தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 05, 2020

இருக்கு... ஆனா, இல்லை


பூ
விற்பவனுக்கு நல் மனம் உண்டு
மல்லிகைப்பூ நறு மணம் இல்லை

பணம்
மடியில் பெரும் கனம் உண்டு
மனதில் ஒரு கணம் இல்லை

கடை
குடிக்க கடையில் பானம் உண்டு
கொடுக்க கையில் பணம் இல்லை

மீனவன்
கடலில் பெரும் அலை உண்டு
ஆகவே வீட்டில் உலை இல்லை

ஆசை
மதுவுக்கு அவளிடம் காதல் உண்டு
ஆகவே மாதுவிடம் மோதல் இல்லை

கோவலன்
மாதவிக்கு எதிலும் மச்சம் உண்டு
ஆகவே கணவனுக்கு அச்சம் இல்லை

வாசல்
வியாழன் வடக்கே சூலம் உண்டு
அதனால் வீட்டில் கோலம் இல்லை

நல்லது
எதிர்த்த வீட்டில் கண்ணன் உண்டு
ராதா வீட்டில் அண்ணன் இல்லை

சூட்டான்
அலமேலு வீட்டில் சேவல் உண்டு
நல்லவேளை ஆளு காவல் இல்லை

குடி
குளத்தூர்ல மாமா குரானா உண்டு
குடிச்சே கிடந்தாரு கொரானா இல்லை

ஆடம்பரம்
நேற்று புதிதாய் திறந்த சலூன் உண்டு
சிறுவர்களுக்கு கட்டிய பலூன் இல்லை

சில்வர் கம்பெனி
பாத்திரங்களுக்கு தேவகோட்டை உண்டு
பாத்திரம் தேய்க்க தேங்கா நாறு இல்லை

சிவாதாமஸ்அலி-
தேவகோட்டையில் எவர் சில்வர் கம்பெனி விளம்பரம் போலயே...

ChavasRegal சிவசம்போ-
உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை....

30 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது. எதுகை மோனையாய் அனைத்து வாசகங்களும் நன்றாக வந்துள்ளது. தங்களின் கற்பனை வளம் அருமை.

    உண்மைதான்.. இப்போது மல்லிகை பூக்கள் அவ்வளவாக வாசமில்லை.
    பாத்திரம் தேய்க்கவும் நாரில்லை. அதனால் பயனில்லை என்று அதற்கும் மின்சார இயந்திரம் வந்து விட்டது. பொருத்தமான வாசகங்கள். அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ முதல் வருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும நன்றி.

      நீக்கு
  2. நல்லா முளையை கசக்கி எழுதுறீங்க போல இருக்கே Good

    பதிலளிநீக்கு
  3. எனக்குத்தான் புரியலையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழருக்கு...
      உண்டு-இல்லை என்று எதிரும், புதிருமாக எழுதினேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. ரசித்தேன் அனைத்தையும்.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தையும் ரசித்தேன். பூ,கடை,மீனவன்,நல்லது,சூட்டான் ஆகியவற்றை மிகவும் ரசித்தேன்;மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  6. சொல்வதற்கு ஆளுண்டு சுவையாக நெஞ்சில் கொள்வதற்கு ஆளில்லை நகையாக!..

    பதிலளிநீக்கு
  7. அருமை.. அருமை!..

    ஆனால் காது செவிடாகி கருத்து குருடான உலகமாகிப் போனதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      தங்களது இனிய கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  8. உண்டு - இல்லை! :)

    அனைத்தும் ரசித்தேன் ஜி. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  9. இவற்றில் எனக்கு சில புரிந்தது, சில புரியவில்லை, இந்த பதிவின் மூலம் நீங்கள் எதை நிறுவ முயலுகிறீர்கள் என்பது புரியவில்லை, மன்னிக்கவும்.   .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உண்டு-இல்லை என்ற வகையில் எழுதினேன். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. சுத்தமாய்ப் புரியலை, இந்தப் பதிவு எதுக்கு என்பது. ஆனால் மல்லிகைப்பூவில் மணம் இல்லைனு சொல்ல முடியலை. வாங்கித் தொடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் மூடி வைத்திருப்பதையும் மீறி மணம் எல்லாப் பொருட்களுக்கும் பரவி விடுகிறது. :))))))))))

    பதிலளிநீக்கு
  11. இந்தப் பதிவு வந்திருப்பதையே கவனிக்கவில்லை. எப்படினு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவில் சிறப்பாக ஒன்றுமில்லை.

      தங்களின் வருகைக்கும், மல்லிகைப்பூவின் தகவலுக்கும் நன்றி.

      நீக்கு
  12. ரசித்தேன். அது என்ன சூட்டான்? நினைத்துப் பார்க்கிறேன். புரியவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே
      காளி கோயில், முனியய்யா கோவில்களில் சேவலை பலி கொடுத்து சமைத்து சாப்பிடுவார்கள்.

      அதைத்தான் சூட்டான் என்பார்கள்.

      நீக்கு
  13. சில வார்த்தைகள் ,தலைப்புகள் புரியவில்லை.
    ஆனாலும் தமிழின் எதுகை மோனை
    அழகாக இருக்கிறது.
    வாசல் வடக்கைப் பார்த்து வைக்கக் கூடாது என்று சொன்னது புரிந்தது.
    அருமையான
    தமிழைக் கையாண்டிருக்கும் விதம்
    மிக அருமை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு