தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், செப்டம்பர் 18, 2019

மேலூர், மேலாளர் மேகநாதன்வணக்கம் நட்பூக்களே கடந்த வருடம் இதேநாளில் இக்கதை எங்கள் ப்ளாக்கில் வெளியாகியது சரியாக ஓராண்டு கடந்தும் இன்றைய தேதிவரை கதைக்கு பேசி தீர்மானித்த எழுபத்தி மூன்று லட்சத்து, பதினாறு ஆயிரத்து, நானூற்றி எண்பத்து இரண்டு ரூபாய், ஐம்பது காசுகள் (73,16,482.50) இதுவரை தரப்படவில்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன். இதைப்படிப்பவர்கள் நல்ல தீர்மானமாக எடுத்துச் ஜொள்ள’’வும்.

மேகலா ஓர் தீர்மானத்துடன் நடந்தாள் இன்று அலுவலக மேலாளர் மேகநாதனிடம் சொல்லி விடுவதுதான் சரி இனியும் பொறுமையாக இருப்பது சரியாக வராது நாமும் எவ்வளவு காலம்தான் கஷ்டப்படுவது ? பாவனா போன வருடம் வேலைக்கு சேர்ந்தவள் எத்தனை வேகமாக பதவி உயர்வு பெற்று இன்று வங்கியில் கடன் பெற்று வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றாள் நான் இங்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. வாடகை வீட்டைக்கூட கூடுதலான வாடகையில் பிடிப்பதற்கு வழியில்லை நமது பொருளாதாரம் உயர்வுக்கு வழியில்லை கணவன் முகுந்தனை நம்பி இனி பயனில்லை,

அவன் நேர்மை நியாயம் தர்மம் என்று சிந்தாந்தம் பேசிக்கொண்டே திருணமாகி ஆறு வருடமாகியும் குடும்பத்தின் உயர்வு சிந்தனை இன்றி அலுவலகமே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் வலியக்க தரும் பணத்தைக்கூட கொடுப்பவனை அவமானப்படுத்தி விரட்டி விடுபவன் மகனை நல்ல ஸ்கூலில் சேர்க்க வேண்டும் வருமானம் போதவில்லை நமக்காக வாழ்ந்த அப்பாவும் போய்ச் சேர்ந்து விட்டார் இனி நமக்கென்று யாருமில்லை கணவனையும், மகனையும் தவிர சொந்த பந்தங்கள் ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்கள் நம்மை நாமே தீர்மானிப்போம்.

பாவனாவை அலுவலகத்தில் அப்படியும், இப்படியும்தான் பேசுகின்றார்கள் அதனால் அவளது வாழ்க்கைத்தரம் தாழ்ந்து விட்டதா ? மாறாக உயர்ந்து கொண்டுதான் போகின்றது எவ்வளவு தைரியமாக மேலாளரின் காரில் ஏறிப்போகின்றாள் அவளது கணவனுக்கு தெரியாதா ? தெரியும் என்றுதானே அலுவலகத்தில் பேசுகின்றார்கள் அப்படியானால் அவளுக்கு கணவன் மீது பயம் இல்லையா ? அப்படியானால் நாம் மட்டும் கணவனுக்கு பயப்பட வேண்டுமா ?

வாழ்க்கைக்கு வருமானம் போதவில்லை பிறகு எப்படித்தான் வாழ்க்கையை கடத்துவது யார்தான் யோக்கியமாக வாழ்கின்றார்கள் நாம் இப்படி வாழ்வதால் சென்னையில் கண்ணகி சிலைக்கு பக்கத்தில் நமக்கும் சிலை வைக்கப் போகின்றார்களா ? இல்லையே இன்னும் சொல்லப் போனால் இனிமேல் அந்த மாதிரி வாழ்பவர்களுக்குத்தான் சிலை வைப்பார்கள் இன்றைய சமூகம் இப்படிப்பட்டவர்களைத்தானே துதிக்கின்றது.

குஷ்புவுக்கு கோயிலே கட்டினார்களே... அப்படியானால் எப்படியும் வாழலாம் என்றுதானே அர்த்தம் இதனால் சுந்தர். சி. யை யாரும் மதிக்காமல் இருக்கின்றார்களா ? போனவாரம் அவருடையை பேட்டியை டி.வி.யில் பார்த்தோமே கல்லூரிப் பெண்கள் அவரை இப்பொழுதும்கூட இஷ்டப்படுவதாக சொன்னார்களே... பொதுவில் இப்படிச் சொல்வதற்கு அவர்கள் தயக்கமோ, வெட்கமோ படவில்லையே இதையெல்லாம் அவர்களின் பெற்றோர்களும் பார்க்கத்தானே செய்வார்கள் இவர்களையும் நாளை ஒருவன் திருமணம் செய்யத்தானே போகின்றான்.

நம்ம அண்ணாச்சி ஆர்.கே.செல்வமணி இவருக்கும் மதிப்பு இருக்கத்தானே செய்கின்றது ரோஜா இப்பவும்கூட டி.வி ப்ரோக்ராமில் கே.பாக்கியராஜை கட்டிப்பிடித்து ஆடினாரே.... இதெல்லாம் பூர்ணிமாவுக்கு தெரியாதா ? தெரியும் தெரியாதது போல் நடிக்கின்றார்கள் எல்லோருமே நடிகர்-நடிகைகள்தானே இவர்களெல்லாம் இப்படி உலகறிய வாழும் போது நாம் மேலூர் என்ற சிறிய வட்டத்துக்குள்தானே வாழ்கிறோம் யாருக்கு தெரியப்போகிறது ?
பாவனா இப்படி இருப்பது உலகுக்கு தெரியுமா ? அலுவலகத்தில் இருக்கும் சுமார் முப்பது பேர்களுக்கு தெரியும் இப்பொழுது பாவனா அலுவலகத்தில் யாரையும் மதிப்பதில்லை பியூன் பிரசாத்கூட சொன்ன மறுநொடியில் காஃபி வாங்கி வந்து கொடுக்கின்றான் நாம் மூன்றுமுறை அழைத்து நாலாவது தடவையாக அழைத்த பிறகுதான் என்ன ? என்று சவடாலாக கேட்கின்றான் இதற்கெல்லாம் காரணம் என்ன ? மேலாளருடன் நெருக்கம்தானே...

உண்மையிலேயே அவள் புதுமையானவள்தான் ஒரே வருடத்தில் அலுவலகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட்டாளே அதனால்தான் எல்லோரும் ரகசியமாக தலைவி என்கின்றார்களோ ? நாமும் அவளைப்போல் புரட்சி செய்தால் நம்மையும் தலைவி என்று சொல்வார்களே அது நமது காதுக்கும் வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் நமக்கென்ன அழகு இல்லையா ?

மதுரை கோல்மால் கல்லூரியில் படிக்கும் பொழுது எத்தனை பேர் நமக்கு லட்டர் கொடுத்தார்கள் காரணமென்ன ?  நமது அழகுதானே... ஏன் வலைப்பதிவர் கில்லர்ஜிகூட லட்டர் கொடுத்தாரே... நாம் யாருக்கும் மசியவில்லையே.... கடைசிவரை நமது நினைவாகத்தானே இரண்டாவது திருமணம்கூட செய்யாமல் வாழ்கின்றார் போதும் போதும் பொறுத்தது போதும் இனி நமது மனதில் மாற்றம் வாழ்வில் ஏற்றமே...

இன்றே அலுவலகம் போனதும் மேலாளரை சந்திக்கின்றோம் நாம் சிரித்தால் போதுமே அவருக்கு புரிந்து விடும் பாவனாவை ஓரம் கட்டி விடலாம் மேகலா ஓர் தீர்மானத்துடன் கணவன் முகுந்தனை அலுவலகத்துக்கும், மகனை ஸ்கூலுக்கும் அனுப்பி விட்டு வழக்கத்தைவிட சற்று கூடுதலாக ஒப்பனை செய்து கொண்டாள் பெர்ஃப்யூம் சற்று கூடதலாக அடித்தாள் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் இறங்கினாள்.
 
வழக்கம்போல் நகரப் பேருந்திலிருந்து இறங்கி சற்று தொலைவில் இருக்கும் அலுவலகம் நோக்கி நடந்தாள் சாலையைக் கடக்கும் பொழுது தன்னுடன் ஒரு வயதான அம்மாள் தனது கால் ஊனமான கணவரை தட்டு வண்டியில் இழுத்துக் கொண்டு கடந்தார் மேகலாவுக்கு அவர்களைக் கண்டதும் மனம் பாரமாகி விட்டது கிழவி நல்ல சிவப்பு இளவயதில் நல்ல அழகானவளாக இருந்திருக்க வேண்டும் முகத்தைப் பார்த்தாளே தெரிகின்றது மரத்தடி நிழலில் நின்ற அந்த தம்பதிகளிடம் கேட்டாள்.


ஏம்மா உங்க பிள்ளைகள் எங்கே இருக்காங்க ?
எங்களுக்கு பிள்ளை இல்லம்மா தெய்வம் எங்களுக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கலை.
இவருக்கு கால் எப்படி ஊனமாச்சு ?
இவரும் நல்லாத்தான்மா இருந்தாரு... இது நேர்மைக்கு கிடைச்ச பரிசு.
புரியலையே.... எப்படி ?
இவரு ஈ.பி.ஆபீசுல வேலை பார்த்தாருமா... ஒரு கம்பெனிக்காரன் கரண்டை திருட்டுத்தனமா போஸ்ட்லருந்து எடுத்தான் அதை தடுத்தாரு.. அவன் எவ்வளவோ லஞ்சம் கொடுத்துப் பார்த்தான் இவரு மசியவே இல்லை மேலிடத்துக்கு புகார் கொடுத்துட்டாரு அவன் கோபத்துல ஆள் வச்சு காரை விட்டு ஏற்றி காலை ஒடிச்சுட்டான் அதுக்குப் பிறகு இருக்கிற வீட்டை வித்து இவரைக் காப்பாற்றுனேன் எல்லாம் இழந்துட்டு இப்போ இவருக்காக வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் என்னை மகாராணியாட்டம் வைச்சு இருந்தாரு நான் இவரை இப்படித்தான் வைச்சு இருக்க முடியுது இன்னும் எவ்வளவு காலமோ இவரு செய்த புண்ணியத்துல ஏதோ கிடைக்கிற தர்மத்தை வச்சு காலத்தை ஓட்டுறேன் இவரு காலை ஒடிச்சவன் இப்போ மந்திரி ஆயிட்டான் யாருகிட்டே போய் நியாயம் கேட்க ? இதுதான் உலகம்.

கேட்டுக் கொண்டே இருந்த மேகலாவுக்கு கண்ணீர் வந்து விடும்போல் இருந்தது சட்டென பர்ஸை திறந்து இருபது ரூபாயை எடுத்து அந்த அம்மாளிடம் கொடுக்க அந்த வாங்கி கொண்டதும் கைகூப்பி...
நீ மகராசியா வாழணும் தாயி....
என்று சொல்லி தனது ஆசைக் கணவனை இழுத்துக் கொண்டு கடந்தார்.

ச்சே எவ்வளவு கீழ்தரமாக நாம் தப்புக்கணக்கு போட்டு விட்டோம் ஊனமுற்ற கணவனுக்காக, தனக்கு ஒரு குழந்தையை கொடுக்க முடியாத கணவனுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்யும் இந்தக்கிழவி எங்கே ? நாம் எங்கே ? இந்தக்கிழவி நினைத்திருந்தால் அன்றே இவரைக் கழட்டி விட்டு எப்படியோ வாழ்ந்திருக்கலாமே அதற்கு இந்த சமூகத்தில் எவ்வளவு பேர் தயாராக இருக்கின்றார்கள் மேலாளர் மேகநாதன் போல் நமது கணவன் நமக்கு என்ன குறை வைத்தார்
சோறு போடவில்லையா ?
நல்ல உடை வாங்கித் தரவில்லையா ?
பொக்கிஷமாக நமக்கு ஓர் மகனைத் தரவில்லையா ?
அவரா நம்மை வேலைக்கு போகச் சொன்னார் ?
நாம்தானே வேலைக்கு போனால் ஆடம்பரமாக வாழலாம் என்று அவரையும் மீறிச் செல்கிறோம் அவர் தினமும் சொல்கின்றாரே... வேலைக்கு போய் நீ கஷ்டப்பட வேண்டாம் என்று நாம் கேட்டோமா ?

தன்னைத்தானே நொந்து கொண்டாள் போதும் போதும் இன்றே அவரிடம் சொல்லி விட்டு நாளையே வேலையை நிறுத்திக் கொள்வோம் நமது மகனுக்கு நல்ல கல்வியை கொடுக்க நாம் உதவியாக இருப்போம் இப்பொழுதே அவருக்கு அலைபேசியில் சொல்வோமா ? வேண்டாம் மாலையில் நம் அன்புக் கணவர் வீட்டுக்குள் வந்ததும் பின்புறமாக அவரைக் கட்டிப்பிடித்து நமது சந்தோஷத்தை சொல்வோம்.

உடன் செல்லில் தனது அலுவலகத்தின் ரிசப்ஷனுக்கு அழைத்து இன்று நான் வரமுடியாது என்று சொல்லி விட்டு நேராக மீன் கடைக்கு சென்றாள் முகுந்தனுக்கு பிடித்த அயிரை மீன் வாங்கினாள். மீண்டும் பேருந்து நிறுத்தம் வர அம்மா மதுரை மல்லிகைப்பூ வாங்கிக்கங்கம்மா என்று சொன்ன மீசைக்கார பெரியவரிடம் மூன்று முழம் வாங்கினாள் வீட்டுக்கு வந்தவள் மீனையும், பூவையும் வைத்து விட்டு நேராக குளியலறைக்கு சென்று உடைகளை களையாமல் அப்படியே வெகுநேரம் குளித்தாள்.

ஒப்பனைகளோடு அவளது மனதில் தேங்கிய அழுக்குகளும் கரைந்து தூம்பின் வழியாக வெளியே ஓடியது.


அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி

46 கருத்துகள்:

 1. ஆஆஆஆஆஆஆஆஆ மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஉ வெளியே போய் வந்தாலும்.. லேட்டானாலும் மீ தான் 1ச்ட்டூ இல்லை எனில் தேம்ஸ் ல தள்ளிடுவேன்.. ஆரை எனக் கேய்க்கப்பூடா:))..

  பதிலளிநீக்கு
 2. தலைப்புக்கும் முதல் படத்துக்கும் ஜம்பந்தம் இருக்கா? எண்டு சிறீ சிவசம்போ அங்கிள் கேட்டிட்டு வரச் சொன்னார்:))

  பதிலளிநீக்கு
 3. இக்கதைக்கான கொமெண்ட்ஸ் எல்லாம் அங்கினயே போட்டிட்டேன்ன்.. ஆனாலும் நெஞ்சு பொறுக்குதில்லை:)) எனக்கு அதனால ஒன்று சொல்லிட்டுப் போயிடுறேன்:))..

  மேஏஏஏஏஏஏஏ கலாட லெட்டரால கில்லர்ஜி 2ம் கல்யாணம் பண்ணேல்லையாம் என மேகலாக்காவுக்குப் பெருமை:) ஆனா கில்லர்ஜிக்கு உகண்டாவில ஒண்ணு:) சேர்மனியில ஒண்ணு என இரு கண்கள் இருப்பது மேகலாவுக்கு தெரிய ஞாயமில்லை யுவர் ஆனர்ர்ர்ர்:)).. இந்தக் கொமெண்ட்டைப் பார்த்த பின்பாவது மேகலா மனம் கொஞ்சம் கில்லர்ஜியை மறக்கட்டும்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவையில்லாமல் பழையதை கிளப்பி விட்டு மேகலா மனதில் நஞ்சை விதைக்க வேண்டாமென நைஜீரியா விழாக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது.

   நீக்கு
 4. முதல் பாராவிலேயே ஜெர்க் ஆகிவிட்டேன். நீங்கள் அல்லவே எங்களுக்குக் கொடுப்பதாகப் பேசினோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ கதையைப் படிக்கறவங்களுக்கு சன்மானம் எதுவும் கிடையாதா? அப்படித்தானே இத்தனை நாள் நினைச்சுக்கிட்டிருந்தேன்... ஸ்ரீராம் கூட, என் கதை வெளியாகாமல் மத்தவங்க கதை வெளியாகும்போதெல்லாம் என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்புவாரே

   நீக்கு
  2. ஸ்ரீராம்ஜி உங்களுக்கு பணம் அனுப்புவாரா சொல்லவேயில்லை ?

   நீக்கு
  3. இது வேறயா?!!! சரிதான்!

   நீக்கு
  4. என்னாதூஊஊஊஊ நெல்லைத்தமிழனுக்கு ஸ்ரீராம் பணம் குடுக்கிறாரோ?:) அப்போ எனக்கு?:) விட மாட்டேன்ன்ன்ன்ன்ன் இப்பவே போகிறேன்ன்ன் தேம்ஸ் கரைக்கு.. உண்ணாவிரதம் ஆரம்பமாகப்போகுது:))

   நீக்கு
  5. ஜேம்ஸ் ஊரணியில் முதலை கிட்கிறதாம்...

   நீக்கு
  6. ம்ஹூம்... தலைமறைவாயிடவேண்டியதுதான்!

   நீக்கு
  7. ஹா.. ஹா.. இப்படி ஆகிப்போச்சே...

   நீக்கு
 5. அது சரி தேவகோட்டையாரே..   அடுத்த கதை இன்னும் வரவில்லையே....

  பதிலளிநீக்கு
 6. எங்கள் பக்கத்தில் கதை வெளியானபோது வாசிக்கத் தவறினேன்.

  உயிர்வாழும் மாந்தர்களை எடுத்துக்காட்டாக்கியது துணிச்சலான புதிய முயற்சி. கதையின் பிற்பகுதி மனதில் சிலிர்ப்பூட்டுகிறது. கில்லர்ஜியின் நுழைவு கதைக்குச் சுவை கூட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை ரசித்து கருத்துரை இட்டதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 7. நீங்க லெட்டர் குடுத்தே மசியாத அவங்க நிச்சயம் நல்லவங்களாத் தானே இருப்பாங்க? அதாலதான் இடையில வந்த சபலம் வந்த மாதிரியே போயிருச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. வாங்க ஐயா உங்களது கோணம் கதையை ஊடுறுவி இருக்கிறதே...

   நீக்கு
 8. உங்கள் பாணியில்... அருமை ஜி...

  பதிலளிநீக்கு
 9. நல்ல கதை. அங்கே படித்திருந்தாலும் இங்கேயும் ஒரு முறை படித்து ரசித்தேன்.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி மீண்டும் படித்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. முதியவரின் கதை கஷ்டபடுத்துகிறது மனதை.
  முன்பே படித்தாலும் மீண்டும் படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மீண்டும் படித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 11. அழுத்தமான கரு. அருமையான கதை. முடிவை சரியாக முடித்திருக்கிறீர்கள் பாராட்டுகள்! ‘மேலூர் மேன்மைமிகு மேகலா’ என தலைப்பு வைத்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆஹா இந்த தலைப்பும் ஸூப்பர்.

   நீக்கு
 12. அப்படியே என்னோட பழைய பாக்கியையும் நேர் செஞ்சுடுங்கோ... ஷாமியோவ்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஸ்ரீராம்ஜி டிராப்ட் அனுப்புவார்...

   நீக்கு
 13. ஏற்கெனவே படிச்ச மாதிரி இருக்கே? மீள் பதிவா?

  பதிலளிநீக்கு
 14. மேகலா சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கிறோமே என்று கவலையில் தவறான முடிவுக்கு செல்ல வேண்டியதில்லை !!! ..... எங்கள் தானை தலைவர் தன்மான அசிங்கம் சாரி .. சிங்கம் மோடி அய்யா வீடு கட்ட கடன் கொடுக்கிறார் அல்லவா ... அந்த 2 லட்சத்த அப்படியே வாங்கி சொந்தமா வீடு கட்டி கணவருடன் சந்தோசமா இருக்கவும் ... என்ன கில்லர்ஜி சார் ...நான் சொல்லுறது சரிதான?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் என்னதான் கேலி செய்தாலும் இந்த வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம், மற்றும் முத்ரா திட்டத்தின் பயனாளிகள் பலர் ஸ்ரீரங்கத்தில் இருக்கின்றனர். எங்கள் குடும்ப ஆட்டோ ஓட்டுநர் முத்ரா திட்டத்தின் மூலமே ஆட்டோ வாங்கினார். அது போல் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகள் இருவர் பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் மூலம் சிங்கப்பெருமாள் கோயில் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் வீடுகள் பெற்றிருக்கின்றனர். முன்னர் சொன்ன ஆட்டோ ஓட்டுநருக்கும் அங்கே வீடு கிடைத்துள்ளது.

   நீக்கு
  2. நண்பர் சிவா அவர்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
  3. இந்த வங்கிகளைக் குறித்த விடயங்கள் இன்னும் மக்களுக்கு விரிவாக தெரியவில்லை என்பதே உண்மை.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  அருமையான கதை. முன்பும் படித்து ரசித்திருக்கிறேன்.. இப்போதும் படித்து ரசித்தேன். வாழ்க்கையில் இருப்பதும், கிடைப்பதும் போதுமென்று நினைத்தால் சலனங்கள் வர வாய்ப்பில்லை. கடைசியில் அந்த அன்பான முதியோரைப்பார்த்து மேகலா திருந்துவது போல் கதையை முடித்திருப்பது அருமை.

  லட்ச கணக்கில் பண வரவுகள் ஒரு கதைக்கு எ. பி. யிலிருந்து வரும் மாதிரி தெரிகிறதே..நானும் சில கதைகள் எழுதி கொண்டேயிருக்கிறேன். முடிய மாட்டேன் என அவை அடம் செய்கின்றன. இனி எப்படியாவது சீக்கிரமாக முழு மூச்சாக எழுதி முடிக்க வேண்டியதுதான்.அப்படியும் நான் கதை அனுப்பும் நேரம் பணம் தருவதை நிறுத்தி விட்டால்.... ஹா ஹா ஹா.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ கதையை மீண்டும் படித்து ரசித்து கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 16. அருமையான கதை. நல்ல கருத்து.
  வாழ்க்கையின் மேடு பள்ளங்களை உழைப்பினால் தான் தாண்டி வர முடியும்.
  குறுக்கு வழியில் அல்ல என்று புரிய வைத்த அந்த வயது சென்ற தம்பதியர்க்கு வணக்கம். அடிப்படையில் நல்ல பெண்ணாக இருந்ததால் மேகலா பிழைத்தாள்.
  மனம் நிறை வாழ்த்துகள் தேவகோட்டை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 17. அதென்ன கில்லர்ஜிகூட லட்டர் கொடுத்தாரே? சந்தடி சாக்கில்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேகலா ஏதோ ஞாபகத்தில் உளறி விட்டாளோ...

   நீக்கு
 18. எனக்குள்ள சந்தேகம் இப்பதான் தெளிவாகிவிட்டது...யாரோ ஒரு பெண்..மணி என்னை வசைமாறி பொழிந்துவிட்டது...அது பாவானாதான் மேலூர் மேலாளரை திட்டுவதற்கு பதிலாக என்னை திட்டிவிட்டார்கள் போலும்.. ஓ.கே.. சந்தேகம் கிளியராகி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே வசவை உடனே பதிவாக்கி விட்டீர்களே... ஸூப்பர்

   நீக்கு