அன்பு
நெஞ்சங்களே....
முட்டாப்
பயல்களையும் தாண்டவக்கோனே...
காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே...
இந்தப்பாடலை அனைவருமே கேட்டிருபீர்கள் நான்
அரபு நாடு வந்ததும், அரேபியர்களைப்பற்றி தெரிந்து கொண்டதும் இந்தப்பாடல் நினைவுதான்
அடிக்கடி நினைவுக்கு வரும் எவ்வளவு பொருத்தமாக எழுதியிருக்கின்றார்கள் நமது அன்றைய
கவிஞர்கள். அரேபியர்கள் சர்வ சாதாரணமாக பிற நாட்டவரை முக் மாபி (மூளை இல்லை) என்று சொல்லி விடுவார்கள் இந்த வார்த்தை
சாதாரணமாக ஆச் என்று நாம் தும்முவோமே அதனைப்போல வந்து கொண்டே இருக்கும் இதை
ஆதிகாலம் தொட்டே பிழைப்புத்தேடி வந்த நமது முன்னோர்களும் கேட்டு வாழ்ந்து பழகி
நமக்கும் அதனை கற்றுக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள்.
அதே நேரம் இன்று இவைகள் குறைந்து வருவதையும்
நான் உணர்ந்து இருக்கிறேன் காரணம் இப்போது வரும் இந்தியர்கள் அனைவருமே
படித்தவர்களாக உயர்நிலை வேலைகளுக்கு வருகிறார்கள் ஆங்கிலத்திலேயே பேசி அரேபியர்களை
திணறடித்து விடுகிறார்கள் இதுதான் உண்மை இந்த வார்த்தைகளை சகிக்க வேண்டிய
அவசியமில்லை இது தமிழர்களுக்கு பெருமையான விடயமோ என்னவோ நான் உண்மையிலேயே
சந்தோஷிக்கின்றேன். அரேபியர்களை சுலபமாக ஏமாற்றலாம் அதேநேரம் இவர்களை ஏமாற்றத்
தெரியாத தமிழர்கள் கஷ்டப்படுகிறார்கள் இதற்கு முக்கிய காரணம் சரியாக அரபு மொழி
பேசத்தெரியாமை ஆனால் மலையாளிகள் வெகுசுலபமாக ஏமாற்றி விடுவார்கள் இதற்கு அடிப்படை
காரணம் சரளமாக அரபு பேசுவார்கள் முஸ்லீமாக இருந்தால் 90% படிப்பார்கள்.
சரி இவர்களை
எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
உதாரணமாக நமது வீட்டில் பரணில் கிடந்த
தாத்தாவின் (கடந்த வாரம் வரை சரியான வகையில் கவனிக்காமல் திண்ணையில் கிடந்தவர் இறந்து
விட்டார் அதனால் அவர் தெய்வமாகி விட்டார் அவரை வணங்கியாக வேண்டுமே இல்லை என்றால்
சமூகம் நம்மைச் சாடுமே) புகைப்படத்தை எடுத்து வரவேற்பறையில்
மாட்டுவதற்கு ஒரு ஆணியடிக்க வேண்டும் நாம் என்ன செய்வோம் ? கடையில் ஆணியை வாங்கி வந்து வீட்டில் நாற்காலி எடுத்து வந்து நாற்காலி
இல்லாவிட்டால் ஒரு அண்டாச்சட்டியை குப்புறப்போட்டு அதில் நின்று கொண்டு வீட்டில்
சுத்தியல் இல்லாவிட்டால் அடுப்படியில் கிடக்கும் ஊதாங்குழலையோ, அல்லது வெளியில்
ஒரு கல்லையோ எடுத்து அடித்து இறுக்கி மாட்டி விடுவோம் இல்லையா ?
இதற்கு சாதாரண அறிவு போதுமே இதை நமது
மூதாதையர்கள் கற்றுத்தந்தார்கள் நாம் அதை பின்பற்றுகிறோம் முக்கியமானது இது எந்த,
ஜாதி மதத்தினாராயினும் சரி (மன்னிக்கவும் நான் ஜாதியைப்பற்றி
குறிப்பிடுவதாக நினைக்க வேண்டாம்)
ஆனால் அரேபியர்களிடம் இதை செய்து காண்பித்து
விட்டால் உடனே சொல்லி விடுவார்கள் மாஷா அல்லாஹ் இந்தே மொகந்திஸ் (நீ இஞ்சினியர்) எந்த வாய் நம்மை சட்டென
முக் மாபி என்று சொல்லியதோ அதேவாய் உடனே இப்படிச் சொல்லும் காரணம் இவர்களெல்லாம்
இதை செய்ததில்லை காரணம் பிறந்தது முதல் எல்லா வேலைகளுக்குமே ஆட்கள் உண்டு பணத்தை
வீசினால் பணியாள் இது இவர்களது கொள்கை.
சரி இந்த வகையான வேலைகளுக்கு அரேபியர்கள்
என்ன செய்வார்கள் பார்ப்போமா ? அரேபியர்கள் வீட்டில் வேலைக்கு தமிழர்களும் உண்டு, மலையாளிகளும் உண்டு,
இப்படியான தருணத்தில் தமிழனாக இருந்தால் அவன் நமது ஊரில் செய்வதுபோல் இன்னும்
சொல்லப் போனால் அரேபியர்கள் வீட்டில் ட்ரிலிங் மிஷின், சுத்தியல், ஸ்க்ரூ ட்ரைவ்
போன்ற அனைத்து சாதனங்களும் பெரும்பாலாவர்கள் வீட்டில் இருக்கும் அதை வைத்து
சாதாரணமாக செய்து விட்டு அரபியிடம் ஸூக்ரான் (நன்றி) என்ற வார்த்தையை வாங்கி கொண்டு அடுத்த
வேலைகளுக்கு இயல்பாகி விடுவான்
ஆனால் இதே இடத்தில் மலையாளி இருந்தால் இதற்கு
நஜார் (Carpenter) வேண்டும் என்பான் அரபிக்குத்தான் சுயபுத்தி
கிடையாதே சரி உடனே நஜாரை வரச்சொல் என்பான் இவன் செய்வது என்ன ? உடனே தனது நண்பனுக்கு (அவனும் கண்டிப்பாக
மலையாளியாகத்தான் இருக்க முடியும்) போன் செய்து வரவழைப்பான் அவன் எப்படி
வருவான் தெரியுமா ? கையில் ஸூட்கேஷ் உள்ளே
டூல்ஸ் இருக்கும், தோளில் மடக்கப்பட்ட லேடர் (ஏணி) இப்படித்தான் வருவான்
அவன் வருவது வெள்ளிக்கிழமையோ, அல்லது மற்ற தினமானால் மாலை நேரமாகத்தான் இருக்கும்
காரணம் பிறகு சொல்கிறேன் உள்ளே நுழைந்ததும்
அஸ்ஸலாமு அலைக்கும் அரபாப் (முதலாளி) என்பான் அரபியும்,
வ அலைக்கும் ஸலாம் சொல்வார் அரபிக்கு உடனே
இவனைப் பிடித்துப்போகும் வேலை தொடங்கும்.
சரி அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்ன ?
இதை ஏன் பலரும் தவறானதாக இருக்குமோ... என்று
ஐயப்படுகிறார்கள் ?
அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் சாந்தியும்
சமாதானமும் உண்டாகட்டும் என்கிறார் பதிலுக்கு இவரும், வ அலைக்கும் ஸலாம்
என்கிறார்.
வ அலைக்கும் ஸலாம் என்றால் உமக்கும் அப்படியே
ஆகட்டும் என்கிறார்.
இதிலென்ன சூட்சுமம் இருக்கிறது ? நம்மூரில் வாழ்க வளமுடன் என்றவுடன் அதையே
திருப்பி வாழ்க வளமுடன் என்று சொல்வதில்லையா ? அதைப்போல்தான் வேறொன்றும் இல்லை அர்த்தமறியாத
பிரிவினைகள். இதைப்போல் நிறைய வார்த்தைகள் உண்டு பல நகைச்சுவையாக இருக்கும்
அவைகளைப்பற்றி பிறகு எழுதுகிறேன் அர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும்.
மனிதனாகப் பிறந்தோம்,
மனிதநேயம் காப்போம்
வாழ்க வளமுடன்.
சரி லேடரோடு வந்தவன் என்ன
செய்கிறான் ? அடுத்த பதிவில் பார்ப்போமே...
இனியகாலை வணக்கம் கில்லர்ஜி!
பதிலளிநீக்குஆ இன்று காலையில் பார்க்கும் படங்கள் எல்லாமே மனதை நிறைக்கின்றனவே!! அன்னை!
கீதா
வருக முதல் வருகைக்கு நன்றி
நீக்குகில்லர்ஜி சாதாரண வேலைகளைக் கூட இப்படி ஏதோ பெரிய வேலை போன்று ஏமாற்றுபவர்கள் அதுவும் நாம் கொஞ்சம் கோக்குமாக்காக இருந்தால் அம்புட்டுத்தான். ஏமாறுபவன் இருந்தால் ஏமாற்றுப்வர்கள் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள் மட்டுமில்லை நன்றாக லாபமும் காண்பார்கள்.
பதிலளிநீக்குஅது சரி இந்தியர்கள்/தமிழர்கள் புத்திசாலிகளா? அப்படினா நம்ம நாட்டுலதான் ஏமாறுகின்றார்களோ?!!! ஓட்டுப் போட்டு!! ஹிஹிஹி
கீதா
தமிழர்கள் ஏமாறுவதிலும் வல்லவர்கள்.
நீக்குஅதிலும் அயோக்கியன் என்றறிந்தும் அவனிடமே ஏமாறுவதில் சாதனையாளர்களே...
அதே மலையாளிகள் தான் 2014 மக்களவை தேர்தலில் நடிகர் இன்னசென்டை தேர்ந்து எடுத்தனர். அதற்கு முன் கணேஷ் என்ற நடிகர் மந்திரியாகவும் இருந்தார்.
நீக்குவாங்க ஐயா இது எனக்கு தெரிந்த விசயமே... கணேஷ்குமார் சாதாரண சீரியல் நடிகராக இருந்து வெற்றி பெற்றவர் அடிப்படைக் காரணம் கணேஷின் தந்தை அரசியல்வாதி (எம்.எல்.ஏ)
நீக்குஇன்னசென்ட் வயது முதிர்ந்தவர் பழம்பெரும் குணசித்திர நடிகர் மலையாள மக்களின் நெடுங்கால மதிப்பை பெறாறவர்.
ஆனால் சுரேஷ்கோபி முதல்நிலையில் உள்ள பெரிய நடிகர்களில் ஒருவர்.
அட! இதிலும் சஸ்பென்ஸோடு விட்டுட்டீங்க! ஆனாலும் மனிதர்களை நன்கு கவனித்துப் பார்த்து வருகிறீர்கள். நல்ல கவனிப்பு! அடுத்து அந்த மலையாளி என்ன செய்தார் என்பதை அறியக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க சகோ
நீக்குஇது சஸ்பென்ஸ் என்று சொல்ல முடியாது அடுத்தது தனி பதிவே...
பிலிம் காட்டி வேலை செய்து பணம்பெற்று ஜமாய்க்கிறார்கள் போலும் அவர்கள்! ஸலாமுஅலைக்கும் வார்த்தைகளுக்குப்பொருள் ஏற்கெனவே அறிவேன். அதே போல இன்ஷா அல்லாஹ்வுக்கும்!
பதிலளிநீக்குஆமாம் ஜி
நீக்குநடிப்பவன் போறறப்படுவதும், உழைப்பவன் அவமதிக்கப்படுவதுமே இன்றைய காலத்தின் நிலைப்பாடு.
//பெருமையான விடயமோ என்னவோ...நான் உண்மையிலேயே சந்தோஷிக்கிறேன்....//
பதிலளிநீக்குஇந்த வார்த்தையில் ஒரு முரண் இருக்கிறதே... கவனித்தீர்களா?
சந்தோஷப்படுகிறேன் என்று வரணுமா ஜி அல்லது "விசயம்" என்று வரணுமோ ?
நீக்குஅரபிகள் ஆங்கிலத்தில் பேசுவதில் எம் இந்தியர்களிடம் திணறுவதைக் காண்பதில் எனக்கு மகிழ்ச்சியே...
காத்திருக்கிறேன் நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே
நீக்குஆஹா. ஏமாற்றுவதில் சிறந்தவர்களையும் ஏமாறுவதில் சிறந்தவர்களையும் காண்பித்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குகேரளா செழிப்பான பூமியானது இவர்களைப் போல ஆசாமிகளால் தான். லுலு என்ன,கே ஏம் ட்ரேடிங்க் என்ன. வைரக்கடைகள், தங்கக் கடைகள்
ஸாமர்த்திய சாலிகள்.
சஸ்பென்ஸ் உடையக் காத்திருக்கிறேன்.அன்பு தேவகோட்டைஜி.
வாங்க அம்மா
நீக்குஏமாற்றுவதற்கு அறிவு வேண்டும் ஆக எனது கூற்றுப்படி மலையாளிகள் அறிவாளிகளே...
நடிகர்களிடம், அரசியல்வாதிகளிடம் மயங்கமாட்டார்கள்.
மோகன்லாலோ, மம்மூட்டியோ தமிழகத்தில் தேர்தலில் நின்றால் அமோக வெற்றி பெறமுடியும்.
ஆனால் கேரளத்தில் நின்றால் டெபாஸிட் காலியாகும்.
சமீபத்தில் நடிகர் சுரேஸ்கோபிக்கு தோல்வியை பரிசளித்தவர்கள் மலையாளிகள்.
காத்திருக்கிறேன் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குதொடர்ந்து ஆணி அடிப்படைக் காணக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் காத்திருப்புக்கு நன்றி.
நீக்குஅர்த்தம் அறிந்தால் அன்பே பெருகும் தலைப்பு அருமை.
பதிலளிநீக்குஒவ்வொரு மனிதரிடமும் திறமைகள் இருக்கிறது அதை வெளிப்படுத்தும் முறைகள் வேறு, அதை வைத்து பணம் சம்பாதிக்கும் வழி முறைகள் சிலருக்கு வரும், சிலருக்கு வராது.
வேற்று மொழியை கற்றுக் கொண்டு பேசி அவர்களை
மகிழ்விக்கிறார்.
மனித நேயம் வாழ்க! வாழ்க வளமுடன்.
வருக சகோ உண்மைதான்.
நீக்கு"இரண்டு மொழிகள் தெரிந்தவர் இரண்டு மனிதர்களுக்கு சமம்" என்பது காந்திஜியின் பொன்மொழி.
மொழிகள் பல அறிந்து கொள்வதால் நன்மையே அன்றி தீமையில்லை வருகைக்கு நன்றி
அது என்ன மாலை நேரம் நண்பரே. நானும் காத்திருக்கிறேன்
பதிலளிநீக்குவருக நண்பரே
நீக்குவெள்ளிக்கிழமை விடுமுறை தினம் பிற தினங்களில் கம்பெனி வேலை முடிந்து கம்பெனிக்கு தெரியாமல் மாலை நேரத்தில்தான் இப்படி பார்ட்-டைம் வேலை செய்யமுடியும். (திருட்டுத்தனமாக)
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதலைப்புகேற்றபடி முதல் படம் நன்றாக உள்ளது.ஒவ்வொரு மனித மனங்களுக்கு ஊடே இருக்கும் அர்த்தமும் புரிந்தால்,அந்த புரிதலில் நிச்சயம் அங்கு அன்பே பெருகும்.ஆனால், மனித மனங்கள்தான் அந்த புரிதலுக்கு சில சமயங்களில் ஒத்துழைப்பு தருவதில்லை.
பதிவு சுவாரஸ்யமாக செல்கிறது. ஒவ்வொரு மொழி பேசும் மனிதர்களின் மனப்பான்மையை அறிந்து வைத்திருப்பது தங்களின் சிறப்பு. ஏமாற்றுபவன் மற்றொரு சமயத்தில் மற்றவர்களிடம் ஏமாந்து விடுவான். என்றுமே புத்திசாலியாக இருந்து விடுவோம் என்ற அகங்காரமே சில சமயங்களில் ஏமாற்றுதலிடம் மண்டியிட வைத்து விடும்.
உண்மை பேசி உழைத்து சம்பாதிப்பதே சில சமயம் நம்மிடம் ஒட்ட மறுத்து விலகி விடுகிறது. இதில் ஏமாற்றுதனத்தை கலந்து பெறும் பணம் நிலைக்குமா? அந்த நண்பன் வந்ததும் அதிக வேலை செய்ததாகக் கூறி, அந்த அரேபியரிடம் நிறைய பணம் வாங்கி விட்டரா, இல்லையா என அறிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குஉண்மை பிறரை ஏமாற்றி வாழ்வது நிரந்தரமில்லை அதற்கான தண்டனையை இறைவனிடமிருந்து பெற்றே தீரவேண்டும்.
அழகிய கவிதை போன்ற கருத்துரையை தந்தமைக்கு நன்றி.
மறுபடியும்.... ஆகா!..
பதிலளிநீக்குஏமாற்றுவது?.. அந்த வார்த்தையை விட
அசத்துவது என்று சொல்லலாம்...
ஆனாலும் அரபிகளின் மறுபக்கம் என்று ஒன்று உள்ளது....
அதைப்பற்றி ஜி அவர்கள் இன்னும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்...
அரபிகள் என்றில்லை..
அரபி மொழி பேசுபவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்....
வாங்க ஜி எதைச் சொல்கின்றீர்கள் என்பது விளங்கவில்லையே...
நீக்குஇனி என்னால் இயன்றவரை உளறுவேன் ஜி
அனுபவப் பகிர்வுகள் தொடரட்டும்..... நானும் தொடர்கிறேன் தெரிந்து கொள்ள....
பதிலளிநீக்குவாங்க ஜி மிக்க நன்றி.
நீக்குரொம்ப லேட்டா வந்திருக்கிறேன். மிக ரசனையாகத் தொடர்கிறது.
பதிலளிநீக்குஅரபிக்கள் (Bபாஸ்கள்), 'முடியாது', 'சாத்தியமில்லை' என்பனவற்றை விரும்புவதில்லை. அவங்க என்ன சொன்னாலும் (அது எவ்வளவு முட்டாள்தனமாகவோ இல்லை காசு வேஸ்ட் விஷயமாகவோ இருந்தாலும்), அதனாலென்ன, செய்துடலாம் என்று சொல்வதைத்தான் விரும்புவார்கள். அதே மாதிரி, அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாவிட்டாலும், அவங்களை எல்லாம் தெரிஞ்சவங்க மாதிரி டிரீட் பண்ணணும். இதெல்லாம் தெக்கினிக்கு.
வருக நண்பரே
நீக்குஆம் எல்லாம் அவன் செயலால் நடக்கும் என்று ஆணித்தரமாக நம்புவார்கள்.
எந்த மதமும் சரியானவற்றைத்தான் சொல்லும்.
பதிலளிநீக்குஅல்லாஹு அக்பர் - அல்லா, அதாவது கடவுள் மிகப் பெரியவன். அதைத் தொடர்ந்து வரும் வாசகங்கள், 'அந்த ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை", "முகம்மது நபி அவர்கள் அல்லாவின் தூதுவர்", "அல்லாவை தொழ விரைந்து வாருங்கள்" ,"அவன் ஒருவனே கடவுள்". இதுல, நாம 'தெய்வம்' என்று சொல்வதுபோல், அரபிக்கில் 'அல்லா'. அவ்ளோதான் மேட்டர்.
அழகாக சொன்னீர்கள் நண்பரே...
நீக்குமதங்கள் அனைத்துமே அன்பையே போதிக்கின்றன ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்வதில்தான் குளறுபடிகள் இருக்கின்றது.
ஆணி அடிக்கிறவனெல்லாம் இஞ்சினியரா ?... நல்லா இருக்கே....
பதிலளிநீக்குஆம் நண்பரே அப்படினா... இஞ்சினியரை என்ன சொல்வது ?
நீக்குஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் என்பது உண்மைதானே. ஏணியோடு வந்தவர் என்ன செய்தார் என அறிய காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மைதான். காத்திருப்பமைக்கு நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குமலையாளிகளின் உத்தி என்னவென்று பார்ப்போம். போகிற போக்கில் அரபு கற்றுத்தருகின்றீர்கள்.நன்றி
வருக கூகுள் மேடம் இதன் மறுபாகத்தில் அதிகமான அரபு வார்த்தைகள் வருகிறது.
நீக்கு