தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 17, 2014

அன்றைய மனிதர்கள்


விஞ்ஞானம் மனித வாழ்வுக்கு வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

பண்டையகால மனிதர்கள் 90 % பேர் சர்வ சாதாரணமாக 100 வயதுமுதல், 120 வயதுவரை வாழ்ந்து இயற்கையான மரணமடைந்தார்கள், வயல்வெளிகளில் ஸர்ப்பம் தீண்டினால்கூட அந்த''வலி''யை தாங்ககூடிய வலிமை பெற்றிருந்தார்கள், காரணம் கடைசிகாலம் வரையிலும் கடுமையான உழைப்பாளிகளாக இருந்தார்கள், நிலத்தடி நீரையே குடித்தார்கள், நிறைய உணவும் உண்டார்கள், என்ன உணவு ? 

மண் பானையில் விறகு வைத்து சமைத்த, கேழ்வரகு, கம்மங்கூழு, நல்லவகை நெல்சோறு, பச்சைக் காய்கறிகள், பழவகைகள், அந்தந்த காலகட்டங்களில், பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, இந்த மாதிரியான எந்த வகையான உரங்களாலும் வளர்க்கப்படாத இயற்கை உரங்கள் மட்டுமே "போடப்பட்ட'' தாவரவகை உணவுகள். 

இரவு ஏழு மணிக்கே கெட்ட சிந்தனைகள் இல்லாமல் உறங்கி விடும் குழந்தைகள், அதனால் பெற்றோர்கள் பெற்றார்கள் பேரின்பம், வாழ்ந்தார்கள், வாழ்ந்தார்கள், வாழ்ந்தார்கள், வீடுநிறைய சகோதரத்துடன் அக்கா, அண்ணன், தம்பி, தங்கையென வளர்க்கப்பட்ட குழந்தைகள்...

காலையில் ஆறுகளில், ஊரணிகளில், கண்மாய்களில், அருவிகளில், ஓடைகளில், கிணறுகளில், முங்கி மூழ்கி குளிர்ந்த நீரில் குளித்தல், காலை உணவு திடமான கேப்பை ரொட்டி, வயற்காட்டில் உணவுக்காக மட்டுமே உழைப்பு, கல்யாண வீடுகளில், சொந்த பந்தங்களுடன் கூடிக்குழாவி உண்டு களித்தார்கள், கோவில்களில் திருவிழாக்கள் நடத்தி சந்தோஷப்பட்டார்கள், அகத்தில் சந்தோஷம் நிறைந்ததால் புறத்திலும் நோயின்றி வாழ்ந்தார்கள், காரணங்கள் பல...

மனைவி CESAREAN முறையில் குழந்தை பெற்றதில்லை, 
பிறந்த குழந்தைக்கு WOODWARD'S வாங்கி கொடுத்ததில்லை, 
சளி பிடித்த குழந்தையை C.T SCANE எடுக்க வைத்தியர் சொன்னதில்லை,
குழந்தைக்கு L.K.G.  APPLICATIONக்கு DONATION கேட்க யாருமில்லை,
படிக்கப்போன மகளை RAGING எவனும் செய்ததில்லை, 
மகளை எவனும் PHOTO எடுத்து, INTERNET டில் இணைத்ததில்லை,
மகளின் CHELL PHONE னில் MESSAGE சப்தம் கேட்டதில்லை, 
மகள் SERIAL லில் நடிக்கப் போய் சீரலிந்து போனதில்லை, 
மகளுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் செய்யவேண்டும் என்ற கவலையில்லை, 
வரதட்சினையாக CARரோ, MOTOR BIKEகோ, கொடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லை, 
கட்டிக் கொடுத்த மகள் CYLINDER வெடித்து சிதறி விடுவாள் என்ற சிந்தையில்லை, 
மகளின் கணவன் குடித்து விட்டு மகளை கொடுமைப்படுத்துகிறான், என்ற குரல்கள் ஒலித்ததில்லை,
மகனுக்கு M.B.B.S. APPLICATIONக்கு FIVE LAKH கொடுத்ததில்லை,
படிக்கப்போன மகனை மதிய வேளையில் ''பலான'' THEATER ரில் பார்த்ததாக பழகியவர்கள் சொன்னதில்லை, 
மகன் அடுத்த வீட்டு பெண்ணுடன் ஓடிப்போய் விட்டதாக ஒருவரும் சொன்னதில்லை,  
LOVE FAILUREரால், மகன் தண்டவாளத்தில் தலையை வைத்து தகர்த்ததாக தகவலில்லை, 
மகனை CRICKET கிறுக்கன் எனஎவனும் அழைத்ததில்லை,
மகனுக்கு DUBAI VISA வந்து விட்டது என யாரும் வந்து சொன்னதில்லை, 
மகன் ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாந்து போனதில்லை, 
அதனால் என் சொத்தை பிரிடா என, மகன் சொல்லிக் கேட்டதில்லை, 
BUSசில் வரும்போது வழிப்பறி கொள்ளையர்கள் மறித்து ATM, CARDடை பிடுங்கிப் போனதில்லை, 
SCHOOLலில் தீபிடித்து கும்பகோணத்தில் குழந்தைகள் பலி போன்ற குரூரங்கள் நடந்ததில்லை,
TSUNAMI வந்து 10,000 பேர்பலி என PAPER ரில் படித்ததில்லை, 
BOMB வெடித்து பல மாடிக்கட்டிடம் சரிந்ததாக RADIO வில், சரோஜ் நாராயண்சாமி சொல்லவில்லை,
சாமியாரின் சரசங்களை SUN TV யில் கண்டதில்லை, 
காரணம் இந்த, ENGLISH எலவுகள் எல்லாம் அன்று இல்லை. 

உணவு, உழைப்பு, உறக்கம், ஆகவே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் கவலை என்ற சொல் முளையிலேயே களை எடுக்கப்பட்டது, ஆகவே நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள், நோய் என்பது சூட்டின் காரணமாய் அம்மைநோய், அல்லது காய்ச்சல்.

இந்த வார்தையை தவிர வேறேதும் கேள்விப்படதில்லை பண்டைகால மனிதர்கள்.

சரி, இன்றைய மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் ?
Sorry, Just Wait One Week

88 கருத்துகள்:

 1. அப்பட்டமான உண்மை.....எல்லோருக்கும் தெரியும் ஆனால் நாம் ஏற்க மறுக்கிறோம்...உடலுழைப்பு என்பது மிகமிக குறைந்த காரணத்தால் உடனே மாண்டும் போகிறோம்.அருமையான கருத்துக்கள்.வாழ்த்துக்கள் சகோதரமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மையை ஒத்துக்கொண்டு வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 2. நிதானமான பதிவு!.. ஆனாலும் கடும் வேகம்!..

  மதிப்புக்குரிய சரோஜ் நாராயண் ஸ்வாமி அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வித்தியாசமாக கருத்துரை எழுதி இருக்கிறீர்கள் நன்றி

   நீக்கு
 3. இல்லை. இல்லை ,இல்லை.... இல்லவே இல்லை!..:(

  இன்று எதுவுமே இல்லை!..:’(
  அத்தனையும் ஆயிரம் மடங்கு உண்மை சகோதரரே!..
  உளந்தொட்ட பதீவு + பகிர்வு! மிக்க நன்றி!

  தமிழ் மணம் வேலை செய்யலையா?.. என்ன ஆச்சுசு..?
  எனது வாக்கு + 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ,, இல்லை, இல்லை என்று எழுதவும் போர்க்கொடி பிடித்து விட்டீர்களோ... என பயந்து விட்டேன் ஒத்துக்கொண்டு வாக்கும் அளித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 4. உடனேயே சரி செய்தாயிற்றா?..
  த ம. 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இணைக்கவில்லை சகோ யாரோ... செய்திருக்கிறார்கள்

   நீக்கு
 5. இயற்கையை விட்டுத் தள்ளி நாகரீகம், நவீனம் என்ற பெயரில் மரங்களையும் காடுகளையும் அழிக்க முற்பட்ட போதே மனிதனின் ஆயுள் சுருங்க ஆரம்பிருச்சு கில்லர்ஜி. விருந்தோம்பல் குணம் குறைஞ்சு, திண்ணை வைத்த வீடுகள், கிணறுகள்லாம் காணாமப் போயி, அப்பார்ட்மெண்டுகளும் போர்வெல்லுமா மாறினப்பவே ஆயுள் குறைவு கன்பர்ம் ஆயிருச்சு. பல்லு விளக்கதத் தவிர எல்லாத்துக்கும மிசின் இருக்கற உலகத்துல நீண்ட ஆயுள் இனி ? தான்யா. இதத் தெரிஞ்சுக்க நாங்க எதுக்கு ஒரு வாரம் வெயிட் பண்ணோணும்...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யெஸ்! இதைத்தான் சொல்ல நினைத்தோம் வழி மொழிகின்றோம்.

   மற்ற படி கில்லர் ஜி அன்று நடந்தவை இன்றும் தொடர்கின்றது. இன்று கிரிக்கெட் என்றால் அன்றும் சொக்கட்டான் என்ற ஒரு விளையாட்டு....அப்புறம் அன்றும் குடியும் இருந்தது. பெண்களை இழிவு படுத்தல், தாசிகள் என்ற பெயரில் இன்று விபச்சாரிகள்...சாதிக் கொடுமைகள் இருந்தன.....ஏமாற்றுதல், கொலை கொள்ளைகளும் இருந்தன.....அன்று நிலக்கிழார்கள்..தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தினர்......இன்று தொழிலதிபர்கள்....இன்று டிவி...அன்று கொட்டகை நாட்கங்கள், தெருக்கூத்துகள்......இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப......அன்று மக்கள் தொகை குறைவு....இன்று அது கூடுதல் ...ஊடகங்களும் நிறைய அதனால் பளிச்சென்று தெரிகின்றன...அன்று அது பளிச்சென்று தெரியவில்லை...அவ்வளவே! பல நோய்கள் இருந்தன....பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்தால் தெரியும்.....ஆனால் பேர்கள் தான் வேறு...இன்றைய அறிவியல் வளர்ச்சியால். அன்றும் அறிவியல் இருந்தது...சாஸ்திரம் என்ற பெயரில்...எனவே அவை பல சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்தன, அன்றே ஆயுர்வேதத்தில் அறுவை சிகிச்சைகள் நடந்தன...சுஸ்ருதா எனும் பெண்....என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.....மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள் அழிந்து மனிதன் அழியும் நிலை இது மட்டுமே...மற்றவை அன்றும் இன்றும் அதே அதே அதே.....

   நீக்கு
  2. மனிதன் அன்றும் இருந்தான் இன்றும் இருக்கின்றான்....மனிதன் என்று தோன்றினானோ அன்றே இவை அனைத்தும் ஆரம்பித்துவிட்டன....% ஜில் மட்டும்தான் வித்தியாசம் அதுவும் மக்கள் தொகையின் % ஜினால்....

   நீக்கு
  3. வருக வாத்தியாரே,,,, இன்று பல் துலக்கவும் மிஷின் இருக்கிறதே... ஒருவாரம் கிடக்கட்டும் எனது பார்வையில் இன்றைய MONEY தர்கள் வாழ்வு முறை எப்படி என காண வருக... நன்றி

   நீக்கு
  4. தில்லை அகத்தாரே... தங்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி நண்பரே... அன்றும், இன்றும் இதில் மனிதன் சந்தோஷப்பட்டது அன்றா ? இன்றா ? இதுவே எமது கேள்வி

   நீக்கு
  5. To, தில்லை ஏற்கக்கூடிய பதில் நன்றி

   நீக்கு
 6. இயற்கையோடு இயைந்த வாழ்வு என்று நன்மையே தரும்! அதை மிகச்சிறப்பாக சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. நாம் தான் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோமே. அப்புறம் எங்கிருந்து நாம் இயற்கை உணவுகளை உண்பது.
  அந்த காலத்தில் தேவைக்கு அதிகமாக சொத்து சேர்த்ததில்லை,அதனால சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்து உண்மைதான் உண்மையானவரே...

   நீக்கு
 8. உண்மை,உண்மை,உண்மை....தம.2

  பதிலளிநீக்கு
 9. அந்தக் கால வாழ்க்கையை நினைவூட்டி வருத்தத்தில் ஆழ்த்திவிட்டீர்கள் நண்பரே
  இது இயலுமா இக்காலத்தில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எனக்கு மட்டும் வருத்தமில்லையா ? இனி மாற்ற இயலாது நண்பரே... விதியின் வழியே.....

   நீக்கு
 10. இத்தனை இல்லைகள் இருந்த போதும் ,மகிழ்ச்சிக்கு குறைவு இருந்ததில்லை :)
  த ம 5

  பதிலளிநீக்கு
 11. எல்லாம் சரி , அது என்ன "சாமியின் சரசங்களை சன் டிவியில் கண்டதில்லை "

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே குத்தியானந்தா போன்றவர்களின் கலையை.....

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே!

  அன்றைய காலத்தின் ,மனிதர்களின், சிறப்புக்களை சிறப்பாகச் சொல்லிச் சென்றது தங்கள் கட்டுரை. மனம் நிறைந்த எழுத்துக்கள்..

  இயற்கை செயற்கையாக மாறி வரும் இந்த சூழலில் நாம் இப்படி அந்தக் காலத்தை நினைத்து சிறிது சந்தோசப்பட்டு கொள்வதை தவிர வேறு வழி?
  சிந்திக்க வைத்தப் பதிவாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக, சகோ தாங்கள் சொல்வது சரியே... வேறு வழி இல்லை.

   நீக்கு
 13. அன்று நல்லவர்கள் அதிகம் இருந்தார்கள்....கெட்டவர்கள் பெருகிவிட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 14. அன்றைய வாழ்க்கை முறையில் சில் சிறப்பம்சங்கள் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. அதே சமயம் இந்நாளைய அதி நவீன விஞ்ஞான மருத்துவம் மனிதனுக்கு உண்டாகும் நோய்களை கட்டுப்படுத்துவதிலும், மனிதனின் சராசரி ஆயுட் காலத்தையும் நீட்டித்து இருப்பதையும் காணலாம்.
  த.ம.6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே... இன்றைய மனிதன் நிறைய விடயங்களை இழந்து விட்டானே 80தே எமது ஆதங்கம் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

   நீக்கு
 15. வணக்கம்
  நினைவை அள்ளிச் சென்ற பதிவு.. பகிர்வுக்கு நன்றி த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 16. பெயரில்லா12/17/2014 11:25 PM

  Killerjee,
  Sorry to burst your bubble. The child mortality rate (under 5 years old) in India declined from 1990 to 2013 by 50%. 56 deaths/1000 birth in 2013 Vs 126 deaths/1000 in 1990. The primary reason is Vaccines, they save lives. It is common to have 8-10 children in good old days, because only 2 or 3 will survive. Todays children are definitely healthier than older generation, they live despite eating all the crap. Also adults live longer now than old days. That leaves only morality. You know what was moral 100 years before (Sathi) is immoral now. You get my point. Times change and you adapt, can' t always live in good old days and take it easy.
  Mona

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thank s for your valuable reply…

   When we compare to our olden life, what we have right now, it’s nice to see but not a healthy life…

   You have to see my one more release of “ இன்றைய Moneyதர்கள் “ and compare what we have ? and what we did ?.

   I am excepting your reply.

   நீக்கு
 17. கில்லர்ஜி ..நீங்க சொல்வது அத்தனையும் உண்மை..!

  பதிலளிநீக்கு
 18. அந்த காலத்தில் பல ‘இல்லைகள்’ இல்லை என்றாலும் அவர்களுக்கும் சில தொல்லைகள் இருந்தன. அவைகள் இப்போது அறிவியல் வளர்ச்சியால் அழித்தொழிக்கப்பட்டன என்பதையும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை. எனவே ஒப்பிடுவது சரியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இந்த மாற்றம் மனிதனுக்கு லாபமா ? நஷ்டமா ?

   நீக்கு
 19. வருகையின் முதல் படியினை தொட்டு வணங்கி வருகிறேன்!
  இனி வருவேன்! கருத்துரைப்பேன்!
  நன்றியுடன்!
  புதுவை வேலு
  எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாதவன் நம்பியின் வருகைக்கு நன்றி, இதோ வருகிறேன் நண்பா....

   நீக்கு
 20. அத்தனையும் உண்மை ஜி

  பதிலளிநீக்கு
 21. ஆம் சகோ நாம் பழமையைத்தாண்டி வெகுதூரம் போய்க்கொண்டிருக்கிறோம்
  நம்பிள்ளைகளுக்கு நாம் முன்மாதிரியாக இருக்கவேண்டும் நம் பிள்ளைகள் முதல்மதிப்பெண்கள் வாங்குவதில் மட்டும் பெற்றோர் மிக மிக கவனமாக
  இருக்கின்றனர் இன்நிலை மாறவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ, இனி மாற முடியுமா ? மாறினால் நலமே...

   நீக்கு
 22. அருமையான பகிர்வு அண்ணா....

  பதிலளிநீக்கு
 23. நண்பர் கில்லர்ஜீக்கு,

  தங்களின் முயற்ச்சியை பாராட்டுகின்றேன், தங்களின் ஆதங்கத்தை ஆமோதிக்கின்றேன் அனால் நீங்கள் சொல்லும் நோயற்ற வாழ்வு,பசி, பிணி வறுமை என்பதெல்லாம் அந்த காலம் என்று நீங்கள் எந்த காலத்தை சுட்டிக்காட்டுகின்றீர்களோ அந்த காலத்திலேயே இருந்ததற்கான சாட்சிகள் வரலாற்று குறிப்புகள் இன்றும் உள்ளன.

  தொழு நோய் என்று ஒன்று அந்த காலத்தில் சுமார் 3000 வருடங்களுக்கு முன்பே இருந்தது ஆனால் அது இப்போது இல்லாமல் போனது அப்படி இருந்தாலும் அவை மேலும் பரவாமல் கட்டு படுத்தப்பட்டுள்ளது.

  பெரியம்மை என்றொரு நோய் இருந்தது எங்கே அது இப்போது?

  அந்த காலத்திலேயே அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன,

  பிள்ளை பேரின்போது மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மலட்டு தன்மையும் வாரிசு இன்மையும் இருந்தததை வரலாறு அறிந்தவர் நன்கு அறிவர்,

  பிச்சை புகினும் கற்கை நன்று எனும் கூற்று எப்படி வந்தது - வறுமை இருந்திருக்க வேண்டும்.

  நோய் நாடி நோய்முதல் நாடி.....எப்படி வந்தது நோய் இல்லாமல்?


  சித்தார்த்தன் புத்தனாக மாறியதே,வறுமையும், பிணியையும் கண்டுதானே.?


  ராஜ கட்டிகள் என்ற பதங்கள் பண்டைய காலத்தில் பயன்படுத்தினார்கள் , அவை கேன்சரின் வடிவங்கள் தான்.

  மூலிகைகளின் பயன்பாடு அதிகம் இருந்த காலம் நீங்கள் போற்றும் அந்தகாலம் தான், நோய் இல்லையேல் மூலிகைகள் எதற்கு?

  பாட்டி வைத்தியம் என்று சொல்வதே அந்தகாலத்தில் நோய் இருந்ததற்கான சான்றுதானே?

  கொள்ளை நோய் என்ற பெயர் எப்படி வந்தது -- பிளேக் போன்ற நோய்களையே அப்படி சொன்னார்கள் , கொள்ளை காரன் வீட்டுக்குள் நுழைத்தால் இருக்கும் அனைத்தையும் கொள்ளை இட்டு செல்வான் அதுபோல இந்த கொள்ளை நோய் வந்தால் ஊரையே அழித்துவிடும் ---எங்கே அது இப்போது?

  வேண்டுமென்றால் எய்ட்ஸ் , எபோலா போன்றவற்றை சொல்லலாம் ஆனால் அவை முன்பே இருந்தவைதான் பெயர்கள் தமிழில் இருந்திருக்கும் அதுவும் நாமறியாத தமிழ் வார்த்தைகளால் அழைக்கபட்டிருக்கும்.

  மனிவியே தன் கணவனை பரத்தையர் வீட்டிற்கு சுமந்து சென்ற வரலாறு இன்றும் இலக்கியத்தில் உள்ளதை தாங்கள் அறியவில்லையோ. தேவ தாசிகள் காலாகாலமாக இருந்தவர்கள் தானே.

  ஒருவனுக்கு ஒருத்தி அந்தகாலத்தில் எல்லோராலும் கடைபிடிக்கபட்டதா? தசரதனுக்கு எத்தனை மனைவிகள், மன்னன் சாலமோனுக்கு எத்தனை மனிவிகள்?

  கோவலன் என்ன ஒழுக்கத்தோடு வாழ்ந்தான் என்பதும் வரலாற்று பதிவுகளில் உள்ளதே.


  துரியோதணன் பாஞ்சாலியின் துகிலை உரித்தானே சபையில் அதற்க்கு என்ன பெயர்?

  ராவணன் சீதையை தூக்கிசென்று சிறைவைத்தானே அதற்க்கு என்ன பெயர்?

  கம்பும் கேழ்வரகும் தேனும் திணை மாவும் அதே ரூபத்தில் இன்று அருந்தபடவில்லை என்றாலும், இன்று நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் இவை இரண்டற கலந்து இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

  அது குழந்தைகள் உணவாகட்டும், பெரியவர்கள் உண்ணும் உணவாகட்டும் , ஹார்லிக்ஸ், பூஸ்ட், செரிலாக், மால்ட்,ஓட்ஸ்,பார்லி,கார்ன் பிளேக்ஸ் , வீட்டா பிக்ஸ் .....எல்லாமே நீங்கள் சொல்லும் கம்பு, கேழ்வரகு, அரிசி,கோதுமை, தேன்,கரும்புச்சாறு - சர்க்கரை கொண்டு அக்கறையாய் தயாரிக்கப்படும் உணவுதான்.

  இன்று கடைகளில் கிடைக்கும் பேபி புட்டில் இருப்பவை எல்லாம் காய்கறிகளும் கீரையும் தானே?

  அந்த காலத்தில் சோம பானம் சுராபானம் எல்லாம் இருந்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லையோ?

  மனிதனின் வாழ்வு இறைவனின் கையில் நீங்கள் சொல்லும் ஆரோக்கிய வுணவு உண்டாலும், உண்ணாவிட்டாலும் நீங்கள் சொல்லும் கடின உழைப்பு செய்தாலும் செய்யாவிட்டாலும் குறிக்கபட்டநேரத்தில் உள்ளேன் ஐயா என ஆஜர் சொல்லி புறப்படவேண்டியதுதான்.

  எதுவாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு வாழவேண்டும்.

  ஒன்றை உயர்த்த மற்றொன்றை குறைத்து கூறுவது சரியல்ல.

  எனினும் உங்கள் முயற்ச்சியை பாராட்டுகின்றேன்.

  இந்த பதிலில் வரும் கருத்துக்கள் முழுக்க முழுக்க என்னுடைய கருத்தே, இதில் யார் மனதையும் புண் படுத்தும் நோக்கம் அறவே இல்லை.

  நன்றி

  நட்புடன்

  கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது நீண்ட கருத்துரைக்கு நன்றி.

   தாங்கள் கூறும் பண்டைகால சரித்திரங்கள் மறுப்பதற்க்கில்லை

   ஒருவனுக்கு ஒருத்தி 80 இந்தப்பதிவுக்கு அவசியப்படாத கருத்தாகத்தான் எனக்குப்படுகிறது
   அதேபோ கோவலன், ராவணன், சீதை போன்றவர்களின் வரலாறும்,

   இன்றைய ஹார்லிக்ஸ், பூஸ்ட், செரிலாக், மால்ட், ஓட்ஸ், பார்லி, இந்த எழவுகளெல்லாம் கம்பு, கேழ்வரகு தாணஇயங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது 80ம் உண்மையே...

   கடலில் பிடித்து வரும் மீனையோ, கடையில் வாங்கி வரும் இறைச்சிகளையோ உடனே சமைத்து சாப்பிடுவதற்க்கும், அதை எடுத்து ப்ரீஜரில் வைத்து மறுநாள் சமைத்து சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் ருசியில் மட்டுமில்லை, சத்தும் குறைவு 80 எல்லோரும் அறிந்த விடயங்களே....

   இதற்க்கும் தாங்கள் சொல்வதற்க்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன ?

   தங்களின் கருத்துகளால் எமக்கு மனவருத்தம் இல்லை தாங்கள் எனது அடுத்த பதிவான “ இன்றைய Moneyதர்கள் “ படித்து இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்து கருத்துரை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

   நன்றியுடன்
   கில்லர்ஜி.

   நீக்கு
 24. மனிதர்களாக வாழ்ந்தவர்கள் அவர்கள் ...
  அருமையான பதிவு
  த ம பதினொன்று

  பதிலளிநீக்கு
 25. இனி பின்னோக்கி செல்ல முடியுமா... இப்படி கேள்வி கேட்டு ஆதங்கப்படத்தான் முடிகிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இனி கண்டிப்பாக பின்னோக்கி போகமுடியாது... தாங்கள் சொல்வதுபோல் பெருமூச்சு விடவேண்டியதே...

   நீக்கு
 26. எவ்வளவு யாதார்த்தமான உண்மை. அழகாக சொல்லியிருக்கிறீங்க. நாங்களெல்லாம் நினைச்சு பார்த்துக்கவேண்டியதுதான். திரும்ப வராது.வெளிநாடுகளில் எல்லாமே (நன்மை,தீமை)சுலபமா கிடைக்கிறது. சிந்திக்க வைத்த நல்பகிர்வு.நன்றிகள்

  பதிலளிநீக்கு
 27. அன்று அவ்வப்போது சில எதிர்பார்ப்பு கனவுகளோடு வாழ்ந்தார்கள்... எந்த அவசர படபடப்பும் இல்லை !

  இன்று எதிர்பார்ப்புகளே வாழ்க்கையாய் மாறி இரத்தகொதிப்பு எகிறுவதால் அத்தனை வினையும் !!!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 28. அந்தக் கால ஆள்களின்
  நீண்ட ஆயுளின் கமுக்கம்
  அப்படியே என்னவென்று
  அழகாகச் சொன்னீர்கள்...
  கள்ளுப் புலாப் படத்தைக் கண்டதும்
  பள்ளிக்கு களவடித்து
  கள்ளுக் குடித்த நினைவு வந்ததே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே.. அது கள்ளு அல்ல பதநீர். இலங்கையிலும் உண்டுதானே...

   நீக்கு

 29. அன்புள்ள ஜி,

  வணக்கம். அன்றைய மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததைச் சொல்லியது அருமை. இன்றைய மனிதர்களைப் பற்றி இன்றைக்கு சொன்னது பற்றி...

  ‘ சனி’(பகவான் அல்ல)யன் மிகவும் பிடித்திருக்கிறது நண்பரே!
  ஐயா மாதிரி, அப்பா மாதிரி பெரிய மீசை வைக்க ஆசை வைத்த ஆசை தெரிந்தது. அப்பத்தாவை படமாய் தங்கக் காசு மாலையோடு காட்டியது தங்களின் குடும்பப் பின்னனி தெரிந்தது... மூத்தவர்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதையும் தெரிந்தது. ஞானி ஸ்ரீபூவு அவர்களின் கொள்ளுப்பேத்தியின் மகன் M. ரித்தீஷ் சிரிக்கச் சொல்லி அழகாய் காணொளி மூலம் காட்சியது நன்றாக இருந்தது.

  காரோட்டிக்கொண்டே வீடியோ எடுப்பது...கால்களால் ஓட்டுவது வழக்கம்...தங்களின் சாகசச் செயலைச் சொல்லியிருந்தீர்கள். இனிமேல் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு! முத்துச் சிதறில் பூவையும் புஷ்பத்தையும் அழகான ஓவியத்தைக் கண்டு இரசித்தேன்.
  அய்யா திரு. இ.பு.ஞானப்பிரகாசன்‘ சிங்கள...பௌத்த வெறித் தீ ’ கண்டு உள்ளம் துடித்தேன்.
  திரு. ’பசி’ பரமசிவம் அவர்களின் நன்றி கொன்ற ’பசி’ படித்தறிந்தேன்.
  நண்பர் திரு. டி.என்.முரளிதரன் அய்யா அவர்களின் ’எது கவிதை?’ என்று சொன்னது கண்டு தெளிந்தேன்.
  திருமதி.மாலதியின் 2030 கள் கண்டு மரம் காக்க நானும் வேண்டி நின்றேன்.
  திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் ‘பணம்’ இல்லாத போதும் இருக்கின்றபோதும் இருக்கும் நிலையை எண்ணி மகிழ்ந்தேன்.
  சகோதரி திருமதி.சசிகலா அவர்கள் தென்றலாகி ‘கற்க கசடற’ கவிதையை வியந்து பார்த்தேன்..
  திரு. அ.பாண்டியன், எங்க ஊர்த் தமிழன் அய்யாவின் பகுத்தறிவு சிந்தனை நேசித்தேன்.

  திரு. மதுரை தமிழை வாசித்தேன்.

  தாங்கள் தமிழ்த்தாயிடம் பெற்ற
  பேற்றை யோசித்தேன்.
  தங்களை நேசித்தேன்...
  கவிதையை யாசித்தேன்...
  தமிழைப் பூசித்தேன்.

  -நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணவையாரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி வலைச்சரக்கருத்தினை இங்கு தொடுத்தமைக்கும் நன்றி நண்பரின் கருத்தை ஏற்ற இனி விபரீதச்செயலை நிறுத்துகிறேன்

   நீக்கு
 30. கலப்படமில்லாத காற்று இராசயன உரமில்ல உணவுகள் இப்படி எல்லாவற்றையும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையையும் இனி இப்படி கதை கட்டுரைகளில் மட்டுமே காண முடியும். எத்தனை அவலங்களை சந்தித்துகொண்டிருக்கிறது இன்றைய சமூகம். சிந்திக்க வைத்த பகிர்வு சகோ.

  பதிலளிநீக்கு
 31. இழந்ததும் பெற்றதும் பல பல ! அவரவர் வாழ்ந்த காலம் பொன்னானது. வீட்டில் நெல் இருந்தது போய் அரிசி வாங்கி உண்ணும் காலத்தில் இருக்கிறோம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் முறை வருகை தரும் திரு. ஸ்ரீநிவாசன் அவர்களின் கருத்தும் சரியே...

   நீக்கு
 32. கடைசியாக வருகிறேன்.
  பலரின் கருத்துகளையும் படிக்க முடிந்தது.ஷ
  புதுமை புதுமை என்று நாம ்இழந்த வஷயங்கள் பலபல நண்பரே!
  உங்கள் பதிவு அவற்றை எல்லாம் நினைவுபடுத்தி விட்டது.
  பயனுள்ள பதிவு.
  த ம கூடுதல் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசியாக வருகிறேன் கவிஞரின் வழக்கமான செயல்தானே... கருத்துக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

   நீக்கு
 33. அறிவியல் வளர்ச்சி தவிர்க்க மற்றும் தடுக்க முடியாதது. அதனைப் பயன்படுத்தும் முறையில் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். அங்குதான் நாம் இடறுகிறோம். பழமைகளைத் தெர்லைத்துவிட்டு, புதுமை என்ற பெயரில் எதிலும் சேராமல் வாழ்வை வீணாக்குகிறோம் என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும் நன்றி தொலைந்தது இனி கிடைக்காது 80தே எமது ஆதங்கம்

   நீக்கு
 34. இன்று கணினியின்மூலம் நாம் நம் கருத்துக்களை வெளியிடுகிறோம். எனது படைப்பு அழகோ அணியோ இலக்கணமோ பிழையோ வெளியிடுகிறோம். மாதவி பின்னால் சென்ற கோவலனுக்காக நான் மாதுரி எரிக்கும் கண்ணகி அல்ல. கோவலனை விலக்கும் காரிகை என் சிந்தனையில் முன்னேற்றம்.ஐவருக்கு மனைவி அழியாப்பத்தினி அவள்மனைதிலும் ஒரு குறை கர்ணனும் இல்லையே ? என்ற ஏக்கம். என்ன இன்று கோடி ரூபாய் சர்வசாதாரணம் . ஒருநாள் ஒரு அறை வாடகை எட்டாயிரம் பத்தாயிரம் . பணம் பணம் பணம்--குணம் குப்பையிலே ;பணம் பந்தியிலே. அறிவுள்ளவனை விட பணம் படைத்தவன் இதுவும் இன்றல்ல என்றுமே உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கு நன்றி
   வாடகை எட்டாயிரம்,
   பணம், பணம், பணம்
   பணம் படைத்தவன்
   ? ? ? ? ?

   நீக்கு
 35. வலைச்சரம் வென்ற வேந்தரே !

  எனது பதிவில் நீங்களிட்ட பின்னூட்டத்துக்கான என் பதிலை நேரம் கிடைத்தால் பாருங்களேன் !

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 36. நீங்கள் கூறும் அனைத்தையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அன்றைய காலத்தில் கவலை என்பதே இல்லை; மகிழ்ச்சி மட்டும்தான் இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சாதியக் கொடுமைகளும், ஆண்டான் - அடிமைப் போக்கும் இன்ன பிறவும் அன்றும் இருந்தன. நீங்கள் கூறுவது போல் மகிழ்ச்சி தவிர வேறு எதுவும் இல்லாத, முழுமையான சமத்துவம் பேணும் சமூகம் என்பது நாம் உண்மையான தமிழர்களாக விளங்கிய, ஆரியர்கள் வருகைக்கு முந்தைய பண்டைத் தமிழகத்தில் வேண்டுமானால் இருந்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கு நன்றி நண்பரே நான் சொல்லும் காரணங்கள் வேறு, தாங்கள் சொல்லும் விடயங்கள் வேறு வழியை நோக்கிப்போகின்றதே...... வேண்டுமானால் அதைப்பற்றி எழுதுவோமே...

   நீக்கு
 37. என்னசகோநலம்தானே? அந்தப்பக்கமே(என் தளம்) காணோ.........

  பதிலளிநீக்கு
 38. அம்மிக்கல்லையும், ஆட்டுஉரலையும் மறந்தோம். காரணம் நேரம் இல்லை என்றோம். விஞ்ஞான வளர்ச்சி என்றோம். கேழ்வரகு, சாமை,வரகு,கம்பு,தீட்டப்படாத அரிசி இப்ப கொஞ்சம் காதில் விழுகிறது. பார்ப்போம். தொடருங்கள்,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோ இன்னும் எவ்வளவு விடயங்களை இழக்கப்போகிறோமோ.....

   நீக்கு