தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 17, 2022

ஆனந்தம் பொங்கட்டும்



புதாபி நண்பர் குடும்பத்தோடு அங்கு வாழ்கிறார். இந்தியாவில் உள்ள தனது வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு மற்றும் வங்கிக்கான குறுஞ்செய்திகளுக்கு எனது அழைபேசிக்கு வருவது போல் செய்து விட்டு போய் விட்டார். அவரது குடும்பத்துக்கான சில செலவுகளை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். இருப்பினும் செலவு செய்ய வேண்டிய அவசியங்கள் பெரும்பான்மையாக வராது காரணம் குடும்பம் அங்கு இருப்பதால்...
 
அவர் வங்கிக்கு பணம் செலுத்தினால் உடன் எனக்கு குறுஞ்செய்தி வரும் நான் வங்கி புத்தகத்தில் பதிவு செய்து புகைப்படம் எடுத்து புலனத்தில் அவருக்கு அனுப்பி விடுவேன். அவரது வங்கி கணக்கில் பணம் கூடிக்கூடி வரும்பொழுது என் மனம் ஆனந்தக் கூத்தாடியது, கூத்தாடுகிறது, கூத்தாடும். காரணம் எனது கணக்கில் உயர்வது போன்ற பிரமை, சந்தோஷம். மேலும் நான் அவருக்காக தினந்தோறும் இறையை பிரார்த்தனை செய்கின்றேன்.
 
இன்றைய சூழலில் தனது பணபரிவர்த்தனைகளை தனது மனைவியிடம்கூட மறைப்பவர்கள் உண்டு. மேலும் பிறர் அறிந்தால் கண்ணேறு வரும் என்ற நம்பிக்கையும் உலவுகிறது. இப்பணத்தை எனது செலவுக்கும் எடுத்துக் கொள்ளும் உரிமையை நண்பர் கொடுத்து இருந்தாலும் நான் எடுப்பதில்லை. மேலும் அவருடைய வங்கி கணக்கில் பணம் பெறுகி வராமல் இருந்தால் எனது கண்ணேறு பட்டு விட்டதோ என்ற ஐயம்கூட தோன்றலாம். ஆனால் பணம் பெறுகி வருவதில் எனக்கு மகிழ்ச்சியே... காரணம் என்மீது முழுமையான நம்பிக்கை வைத்துதான் நண்பர் தந்து இருக்கிறார். அந்த நம்பிக்கையை எனது உயிர் மூச்சுவரை காப்பாற்றுவதே எனது கடமை.
 
நான் எதற்காக இவைகளை நினைவு கூர்கிறேன் என்றால் இப்படியொரு நம்பிக்கைவாதி எனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமே... கிடைத்ததோ துரோகிகள் மட்டுமே... நான் ஏமாந்து விட்டு பிறரை குறை சொல்வது தவறு. எனது கணிப்பு தவறு நண்பருடைய கணிப்பு சரியானது போலும். 17.06.2022 இன்று அபுதாபியில் 13-வது திருமணநாள் காணும் எனது நண்பரும், மனைவியும், குழந்தைகளோடு மென்மேலும் வாழ்வில் உயர்ந்து சீரும், சிறப்புமாய் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன். எமது நண்பரை வலையுலக நட்புகளான தாங்களும் மனதார வாழ்த்தலாமே...
 
அன்புடன் கில்லர்ஜி தேவகோட்டை.

28 கருத்துகள்:

  1. தங்களின் நண்பர், தங்களை தன் வீடு கட்டுவதைக் கண்காணித்து சரியாகக் கட்டப்பட உதவச் சொன்னாரா? தங்கள் நண்பரின் குடும்பம் நீடூழி வாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழரே தங்களது உடனடி வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. நம்பிக்கை என்பது இரண்டு சக்கர வண்டி. இரண்டுமே நம்பிக்கைக்குரியதாக இருக்கணும். ஒரு சக்கரம் ஓட்டை உடைசல்னா வேலைக்காகாது. நீங்கள் இருவருமே பாராட்டுக்குரியவர்கள். நீங்கள் நம்பிக்கை வைத்த அந்தச் சக்கரம் ஓட்டைஉடைசலாக அமைந்தது விதிதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே மிகச் சரியாக சொன்னீர்கள்.

      தங்களது மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. உங்கள் நண்பர் அவர்களுக்கும் அவர் துணைவியாருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!
    என்றும் உங்கள் நட்பு வாழ்க! வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நண்பரது குடும்பத்தை வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  4. திருமணநாள் காணும் உங்கள் நண்பரும் அவரது துணைவியாரும் பல்லாண்டு இனிதாக வாழ வாழ்த்துகள்.  உங்களை போன்ற நண்பர் அவருக்கு கிடைத்ததும் அவர் செய்த பாக்கியமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதலில் இன்று திருமணநாள் காணும் தங்கள் நண்பருக்கும், அவர்தம் துணைவியாருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

    இவருக்காகத்தானே (மதுரையில் என நினைக்கிறேன்.) தாங்கள் முன்னின்று வீட்டை நல்லபடியாக கட்டித் தந்து கிரஹப்பிரவேசம் எல்லாம் செய்து வைத்தீர்கள். இப்படிபட்ட நல்ல நண்பரை பெற்றிருக்கும் தங்களுக்கும், தங்களைப்போல ஒரு உண்மை நிறைந்த நம்பிக்கையான நட்பு கிடைக்கப் பெற்றிருக்கும் தங்கள் நண்பருக்கும் மனமுவந்த வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் வாழ்நாள் முழுக்க நல்ல நட்புடன் இனிது வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      ஆம் கிரஹபிரவேசம் செய்த வீடுதான்.

      நீக்கு
  6. உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்/ஆசிகள். அவர் குடும்பத்தினருக்கும் நல்லாசிகள். அனைவரும் இதே போல் நீண்ட பல வருடங்கள் நிம்மதியுடன் வாழவும் பிரார்த்தனைகள். முன்னர் நீங்கள் வாட்சப் குழுவில் பகிர்ந்து கொண்ட வீடு இந்த நண்பருடையதோ? நீங்கள் தான் கட்டிக் கொடுத்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் மிக்க நன்றி.
      ஆம் ஏற்கனவே கனவு நனவாகியது என்ற பதிவில் சொல்லி இருந்தேன்.

      நீக்கு
  7. சிறப்பான நட்பு...

    நண்பருக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  8. நட்பிற்கு இலக்கணம் வகுத்த உங்கள் இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வெகு காலமாக பதிவுலகம் வரவில்லையே... வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  9. உங்கள் நண்பருக்கும் அவரது இல்லத்தரிசிக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!
    மற்றவர்களின் நம்பிக்கையை பெறுவதும் அப்படி பெற்ற அந்த நம்பிக்கையை காப்பாற்றுவதும்கூட வாழ்க்கையில் ஒரு கொடுப்பினை தான்! உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது சிறப்பான கருத்தை பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  10. தங்கள் நண்பருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. நல்லதொரு நட்பு. நட்பும் நல்லதொரு அறமே..

    நாளும் வளர்க..
    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  12. நம்பிக்கையான நட்புக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. உங்கள் நண்பருக்கும் துணைவியாருக்கும் வாழ்த்துகள். உங்களைப் போன்ற நண்பர் கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்கணும் .
    இனிய நட்புகள் என்றும் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  14. இவ்வாறாக நண்பர்கள் அமைவது அரிதே. உங்கள் நட்பு தொடர வாழ்த்துகள்.
    ஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின்
      மகத்தான பணிகளுக்கு இடையே வருகை தந்தமைக்கு நன்றி

      நீக்கு