தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 24, 2020

களவு வாழ்க்கை

 

ணக்கம் நட்பூக்களே... நீங்கள் கேட்டவை (1984) என்ற திரைப்படத்தின் பாடலான கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் பாடல் குடும்ப சோகமானது இது சமூக அவலத்தை வைத்தே எழுதப்பட்டது பாடல் எழுதியவர் திரு. வைரமுத்து இசை திரு. இளையராஜா பாடியவர் திரு. கே.ஜே.யேசுதாஸ் கீழே பாடலின் அசல் வரிகளை நீல நிறத்தில் தந்து இருக்கிறேன் - கில்லர்ஜி
 
களவு போகும் வீடு யாவும்
காவலர் செய்யும் லீலைகள்
அடுப்புகூட எடுத்துப் போகும்
கயவர் செய்யும் வேலைகள்
 
எடுக்கின்ற போதே... மறுக்கின்ற தேதி
நினைவில்லை என்பது பொய்தானே...
பத்திரமென்ன... பாத்திரமென்ன...
அடிப்பது எல்லாம் மொய்தானே...
 
களவு என்பது உண்மையில்
காவலருக்கு தரும் மாமூல்தானே
களவு போகும் வீடு யாவும்
காவலர் செய்யும் லீலைகள்
 
காவல்கள் மாறும் மாமூலும் மீறும்
கடமை என்பதோ பொய் வேசம்
அடிப்பதில் பாதி மறைப்பதில் பாதி
மாமூல் போனது போக எது மீதி
 
போதை மனிதனே... முழு கனவை
முடிப்பதில்தானே ஆதாயம்
களவு போகும் வீடு யாவும்
காவலர் செய்யும் லீலைகள்
 
களவு போகும் வீடு யாவும்
காவலர் செய்யும் லீலைகள்
அடுப்புகூட எடுத்துப் போகும்
கயவர் செய்யும் வேலைகள்
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
இதோ வைரமுத்து அவர்களின் அசல் பாடல் வரிகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
 
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்ற தென்பது மெய்தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய்தானே
 
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
 
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்

பேதை மனிதனே கடமையை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்...
 
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்புக் கூட பாரம் என்று
கரையைத் தேடும் ஓடங்கள்
 
இப்பாடலின் யூட்டியூப் இணைப்பை கீழே சொடுக்கி கேட்கலாம்.
 
 
காணொளி

36 கருத்துகள்:

  1. படத்தின் பெயர், பாடல் வரிகள் எல்லாமும் புதுசு. நீங்கள் அதை ஒட்டி எழுதி இருப்பதும் அருமை. உண்மையில் நடப்பதும் கூட. காணொளியைப் பின்னர் வந்து கேட்கிறேன். இப்போத் தூங்கும் நேரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மீண்டும் வந்து காணொளி காண்க...

      நீக்கு
  2. கில்லர்ஜி நீங்க பாடலாசிரியரேதான். நல்லா எழுதியிருக்கீங்க. முதல் வரி வாசித்ததுமே நினைவு வந்தது...சில வருடங்களுக்கு முன் களவு அதிகம் போனப்ப போலீஸ் டிப்பார்ட்மென்ட் சொன்னது நீங்க வெளியூர் போறீங்கன்னா பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டுப் போங்கன்னு உங்க வீடு பத்திரமா பாதுகாக்கப்படும்னு. ஆனா எல்லாரும் சொன்னது நாம வெளியூர் போறோம்னா பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல மட்டும் சொல்லவே கூடாதுன்னு!!! ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது நம்மிடம் தகவல் சொல்லச் சொல்வதே "மற்றவர்களுக்கு" மாற்றி விடத்தானோ... ?

      நீக்கு
    2. இதைப்பற்றி எனது வியாழன் கட்டுரை ஒன்றிலும் எழுதி இருந்தேன்..  நான் ஊர் செல்லும்போது எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி எழுதியபோது!

      நீக்கு
  3. ஒரிஜினல் பாடல் மிகவும் பிடித்த பாடல். ஆனா ரொம்ப சோகப் பாடல். அடிக்கடி இலங்கை வானொலியில் போடுவாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இலங்கை வானொலியில் முன்பு தினமும் கேட்கலாம்.

      நீக்கு
  4. நீங்க போட்டிருக்கும் காணொலி வேலை செய்ய மாட்டேங்குதே கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்ப வேலை செய்யுது!!! நீங்க பாடியிருக்கீங்க!! ஆ அடுத்து பின்னணியா!!!

      கீதா

      நீக்கு
    2. ஆமாம் ஒரு பாடகர் மறைந்து விட்டதால் இடம் காலியாக இருக்கிறதே...

      நீக்கு
  5. சவுக்கிதார் செய்யும் லீலைகள் இல்லையா ஜி...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. காணொளி கைப்பேசியில் கூட காணலாம்: கேட்கலாம்... ஆனால் இன்றைய பதிவில் அவ்வாறு இல்லை ஜி...

      நீக்கு
    3. ஆமாம் ஜி எனது அலைபேசியிலும் இயங்கவில்லையே... ?

      நீக்கு
  6. முன்பெல்லாம் திரை இசைப்பாடல்களின் மெட்டுக்கு ஏற்றவாறு பாடல் வரிகளெழுதுவது பொழுதுபோக்காய் இருந்தது

    பதிலளிநீக்கு
  7. பேசாம கவிப்பேரரசு கில்லர்ஜி என்று மாத்திக்கோங்க.

    கொஞ்சம் சந்தப் பிரச்சனை இருந்தாலும் நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பாட்டுக்கேற்ற உங்களது பாடலும் நன்றாக உள்ளது. இந்தப்பாட்டு கேட்டிருக்கிறேன். முதல் நான்கு வரிகள் மட்டும் ராகம் நினைவிருக்கிறது. ஆனால் பிறகு வரும் வரிகளோடு ராகமும் முழுதாக நினைவில்லை. காணொளி எனக்கும் தெரியவில்லை. பாடலை யூடியூபில் கேட்டு விட்டு அதன் இசைந்த ராகத்துடன் நீங்கள் எழுதிய பாடலையும் பாடிப் பார்க்கிறேன். தங்களது முயற்சி அருமையானது.சுலபமாக "பா" இயற்றும் தங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடல் வரிகளை ரசித்து எழுதியமைக்கு நன்றி.

      நீக்கு
  9. நடந்து கொண்டு இருக்கும் அவலங்களைப்பார்த்து கவிதை பிறந்து இருக்கிறது.
    நன்றாக இருக்கிறது.

    காணொளி நன்றாக இருக்கிறது. நீங்களே பாடிய பாடலும் நன்றாக இருக்கிறது.
    நன்றாக பாடுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ காணொளியை கண்டமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு

  10. பாடலாசிரியர் கில்லர்ஜி நீங்க ஒரு பாட்டு எழுதி பாடி அதற்கு அதிரா டான்ஸ் ஆட சொல்லி ஒரு விடியோ எடுத்து போடுங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே பாட்டு எழுதிடலாம், பாடவும் செய்யலாம் பிரச்சனையில்லை...

      ஆனால் நடனத்தை காணொளியாக்குவதற்கு நான் ஸ்காட்லாந்த் போகணுமே... ?

      நீக்கு
  11. மாற்றுப்பாடல் நன்றாய் எழுதி இருக்கிறீர்கள்.

    இந்தப் பாடல் 1967 இல் வெளிவந்த உப்கார் என்கிற படத்தில் மன்னாடே பாடிய பாடலின் பிரதி!

    https://www.youtube.com/watch?v=FsOsr28ZyRg

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இணைப்பு தந்தமைக்கு நன்றி செல்கிறேன்...

      நீக்கு
  12. தலைப்பை கனவு வாழ்க்கை என்றே படித்தேன். அதுவும் பொருந்தும்போலுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. நாட்டு நடப்பு..கவிதையாக பொழிகிறது..அருமை ! வாழ்த்துக்கள்!! நண்பரே!!!

    பதிலளிநீக்கு
  14. கவிஞர் வைரமுத்துவிற்கு குறைந்தவரில்லை நீங்கள்!! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  15. பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி...நடு நடுவே உள்ள கோடுகளையும், 'ச்'ஐயும் எடுத்துடலாம். கில்லர்ஜி 'நல்ல' பாடல் ஆசிரியர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இன்னும் ரிறைய பாடல்கள் எழுதிய பிறகு தூக்கி விடுவோம்.

      நீக்கு