தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 22, 2019

ஒண்ணுமே புரியலே உலகத்திலே...செருப்பை கண்ணாடி கூண்டுக்குள்ளும், உணவை தெருவில் ஓடும் சாக்கடையோரமும் வைத்து நடக்கும் வியாபாரம் எனக்கு விளங்கவில்லை.

சோற்றில் சிறிய கல் கிடந்தால் மனைவியை ஏசும் மனிதர்கள் பக்தி என்ற பெயரில் கோவிலில் மண்சோறு சாப்பிடுவது ஏனென்று எனக்கு புரியவில்லை.

உயிரோடு இருக்கும்போது நல்ல உணவு வாங்கி கொடுக்காத உறவுகள் இறந்த பிறகு எல்லாவகை அசைவ உணவுகளையும் கிரிகை என்ற பெயரில் படைத்து தாங்களே உண்ணும் இந்த சடங்குமுறை எனக்கு புலப்படவில்லை.

தொலைக்காட்சி நாடகங்களில் குடும்ப உறவுகளை சிதைக்கும் காட்சிகள் மட்டுமே இருப்பது தெரிந்தும் பெண்கள் அதிலேயே மூழ்கி கிடப்பது ஏனென்று எனக்கு தெரியவில்லை.

சகோதரி அலைபேசியில் அழைத்தாலும் பேசுவதற்கு விரும்பாதவர்கள் கொழுந்தியாள் மிஸ்ட்கால் விட்டவுடன் அழைத்துப்பேசும் ஜடங்களின் குணாதிசயம் எனக்கு விளங்கவில்லை.

புடவை கட்ட விரும்பாத சுடிதார் பாவையர்கள் திருமணத்தன்று ஒருநாள் கூத்துக்காக பல்லாயிரம் ரூபாய்க்கு பட்டு எடுத்து பீரோவுக்குள் பூட்டி வைப்பது ஏனென்று எனக்கு புரியவில்லை.

கணவனின் சகோதரன் கல்லூரி கட்டணம் கட்ட பணம் கேட்டபோது இல்லையென்று சொன்ன கணவனை கண்டிக்காத மனைவி, அவனது கொழுந்தியாளுக்கு கொலுசு வாங்க பணம் கொடுத்தபோது கண்டிக்காதது ஏனென்பது எனக்கு புலப்படவில்லை.

மறைந்து போன அரசியல் தலைவனின் பிறந்தநாள் வரும்போது பொது மா’’க்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவதில் ஏதேனும் உள்க்குத்து இருக்கின்றதா என்பது எனக்கு தெரியவில்லை.

துபாயிலிருக்கும் மகனிடம் தாய் உனது தம்பிக்கு விசா எடுத்து அழைத்து போக சொன்னபோது அனுப்பிய விசாவில் மைத்துனர் பெயர் இருப்பது எப்படி என்றபோது பிரிண்டிங் மிஸ்ட்டேக் என்று ஆங்கிலத்தில் பதிலளிப்பது எனக்கு விளங்கவில்லை.

குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்று சொல்லும் அரசாங்கமே மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை குடிக்க வைப்பது ஏனென்று எனக்கு புரியவில்லை.

ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் என்பது மக்களுக்கு தெளிவாக தெரிந்தும் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்கும்போது அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படியென எனக்கு புலப்படவில்லை.

ஏழை மக்களிடம் தனது வீரத்தை காண்பிக்கும் பதவி அதிகாரமுள்ள கா()வல்துறை அரசியல் பக்க பலமுள்ள குடிகாரன் தன்னை தகாத வார்த்தைகளால்   பேசினாலும்கூட மடங்கி போவது ஏனென்று எனக்கு தெரியவில்லை.

காணொளி

காணொளியின் மற்றொரு இணைப்பு
https://youtu.be/L0PIhl4LVrk

69 கருத்துகள்:

 1. வணக்கம் !

  எத்தனை தெரியாதவைகள் உம்மிடத்தில் இருந்தும் அத்தனைக்கும் பதிலும் உம்மிடத்தில் தானே ஜி !

  இதுவும் கடந்து போகும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே
   எனக்கு தெரிந்திருந்தால் ஏனிப்படி புலம்பப் போகிறேன் ?

   நீக்கு


 2. உங்களுக்கு எல்லாம் புரிந்தும் ஆனால் புரியவில்லை என்று நீங்கள் பதிவிட்டது ஏன் என்றுதான் எனக்கும் புரியவில்லை கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. அடடே இது நல்லா இருக்கே நன்றி தமிழரே...

   நீக்கு
 3. இதுதான் உலகம். உங்களுக்கு இத்தனை வருடங்களில் புரிந்திருக்கிறது வேண்டுமே தேவ் கோட்டைஜி.:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா புரிந்தது புள்ளி அளவு, புரியாதது புவியளவு.

   நீக்கு
 4. உங்கள் கேள்விகளைப் படித்து மனம் நொந்து போவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லையே! ஏன்? நீங்க தான் சொல்லணும் கில்லர்ஜி! எனக்கும் ஒண்ணுமே புரியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எனக்கு தெரியாமல்தானே உங்களை கேட்கிறேன்.

   நீக்கு
 5. மூன்றாவதற்கு விடை உடனே கிடைக்கிறது...    உயிருடன் இருக்கும்போது கொடுத்தால் அவர் வாங்கிச் சாப்பிட்டு விடுவார்.  செத்தபிறகு கொடுத்தால் அவர் பெயரைச் சொல்லி நாம் சாப்பிடலாம்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எவனோ அன்று கறிச்சோறுக்கு ஆசைப்பட்டு சம்பிரதாயம் என்ற பெயரில் வகுத்த திட்டங்களே...

   நீக்கு
 6. எனக்கு கொழுந்தியாளே இல்லை என்பது வரமா?  சாபமா?!!!!!   

  மறைந்து போன தலைவர்களை ஞாபகப்படுத்துகிறார்களாம்.   அதாவது தங்களுக்குள்ளேயே   இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக மறந்து விடுவார்களே..   (அவர்களை சொல்கிறேன்...  மக்களை அல்ல).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எனக்கு கொழுந்தியாளே இல்லை என்பது வரமா ? சாபமா ?//

   இதற்கு ஜியெம்பி ஐயா பதில் தருவார் ஆனால் அவர் எனது நான்கு பதிவுகளுக்கு ஏனோ வரவில்லை.

   நீக்கு
  2. நான் என்ன பதில் தருவேன் என்று எதிர்பார்த்தீர்கள் உங்களடுநான்கு பதிவுகளுக்கு வரவில்லையா பார்க்க வேண்டும்

   நீக்கு
  3. ஹா.. ஹா.. உங்களுடைய முதுமை வரமா ? சாபமா ? என்று கேட்பது போலிருந்தது ஐயா.

   நீக்கு
 7. குடி குடியைக்கெடுக்கும் என்று சொல்லியிருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு பணிந்து!  மற்றபடி வியாபாரம் வியாபாரம்தான்.  அரசியலை மட்டும் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல்வாதிகளை புரிவது இருக்கட்டும் முதலில் மக்களின் மனநிலையே சரியில்லையே...

   நீக்கு
 8. சுவாரஸ்யமான கேள்வித் தொகுப்பு!  அனைத்தையுமே ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. அத்தனை கேள்விகளும் அர்த்தமுள்ளவை. மிகச் சரியான விடைகளைத் தேடிக் கண்டறிந்து, விடியலைத் தேடிப் பயணிப்பது ஒவ்வொரு தனி மனிதனின் கடமை.

  மிகச் சிறந்த விழிப்புணர்வுப் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகிய கருத்துரையை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 10. வாழ்க நலம்...

  பிறகு வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  உலகத்தில் புரியாத விஷயங்களே இவைகள் போன்ற பெரும்பானவைதான்.. முதல் ஏழு வரை புரியாத சில விஷயங்கள் நானும் தினமும் நினைத்து குழம்புவதுதான்.

  இத்தனையும் மிக அருமையாய்,அழகாய் பொறுமையாய் நினைவு கூர்ந்து தொகுத்து தந்திருக்கும் தங்களுக்கே புரியவில்லை யென்றால்,என்ன சொல்வது? மொத்தத்தில் உலகம் ஒரு மாயைதான். பதிவை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை அழகாக விமர்சித்து கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 12. ஒன்னுமே புரியல ஒலகத்துல என்று சந்திரபாபுவுக்காக கண்ணதாசன் எழுதியதை நினைவுபடுத்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் படத்தை போட்டீங்களோ? சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா
   எப்படியோ கணக்கு போட்டு காய் நகர்த்திய சந்திரபாபு நாயுடுவை ஒரே நாளில் "ஒண்ணுமே புரியலே உலகத்திலே" என்று பாட வைத்து விட்டார்களே...

   நீக்கு
 13. உங்கள் கேள்விகள் நல்ல கேள்வி.
  இதுதான் உலகம் சகோ.
  காணொளி ஏழைக்கு ஒரு நியாயம், பணம், பதவி, இருக்கும் இடம் இதை வைத்து ஒரு நியாயம் காலம் காலமாய் இது தானே நடக்குது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   இதையெல்லாம் மக்கள் நினைத்தால் மாற்ற இயலும்.

   ஆனால் நமக்கு ஓட்டுப் போட்டதற்கு பணம் வேண்டுமே... என்ன செய்வது ?

   நீக்கு
  2. பல புரியாத புரிந்து கொள்ள மனமில்லாத வாழ்க்கை நம்மில்பலருக்குப்பழகிவிட்டது

   நீக்கு
  3. ஆம் இதுதான் அடிப்படை காரணம் ஐயா.

   நீக்கு
 14. சில சங்கதிகளை அப்படியே விட்டுடனும். ஏன் என்று கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. அது தான் உடம்புக்கு நல்லது. Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா தேவையில்லாமல் நாட்டைப்பற்றி கவலை கொண்டு என்ன பிரயோசனம்.

   நீக்கு
 15. தினமும் எதிர்நோக்கும், மனதை கசந்து போக வைக்கும் காட்சிகள் தான் இவை! ஆனால் சொல்கிற விதம் ஆணித்தரமாக, ஆழாகாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 16. உங்கள் சந்தேகங்கள் பெரும்பாலானவை சரிதான்.

  மண்சோறு ஆண்கள் சாப்பிடுகிறார்களா என்ன?

  //திருமணத்தன்று ஒரு நாள் கூத்துக்காக// அந்த விலை உயர்ந்த புடவை வாங்கித் தருவது அப்பா அல்லவா அதனால்தான். சொந்தக் காசு என்று வரும்போது பெண்கள் புத்திசாலித்தனமா செலவழிப்பாங்க.

  எனக்கும் குடி, சிகரெட், பான்பராக் போன்ற பலவற்றில் இந்த சந்தேகம் உண்டு. கஞ்சா பயிரிட்டால் அழித்தை கைது செய்யும் அரசு, சிகரெட், பீடி, மது, குட்கா, பிளாஸ்டிக் கவர் தயாரிப்பு இண்டஸ்டிரியை ஒரே நாளில் ஒழிக்க முடியாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மண்சோறு ஆண்கள் சாப்பிட்டதை பார்த்து இருக்கிறேன் ஆனால் சிரிக்ககூடாது. ஒரு சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது தற்செயலாக பார்க்கும் துர்பாக்கிய நிலை.

   நாம் ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருந்தாலாவது கேட்கலாம். சரி நாமலாவது போய்க்கேட்போம் என்றால் எனது பெயரில் கட்சிக்காரன் பணம் வாங்கி விட்டானாம் என்ன செய்வது ?

   நீக்கு
 17. குதிரைச் சவுக்கை உப்புத் தண்ணீரில் ஊற வைத்து அடித்தாலும் திருந்தாத செம்மங்கள் இருக்கிற உலகம் இது..

  இதுகள் கிட்ட எந்தக் கேள்வி கேட்டாலும் ஏதும் புரியாத மாதிரிதான் இருப்பாய்ங்கே..ங்கறது தெரிஞ்சிருந்தும்

  இத்தனை தூரம் மெனக்கெட்டு கேள்விகளைக் கேட்டுக்கிட்டு இருக்கீங்களே!..

  அது தான் புரியலை ஜி!...

  (புரிஞ்சா மட்டும் என்ன செய்யப்போறோம்!?..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. கேட்க வேண்டியதை கேட்டுக்கிட்டே இருப்போம் ஜி

   நீக்கு
 18. கொழுந்தியாளுக்குக் கொலுசு வாங்கிக் கொடுக்கிறதை ஏன் கண்டுக்கிறது இல்லை..ன்னா
  நம்மளப் புடிச்ச பீடை விட்டுத் தொலைஞ்சா சரி.. அப்படின்னு இருக்குமோ!...

  இல்லே -

  அவ மட்டும் எப்படி நிம்மதியா இருக்கலாம்?..விடாதே புடி!.. - ங்கற நல்ல மனசு காரணமா இருக்குமோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை இப்படியே விட்டால் பின்னாடி முதலுக்கே மோசமாகிடுமே ஜி

   நீக்கு
 19. சிந்திக்க + உணர வேண்டிய சந்தேகங்கள் ஜி...

  பதிலளிநீக்கு
 20. துரோகங்கள், அவமரியாதைகள் கடந்து வாழும் வாழ்க்கையை உள்வாங்கி தேவையானவற்றை எடுத்துக் கொள்வது மட்டுமே மனித வாழ்க்கை. இது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அழகான கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 21. அனைத்துக் கிளவிகளும் அருமை கில்லர்ஜி, ஆனா இதைத் தேவகோட்டை சிட்டி செண்டரில் :) மேடை போட்டு ஏறி நிண்டு கேட்டால் அது நியாயம்:)... இது என்ணெண்டால் கதவி லொக் பண்ணிப்போட்டு ஏசி றூமில இருந்து கேய்க்கிறீங்க:)... கர்ர்ர்ர்ர்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவகோட்டை சிட்டியில் கேட்டால் ஊர்க்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.

   இப்பொழுது ஸ்கோட்லாண்ட் வரை போய் விட்டதல்லோ...

   நீக்கு
 22. பாருங்கோ உங்கட கிளவி பார்த்து:) ஶ்ரீராம் நொந்து நொங்காயிட்டார் ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 23. ////////சகோதரி அலைபேசியில் அழைத்தாலும் பேசுவதற்கு விரும்பாதவர்கள் கொழுந்தியாள் மிஸ்ட்கால் விட்டவுடன் அழைத்துப்பேசும் ஜடங்களின் குணாதிசயம் எனக்கு விளங்கவில்லை.////

  அல்லோ கில்லர்ஜி நீங்களே செய்துபோட்டு நீங்களே கிளவி கேய்க்கலாமோ கர்ர்ர்ர்ர்:).... உகண்டாவுக்கு கோல் பண்ணின மாத பில்லை அடுத்த தடவை இங்கு இணைக்கவும் பிளீஸ்:).....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ எனக்கு கொழுந்தியாள் பாக்கியம் இதுவரை கிடையாது.

   நீக்கு
  2. அப்போ இனிமேல் கிடைக்கலாம் என்கிறீங்க?:) ஹா ஹா ஹா ஹையோ மி நல்ல பொண்ணு:)....

   நீக்கு
  3. இனி வந்தா என்ன... ?
   வராட்டா என்ன... ?

   நீக்கு
  4. இனி அமுதா வயசுக்கு வந்தா என்ன வராட்டில் என்ன.... அந்த மொமெண்ட்டா ஹாஅ க்ஹாஆஆஅ

   நீக்கு
  5. இதாரு... புதுசா கீது ?

   நீக்கு
 24. சீராளனுக்கு கர்ர்ர்ர் சொல்லி ஒரு கொமெண்ட் போட்டேனே... அது வரேல்லையோ?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர் சொல்வது ஒரு கருத்தா ?

   நீக்கு
  2. எனக்கு ஆராவது ... ம் என சொன்னாலும் அது ஒரு கருத்துத்தேன்ன்ன்ன்...:) இதில உங்களுக்கு ஏன் தலை இடிக்குதாம் கர்ர்ர்ர்ர்ர்:)..

   நீக்கு
  3. "ம்" என்று சொல்லும் ஒரு பதிவர் இருக்கிறார் அது யார் என்று தெரியுமா ?

   நீக்கு
 25. பஞ்சதந்திரம் பாணியில் சொன்னால்
  கேக்கறது எளிது.
  பதில் சொல்றது தான் கஷ்டம் நண்பரே.

  பதிலளிநீக்கு
 26. அனைத்துமே சிந்திக்க வேண்டிய விஷயங்கள். யதார்த்தம் இப்படித்தானே இருக்கிறது சகோ

  பதிலளிநீக்கு
 27. புரியாத புதிர்கள் இங்கே நிறைந்து இருக்கிறது கில்லர்ஜி....

  பதிலளிநீக்கு
 28. வாங்க ஜி உண்மைதான் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. உங்களுக்கே புரியவில்லையென்றால் எங்களுக்கு எப்படி புரியும்? எதற்கு நீங்கள் சிவாதாமஸ்அலியென் கருத்தையும் கேட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   சிவாதாமஸ்அலியிடம் கேட்டதற்கு அவருக்கு குழப்பமாக இருக்கிறதாக சொன்னார்.

   நீக்கு
 30. ஏனென்று எனக்கு தெரியும் நண்பரே! எல்லாம் சுயநலம், சந்தர்ப்பநலம், பயம், திமிரு, கொழுப்பு, ஏமாற்றுவது,அறியாமை,பகட்டு இப்படி சொலலிக் கொண்டே போகலாம் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக உண்மைகளை போட்டு உடைத்தமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு