்தை அப்படியே நம்பி விடும் ரசிக
குஞ்சுகள் இதே கசாநாயகர்கள் சில படங்களில் கோழையாக, முட்டாளாக,
கூமுட்டையாக, உலகமே தெரியாத அப்பாவியாக, பெண்களிடம் வெட்கப்படும் முடுமையாக,
வில்லர்களிடம் அடி வாங்கி விட்டு அழுது கொண்டு வரும் மண்ணு முக்குழியாக, படிப்பு
ஏறாத முடுதாறாக நடிக்கின்றார்களே.... இதை மட்டும் ஏன் ரசிக குஞ்சுகள் உண்மை என்று
நம்புவதில்லை ?
எங்கே பதில் சொல்லுங்கள் பார்ப்போம் ?
Chivas Regal சிவசம்போ-
இந்த சந்தேகத்தை தீர்க்க
சந்திர மண்டலம் போனாலும் கிடைக்காதே.... ?
iஇனிய மகிழ்வான காலை வணக்கம் கில்லர்ஜி...
பதிலளிநீக்குஓமக்குச்சி படம்?!! இதோ வரேன் பதிவுக்கு
கீதா
வருக மீண்டும் வறுக்க, வருக!
நீக்குஹை இன்னிக்கு நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...கத்தியாச்சு காதுல விழறவங்களுக்கு விழுந்துருக்கும்னு நினைக்கிறேன்!!!!! ஹா ஹா ஹா
நீக்குகீதா
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) 4 கீதா:).. இப்போவெல்லாம் கில்லர்ஜி எப்போ போஸ்ட் போடுறார் என்றே புரியுதில்ல:))..
நீக்குதிருமண வேலைகள் முடிந்து இப்போதுதானே வருகிறேன்.
நீக்குசினிமா பொய் என்பதையும், அவற்றில் காட்டப்படுவது சித்தரிப்பு என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள் ரசிக மகா ஜனங்கள்.
பதிலளிநீக்குபொதுவாக மனிதனால் செய்ய முடியாதவற்றை கற்பனையாகத் திரையில் காணும்பொழுது மனிதனுக்கு ஒரு அசட்டு திருப்தி வருகிறது - ஏதோ தானே அவற்றை சாதித்து விடுவது போல! இ
வற்றால் தங்கள் பிரதிபலிப்பாய் இருக்கும், அல்லது தனக்குப் பிடித்த உருவத்தை ரசிக்கத்தொடங்கி விடுகிறார்கள்.
அது எல்லை மீறும்போதுதான் மூளை மழுங்கும் நிலை! ஆனாலும் அது மொத்த அளவில் கொஞ்சமே என்பது என் கணக்கு!
அழகான பதில் தந்தீர்கள் ஸ்ரீராம்ஜி ஆனால் முடிவில் சொன்ன "மொத்த அளவில் கொஞ்சமே" என்பதில் மாறுபடுகிறேன்.
நீக்குநாளைய ஆளுமை இளைஞர்கள் கையில் என்கிறோம் ஆனால் பெரும்பான்மை மாணாக்கர்கள் தன்னை திரைப்பட நடிகனின் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு அலைகின்றனர்.
நான் பதில் சொல்ல வந்தப்ப ஸ்ரீராமின் கருத்து கண்ணில் பட்டிருச்சு...அதே அதே நான் சொல்ல வந்த கருத்து இதுதான்....
நீக்குஎனக்கும் தோன்றியது இதேதான் கில்லர்ஜி அப்படி அவர்கள் பின்னால் நடப்பவர்கள் கொஞ்சம் தான்...அதே போல அரசியல்வாதிகள் பின்னால் நடப்பவர்களும் கொஞ்சம் தான் கில்லர்ஜி...கில்லர்ஜி அப்படி பெரும்பான்மை மாணாக்கர்கள் நடக்கின்றனரா? ம்ம்ம் என்னால் அப்படிச் சொல்ல முடியலைஜி..
கீதா
இன்று தன்னை யாருக்கும் ரசிகன் இல்லையென்று சொல்பவர்கள் குறைவான சதவீதமே...
நீக்குநல்ல சந்தேகம்தான் நண்பரே
பதிலளிநீக்குமக்கள் வீரத்தை விரும்புகிறார்கள்
வருக நண்பரே இவர்கள் போலி வீரர்கள்தானே...
நீக்குபாக்கிஸ்தானில் பிடியிலிருக்கும் அபிநந்தன் போன்றவர்களே உண்மையான வீரர்கள்.
இப்போது சிந்தனையில் அதுதான் கில்லர்ஜி அபிநந்தன் பத்திரமாகத் திரும்பி வர வேண்டும் என்பதே...நெட்டில் செய்திகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்...புதிய செய்தி ஏதேனும் இருக்கா என்று...
நீக்குகீதா
அபிநந்தன் திரும்பி வர இறைவனை பிரார்த்திப்போம்.
நீக்குஉண்மையைத் தான் விசிலடிச்சான் குஞ்சுகள் ஒத்துக் கொள்வதில்லையே..
பதிலளிநீக்குதவிரவும் உண்மை உப்பு மாதிரி .. கரிக்கும்... அதனாலதான் உப்பு சேர்த்துக்காதீங்க..ந்னு சொல்றானுவோ!...
உப்பில்கூட கலப்படம் ஆகிப்போச்சு ஜி ஆகவே இனி நாக்குக்கு சுவை மறந்துவிடும்.
நீக்குஅதுதான் சினிமா.
பதிலளிநீக்குவருக முனைவரே சினிமா என்பது நிழல் என்பதை மறக்கின்றனரே...
நீக்குஇதில் என்ன சந்தேகம் நண்பரே.தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு வேண்டாததை அன்னப்பறவை போல விட்டு விடுகிறான் .
பதிலளிநீக்குவருக நண்பரே எடுத்துக் கொண்டது, எடுக்ககூடாததாக இருக்கிறதே...
நீக்குஇப்படிலாம் ஏடாகூடமா கேள்வி கேக்கப்படாது.
பதிலளிநீக்குதொடக்கத்திலேயே மாமாவை கேள்வி கேட்டிருந்தால் இன்றைக்கு அரசியல்வாதிகளிடம் மாட்டியிருப்பாரா ?
நீக்குஅது ஒரு கனவு உலகம் என்பதையே மறந்து விடுவதால் அப்படி ஜி... தானே விழித்துக் கொள்ள வேண்டும்...
பதிலளிநீக்குவாங்க ஜி
நீக்கு"தானே விழித்துக் கொள்ளவேண்டும்"
சங்கு ஊதினாலும் கேட்காது போலயே...
எந்த வித புராண ஃபண்டசிகளை நம்பும் நம் மக்கள் திரை உலக ஃபண்டாசிகளை நம்புவது ஆச்சரியமில்லை ஜீ ஆனால் அவர்களின் எண்ணிக்கை சத வீதம் குறைவே
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களது கணிப்பை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குகில்லர்ஜி... ஆரம்பத்தில் நாம கதாநாயகனாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு ஒரு இமேஜை நாமே கற்பித்துக்கொள்கிறோம். அவங்களும் அந்த இமேஜை மெயிண்டெயின் செய்வாங்க. அப்புறம் ரசிகர்கள் ரொம்பவுமே இன்வால்வ் ஆகி, அவர் படத்துல செத்துப்போனா, படத்தைத் தோல்வியடையச் செய்யறது. அவர் எல்லா சண்டைக்காட்சிகளிலும் ஜெயிக்கணும்னு நினைக்கறது, அப்புறம் அவரது பஞ்ச்(சர்) டயலாக்கை ரசிக்கறது என்று பைத்தியமாயிடறாங்க. இந்த மாதிரி ரசிகக் குஞ்சுகள் நிறையபேர் இருக்காங்க. அதுனால மெதுவா அந்த நடிகருக்கு, 'நாமும் முதலமைச்சர் ஆகிடலாம்'னு தோணுது. அதுக்கேத்தபடி பப்ளிக்ல மிளகாய் அரைக்க ஆரம்பிச்சிடறாங்க.
பதிலளிநீக்குநான் 'சிம்புலாம் ஒரு வெட்டி. அவனும் அவன் பேச்சும்' என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எங்க வீட்டுக்கு ஏசி மாட்ட வந்தவர்களில் ஒருத்தன் சொல்றான், நான் அதி தீவிர சிம்பு ரசிகன்னுட்டு. இத்தனைக்கும் அவனுக்கு தொழில், பொழப்புலாம் இருக்கு. என்னத்தைச் சொல்ல.
மதுரைல ரஜினியின் 'ராகவேந்திரா' படத்துக்கு, தியேட்டருக்கு நுழையற இடத்துல பெரிய தட்டில் பாலை வைத்து அதை மிதிக்காமல் யாரும் தியேட்டருக்குள்ள போகமுடியாதபடி பண்ணினாங்க (படம் பார்க்கிறவங்க காலை பாலால் கழுவுகிறார்களாம். கமல் நடித்த படுதோல்வியான ஒரு படத்தை நான் முதல் நாள் எதேச்சயாக இண்டெர்வெல் வரைய பார்த்துட்டு, இது தேறாதுன்னு கிளம்பலாம்னு பார்த்தா, படம் முடியறவரைல எங்களை கிளம்ப விடலை (கேட்ட தியேட்டருக்கு வெளில பெரிய கலாட்டாவா ஆகிடும் என்றார்கள்... அந்த ஒரு நிமிடமா இல்லை சிம்லா ஸ்பெஷலான்னு ஞாபகம் இல்லை)
சரி...அதெல்லாம் விடுங்க... சிம்ரனுக்கு கோவில் கட்டின, குஷ்புக்கு கோவில் கட்டின மதுரைக் காரங்களைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
வருக நண்பரே இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இப்படி கிறுக்குகள் நிறைந்து விட்டனர்.
நீக்கு(முன்பு ஆந்திராவாக இருந்தது)
தியேட்டரில் போய் தானாக மாட்டிக்கொண்டு என்னை சிறை பிடித்து விட்டார்கள் என்று சொல்கின்றீர்கள்.
சிம்ரனுக்கு கோவில் கட்டியவர்கள் மதுரைக்காரர்கள்.
குஷ்புவுக்கு கோவில் கட்டியவர்கள் திருச்சி பர்மாக்காலணியினர்.
நமீதாவுக்கு கோவில் கட்ட முயற்சித்தவர்கள் திருநெல்வேலிக்காரர்கள்.
இவர்களெல்லாம் "வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்" என்பது எனது கருத்து.
இவர்களை எல்லாம் துபாய்க்கு அனுப்பி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனியில் வேலை கொடுத்து எஜிப்தியனை சூப்பர்வைஷராக போடவேண்டும்.
இது நடந்தால் தமிழகம் உருப்படலாம் ???
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலவில்லை. ஒரு வேளை விக்கிரமாதித்தனால் சொல்ல முடியுமோ என்னவோ?
பதிலளிநீக்குஹா.. ஹா.. அவரைத்தேடி நான் எங்கு போவது நண்பரே ?
நீக்கு// கீழே விழப்போகும் கிழவிகளை///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அப்போ நீங்க அனுக்கா, தமனாக்கா எல்லாம் கிழவி என்கிறீங்களோ? அவர்களின் அபிமனர்கள் இருவரும் ஏன் இதுக்குப் பொயிங்கேல்லை?:).. ஒருவேளை ஒத்துக் கொள்கின்றனரோ?:).. ஆவ்வ் எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).
நான் எப்ப சொன்னேன் ?
நீக்குஹலோவ் மியாவ் :) எங்க சித்தப்பாவும் உங்க அங்கிளும் அனுஷ் தமன் கூட நடிக்கல்லை அப்போ நீங்க யாரை ? --யா --த்தி இவங்களை தாத்தான்றீங்களா :))))))))))) இதோ நாற்திசைலருந்தும் அவங்க ர சிக்கல் கல்ஸ் உங்களை தேடி
நீக்குஅது கில்லர்ஜி... நடிப்புக்கும் உண்மைக்கும், நம் மக்களுக்கு வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியுமாக்கும்:).. அதனாலதான் கதாநாயர்கர்கள், அப்படி நடிப்பதை நம்புவதில்லை:)..
பதிலளிநீக்குஇப்போ உங்கட ஜந்தேகம் தீர்ந்திருக்குமே.. இன்னும் இருப்பின் கேழுங்கோ பட்டுப்பட்டெனப் பதில் சொல்கிறேன்ன்.. ஹையோ இது வேற பட்டு:)..
தெரியாமல்தான் நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமுதலில் சினிமா ஒரு மாயை, அது வெறும் பொழுது போக்கிற்காக உண்டாகியது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாருமே எதன் மீதும் அதிக ஈடுபாடு கொண்டால் மிகுந்த கஸ்டந்தான். காலம் ஒருநாள் மாறும். சிறந்த பகிர்வு.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குஇதில் தமிழகம் மட்டுமே அதிகமான மயக்கத்தில் இருப்பது வருத்தமான விடயம்.
நீங்க சொல்வது எல்லாமே உண்மை சகோ .
பதிலளிநீக்குநான் தியேட்டர் போயி 21 வருஷம் .ஆகுது .பள்ளிநாட்களில் அது பொழுதுபோக்கு படம் பார்த்து ரசிகை அப்படிலாம் கிடையாதது சின்ன வயதில் சித்தப்பாவை பிடிச்சது அதனால் அது தொடருது :) அதுக்காக ரசிகை எல்லாம் ஆக முடியாதது :) யாருடைய எந்த பிம்பமும் என் போன்ற சிலரை ஏமாற்றவோ அடிமையாக்கவோ முடியாது .
அவரது படம் சிடியில் 10 நிமிஷத்துக்குமேலே பார்க்கமுடியாம ஆப் பணணினேன் :) அப்போ யோசிச்சேன் 10 நிமிஷம் சேர்ந்தாப்ல பாக்க முடில எனக்கு ஆனா 10 வாட்டி பார்க்கிறாங்க அதுவும் தியேட்டர்ல போயி !! எப்படி முடியுதோ .
அதேபோல படிச்சவங்க சிலர் இந்த பெருந்தலைகளின் சினிமா ரிலீசுக்கு வெறிபிடிச்ச பைத்தியங்கள்போல் அடிச்சிக்கிட்டதையும் கேள்வி பட்டு பார்த்து இருக்கிறேன் .அது உண்மையில் நடிகர்கள் தவறே இல்லை.அவங்க இப்படி ஆகணும்னு நினைச்சி சினிமாக்கு வரலை .அவங்களை பார்த்ததும் காலில் விழுந்ததும் கட் அவுட் வைக்கிறதும் அவங்களுக்கு ஒரு ஐடியா தோணுது அதுதான் அரசியல் :)
வருக நானும்கூட தியேட்டருக்கு போய் 25 வருடங்களுக்கு மேலாகிறது அதாவது எனது மனைவியோடு திரைப்படம் பார்த்தது.
நீக்குகாசு கொடுத்து சினிமா பார்த்ததோட நிப்பாட்டினா பரவாயில்லை ரசிகர்கள் .அதனால் நடிகர்களில் தவறில்லை எல்லாத்துக்கும் காரணம் அறிவிருந்தும் அத ஒழுங்கா பயன்படுத்தாத ரசிகர்கள்தான்
பதிலளிநீக்குதகப்பன் அரசியல்வாதிக்கு தொண்டனாக வாழும்போது அந்த வீட்டில் மகன் நடிகனுக்கு ரசிகனாக வாழும் நிலை ஏற்படுகிறது.
நீக்குஎன்னை கேட்டா நடிகர்கள குற்றம் சொல்றதைவிட இந்த விசிலடிச்சான்குஞ்சுகளை குறிப்பா கட்டவுட்டுக்கு பாலூத்தினா இந்த புடி பனிஷ்மென்ட் னு சொல்லி 10 தெருவை கூட்டி பெருக்கி குப்பை அள்ள வைக்கணும் .
பதிலளிநீக்குஆனாலும் இதெல்லாம் தண்டனையாக எனக்கு தோன்றவில்லை.
நீக்குநான் முந்தி பசுமை விடியல் முகப்புத்தக பேஜுக்கு அட்மினா இருந்தேன் அப்போ கஷ்டப்பட்டு கீரை வளர்ப்பு ,கிழங்கு வளர்ப்பு அப்புறம் ஆர்கானிக் உணவு கெமிக்கல்ஸ் தீமை ,உரம் இதுபத்திலாம் மாங்கு மாங்குன்னு எழுதுவேன் அதுக்கெல்லாம் லைக்ஸ் 30 அப்புறம் ஷேர்ஸ் 40 வந்தா அதிசயம் ஒரு தரம் நடிகர் மாதவனின் மாடித்தோட்டம் னு அவர் படத்தோட ஒரு தட்டில் நாலு பீர்க்கை கொஞ்சம் பீன்ஸ் கொஞ்சம் தக்காளி வச்சிருக்கிற படத்தை போட்டா வாழ்க்கை வெறுத்துப்போற அளவுக்கு நொந்து 500 லைக்ஸ் 400க்கும் மேல ஷேர்ஸ் .அதுகூட பரவால்ல சார் சல்யூட் சார் னு கமெண்ட்ஸ்லாம் வரும் பாருங்க அவ்வ்வ்
பதிலளிநீக்குஅப்படிதான் ஆக்டர் கிஷோர்ன்னு அவர் பெங்களூர்காரர் அவர் இயற்கை விவசாயி எனக்கு சும்மா லைக்கும் ஷெர்ஸும் குமிஞ்சுது ..
நானா கேட்கிறேன் அவங்களை பாராட்டுறாங்கஆன்னா அவங்க போல இயற்கை உணவை வீட்டில் தோட்டம் போடவோ இந்த மக்கள் முயல்வார்களா ? அவர்களை செலிப்ரிட்டியா பார்க்கிறாங்க ஆனா அவங்க செய்ற நல்லதை இவங்க செய்ய முன் வரமாட்டாங்க .
நாளைக்கே இப்போ இருக்கும் ஆக்டர்ஸ் துணிப்பை எடுத்திட்டு கடைக்கு போறாங்கன்னு வைங்க அதையும் படமெடுத்து போடுவாங்க ஆனா இவங்க துணிப்பை தூக்கிட்டு போக மாட்டாங்க :)
இதிலிருந்து தெரிவது நமது சமூகம் அறியாமையின் பிடியில் இருக்கிறது என்பதே...
நீக்குஇன்னிக்கும் சில செய்தி தளங்களில் பார்த்தேன் கார்த்தி மாதிரி எதிரி நாட்டிடம் மாட்டிக்கொண்ட அபிநந்தன் .இவங்க அறியாமையை என்ன சொல்ல :( அவர் நடிச்ச சினிமாவ வச்சி நிகழ்வுகளை பேசுவது என்ன மாதிரின்னு இன்னமும் புரியலை
பதிலளிநீக்குகூமுட்டைகளின் பிள்ளைகள் காமுட்டைகளாகத்தான் பிறக்கும்.
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குஇந்தக் கேள்விக்கு பதில் உண்மையாக என்னிடத்தில் இல்லை கசாநாயகர்களை
காசுநாயகர்கள் என்பதே பொருந்தும் காசுநாயகர்களுக்காகவும் காசுநாயகிகளுக்காகவும்
தீக்குளிக்கக் கூட தயாரான கூட்டம் நமது இனம் இதில் பதிலை எங்கே தேடுவேன் !
வாழ்த்துக்கள் ஜி
வாழ்க நலம் !
வருக பாவலரே தங்களது கருத்தை செம்மையாக சொன்னீர்கள்.
நீக்குதிரையில் தோன்றிவிட்டாலே பிரபலம் ஆகி விடுகின்றனர். அப்புறமா அவங்க தங்கள் செல்வாக்கை வைச்சு முதல் மந்திரி ஆகும்வரை போய்விடுகின்றனர். ஆனாலும் இதில் சிலரே வெற்றி பெறுகின்றனர். பெரும்பாலோர்க்குத் தோல்வி தான். எல்லோரும் எம்.ஜி. ஆர்., என்.டி.ஆர் ஆக முடியாது. ஆகவே இந்த ரசிகக் குஞ்சுகளைப் பார்த்துக் கவலை தான் படணும்.
பதிலளிநீக்குவருக சகோ அன்று படிக்காதவர்கள் அதிகம் அவர்கள் எம்ஜிஆரிடம் அடிமையாக கிடந்ததில் தவறில்லைதான்.
நீக்குஇன்று படித்தவர்கள் அதிகம் இவர்கள் ரஜினிகாந்திடம் அடிமையாக கிடப்பது வெட்கமாக இல்லையா ?
ஒரு விடயம் மேலே குறிப்பிட்ட ரெண்டு பயல்களும் தமிழன் இல்லை.
உங்க சந்தேகத்துக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே.
பதிலளிநீக்குஇப்போது தான் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்திருக்கா ? எனக்கு ரொம்ப நாளா இருக்கு
//உங்க சந்தேகத்துக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லையே//
நீக்குயேங்குறேன்...?
திரைப்படத்தில் பிரபலமாகி அதிக சம்பளம் வாங்கி அரசியலில் நுழைந்த வேகத்தில் முதல்வர் கனவு காணுபவர்கள் மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரியுமோ ?
புதிதாக வந்து பணம் சம்பாதித்து,
பதிலளிநீக்குகாக்கி சட்டை போட்டு, மக்கள் ரசிக்கும் படி
நடித்துவிட்டால், அடுத்த முதல்வர் அவர் தான்.
என்ன செய்யலாம். மக்கள் அறிவு மழுங்கி விட்டது மா.
வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஅந்த சந்தேகப்புயல் சமயநல்லூரா....?? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.........
பதிலளிநீக்குஆம் நண்பரே சமயத்துக்கு நல்லாவே மாறுவார்.
நீக்குஒரு சராசரி மனிதனின் மன நிலை தன்னால் முடியாததை ரத்த சம்பந்தமில்லாதவர்கள் ,உடன்
பதிலளிநீக்குபணி புரியாதவர்கள் அதாவது எங்கோ இருப்பவர்கள் செய்யும்போது ஒரு திரில், மன நிறைவு வரும். ஆனால் அதே அடுத்த வீட்டுக்காரனோ அல்லது உறவுகளோ அந்த சாதனை செய்தால் பொறாமை வரும்.
இது ஒரு பொது உளவியல் .
உதாரணத்திற்கு ஒரு சக தமிழ் பதிவர் மீது பொறாமை வரலாம் . அதே ஒரு பிரபல இந்தி ,இங்கிலீஷ் பதிவர் மீது பொறாமை வராது, ஆனால் அவர்களை சாதனையாளர்களாக நினைப்போம் .அவர்களை பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசிக் கொண்டிருப்போம்
வாங்க மேடம் அழகாக சொன்னீர்கள் உளவியலான கருத்து. வருகைக்கு நன்றி.
நீக்குஉங்கள் சந்தேகத்தை தீர்க்க சந்திரமண்டலம் போனாலும் விடைகிடைக்காது என்று சிவசம்போ சொல்லி விட்டாரே!
பதிலளிநீக்குஆமாம் சகோ அவர்தான் உண்மையை சொல்லி இருக்கார்.
நீக்குநல்ல கேள்வி. இரசிகர்கள்தான் பதில் தரவேண்டும்.
பதிலளிநீக்குரசிகர்களுக்கு பதில் தெரிந்தால் ரசிகர் என்ற பதவியை துறந்து விடுவார்களே...
நீக்கு