வணக்கண்ணே சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களை பார்க்க வந்தேன் நல்லா
இருக்கீங்களாண்ணே ?
அண்ணே கப்பல்ல போகும்போது கப்பல் தண்ணியில மூழ்கி உள்ளே போயிட்டா எல்லாரும்
மூச்சு விடமுடியாமல் செத்துப் போயிருவாங்கள்ல ?
ஆமாடா இதுல உனக்கென்ன சந்தேகம் ?
அப்படீனாக்கா... நீர்மூழ்கி கப்பல்ல போறவங்க மட்டும் எப்படிணே உயிரோட திரும்ப
வர்றாங்க ?
? ? ?
ஏண்ணே கடவுள் தூரிலும் இருப்பார், துரும்பிலும்
இருப்பார்னு சொல்றாங்களே.... உண்மையாண்ணே ?
ஆமாடாத்தம்பி எங்கும் நிறைந்தவன் இறைவன்.
அப்படீனாக்கா அவரு வீட்டுல எப்பண்ணே இருப்பாரு ?
? ? ?
கடவுள் இல்லைனு சிலபேர் சொல்றாங்களே உண்மையாண்ணே ?
பலபேர் பல விதமாக பேசுவார்கள் நம்பியவர்களுக்கு
நாராயணன்.
நம்ம நடுத்தெரு நர்மதா புருசன் நாராயணனாண்ணே ?
? ? ?
ஏண்ணே ரொம்ப காலமாக முட்டையிலிருந்து கோழி
வந்துச்சா... இல்லை கோழியிலருந்து முட்டை வந்துச்சானு கேட்கிறாங்களே... இதுக்கு
விடை என்னண்ணே ?
தம்பி கோழியிலருந்து முட்டை வந்ததும்,
முட்டையிலருந்து கோழி வந்ததும் தெரியும் ஆனா முதல்ல முட்டை எதுலருந்து
வந்ததுனுதான் மக்களுக்கு குழப்பம்
என்னண்ணே கூமுட்டை மக்கள் இதுகூட தெரியாமல்
இருக்காங்க... முட்டை சேவல்லருந்துதான் முதல்ல வந்துச்சு...
? ? ?
இறந்து போனவங்களை புதைத்த பிறகு சொர்க்கத்துக்கு
போகட்டும்னு பிரார்த்தனை பண்ணுறாங்களே... ஏண்ணே ?
அடேய் வாழும்போதுதான் நரகத்துல வாழ்ந்தான் இறந்த
பிறகாவது சொர்க்கத்துக்கு போகட்டுமேனுதான் இறைவனை பிரார்த்திக்கிறாங்க...
அப்படீனாக்கா அரசியல்வாதியாக ஆட்சி செய்து சொர்க்கம்
போல ராஜவாழ்க்கை வாழ்ந்து இறந்து சென்னை மெரினாவுல அடக்கம் பண்ணி
இருக்காங்காங்களே... அவங்கள்லாம் நரகத்துக்கு போவாங்களாண்ணே... ?
? ? ?
ஏண்ணே பழனி மலைக்கோயில்ல முருகனை ஆண்டிக் கோலத்துல
தரிசனம் செய்தால் கஷ்டமான வாழ்க்கை வரும்னு சொல்றாங்களே உண்மையாணே ?
ஆமாடாத்தம்பி முருகனை ராஜ அலங்காரத்துல பார்த்தால்
ராஜவாழ்க்கை அமையும்னு நம்பிக்கை அதனாலதான் ஆண்டிக்கோலம் பார்க்க கூடாதுனு
பெரியவங்க சொல்றாங்க...
அப்படீனாக்கா இந்த ஆண்டிக் கோலத்தை செய்து முதல்ல
பார்க்கிற ஐயருக்கு ஏண்ணே கஷ்டம் வரலை ?
? ? ?
ஏண்ணே பணக்கார நாடு, ஏழை நாடு அப்படினு சொல்றாங்களே
இதுல மக்களோட வாழ்க்கையில் என்ன வித்தியாசம்ணே ?
தம்பி பணக்கார நாட்டுல மக்களுக்கு நல்ல சலுகைகள்,
ஓய்வூதியம், குழந்தைகளுக்கு படிப்பு இலவசம், மருத்துவம் இலவசம் இப்படி நிறைய
கிடைக்கும். ஏழைகள் நாட்டுல மக்களுக்கு எதுவும் கிடைக்காது வேலையின்றி மக்கள்
கஷ்டப்படுவாங்க, பிற நாடுகளுக்கு வேலை தேடிப்போவாங்க... இதுக்குத்தான் தலைவர்கள்
பணக்கார நாடாக்க முயற்சி செய்யிறாங்க.
பணக்கார நாடாக இருந்தால் மக்களுக்கு லாபம், ஏழை நாடாக
இருந்தால் மக்களுக்கு கஷ்டம் நஷ்டம் சரி ஆனால் நாடு எப்படி இருந்தாலும் தலைவர்கள்
நல்ல வாழ்க்கைதானே வாழுறாங்க பிறகு நாடு நல்லா இருந்தாலும் நாசமாகப் போனாலும்
தலைவர்களுக்கு என்னண்ணே ?
? ? ?
மிதக்கிற கப்பல்ல பேருந்து கொண்டு போறாங்கள்ல அப்ப
நிற்கிற பேருந்து அதை தண்ணியில தள்ளி விட்டால் மூழ்கிடுதே ஏண்ணே ?
தம்பி கப்பல் மிதக்கும் தன்மையில் உருவாக்குனது அதுல
வீடே கட்டினாலும் நிற்கும் பேருந்து அப்படி இல்லை தண்ணியில் நிற்காது
அப்படீனாக்கா துபாய்ல மட்டும் பேருந்து தண்ணீரில்
போகுதே எப்படிணே ?
? ? ?
அப்புறம்ணே...
டேய்த்தம்பி இருடா பேருந்து வந்துருச்சு நான் மும்முடிச்சாத்தான்வரை
போகணும் ஆளை விடுடா...
என்னண்ணே எதுக்குமே பதில் சொல்லாம போறீங்க... ?
இப்ப பதிவர்கள் வந்து சொல்லுவாங்கடா...
சிவாதாமஸ்அலி-
இப்படி
ஏடாகூடமாக கேள்வி கேட்டால் மும்முடிச்சாத்தான் போற அண்ணன் எப்படி பதில்
சொல்லுவாரு...
ChivasRegal
சிவசம்போ-
கிருஷ்ணகிரியில கிறுக்கு பிடிச்சு கிரிவலம் போனது போல
இருக்குதே....
காணொளி
கேள்விகள் சுலபமாகத்தான் இருக்கின்றன!
பதிலளிநீக்குவாங்க ஜி பதில்கள்தான் கஷ்டமோ ?
நீக்குஎடக்கு மடக்கு இது தானோ ஜி...?! ஹா... ஹா...
பதிலளிநீக்குவாங்க ஜி அப்படியா இருக்கு ?
நீக்குகேள்விலாம் அகடவிகடமா இருக்கு. இதுக்கு பதில் எப்படிச் சொல்றது?
பதிலளிநீக்குஅதான் எங்க தலைல கட்டிட்டு எஸ்கேப் ஆயிட்டாரோ?
ஹா.. ஹா.. வருக நண்பரே நீங்கள் டங்குவாருக்கு டவுட்டை தீர்க்கலாமே... ?
நீக்குகேள்விகள் எல்லாம் அருமை. பதில்கள் அதை விட அருமை. நல்லாத்தான் யோசிக்கிறீங்க! இஃகி,இஃகி,இஃகி!
பதிலளிநீக்குதுபாயில் பேருந்து கடலில் செல்லும் என்னும் செய்தி எனக்குப் புதியது.
பதிலளிநீக்குவருக சகோ உல்லாச படகுதான் பேருந்து வடிவில் செல்கிறது.
நீக்குதங்களின் வருகைக்கு நன்றி.
துபாயில் மாத்திரம் பேருந்து தண்ணியிலே போவுது எப்படின்னே
பதிலளிநீக்குடேய் சரியான வாத்து மடையனா இருக்கியே. வாத்து தண்ணியிலும் போகும் தரையிலும் போகும். அது மாதிரிதான்.
அப்போ பேருந்து முட்டை போடுமான்னே ?
ஹா.. ஹா. வாங்க ஐயா வாத்து மடையன் மாதிரித்தான் டங்குவாரு கேட்கிறாரு...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல எடக்கு மடக்கான கேள்விகள்தான். இதற்கு எங்களாலும் பதில்கள் சொல்லவே முடியாது போலிருக்கிறது. ஆனால் தப்பிக்க சட்டென வாயில் நுழைய முடியாத எந்த ஊருக்கு செல்வதென்றுதான் தெரியவில்லை. ஹா ஹா.
காணொளி நன்றாக உள்ளது. இங்கெல்லாம் மழை வந்தால் பேருந்து மழை நீரில் நகர்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் தண்ணீரில் ஜாலியாக பாயும் பேருந்தை இப்போதுதான் கண்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபதிவை மிகவும் ரசித்தமை கண்டு மகிழ்ச்சி.
நான் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டேன். ஏன்னா, டங்குவாரு மாதிரி எனக்கும் கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்!!!
பதிலளிநீக்குஹா.. ஹா.. நீங்களும் நம்ம ஜாதிதானா ?
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே...
அட்டகாசமான் கேள்விகள். அதைவிட அமர்க்களமாகப்
பதிலளிநீக்குபதில்கள்.
காணொளி சூப்பர். ஜேம்ஸ் பாண்ட் படம் மாதிரி
இந்த பேருந்து செல்கிறது.
இங்கேயும் இந்தக் காட்சியைப் பார்த்து
ரசித்ததுண்டு, மிக நன்றி அன்பு தேவகோட்டைஜி.
வாங்க அம்மா
நீக்குதங்களது வருகைக்கும், கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.
எடக்கு மடக்கு கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். பாராட்டுகள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குமுதலில் பதில் எழுதிவிட்டு பின்னர் கேள்வி கேட்பீர்கள் போலுள்ளது.
பதிலளிநீக்குவருக முனைவரே...
நீக்குடங்குவாருக்கு பதில் கிடைக்காததால் விளக்கம் சொல்லி கேள்வி கேட்பது பதில்போல் அமைந்து விட்டது.
டங்குவாரை ஒருக்கால் இங்கு கூட்டி வாங்கோ கில்லர்ஜி, அவருக்கு நான் ஸ்கொட்லாந்து மலையில ஒரு பெரிய மேடை அமைச்சு, அதில ஏத்தி வச்சு டயமண்ட் மோதிரம் போடோணும்:)). என்ன அழகிய, அருமையான டவுட்டுக்கள் அத்தனையும்:)) ஹா ஹா ஹா
பதிலளிநீக்குவாங்கோ அதிரா வாங்கோ...
நீக்குஇதோ பாஸ்போர்ட் கோப்பி அனுப்பி வைக்கிறேன் அப்படியே எனக்கும் சேர்த்து விசா அனுப்பி வைங்கோ.
ஹா ஹா ஹா விசா, நான் குயின் அம்மம்மாவிடம் கேட்டு வாங்கித் தாறேன், ஆனா அதுக்கு முதலில் என் சுவிச்சு பாங்:)) எக்கவுண்டுக்குப் பணமனுப்பி வைக்கவும் பவுண்ட்ஸ்ல:))
நீக்குஹலோ என்னிடம் ஸ்விஸ் ப்ராங்க் கிடையாது இலங்கை சல்லி அனுப்பி வைக்கிறேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய தினம் பிறந்தநாள் காணும் உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்றிலிருந்து மனச்சோர்வுகள் அகன்று வரும் நாட்களெல்லாம் நல்லதொரு நாட்களாக பிறந்திட இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கில்லர் ஜி.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கில்லர்ஜி. வரும் ஆண்டுகளில் மன அமைதியுடனும், மன மகிழ்ச்சியுடனும் சுற்றம், நட்பு சூழப் பிறந்த நாள் கொண்டாடவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குதங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
பிறந்த நாள் வாழ்த்துக்களை சற்று தாமதமாக தெரிவித்துக் கொள்கிறேன்.சில கேள்விகள் வில்லங்கம், சில பதில்கள் வில்லங்கம். பாராட்டுகள்!
பதிலளிநீக்குவாங்க மேடம்
நீக்குதங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.