தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 17, 2020

எனது விழியில் பூத்தது (2)


  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த இரண்டாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit)  செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி

வாருங்கள் ரசிப்போம்...

மகன் தமிழ்வாணனின் திருமணத்தின்போது...
(இடம்: தேவகோட்டை)

முளைக்கொட்டு திருவிழாவின்போது...
(இடம்: கோட்டூர்)

மிகவும் அழகான கோவில்
(இடம்: உத்திரகோசமங்கை)

ஆசையே துன்பத்துக்கு மூலதனம் என்ற மகான்
(இடம்: கொழும்பு)

சிறை தூக்கிலிட்ட இடத்துக்குமா ?
(இடம்: திருப்பத்தூர்)

இராணி மங்கம்மாள் சத்திரம் ஒரு காலத்தில் அழகே...
(இடம்: இதம்பாடல்)

இடுகாட்டிற்கு சென்றிருந்தபோது...
(இடம்: கொடுமலூர்)

வறண்டு போன ஊரணி
(இடம்: இதம்பாடல்)

அதே ஊரணி வளமையோடு
(இடம்: இதம்பாடல்)

இரவின் ஒளியில்
(இடம்: தேவகோட்டை)

விமானத்திலிருந்து...
(இடம்: கொழும்பு)

பாவப்பட்ட குழந்தைகள் வாழுமிடம்
(இடம்: கோயமுத்தூர்)

அழகான மண்டபத்துடன்...
(இடம்: மருதமலை)

அற்புத கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின்
(இடம்: பிள்ளையார்பட்டி)

அதோ தெரியுதுபார் கடல் அதுதான் எங்க தாத்தா வாங்குனது
(இடம்: கோயமுத்தூர்)

உலகிலேயே இரண்டாவது பெரியபள்ளி
(இடம்: அபுதாபி)

எனது கோணம் கீழிருந்து மேல் நோக்கி
(இடம்: தேவகோட்டை)

கிராமத்து தேவதை கோயில்
(இடம்: கோபாலபட்டணம்)

ஸிக்னலில் நின்றபோது எடுத்தது
(இடம்: அபுதாபி)

ஆண்டாளின் வாசலில்...
(இடம்: ஸ்ரீவில்லிபுத்தூர்)

நட்பூக்களே... ரசித்தீர்களா ? முந்தைய பதிவு இதோ - ஒன்று

38 கருத்துகள்:

 1. படங்கள் எல்லாமே நல்லாருக்கு கில்லர்ஜி
  மரக்கிளைகளின் இடையே நிலா, அழகு..ரசித்தேன்..

  அது போல அபுதாபி பெரிய பள்ளி அழகான கோணம்.

  அபுதாபி கட்டிடம் அதான் சிக்னல் லருந்து எடுத்த படம்..

  கீழிருந்து மேலே...படம் இதெல்லாம் கூடுதல் அழகு ரசித்தேன்.

  நானும் கீழிருந்து மேலே எடுத்த படம் தென்னை மரங்களின் கூட்டத்திற்கு இடையே வான் தெரிவது கேரளத்தில் எடுத்த படம் தளத்தில் பகிர்ந்த நினைவு. அது போல பாண்டியில் எடுத்த ஒரு மரம் படம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பதிவை விலாவாரியாக ரசித்து எழுதியமைக்கு நன்றி.

   நீக்கு
 2. அதோ தெரியுது பார் கடல்!! ஹா ஹா ஹா கோயம்புத்தூர் பக்கம் கடலா?!! உடான்ஸ் வுடுற ஆளு ஏதேனும் ரியல் எஸ்டேட் பார்ட்டியோ?!! ஹா ஹா ஹா ஹா அதுவும் தாத்தா வாங்கினதாமே!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே கோயமுத்தூரில் கடல் ஏது ?

   உண்மையிலேயே கை காட்டுபவர் ரியல் எஸ்டேட் நடத்துபவர்தான். சரியாக உளறி விட்டீர்கள் ஹா.. ஹா..

   நீக்கு
 3. "கீழிருந்து மேல் நோக்கி" மிகவும் ரசித்தேன்...

  திண்டுக்கல் வந்தால் கப்பலை ஓட்டிக் கொண்டு போலாம் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ஆமாம் நம்ம கேப்டனை நியமிச்சுருவோம்.

   நீக்கு
 4. உங்கள் விழியில் பூத்தது அனைத்தும் அருமை.
  மரக்கிளைகளுக்கு இடையே தெரிந்த முழு நிலா(இரவின் ஒளி) அழகோ அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்தமைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 5. பாழடைந்த மங்கம்மாள் சத்திரம் 'நிலையாமை'யை நினைக்கத் தூண்டியது.

  அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பழமையை குழி தோண்டி புதைப்பதில் தமிழன் புதிய அவதாரம் எடுத்துள்ளான்.

   நீக்கு
 6. எல்லாப் படங்களும் அருமையாக இருந்தாலும் தேவகோட்டைப் படம் தனி தான்! மரங்களுக்கிடையே/கீழிருந்து மேலாக, கொழும்புப் படங்கள் எல்லாம் கவர்ந்தன. கொழும்பு எப்போப் போனீங்க? நல்ல படப் பகிர்வுகள். நினைவலைகளையும் பகிர்ந்திருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   தேவகோட்டையே அழகுதானே...

   கொழும்பு விமான நிலையத்தில் எடுத்த படம்.

   நீக்கு
 7. படங்கள்எல்லாமே ரசித்துஎடுத்தவை போல்இருக்கிற்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா இவையெல்லாம் பல காலங்களாக எடுத்தது.

   இவைகளை தற்போது தொகுத்து தருகிறேன்.

   நீக்கு
 8. படங்கள் அனைத்தும் அழகு
  மங்கம்மாள் சத்திரத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நான் சிறிய வயதில் ஓடி ஒளிந்து விளையாண்ட இடம் இன்று அலங்கோலமாய்...

   நீக்கு
 9. படம் பிடிப்பதில் முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இதில் பல வருட படங்கள் இருக்கிறது.

   இன்னும் வரும்... நன்றி ஐயா வருகைக்கு.

   நீக்கு
 10. எல்லாப் படங்களும் ரசிக்க வைத்தன.

  பதிலளிநீக்கு
 11. படங்கள் அழகாக வந்துள்ளன. அதிலும், 'கீழிருந்து' - 2ம் இடம். இரவின் ஒளியில் - முதலிடம் என்பது என் எண்ணம்.

  அது சரி.. எல்லாப் படத்திலும், 'கோவில்களில் டியூப் லைட்' தானம் கொடுத்துவிட்டு, வெளிச்சம் தெரிய விடாமல் டியூப் லைட் முழுவதும் பெயரை பெயிண்ட் அடித்திருப்பதுபோல உங்க பேரை ரொம்ப பெருசா போட்டுக்கிட்டிருக்கீங்க.

  நான் எடுத்த கொழும்பு விமான நிலைய புத்தர் படத்தையும், உங்க படத்திலிருந்து எடுத்ததுன்னு சொல்லிடாதீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயர் அறியாத நண்பரின் வரவுக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி.

   இத்தொடரின் ஒன்றாம் பதிவை சொடுக்கி படிக்கவும்.

   நீங்கள் இதே கோணத்தில் எடுத்து இருக்கலாம் மேலும் இதில் கோணம் என்ற சிறப்பு இல்லை இயல்பாக எதிர்புறம் நின்று எடுத்ததே...

   மேலும் இப்படங்கள் அனைத்துமே நான் எடுத்தது மட்டுமே இதன் காரணமாகவே நான் எனது திருநாமத்தை எழுதுகிறேன்.

   வேறு நபரின் படங்களை நான் பதிவுகளுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன் என்பது உண்மையே... ஆனால் இத்தொடரில் எனது கை வண்ணம் மட்டுமே வெளியாகும்.

   மீண்டும் நன்றி.

   நீக்கு
  2. அது நான் - நெல்லைத்தமிழன். வேறு ப்ரௌசரில் வந்ததில் பெயரைக் காணோம். ஹாஹா

   நீக்கு
  3. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
   (பல்பு வாங்கிட்டேன்)

   நீக்கு
 12. மிக அழகான படங்கள். மரக்கிளைகளுக்கு இடையில் தெரியும் நிலவும், வரண்டும்,வளமையாகவும் இருக்கும் ஊரணியும், வித்தியாசமான கோணத்தில் பிள்ளையார்பட்டி கோவிலும் மிகவும் ரசிக்க வைத்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் ரசித்தமைக்கு நன்றி இன்னும் வரும்...

   நீக்கு
 13. எங்கெங்கோ சென்று ஆண்டாளம்மா கோயில் வாசலில் நிற்கும்
  படங்கள் அத்தனையும் அற்புதம் தெளிவு.
  கச்சிதம்.
  ஒரு சுற்றுலா சென்று வந்த பிரமிப்பு.
  நிலவு அழகு. திருமண அழகு, அபுதாபி,இதம் பாடல் ஊர்,
  தேவகோட்டை பூமி
  நீங்கள் எடுத்திருக்கும் அத்தனையும் ரசமான படங்கள்.
  பிள்ளையார் பட்டி, மருதமலை எனக்குப் பிடித்தவை.
  மிக நன்றி அன்பு தேவகோட்டைஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா படங்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  நீங்கள் விதவிதமான கோணங்களில் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் மிக அழகாக உள்ளது.

  இரண்டாவது படமும், அழகான கோவில் படமும், மர இலைகளுக்கிடையே நிலாவின் படமும், அபிதாபி பிரம்மாண்ட கட்டிடங்கள் படமும், அழகோ அழகு. வரண்டு போன ஊரணியும், வளம் தரும் ஊரணியும் நன்றாக உள்ளது.

  கீழிருந்து வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட படமும் மிக அழகாக உள்ளது. சட்டென பார்க்கும் போது செடி, கொடிகள் படர்ந்த சிறு குளமாக தெரிகிறது. அருமையாக அந்தப் படத்தை ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் எண்ணத்தில் எடுத்திருக்கிறீர்கள். அதற்கு முதலில் என்னுடைய வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  எல்லாமே அழகாக எடுத்துள்ளீர்கள். பதிவுகளை அனைவரும் ரசிக்கும் வண்ணம் விதவிதமாகன கோணங்களில் எழுதுவது போல, படங்களை எடுப்பதிலும் நீங்கள் வல்லவர் என மெய்பித்து இருக்கிறீர்கள். உங்கள் திறமைகளை எத்தனை பாராட்டினாலும் தகும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை இரசித்து விரிவாக அலசி கருத்துரை இட்டு பாராட்டு மழை பொழிந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 15. தேவகோட்டை மிக்சரை ஒரு கை அள்ளி சுவைத்தது போல இருந்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. முனைவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 16. கோட்டூர் ரதம் மிகவும் அழகு நண்பரே. நீர் நிறைந்த ஊரணியும் இரவின் ஒளியில் தேவகோட்டையும் கண்களை கவர்கின்றன.
  அடுத்து அடவியிலிருந்து விரைவில் புகைப்படங்களை எதிர்பார்க்கிறேன்.

  அப்புறம் கோவைக்கு கடலை கொண்டு வந்தமைக்கு தனிப்பட்ட நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகைப்படங்களை ரசித்தமைக்கு நன்றி நண்பரே...

   கோவைக்கு கடனை கொண்டு வராமல், கடலை கொண்டு வந்தது பொதுமக்கள் நலன் கருதியே...

   நீக்கு
 17. எனக்கு போட்டியாக அடைமழை பொழிவதால்... கருத்துமழை பொழிய முடியவில்லை..நண்பரே...

  பதிலளிநீக்கு
 18. இன்றுதான் பார்க்க முடிந்தது. உங்களின் புகைப்பட ரசனையின் உச்சத்தை இப்படங்கள் உணர்த்துகின்றன. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு