தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 14, 2020

இன்டா பச்சாய் கிலிகோரு...

ஒருநாள் பொழுது போகாமல் இணையத்தில் உலாவினேன் ஏதாவது திரைப்படத்தின் பாடலை உல்டா செய்து எழுதிக் குதறுவோம் என்று... நான் நீதியை மதிப்பவன் இல்லையா... ஆகவே நீதிக்கு தலைவணங்கு என்ற திரைப்படத்தின் பாடலை தேடிப்போனேன். அங்கு போனால் அதில் எழுதி இருப்பது தமிழ்மொழியா ? இல்லை தாய்லாந்து மொழியா ? என்ற குழப்பம் வந்து விட்டது அம்பூட்டு லந்து பண்ணி வச்சு இருக்காங்கே....

அதைப்பார்த்து அப்படியே நான் உண்மையாக எழுதினாலும் நான்தான் லந்து செய்கிறேன் என்று நீங்கள் கருதக்கூடும் ஆகவே அவைகளை புகைப்டங்களாக தொகுத்து தந்துள்ளேன். நாளைய தலைமுறைகள் இதைப்படித்தால் தமிழ் நல்லாவே வாழும்.

அப்புறம் இவைகளை இணையத்தில் தொகுத்தது நம்ம சாந்திதானாம் எந்த சாந்தி என்று எமக்கு தெரியாது. பாடல் எழுதிய திரு. புலமைப்பித்தன் புலமைபைதன் ஆகி விட்டாரே... பொதுநலத்தோடு எவ்வளவோ எழுத்துருக்களை உருவாக்கி இருக்கும் நமது தமிழ் தொழில்நுற்பர்கள் இவைகளையும் சற்று கவனித்தால் நல்லது தலைப்பு சும்மா லந்துக்காக வைத்தது தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்.

Chivas Regal சிவசம்போ-
இந்த சாந்தி அதிராவுக்கு ஜொந்தமோ... ? 


கில்லர்ஜியின் காணொளி தீபாவளி நல்வாழ்த்துகள்

37 கருத்துகள்:


 1. அன்பும் மரியாதைக்கும் கில்லர்ஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாட் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 2. எலும்பிலும் நரம்பிலும் ரத்த நாளங்களிலும் தமிழ்ப்பித்து பிடித்த ஒருவரால்தான் இந்த மாதிரி எழுதி இருக்க முடியும்!  தலைப்பைப் பார்த்து நானும் என்னவோ என்று நினைத்தேன்...   வந்து பார்த்ததும் சிரித்தேன்...  சிரித்துக் கொண்டிருக்கிறேன்!  

  உங்கள் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி.  உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. பாட்ஷாவா... இனிய தீபஒளி நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி.

   நீக்கு

  2. நம்ம அதிராவின் பதிவையும் இப்படி ஒரு ஸ்கிரீன் சாட் எடுத்து போட்டு இருக்கலமே....

   நீக்கு
  3. ஹா.. ஹா.. அதிரா ஜண்டைக்கு வருவாரே...

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  உங்களுக்கு, இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீமைகள் முற்றிலும் அகன்று நன்மைகள் என்றும் ஒளி வீசி பிரகாசிக்க இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 4. ஹாஹாஹாஹா! நல்ல தமிழ்ப் பற்று. நான் என்னமோ ஏதோ மலேசிய மொழி/சீன மொழியிலே நீங்க கற்றுக்கொண்டதைச் சொல்றீங்கனு நினைச்சால்! இஃகி,இஃகி,இஃகி, தமிழா இது?

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் இனிய தீபஒளி நல்வாழ்த்துகள் சகோ.

   நீக்கு
  2. காணொளியை இப்போத் தான் பார்த்தேன்.திறக்கவே நேரம் எடுத்தது. எனினும் முழுசும் பார்த்துட்டேன். அருமையான காணொளி. நல்ல ரசனை உங்களுக்கு.

   நீக்கு
 6. தமிழ் ஆர்வலர்கள் மன்னிப்பது இருக்கட்டும், தன் மழலைத் தமிழால் மகிழ்வூட்டும் அதிரா உங்களை மன்னிப்பாரா?!?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் நிறைந்த வாழ்த்துகள்!

   நீக்கு
  2. வருக நண்பரே ஆஹா இப்படியொரு கோணம் இருக்கிறதோ... அதிராவை இன்னும் காணோம்.

   நீக்கு
 7. மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 8. இந்த பின்னூட்டம் கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேஷன் படி எழுதியது. பாடல்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு ட்ரான்ஸ்லிடரேட் செய்து பின்னர் வேண்டும் தமிழில் ட்ரான்ஸ்லிட்டரேட் செய்யப்பட்டது. இதுவும் ஒருவிதத்தில் நன்றாகத்தன் இருக்கிறது. 
  தீபாவளிக்கு குடும்பம் ஒன்று சேர்ந்து கொண்டாடுவீர்கள் .வாழ்த்துக்கள்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களுக்கும் வாழ்த்துகள். தங்களது கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 9. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...

  காணொளி அருமை...

  பதிலளிநீக்கு
 10. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  காணொளி மிக அருமை.
  நீங்கள்தான் முன்பும் இதை பகிர்ந்து இருந்தீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆம் முன்பு பகிர்ந்து இருந்தேன்.

   நீக்கு
 11. தலைப்பைக் காட்டி பயமுறுத்தலாமா?

  உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் (தலை தீபாவளிலாம் இருக்குமே)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தலைத்தீபாவளி கடந்த வருடமே முடிந்து விட்டதே...

   நீக்கு
 12. அதுவும் தமிழ் மொழிதான். இயந்திர மொழிபெயர்ப்பில் (Machine translation/google translation) அவ்வாறு ஆகிவிடும். அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே தங்களது கருத்தரைக்கு நன்றி.

   நீக்கு
 13. அன்பு தேவகோட்டைஜி.
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இறைவன் உங்களுக்கு

  அமைதியும் மகிழ்ச்சியும் அளிக்கட்டும்.
  காணொளி மிக மிக அற்புதம்'
  இது போல் நான் பார்த்ததில்லை.
  அட்டகாசம்.

  ஏதோ இந்தோனேசிய மொழிப்பாடல் என்று நினைத்துவிட்டேன்.
  சிரித்து சிரித்து முடியவில்லை.

  அப்புறம் என்னடா தமிழுக்கு வந்த கொடுமை என்றுதான் தோன்றுகிறது.
  மனம் லேசாகி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களுக்கும் வாழ்த்துகள்.

   பதிவை ரசித்து, சிரித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 14. ஹாஹாஹா! உங்கள் தயவால் நன்கு சிரித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 15. சிரிச்சு முடில கில்லர்ஜி...

  தலைப்பு செம...

  நாலை நம்தே ஈந்த நாலும் நம்தே தாமிலா தாமிலா நாலை நாம் நாலே
  ஹா ஹா ஹா ஹா

  கில்லர்ஜி நானும் இப்படியான தொகுப்புகளைப் பார்த்திருக்கிறேன்.

  அது கிடக்கட்டும் அதென்ன நம்ம சாந்தினு சொல்லிட்டு சாந்தியைத் தெரியாதுன்னு வேற.!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சாந்தியை அதிராவுக்கு தெரிந்து இருக்கலாம்.

   நீக்கு
 16. இப்படி எல்லாம் கூடத் தவறாகத் தட்டச்சு செய்து தொகுத்துப் போடுகிறார்களா?

  காணொளி ரசித்தேன்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 17. இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துகள்! நம்மூர் தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் பேச்சைக் கேட்டிருப்பார்கள் போலும். அவர்கள் பேசுவது போலவே பாடல்களையும் எழுதியுள்ளார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு