ஊரில் திருமணம், காதுகுத்து, சடங்கு மற்றும் அப்பத்தாவின் ஏழாம் ஆண்டு நினைவு நாளுக்குகூட வாழ்த்து பதாகைகள் வைக்கப்படுவது இன்று கட்டாய சடங்காக ஆக்கப்பட்டது இதில் தங்களது சொந்த பணத்தை செலவு செய்பவர்கள் பெரும்பாலும் தங்களது கட்சித்தலைவரின் படம் அல்லது தங்களது அபிமான திரைப்படக் கூத்தாடியின் படத்தை அச்சடித்தே வைக்கின்றார்கள். அதேநேரம் பணம் செலவு செய்த முடுமைகளின் முகங்கள் கீழே ஓரத்தில் அவர்களது மண்டை மட்டும் தெரிவது போல் இருக்கும்.
இதில் அந்தக் கூத்தாடியின் கையில் அருவாள் பிடித்து ரத்தக்களரியோடு நிற்பான் அது அவன் ஏதோவொரு திரைப்படத்தில் சமூகத்தை காப்பாற்றுவதற்காக அருவாளை தூக்கி நின்றபோது எடுத்தகாட்சி. அல்லது மற்றொரு கூத்தாடி துப்பாக்கியை பிடித்து திருமணத்துக்கு வருபவர்களை சுடுவது போன்று குறிபார்த்து நிற்பான். இப்படி பதாகையை கண்டு திருமணத்துக்கு வந்து திரும்பி போன ஆஸ்திரேலியாக்காரர்களும் உண்டு.
நான் தெரியாமல்தான் கேட்கிறேன் ஏண்டா.... நாசமாப் போறவெய்ங்களா... திருமணம் என்பது இரண்டு உள்ளங்கள் வாழ்க்கையில் இணையும் பெருவிழா அதில் போய் அபச குணமாக கத்தி, அருவாள், கோடரி, கம்பு, செயின், துப்பாக்கினு ஆயுதங்களை பிடிப்பது போன்ற பதாகைகளை வைக்கிறீங்களே... உங்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் உங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் இதுதானா ? ஏண்டா இப்படி அடி முட்டாளாக இருக்கீங்க ?
ஒரு விசயம் தெரியுமாடா ? இதே பதாகைகள் அடுத்த வாரம் வீடு இல்லாதவர்கள் சாலையோரத்தில் தங்களது குடிசை போன்ற கூடாரத்துக்கு மேலே போட்டு மூடி இருப்பார்கள். அல்லது வீடு இருந்து கழிவறை இல்லாதவர்கள் ஒதுங்குவதற்கு வீட்டோரமாக சதுரமாக கட்டி வைத்து இருப்பார்கள். உங்களது அபிமான நடிகர்களின் முகத்தில் சிறுநீர் அபிஷேகம் ஆறு வேலையும் நடக்கும். எப்படியோ இல்லாதவர்களுக்கு உங்களது செலவுகள் பிறகு பயனாகிறதே அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லலாம்.
மேலே பதாகை இருக்கிறதே... பார்த்தீர்களா ? தி கிரேட் தேவகோட்டையில் நிகழ்ந்த திருமணத்துக்கு வந்த நண்பர் வாழ்த்தி இருக்கிறார் இவர்கள் நண்பர்கள் இதைப் பார்த்தாவது திருந்துங்க....
ChavasRegal சிவசம்போ-
தேவகோட்டையில் எல்லா திருமண பதாகைகளும் இப்படியிருந்தால் நலம்.
ஃப்ளெக்ஸ் கலாச்சாரம் - நம் ஊரில் தலைவிரித்து ஆடுகிறது. இதனால் உண்டாகும் தீமைகள் தான் அதிகம். இதற்கு ஆகும் செலவை வேறு நல்ல விதத்தில் பயன்படுத்தலாம்!
பதிலளிநீக்குவாங்க ஜி உண்மை இந்த செலவை அனாதை இல்லங்களுக்கு கொடுக்கலாம் என்பது முடுமைகளுக்கு புரியவில்லையே...
நீக்குகட்சித்தலைவர் தலைமையில் நடக்கும் திருமணங்களையும் சொல்லலாம். தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்து மணமகள் கழுத்தில் கட்டச்சொல்லிவிட்டு அவர்(கள்) வாழ்த்துவது இருக்கிறதே...
பதிலளிநீக்குவாங்க ஜி ஆமாம் கட்சித்தலைவர் யோக்கிய சிகாமணியாச்சே...
நீக்குதாலியை எடுத்துக் கொடுப்பவரே பெண்ணுக்குக் கட்டப்போன நிகழ்வுகளும் உண்டே!
நீக்குஆமாம் சுப்பிரமணியசுவாமி அவர்கள்.
நீக்குஅவரே கட்டாது இருப்பதை சொல்லாம்லிருந்ததே இன்னும் மோசமாக் இல்லை என்று நினைக்க தோன்றுகிறதூ ர்
பதிலளிநீக்குவாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஒரு வேளை தேவகோட்டை மக்கள் மட்டும் நல்ல மக்களோ..?
பதிலளிநீக்குவருக நண்பரே...
நீக்குஅதென்ன ஒரு வேளை ?
ஹஹஹஹஹா
நீக்குஅப்பா அம்மாவுக்கு அஞ்சு பைசாவுக்கு வாங்கிக்கொடுக்க மனம் இருக்காது, வெட்டியா ஃப்ளெக்ஸுல காசைக் கரியாக்குவானுங்க. என்னவோ போங்க. சொல்லி என்னாகப்போகுது?
பதிலளிநீக்குஇதைப் பார்த்து எல்லோரும் ஃப்ளெக்ஸ் வைக்கணும்னு ஆரம்பிச்சு வெட்டிச் செலவு செய்வதுதான் மிச்சம்
அதெல்லாம் இருக்கட்டும்.... ரஜினி கட்சி ஆரம்பிச்சு முதலமைச்சர் ஆயிடுவாங்க என்று ஏங்கிக்கொண்டிருந்த ரசிகத் தாத்தாக்கள்லாம் இப்போ என்ன பண்ணிக்கிட்டிருக்காங்க?
ஆம் நண்பரே அவசியமற்ற செலவுகள்தான் என்று மாறுமோ இந்நிலை.
நீக்குரசிக தாத்தாக்கள் ஹா.. ஹா..
பதிலளிநீக்குஅபிமான நடிகர் மீதுமட்டுமல்ல மணமகன் மணமகள் மற்றும் போஸ்டர் அடித்தவரின் மீதும் சிறுநீர் கழிப்பார்கள்தானே
ஆம் தமிழரே உண்மைதான்.
நீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி.
நீக்குபதாகைகளுக்குச் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் கட்டணம் வசூல் செய்தால்(ஊடகங்கள் விளம்பரங்களுக்கு வாங்குவது போல)இந்த எண்ணிக்கை குறையும்.
பதிலளிநீக்குநகராட்சிதான் இதனை தடுக்க வேண்டும் நண்பரே...
நீக்குஅபுதாபியில் திருமண வீட்டில் சாலையில் பந்தல் போட (டெண்ட் கூடாரம்) கம்பி ஊண்டியதை மீண்டும் மூடிக்கொடுக்க வேண்டும்.
வெட்டியான போக்கத்த தண்டமான இன்னும் என்னென்ன உண்டோ எல்லாத்தையும் சேர்த்துக்கங்க கில்லர்ஜி. அப்படியானது இந்த ஃப்ளெக்ஸ்.
பதிலளிநீக்குஇதனால் ஆபத்துதான் அதிகம். சென்னையில் கூட - இரண்டு வருடம் முன்ன இருக்குமா? - வேளச்சேரி தாண்டி பல்லாவரம் போய் இணைகிற ரோட்டில் இந்த ஃபெளெக்ஸ் ஒரு பெண் என்ற நினைவு மேல விழுந்து மரணம்.
என்ன நீங்க லபோ லபோன்னு அடிச்சுக்கிட்டாலும் ஃப்ளெக்ஸ் வைப்பது ஒழியப் போவதில்லை. மக்களுக்கு எல்லாத்துக்கும் கோர்ட் ஆர்டர் வேணும் போல...தானா திருந்தாத கூட்டம்.
கீதா
வருக ஆம் கடந்த வருடம் கோவையில்கூட பதாகை விழுந்து ஒரு வாலிபர் மரணம்.
நீக்குஇங்கே பந்தலுக்குத் தோண்டிய பள்ளங்களை மூட மாட்டாங்க, அவங்களே விழுந்து அடிபட்டுக்கும் வரை. ஆனால் சொல்லிக்கிறது என்னமோ பெருமையா, "தமிழன்டா!" என்பது.
பதிலளிநீக்குஆமாம் எனக்கு இந்த வார்த்தையை சொல்லி ஏமாற்றுபவர்களை கண்டாலே ஆகாது.
நீக்குஅருமையான தேவையான பதிவு.
பதிலளிநீக்குஒரு மழையில் காற்றில் பல உயிர்களைக் குடிக்கக் கூடிய பதாகைகளை வைக்காவிட்டால்
அந்தத் திருமணம் நடக்காதா.
அருவருப்பான பழக்கம்.அரசியல்வாதிகளால் வந்தது.
வாங்க அம்மா இதன் தொடக்கமே அரசியல்வாதிகள்தான்.
நீக்குவருகைக்கு நன்றி
பதாகை வைப்பதை பெருமையாகக் கருத ஆரம்பித்துவிட்டார்கள். திருந்துவது சிரமம்தான்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஇப்படியான ரத்தகளரிக்குத்தான், பிளக்ஸ்ஸே அடிப்பதில்லை நண்பரே!!
பதிலளிநீக்குவருக நண்பரே அதுவே நன்று
நீக்குநீங்களும் பலவிதமாத் தான் சாட்டையடி கொடுக்குறீங்க...
பதிலளிநீக்குயாரும் திருந்துற மாதிரி இல்லை...
வாங்க ஜி இயன்றவரை முயல்வோம்
நீக்குஇது தான் வீரம் என்று நினைக்கிறார்களோ ஜி...?
பதிலளிநீக்குஆமாம் ஜி அப்படியும் இருக்கலாம்.
நீக்கு