தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மே 01, 2020

குறுங்கவிஅசைவு
அசைந்தது மரம்
அசைத்தது காற்று
அயர்ந்தது மனிதன்

தாய்
இரக்கப்பட்டதால்
வானம் அழுதது
பூமி சிரித்தது
பிறக்கபட்டதால்
சேய் அழுதது
தாய் சிரித்தாள்

கனம்
பறந்தது பறவை
மடியில் கனமில்லை
எதிர்புறம் விமானமும்
மடியில் கனத்தோடு

மருத்துவர்
சிறுநீரக அறுவை
சிகிச்சைக்கு தேதி
குறித்தார் மருத்துவர்
தேதியைக் கண்டு
நகைத்தான் எமன்

பூ
செடியில் பூ சிரித்தது
நாளை பிணத்தின்
மடியில் இருப்பதை
அறியாத அப்பாவியாய்

கூலி
கை வண்டி இழுத்தார்
பெற்ற கூலி சொற்பம்
இழுப்பது போல் நடித்தார்
நடிகர் கூலியோ லட்சம்

பயணம்
பயணி கிழியாத ரூபாயை
கொடுத்தார், பெற்றவர்
நல்ல பயணச்சீட்டை
கிழித்தே கொடுத்தார்

காதல்
நாயகன் சொன்னான்
நாயகியிடம் உன்னை
காதலிக்கிறேன் என்று, கேட்ட
வில்லன் சொன்னான் உன்
காதலை அழிக்கிறேன் என்று

சிறை
நெல் பிரசவித்தது அரிசியை
அரிசி உண்டா’’கி சோறாகியது
சோற்றை சிறையிலிட்டான்
சோறு மலமாகி தப்பித்தது

சாதனை
கிழித்தது தேதியின் தாள்
கழிந்தது ஆயுளின் ஒருநாள்
சாதனையாளருக்கு சரித்திரம்
வேதனையாளருக்கு தரித்திரம்

கரங்கள்
நிலத்துக்காரர்கள் சண்டையிட்டு
வேலி போட்டனர் பூமியின் மேலே
இருதரப்பு மரங்களின் வேர்களும்
கரம் கோர்த்தது பூமியின் கீழே

அமைச்சு
அசைந்தது எழுதுகோல்
அசைத்தது விரல்கள்
அமைந்தது இக்கவிதை

தேவகோட்டை கில்லர்ஜி

59 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமை ஜி...

  தாய், கரங்கள் மிகவும் பிடித்தது...

  அடிக்கடி விரல்கள் அசையட்டும்...

  பதிலளிநீக்கு
 2. அனைத்தும் அருமை //பூ //மட்டும் ரொம்பவே மனசுக்கு வலிச்சுது 

  பதிலளிநீக்கு
 3. பயணம், கூலி, மனதை தொட்டது. பூ மனம் வலித்தது. மொத்ததில் எல்லாமே மிக அருமை.

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் அருமை .... அதிலும் கூலி, சாதனை இரண்டும் அட்வான்ஸ் அருமை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
 5. குறுங்கவிதை என்னும் பெயரில் இங்கு
  வெறுங்கவிதை கொடுக்காமல் அத்தனையும்
  "நறுங்"கவிதைகளாக கொடுத்த உங்களுக்கு
  பாராட்டுக்கள் நண்பரே !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி.

   நீக்கு
 6. ரசிக்கும்படி இருந்தது.

  கரங்கள் மிகவும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 7. அருங் கவிதை பொழிந்திருக்கும்
  பெருங் கவியே வாழ்க...
  கருங் குருவியாய்த் திரிந்து
  தமிழ் அருவியாய்த் திகழும்
  புகழ்க் கவியே வாழ்க...

  நலங்கருதி வளங்கருதி
  மனம் உருகி வார்க்கின்ற சொல்லும்
  மணம் கொண்டு குணம் கொண்டு
  தமிழார்ந்த நெஞ்சங்களை வெல்லும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி
   தங்களது கவி வழி பாராட்டுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 8. நடுச் சாமத்திலேயே இந்தப் பதிவை வாசித்து விட்டேன்...

  தூக்கக் கலக்கம் தீராததால் ஒன்று செய்ய இயலவில்லை..

  (சிவ சம்போ: ஓய்!.. இப்போ மட்டும் தூக்கம் கலைந்து விட்டதா?..

  அடியேன்: இல்லீங்க ஜாமிகளே!...

  சிவ சம்போ: அப்போ போய் தூங்கும்...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஹா.. ஹா.. அதானே இதற்கெல்லாம் அவரு வரமாட்டாரோ...

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. கவிகள் அழகுடன் அருமையாகவும் உள்ளது. அனைத்தையும் ரசித்தேன். மருத்துவர், கூலி, சிறை, பயணம், கரங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாய் ரசிக்க வைத்தது. அமைச்சு தங்களின் திறமையை பறைசாற்றுகிறது. கவிகளை இயற்றிய தங்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்துரை இட்டமைக்கு நன்றி.

   நீக்கு
 10. கன்னாபின்னா என்று சிந்தனைகள் ஓடுகின்றன போலும்.. எல்லாமே ரசிக்கும்படி இருக்கின்றன. சில ரொம்ப அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. கன்னாபின்னா என்று யோசித்து எழுதினால் கவிதையை ரசிக்கும்படி அமைக்க முடியாது ஜி.

   கண்ணனின் பின்னே போகும் ராதையை நினைத்து எழுதினால் கவிதை அருவியாய் கொட்டும்.

   நீக்கு
  2. ஆஆஆஆஆஅ கில்லர்ஜியும் பாகுபலி பார்த்துவிட்டார் போலும் ஹா ஹா ஹா:)

   நீக்கு
  3. எனக்கு கண்ணுல கண்டாலே ஆகாது.

   நீக்கு
 11. கவிதைகள் அனைத்துமே நன்றாக இருக்கின்றன கில்லர்ஜி. சில நறுக்கென்று! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 12. அனைத்தும் நன்றாக இருந்தன. குறிப்பாக அசைவு, தாய், கூலி, சாதனை. படிக்கும்போது தளிர் சுரேஷ் நினைவு வந்தது. இன்னமும் எழுதுகோல் கொண்டு பதிவு எழுதுகிறீர்களா? நான் கணினியில் தட்டச்சு செய்கிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா பதிவை ரசித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   உண்மையில் நண்பர் திரு.'தளிர்'சுரேஸ் அவர்கள்மீது பொறாமை கொண்டே கவிதை எழுதினேன்.

   என்னைப் பொருத்தவரை பொறாமை நல்லது (தொலைக்காட்சி விளம்பர பாணியில் படிக்கவும்)

   எழுதுகோல், தட்டச்சு ஹி.. ஹி.. கவிதை என்பது பொய்யே.. பொய்யே...

   நீக்கு
 13. சின்ன சின்ன கவிதை நல்ல முயற்சி. பாராட்டுகள் கில்லர்ஜியின் சிறப்பு அதுதான்.

  பதிலளிநீக்கு
 14. மருத்துவர், கூலி, பயணம், கரங்கள் ஆகியவை மனதைத் தொட்டன. ஹைகூவிற்கு நல்ல தமிழாக்கம் குறுங்கவி. அருமை அனைத்துமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து குறிப்பிட்டமைக்கு நன்றி.

   கடந்த பதிவு படிக்கவில்லை போலயே...

   நீக்கு
 15. கூலி பற்றி எழுதியது உங்களைக்காட்டிக் கொடுக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. எப்படியாவது கண்டு பிடித்து விடுகிறீர்களே... ஐயா.

   நீக்கு
 16. மருத்துவர் பற்றி எழுதியது மருத்துவமே எள்ளி நகையாடவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா இது கொரோனாவுக்கு பந்தம் இல்லாத மருத்துவகவி.

   நீக்கு
 17. குறுங்கவி பேர் அருமை.

  கவிதை மிக அருமை.
  கரங்கள் கவிதை மிக அருமை.

  பதிலளிநீக்கு
 18. குறுங்கவிஞரே
  தங்கள் கவிகள் அருமை

  பதிலளிநீக்கு
 19. கவிதைகள் அருமை! அதுவும் அந்த 'பூ'மற்றும் பயணம் வரிகள் மிக அருமை. பாராட்டுகள்! கடைசி வரிகளுக்கு 'அமைச்சு' என தலைப்பு தந்ததன் காரணம் என்ன? 'படைப்பு' என்று இருந்திருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி.

   கடைசி
   அசைந்தது
   அசைத்தது
   அமைந்தது என்ற வரிசையில்
   அமைச்சு என்ற குறளின் வார்த்தையை இணைத்தேன்.

   நீக்கு
 20. அன்பு தேவகோட்டைஜி,
  சிறு சிறு வரிகளில் மனதை அசைக்கிறது உங்கள் சொற்கள்.
  கரங்கள் மிகப் பிடித்தது.
  நல்லதொரு வாசிப்புக்கு வார்த்தைகள் கொடுத்த வள்ளல்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 21. அற்புதமான கவிதைகள் கில்லர்ஜி. பல முறை படித்தேன்.
  மருத்துவர் - அறுவை சிகிச்சையின் போது உயிர் நீத்த என் நட்புகள் கண்முன்னே வந்து போனார்கள். ;(
  பூ - மீண்டும் அதே வலி. ;( தோட்டத்தில் அழகாக செடிகள் புத்து நிக்கும் சமயம் எல்லாம் தோன்றும் - அம்மாவின் சமாதிக்குப் போகலாம் இவற்றை அழகாகச் செண்டுகள் ஆக்கி என்று. ;(
  கரங்கள் - அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இமா தங்களது முதல் வருகையை இனியதாய் வரவேற்கிறேன்.

   கவிதையை ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 22. குறுங்கவிகள்...மனதைக் கொள்ளைகொண்டுவிட்ட அருங்கவிகள்!

  கில்லர்ஜியின் கவியுள்ளம் சிறக்க என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 23. கூலியைப்பற்றி எழுதிப்போனவரைக்
  கேலிசெய்யப் பார்க்கிறாரா ஜிஎம்பி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   ஹா.. ஹா.. கூத்தாடிகள் விசயத்தில் நானும், ஐயாவும் எப்பொழுதும் எதிரும் புதிரும்தான்.

   நீக்கு
 24. ..நிஜத்துக்கு சொற்பம்..நடிப்புக்கு லட்சம் அனுபவ உண்மை தலைவரே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலமாக இருக்கிறீர்களா ? வருகைக்கு நன்றி.

   நீக்கு
 25. எல்லா கவிதைகளும் அருமை,குறிப்பாக கூலியும், கனமும் சபாஷ் போட வைத்தன.

  பதிலளிநீக்கு
 26. அனைத்துமே அருமை,
  ஆழமான அர்த்தங்கள்
  அழகான வரிகளும் கூட...

  பதிலளிநீக்கு
 27. மிக மிக அற்புத வரிகள் பல வருடமா நான் எழுதி வந்தாலும் இப்போதே பலரின் பதிவுகள் படிக்க தெரிந்தது இவ்வளவு நாள் மற்ற அன்பர்கள் பதிவு தேட தெரியாது சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிதையை பாராட்டியமைக்கு நன்றி.

   பிறருடைய தளத்தில் ஃபாலோவர் சொடுக்கி இணைத்துக் கொண்டால் பதிவுகள் வெளியானதும் உங்களுடைய டேஷ்போர்டில் வரும். நானும்கூட உங்களது பதிவை இப்படித்தான் படிக்கிறேன்.

   நீக்கு
 28. வழக்கம் போல தங்கள் கவிதையும் அருமை நண்பரே.
  செய்வினை செயப்பாட்டு வினைகளை கருத்தில் கொண்டு பார்த்தால்
  பிறக்கப்பட்டதால் என்ற சொலனம் மொழியில் இல்லை என்றே தோன்றுகிறது. சரி பார்த்து சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   அழுகை, சிரிப்பு என்ற வகையில் கவிதையை அமைத்தேன்.

   கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு