தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 29, 2019

விழிப்பது எப்போது ?



01. நமது அரசியல்வாதிகள் கொள்ளையர்கள் என்று தெரிந்தே ஓட்டுப் போடுகிறோம்.

02. கொக்கோ கோலாவை துறுப்பிடித்த இரும்பை சுத்தம் செய்வதை தெரிந்தும் வாங்கி குடிக்கிறோம்.

03. குழந்தைகளின் தின்பண்டம் விசம் என்பதை அறிந்திருந்தும் வாங்கி கொடுக்கிறோம்.

04. அலைபேசியால் இதயம் முதல் கிட்னிவரை பாதிக்கிறது என்பது தெரிந்தும் உபயோகப்படுத்துகிறோம்.

05. சீனியால் சுகர் வியாதி வருகிறது என்று அறிந்தும் அதை ஒதுக்கி வைக்க மறுக்கிறோம்.

06. நமது கலாச்சாரம் அழிந்து வருவது அறிந்தும் நமது குழந்தைகளின் ஆபாச உடைகளுக்கு அனுமதிக்கிறோம்.

07. மருத்தவத்தால்தான் வியாதி பெருகுகிறது என்று தெரிந்தும் அவசியமில்லாத விசயத்துக்கும் மருத்துவரை அணுகுகிறோம்.

08. இணையத்தால்தான் பிள்ளைகள் கெடுகிறார்கள் என்றறிந்தும் ஆன்ட்ராய்டு போன் வாங்கி கொடுக்கிறோம்.

09. பொன் நகைகளால் உயிருக்கே ஆபத்து என்பது தெரிந்தும் நடமாடும் நகைக்கடையாய் அலைகிறோம்.

10. தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பதால் அழ வைக்கின்றார்கள் என்பது தெரிந்தும் பார்த்து அழுகின்றோம்.

11. நித்தியானந்தா போன்றவர்கள் போலிச் சாமியார்கள் என்று வெட்ட வெளிச்சமாகியும் அவனது காலில் விழுகின்றோம்.

12. இரண்டாயிரம் ரூபாய்க்கு வாக்கை விற்று விட்டு விலைவாசியை ஏற்றி விட்டால் புலம்புகின்றோம்.

13. டாஸ்மாக்கை வைத்து நமது வாழ்வை அழிப்பவர்கள் என்றறிந்தும் வாழ்க கோஷமிடுகிறோம்.

14. திரைப்படங்கள் ஆபாசமாக இருப்பது தெரிந்தும் பிள்ளைகளோடு படம் காண தியேட்டருக்கு செல்லுகிறோம்.

15. நடிகை விபச்சாரி என்பது தெரிந்தும் அவளுக்கு கோவில் கட்டுவதை தடுக்க மறுக்கிறோம்.

16. கிரிக்கெட் மனிதனை கிறுக்கனாக்குவது தெரிந்தும் குழந்தைகளை கிரிக்கெட் பார்க்க அனுமதிக்கிறோம்.

தமிழா என்றுதான் நாம் விழித்தெழுவோம் ? – கில்லர்ஜி

Chivas Regal சிவசம்போ-
இந்த ஆளு டாஸ்மாக்கை மூட வச்சுருவானோ... ?  

காணொளி

53 கருத்துகள்:

  1. நாங்க தான் தூங்கவே இல்லையே..
    அப்புறம் எப்படி விழிக்கிறது?..
    விழித்து எழுகிறது?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே..... இது நல்லாயிருக்கே...!

      நீக்கு
    2. வாங்க ஜி ஆயுள் முழுவதும் நைட் டூட்டி பார்க்கலாமா ?

      நீக்கு
    3. இங்கே எங்களுக்கு இரவுப் பணி என்பது இயல்பானது. நீங்க பட்டியலிட்டதை நான் பலமுறை யோசித்துள்ளேன்.

      நீக்கு
    4. வருக நண்பரே யோசிப்பது நலனையும், பலனையும் தரட்டும்.

      நீக்கு
  2. நீங்கள் சொன்ன அனைத்தும் அருமை.
    இது கிட்ட தட்ட மனித இனத்திற்கே பொருந்துமே நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனித இனத்திற்கே//

      ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர்

      நீக்கு
  3. இலவசம் ஒன்றால் தான் தமிழன் விழித்திருக்கிறான். நீங்க என்னடான்னா! இதை எல்லாம் கூடாதுனு சொல்றீங்க! அப்புறமாத் தூங்கறதைத் தவிர்த்து வேறே வழி!

    பதிலளிநீக்கு
  4. தொலைக்காட்சியில் நாடகம் பார்ப்பதால் அழ மட்டுமா வைக்கிறார்கள்? கலாச்சாரத்தையே கெடுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் முக்கிய பங்கு விஜய் டிவிதான் (தெலுங்கர்கள்)

      நீக்கு
  5. // இரண்டாயிரம் ரூபாய்க்கு வாக்கை விற்றுவிட்டு//

    பணக்கார ஊர் பாஸ் உங்க ஊர். எங்க பக்கம்லாம் ஐநூறு, ஆயிரம்தான் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. இப்படியா பணக்கார பேரெடுக்கணும்.

      நீக்கு
  6. வாழ்க கோஷமிட்டுவிட்டு அதே டாஸ்மாக் சரக்கை தட்சிணையாகப் பெறுகிறோம்!

    பதிலளிநீக்கு
  7. பதினைந்தாவது பாயிண்ட் - டூ மச்!

    பதிலளிநீக்கு
  8. இந்தக் காணொளி நானும் பார்த்தேன். படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் சற்றே ஓவர் ஆக்டிங்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில்தானே ஒரு சிறுவன், கிரிக்கெட்டைப் பார்த்து 'நீ தூக்குப்போட்டுக்கோ' என்று ஒருவனைப் பார்த்து திட்டிய காணொளி வெளிவந்தது? இப்போ உள்ளவங்கள்லாம் கனவுலகில்தான் வாழறாங்க. இவங்கள்லாம் உயிரோடு இருந்து யாருக்கு பிரயோசனம் என்று தெரியலை.

      நீக்கு
    2. ஸ்ரீராம்ஜி இப்படியும் இருக்கலாமோ...

      நெ.த. நண்பரே அதே காணொளிதான் இப்பதிவுக்கு காரணம்.

      நீக்கு
  9. //தமிழா என்றுதான் நாம் விழித்தெழுவோம்? -கில்லர்ஜி//

    தமிழனா?...யார் அது கில்லர்ஜி?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே... தமிழனா?...

      யாரவன்!...

      நீக்கு
    2. தமிழன் என்றொரு இணமுண்டு
      அவனுக்கு ஏமாறும் குணமுண்டு

      நீக்கு
  10. அனைத்தும் நன்றாக இருக்கிறது. முதல் பாயின்ட் 100% டிட்டோ..

    காணொளி வாட்சப்பில் வந்ததே. அது ஓவராக இருக்கு இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தவறில் மிகப்பெரிய தவறு - என்ன தெரியுமா ஜி...?

    பதிலளிநீக்கு
  12. விழித்திருந்தே தூங்குபவரை என்ன செய்யலாம். கடைசிப் பையன் குழந்தையா.
    இல்லவே இல்லை.
    இந்த மாதிரி வளர்ந்து எல்லோர் காசையும் கரியாக்குவார்கள்.
    இன்னாள் நன்னாளாக வாழ்த்துகள் அன்பு தேவகோட்டை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  13. விரைவில் தமிழினம் விழித்தெழும்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு பார்வையில், நல்ல அலசல். 3 ம். 5 ம் நாம் கட்டுப்படுத்தலாம். ஆனால் ஆசை என்ற ஒன்று இருக்கும் வரை இதைக்கூட நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லையே என்ற வருத்தம் வருகிறது.

    7ம், 9ம் அவசியம் எனக்கூறி பிறரால் வேறு வழியின்றி கட்டுப்படுத்தப்படுகிறோம்.

    அத்தனையும் நல்லதொரு அலசல். சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் கூறுவது போல், அனைத்து மக்களும் மற்றவனைப் பார்த்து, ஆசைப்பட்டு, ஆத்திரப்பட்டு, பொறாமைபட்டு, கோபப்பட்டு, இன்னமும் எத்தனையோ பட்டு உடல்நலத்திற்கு தேவை தரும் நிம்மதியான தூக்கத்தின் வசப்பட மட்டும் தவறி விட்டார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்து விரிவாக கருத்தை பதிந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  15. இப்பமே பே பே ன்னு முழிச்சிட்டு இருக்கோம். விழிப்பது எப்போது என்று தெரிந்திருந்தால் இப்படி ஒரு ஆட்சியை தேர்ந்தெடுத்து இருப்போமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீனாக்கா... எப்பொழுதுதான் விழிப்பது ?

      நீக்கு
  16. நம்முடைய பிரச்சனைகளுக்கெல்லாம் மத்தவங்களை குறை சொல்வது, மற்றவர்கள் மீது தவறு காணும்வரை நாம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றுதான் இருப்போம் கில்லர்ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அரசியல்வாதிகளை குறை சொல்லும் நாம் அதன் தொடக்கமே நம்மிடமிருந்துதான் என்பதை உணர மறுக்கிறோம்.

      நீக்கு
  17. பல விஷயங்கள் இங்கே மாற்ற முடியாதவை தான் கில்லர்ஜி! மாற்றம் என்றைக்கு வரும் என்பது கேள்விக்குறி தான்!

    காணொளி - :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மாற்றம் வரு...ம் ஆனா வரா....து.

      நீக்கு
  18. பொட்டில் அறையும் கேள்விகள் அதாவது சுய விமர்சனம். ஊதுகிற சங்கை ஊதி விட்டீர்கள், விடியும் பொழுது விடியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தமிழர்களுக்கு உரைத்தால் சரிதான்.

      நீக்கு
  19. உங்கள் எண்ணங்கள் எல்லாம் அருமை.

    விழிப்பது எப்போது? அதுதான் தெரியவில்லை.
    காணொளி பார்க்க கவலை அளிக்கிறது.

    டாஸ்மார்க்கை மூட வைத்தால் நல்லதுதான்.
    தலைப்பு செய்தி குடி போதையால் தங்கம் தகரமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  20. KILLERGEE ஐயா நீங்கள் மேலே குறிபிட்டுள்ள அத்தனையும் வெளியில் இருக்கும் பிரச்சினைகள் அல்ல...நமக்குள் இருக்கும் தவறுகள் .... ஆனால் அதற்கான தீர்வுகளை நாம் வெளியல் தேடி அலைகிறோம்.... எனவேதான் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் பிரச்சினைகளாகவே இருகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இதையேதான் நானும் சொல்கிறேன் தும்பை விட்டு வாலைப்பிடித்து தொங்குவது நமது பழக்கமாகி விட்டது.

      நீக்கு
  21. தலைவா!!..தாங்கள் பட்டியல் இட்டதில் எந்த இடத்திலும் நான் இடம் பெறவில்லை என்பதை கண்டு எனக்கு பேரதர்ச்சி....சூன் மாதத்தில். வேலை டல்லு. சூலையில் வேலையே இல்லை. இனி செல் போன் நோண்டுவது அந்த நல்ல பழக்கத்தையாவது அப்பப்ப இல்லாமல் முழுநேரமாகவாவது நோண்டவதில் தேர்ச்சி பெற வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கு அதிர்ச்சி ?
      இது மகிழ்ச்சியான விடயமே...

      நீக்கு
  22. திரு துரைராஜ் அவர்கள் குறிப்பிட்டதையே நானும் சொல்கிறேன். தூங்கினாலல்லவா விழிப்பதற்கு. கண்ணைத் திறந்துகொண்டே பாழும் கிணற்றில் விழுபவர்களை என்ன செய்யமுடியும். ஒவ்வொன்றுக்கும் முடிவு என்று ஒன்று உண்டு. இதுவும் கடந்துபோகும் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  23. தங்களது கருத்துக்கள் மிகவும் அருமை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு