ஊர் நாட்டாமை
நாதமுனியின் மகன் மைனர் குஞ்சு ஊரில் இழுத்து வந்த ஏழரையால் ஊர் கூடி நாட்டாமையை
பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள் அந்த வேதனையில் நமது நாதமுனி ஊடகழி கடந்து
இருபது வருடங்களாக தான் பஞ்சாயத்து நடத்திய ஆலமரத்தின் கீழ் நின்று பாடுகிறார்.
இதை எந்த ராகத்தில் பாடினால் பொருந்தும் என்பதை திரு ஸ்ரீராம்ஜி அல்லது சகோ
திருமதி கீதா ரங்கன் அவர்கள் இப்பொழுது மேடைக்கு வந்து சொல்வார்கள் என்று
விழாக்கமிட்டியாரால் எதிர் பார்க்கப்படுகிறது.
மானமுள்ள
என் நாடே
நீ ஊனமாகி போனதென்ன
ஆணை இட்ட என் கைகள்
கோணலாகி விட்டதென்ன
மானம்தானே
என் உசுரு..
மௌனமான கோலமென்ன
என் சொல்லுக்கு கட்டுப்பட்ட
எம் செல்வ மக்கள் இங்கே
நீதி
மன்றம் செல்வதென்ன
நான் சொல்லும் தீர்ப்பு இன்று
நீர்த்து இங்கே நிற்பதென்ன
வானுயர்ந்த எம் மானம்
காற்றில் இங்கே பறக்குதடி
தாங்கி கொள்ள கிறங்குதடி
கொடியும் இங்கு இறங்குதடி
சேதி சொல்ல மறுக்குதடி
பாதியில நின்றாச்சே
நாதியில்லை என்றாச்சே
ஊதி இங்கே விட்டாச்சே
பேதியில போற மக்கா
கோதை மகன் நானும்
பாதையில தான் நடந்தா
போதையில கிடப்பவனும்
கீதை எடுத்து படிப்பானே
சாரட்டுல நான் போனா
முரட்டு ரௌடிகளும்
இருட்டு நேரத்திலும்
சரட்டுனு பறந்துடுவான்
நாட்டுக்கோட்டை நாட்டாமை
நாதமுனி ஊடகழி ஏஞ்சாதி
நாடறிய வாழ்ந்த நானும்
காடறிய போகப் போறேன்...
மானமுள்ள
என் நாடே
நீ ஊனமாகி போனதென்ன
ஆணை இட்ட என் கைகள்
கோணலாகி விட்டதென்ன
சிவாதாமஸ்அலி
கே.பாலசந்தரோட தண்ணீர் தண்ணீர் படித்தில் பி.சுசீலா பாடிய கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே பாட்டு போல இருக்குதே...
Chivas Regal சிவசம்போ-
கை கோணலா... யாராவது செய்வினை செஞ்சுட்டாய்ங்களோ ?
நீ ஊனமாகி போனதென்ன
ஆணை இட்ட என் கைகள்
கோணலாகி விட்டதென்ன
மௌனமான கோலமென்ன
என் சொல்லுக்கு கட்டுப்பட்ட
எம் செல்வ மக்கள் இங்கே
நான் சொல்லும் தீர்ப்பு இன்று
நீர்த்து இங்கே நிற்பதென்ன
வானுயர்ந்த எம் மானம்
தாங்கி கொள்ள கிறங்குதடி
கொடியும் இங்கு இறங்குதடி
சேதி சொல்ல மறுக்குதடி
நாதியில்லை என்றாச்சே
ஊதி இங்கே விட்டாச்சே
பேதியில போற மக்கா
பாதையில தான் நடந்தா
போதையில கிடப்பவனும்
கீதை எடுத்து படிப்பானே
முரட்டு ரௌடிகளும்
இருட்டு நேரத்திலும்
சரட்டுனு பறந்துடுவான்
நாதமுனி ஊடகழி ஏஞ்சாதி
நாடறிய வாழ்ந்த நானும்
காடறிய போகப் போறேன்...
நீ ஊனமாகி போனதென்ன
ஆணை இட்ட என் கைகள்
கோணலாகி விட்டதென்ன
கே.பாலசந்தரோட தண்ணீர் தண்ணீர் படித்தில் பி.சுசீலா பாடிய கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே பாட்டு போல இருக்குதே...
கை கோணலா... யாராவது செய்வினை செஞ்சுட்டாய்ங்களோ ?
ஹா.. ஹா.. ஹா... இதை விரக்தி தாளம், சோக ராகத்தில் பாடலாம் ஜி.
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி மிக்க நன்றி.
நீக்குஅசத்தல் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குசோக ராகத்தில் ஒரு பாடலா? ஹா ஹா
பதிலளிநீக்குவருக தமிழரே "சோகம்கூட சுகமாகும்" பாடல் கேட்டதில்லையா ?
நீக்குநாதமுனி சோகமாய் பாடி விட்டார். பாரம் இறங்கி மனது லேசாக மாறி இருக்கும்.
பதிலளிநீக்குசெய்வினையை இறை அருளால் போக்கி கொண்டால் கை கோணல் சரியாகும்.
வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குசோகமா?
பதிலளிநீக்குஇதோ பெருமை
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே.ஏ.
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
இயல் இசை நாடகம்
அறம் பொருள் இன்பம்
விலங்கும் செந்தமிழ் நாடே
எங்கள் திராவிடப் பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
சரித்திரம் பாடும் காவேரி
இளம் தளிர்க்கொடி போலே ஓடுகிறாள்
சங்கம் வளர்த்த மதுரையிலே
எங்கள் தமிழ் மகள்
தமிழிசை பாடிகிறாள்
Jayakumar
வாங்க ஐயா கவிதை அருமை. தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஐயா இது கவிதை இல்லை. சினிமா பாட்டு. T R மஹாலிங்கம் பாடியது. திராவிட இயக்கம் தீவிரமாக இருந்தபோது.
நீக்குJayakumar
எனக்கும் கேட்ட ஞாபகம் வந்தது... மீள் வருகைக்கு நன்றி
நீக்குமாலையிட்ட மங்கை படத்தில் கண்ணதாசனே தயாரித்துப் பாடலையும் எழுதி விஸ்வநாதன்/ராமமூர்த்தி இசையில் டி.ஆர். மஹாலிங்கம் பாடியது இந்தப் பாடல். நான் சின்னக் குழந்தையாக இருந்தப்போ நடைபெற்ற திமுக கூட்டங்களில் எல்லாம் இந்தப் பாடலைத்தான் முதலில் போடுவார்கள். அப்போல்லாம் இது ஏதோ கட்சிப்பாடல் என்றே நினைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பின்னரே இது திரைப்படப் பாடல் என்றும் கண்ணதாசன் திராவிடத்தை விட்டு வெளியேறும் முன்னர் எழுதிய பாடல் என்றும் அறிந்து கொண்டேன்.
நீக்குவருக சகோ தங்களது மேலதிக தகவல்களுக்கு நன்றி.
நீக்குஆம் நானும் கட்சி கூட்டங்களில் கேட்டதுண்டு.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதாங்கள் இயற்றிய பாடல் அருமையாக உள்ளது. இந்த திரைப்பாடல் எப்போதோ கேட்டது. இப்போதும் கேட்டேன். இந்த ராகத்துடன் தங்களது பாடலும் பொருந்தி வருகிறது. ரசித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பாடல் வரிகளை பொருத்தி பாடிப்பார்த்தமைக்கு நன்றி.
நீக்குபல பாடல்களையும் மெட்டுக்கேற்ற விதத்தில் மாற்றி அமைக்கும் நீங்கள் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி இருந்தால் அமோகமாக வெற்றி அடைந்து புகழும், பெருமையும் பெற்றிருப்பீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்து கண்டு மகிழ்ச்சி.
நீக்குஆனால் நான் தமிழ் வார்த்தைகளில்தானே பாடல் எழுதுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஆனால் என்னை யார் நம்புவார்கள் ?
இந்த பாடல் வரிகளுக்குகூட சூழலை சொல்லி எழுதுகிறேன் இதுதான் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் அடிப்படை நிலை (அதாவது பழைய நிலை)
உங்கள் பாடல் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகவிஞர் அவர்களுக்கு வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குபடித்தேன்.. ரசித்தேன்.. தேன்..
பதிலளிநீக்குவாங்க ஜி நலமா ? வருகைக்கு நன்றி
நீக்குகவிதை உங்களுக்கு நன்றாக வருகிறது நண்பரே. விரைவில் திரை படங்களுக்கும் நீங்கள் எழுத வேண்டும் என்று ஆசை படுகிறேன்
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது ஆசை நிறைவேறினால் மகிழ்ச்சி.
நீக்குகில்லர்ஜி நான் மேடை ஏறி எல்லாம் சொல்லலை....கீழ கூட்டத்துல இருந்தே சொல்லி விடுகிறேன்.....நாட்டுப் புற மெட்டுல முகாரி ..ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
வருக முஹாரியா ? தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு