தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 25, 2020

மணமேல்குடி, மச்சான் மஸ்தான்


இனிய ரமதான் நல்வாழ்த்துகள்


வாஞ்சையோடு  வஞ்சிரம் மீனு வாங்கி வக்கனையாய் ஆக்கி வச்சேன்வல்லத்து நண்டு வாங்கி உள்ளத்து ஆசையோடு நறுமணமாய் வறுத்து வச்சேன்
இசக்கிபாறை இறால் வாங்கி இதயம் எண்ணையில் வதக்கி வச்சேன்கணவாய் கனமாய் வாங்கி கரம் மசாலாவில் கலக்கலாய் கலந்து வச்சேன்


திருக்கைமீனை வாங்கி திறுச்சு அரைச்சு பிரியாணியில் பிரட்டி வச்சேன்வெடைக்கோழி வாங்கி ஆச்சி மசாலாவில் மணமாய் பொரிச்சு வச்சேன்


குறும்பாட்டுக் தொடைக்கறி வாங்கி குஸ்காவோடு குழைத்து குழம்பு வச்சேன்மாட்டுக்கறியும் வாங்கி மசாலா போட்டு மங்கோலா புட்டு செஞ்சு வச்சேன்


நாட்டுக்கோழி முட்டை வாங்கி புதுக்கோட்டை முட்டை மாஸ் செய்து வச்சேன்


வான்கோழி முட்டை வாங்கி பரமக்குடி டிங்டாங் செஞ்சு வச்சேன்


இத்தனையும் ஆக்கி வச்சேன் மச்சானுக்கு கடைசியில் மூதேவி சொல்லுச்சு பாரு...


தேவகோட்டை புளிச்சாறு போதுமடி ஆயிஷா 

Chivas Regal சிவசம்போ
ஹூம் இது நம்மளைப் போல ஆளுக்கு கிடைச்சு இருக்கணும்

61 கருத்துகள்:

 1. ///
  வாஞ்சையோடு வஞ்சிரம் மீனு வாங்கி வக்கனையாய் ஆக்கி
  ///வல்லத்து நண்டு வாங்கி உள்ளத்து ஆசையோடு நறுமணமாய் வறுத்து வச்சேன்///

  ஆசை வச்சது வஞ்சிரத்திலயோ?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கு நன்றியும், முதலில் உள்ள பிளேட்டும் அதிராவுக்கு...

   ஆயிக்ஷா ஆசைவச்சது மச்சான் மஸ்தான் மீதாகத்தான் இருக்குமோ...?

   நீக்கு
  2. ஆஆஅ எனக்கு அந்த சோறு நிரம்பிய முதல் பிளேட் வாணாம்.. அதை ட்றுத்துக்கு குடுங்கோ:).. கரம் மசாலா போட்ட கணவாய்ப் பிளேட்ட் தான் வேணும்..

   கொமெண்ட் போட ஓடிவந்து ஒரு கொமெண்ட் போட்டதும், வீட்டில் அழைப்பு வந்திச்சா.. அப்படியே ஓடினேன், பின்னர் திரும்பி வரவில்லை ஹா ஹா ஹா..

   தேவகோட்டையில் புளிச்சாறா? ஒருவேளை புலிச்சாறாக இருக்குமோ:))வீரம் பொதிஞ்ச பூமி ஆச்சே:)).. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்..

   அனைவருக்கும் இனிய ரமளான் வாழ்த்துக்கள்.

   நீக்கு
  3. வாங்க எந்த பிளேட்டையும் எடுத்துக்கிறலாம் கோப்பி, பேஸ்ட்தானே...

   வீரம் விளைஞ்ச பூமி உண்மையான வார்த்தை சொன்னமைக்கு நன்றி

   நீக்கு
 2. ரமலானுக்கு புளிச்சாறு போதுமா? திங்கள்கிழமை என்றால் திங்ககிழமைக்கு போட்டியா? 
  செய்முறை இல்லாமல் படங்கள் இட்டதற்கு பிராயச்சித்தமாக மங்கோலா, முட்டை மாஸ், பரமக்குடி டிங்டோங் ஆகியவற்றின் செய்முறை ஒவ்வொரு வாரமும் திங்ககிழமை அன்று பதிவிடவும்!
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்ன "மோதுமாம்" ஆயிஷா மொத்துனாங்களா? 

   நீக்கு
  2. மன்னிக்கவும் போதுமாம் என்பது மோதுமாம் என்று தவறாக வந்து விட்டது.

   நீக்கு
  3. வாங்க ஐயா மஸ்தானுக்கு போதுமாம்... நமக்கு எல்லாமே வேண்டியதை சாப்பிடுவோம்.

   செய்முறை தங்களுக்காக போடுகிறேன் ஐயா.

   நீக்கு
 3. கணவாய் என்றால் என்ன? எனக்குத் தெரிந்தது கைபர், போலன் கணவாய்களும், பாலக்காடு பக்கம் உள்ள கணவாயும் இன்னும் இமயமலையில் உள்ள கணவாய்களும். :) ரம்ஜான் சிறப்புப் பதிவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ
   கணவாய் என்பது கருப்பும், நீலமும் கலந்த மாதிரி இருக்கும் ஒருவகை மீன்தான்

   சரியான உருவம் இல்லாமல் விழுவிழுவென்று பாசிபோல் மிதக்கும். நான் சாப்பிடமாட்டேன்.

   நீக்கு
  2. கணவாய் ஒருவித ஜெல்லி பிஷ் மாதிரி இருக்கும். ஆங்கிலத்தில் Squid என்று சொல்வர். இறாலின் ருசியும் கொஞ்சம் ரப்பர் தன்மையும் கொண்டது. எனக்கு பிடித்த ஒன்று. மிளகாய் மற்றும் மசாலா சமாச்சாரங்கள் மீனில் ஒட்டாது.  ஆக்வே தீயல், அல்லது சுறா புட்டு போல் செய்வோம்.

    Jayakumar

   நீக்கு
  3. கணவாய் என்பது ஒரு வகை மீன்...

   மீன் பிரியர்களைக் கேட்டால் ஜொல்லுவார்கள் எப்படி என்று...

   எனக்குத் தெரிஞ்சது இவ்ளோ தான்..

   நீக்கு
  4. ஜெ..... ஐயா ஆமாம் ஷெல்லி ஃபிஷ் மாதிரி சொல்ல நினைத்தேன்.

   வாங்க ஜி அங்கு நேற்று ரமதான் அல்லவா!

   நீக்கு
  5. எதையும் விட்டு வைப்பதில்லை... என்பதாக முடிவு!....

   நீக்கு
 4. எல்லாம் ரமலான் சிறப்பு உணவுகளா?  கலக்குங்க...

  நணபர்களுக்கு ரமலான் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி நண்பர் வீட்டு விருந்துக்கு போனபோது எடுத்தேன்.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  ரமலான் வாழ்த்துகள். ஒவ்வொனெறுக்கும் வசனங்கள் பொருத்தமாக தயாரித்து எழுதியிருக்கிறீர்கள். கடைசியில் அவர் கொரானா குழப்பத்தில் வெஜ்க்கு மாறிவிட்டார் போலும். நல்லதுதான். ஹா. ஹா

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அதானே இவ்வளவும் சாப்பிடுவதற்கு அதிராவின் அங்கிள் சிவசம்போதான் வரவேண்டும்.

   கொரோனாதான் பயமுறுத்தி விட்டது போல...

   நீக்கு
 6. ஒவ்வொரு அலங்காரமும் பிரமாதம்...

  இனிய ரமலான் திருநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சாப்பிட்டு பாருங்கள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. வல்லத்து நண்டு..ந்னு
  வார்த்தை தான் இருக்கு...
  வறுத்து வைச்சது எங்கேயா!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறு அகவையில் பள்ளி விடுமுறையில் பாம்பன் சின்னம்மா வீட்டில் வல்லத்து மீன்களைத்தான் வாங்குவார்கள்.

   நீக்கு
 8. கில்லர்ஜி விருந்து வைச்ச நீங்க ஸ்வீட் வெற்றிலை பாக்க்கு பழம் வைக்காமல் விட்டுடீங்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விருந்துக்கு வாங்க எல்லாமே வச்சுடுவோம்.

   நீக்கு
 9. இவ்வளவு நான்வெஜ் சாப்பாடா....புதுகோட்டை முட்டை மாஸ் செய்ததில் ஒரு அ.கோ.மு காணல.
  வரிகள் அசத்தலா எழுதியிருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எத்தனை பிளேட்டில் நீ.கே.அ.கோ.மு. இருக்கிறது பார்க்கவில்லையா ? வருகைக்கு நன்றி.

   நீக்கு
 10. அனைவருக்கும் நல்ல விருந்து கொடுத்துவிட்டீர்கள் போலுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே விருந்தில் கலந்து கொ(உ)ண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 11. இனிய ரமலான் வாழ்த்துகள்.

  கலக்கல் விருந்து.


  பதிலளிநீக்கு
 12. இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

  படங்கள் எல்லாம் அசைவ பிரியர்களுக்கு சாப்பிடும் ஆவலை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
  மிக அழகாய் இருக்கிறது பார்க்க.

  பதிலளிநீக்கு
 13. எழுத்துக் கலையில் மட்டுமல்லாமல் சமையல்(அசைவம்) கலையிலும் வல்லவரோ கில்லர்ஜி?!

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. ஹா.. ஹா.. வருக நண்பரே இது அம்பானி வீட்டு திருமணத்திற்கு போனபோது எடுத்தது...

  பதிலளிநீக்கு
 15. ரமலான் விருந்து படைத்து விட்டீர்கள் போலும்! நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. கையில் ஒரு தொழில் இருக்கிறதே படங்கள் வடிவமைப்பிலும் உணவு வகைகளிலும் தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா சமையலுக்கும், எனக்கும் வெகுதூரம்.

   நீக்கு
 17. எத்தனை வகை வகையான உணவுகள் விருந்தாக! தொகுப்பு நன்றாக இருக்கிறது கில்லர்ஜி. எல்லோருக்கும் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்!

  துளசிதரன்

  ஹலோ கில்லர்ஜி அந்த முதல் படம் கேப்டனா?!!! இத்தனை விருந்துச் சாப்பாடும் அவர்தான் ஸ்பான்ஸரா!! ஹா ஹா ஹா

  அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ரசித்து, ருசித்தமைக்கு நன்றி.
   வியாழக்கிழமை விஜயகாந்த் ஆஃபீஸுக்கு போனால் சாப்பிடலாம்.

   நீக்கு
 18. உங்களுக்கென்று எங்கிருந்து படங்கள் கிடைக்கின்றன
  அனைத்தும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தோழர் விருந்துக்கு போன இடத்தில் இருந்து எடுத்த படங்களே...

   நீக்கு
 19. இப்படி பண்ணிட்டீங்களே நண்பரே. நான் சுத்த சைவம் .

  பதிலளிநீக்கு
 20. வெஜிடபிள் ஆர்ட் நிறைய பார்த்திருக்கேன் ... எதோ ஒரு புண்ணியவான் அதையே "நான்வெஜ்" லும் ட்ரை பண்ணியிருக்கிறாரு போல....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இது நம்ம வீட்டு சமையல்காரர் வேலைதான்.

   நீக்கு
 21. நாக்கில் சுவை ஊற தாங்கள் வச்சதை எடுத்து ருசிக்க முடியவில்லை... வச்சதை கண்ணால் பார்க்கதான் முடியுமோ...???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி தாமதமாக வந்தால் மற்றவர்கள் ருசித்தது போக மிச்சமே உங்களுக்கு கிடைக்கும் நண்பரே...

   நீக்கு
 22. படங்களும் வரிகளும் சிறப்பு
  சிந்திக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு