தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 01, 2022

பத்தல பத்தல சம்பளம் பத்தல...


ணக்கம் வத்திக்குச்சியண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தண்ணிக்குடம் நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகங்கள் கேட்டுப் போகலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.
 
பொண்டாட்டி, புருசன் ரெண்டாக இருந்தால் மூணாக செய்யும் வளையல்’’. அப்படீனு டி.எம்.எஸ். அண்ணாச்சி பாடுனாறே இது எப்படிணே ?
பொண்டாட்டியும், புருசனும் சண்டை போடும்போது வளையல் உடைஞ்சு மூணு துண்டாகிடும் தம்பி அதனாலதான்டா.
ஏன் நாலு துண்டா ஆகாதா ?
? ? ?
 
ஏண்ணே... இளையராஜா ‘’அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’’ அப்படினு பாடுனாரே இதுக்கு என்னணே அர்த்தம் ?
தம்பி நாயகனோட மனசு வானத்தோட உயரத்துக்கு உயர்வானது அந்த அளவுனு சொல்றாருடா...
அப்படீனாக்கா... வானத்தோட அளவு எவ்வளவுணே ?
? ? ?
 
ஜானகியம்மா, ‘’என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையிலே கேட்டாக’’ அப்படினு பாடுனாங்களே... இதுக்கு உண்மையான அர்த்தம் என்னணே ?
தம்பி அதாவது அந்த படத்து நாயகி கௌரவமான குடும்பத்துல பிறந்தது, கண்ணியமா வளர்ந்தது அப்படினு சொல்றதுக்காக மானமுள்ள பொண்ணுனு பாடுனாங்கடா...
அப்படீனாக்கா... மத்தவுங்களுக்கு மானம் இல்லையாணே ?
? ? ?
 
ஏண்ணே நம்ம மலேசியா வாசுதேவன் ‘’நான் மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு, கேளு தம்பி’’ அப்படினு பாடுனாரே... இது எப்படிணே ?
தம்பி அந்தப் படத்து நாயகன் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி சுதந்திரமா நல்லா இருந்தான், இப்ப கல்யாணம்னு மூணு முடிச்சு விழுந்ததும் வாழ்க்கை மாறிப்போச்சு அதனாலதான் அப்படி பாடுனாருடா...
அப்படீனாக்கா... அஞ்சு முடிச்சு போட்டா அறிவாளி ஆயிடலாமா ?
? ? ?
 
ஏண்ணே... ‘’லாலாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்கம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா’’னு நித்தியஸ்ரீ பாடுனாரே இது என்ன அர்த்தம்ணே ?
தம்பி கங்கம்மாவை சுற்றி வந்து பார்த்தால் இடுப்புல டப்பி கட்டி இருக்காம் அதைப் பார்க்கலாம்னு அர்த்தம்டா...
ஏன் சுத்தி வராம பார்த்தால் தெரியாதா ?
? ? ?
 
‘’மனதில் உறுதி வேண்டும் வார்த்தையிலே தெளிவு வேண்டும்’’னு பாடுனாரே யேசுதாஸ் இது எப்படிணே ?
தம்பி நல்ல உறுதியான மனசோட இருந்தால்தான் இந்த உலகத்துல வெற்றி பெறமுடியும், அதே மாதிரி தெளிவாகவும் பேசணும்னு சொல்றாருடா...
அப்படீனாக்கா... டாஸ்மாக் போயிட்டு வந்தால் தெளிவா பேசமுடியுமாணே ?
? ? ?
 
‘’அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே’’னு பாடுனாரே எஸ்.பி.பி அது எப்படிணே ?
தம்பி மனைவி அழைகாகவும், அன்பானவளாகவும் இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குனு சொல்றாருடா...
அப்படீனாக்கா... அழகா இல்லாதவங்க வீட்ல சந்தோஷம் இல்லையாணே ?
? ? ?
 
ஏண்ணே... ‘’முந்தானை பார்த்து முன்னூறு கவிதை எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி’’னு ஜெயச்சந்திரன் பாடுனாரே இதுக்கு அர்த்தம் எதுணே ?
தம்பி இன்னைக்கு கவிஞர்கள் பெண்களை தவறான நோக்கத்துல பார்த்து எழுதுறாங்கனு தாக்கி பாடுறார்டா...
அப்படீனாக்கா... சேலையை பார்த்து எழுதலாமாண்ணே ?
? ? ?
 
‘’என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே’’ அப்படினு சித்ரா பாடுனாங்களே... இது எப்படிணே ?
தம்பி வாழ்க்கை நல்லா அமையாததால வெறுப்புல கர்ப்பத்துலயே கரைஞ்சிருக்கலாமோ அப்படி பாடுறாங்கடா...
அப்படீனாக்கா... அம்மாவுக்கு தெரியாம தன்னால கரைக்க முடியுமாணே ?
? ? ?
 
கமல்ஹாசன் ‘’பத்தல பத்தல குட்டியும் பத்தல புட்டியும் பத்தல மத்தளம் அட்றா டேய்’’ அப்படினு பாடுனாரே... இதுக்கு அர்த்தம் என்ணணே ?
அதாவதுடா தம்பி தனக்கு சம்பளம் பத்தலைனு இலைமறைகாயா நூல் விட்டு பாடுறாருடா...
அப்படீனாக்கா... குட்டியும், புட்டியும் கொடுத்தா சம்பளம் வாங்க மாட்டாராண்ணே ?
? ? ?
 
என்ணணே... இப்படி முறைக்கிறீங்க ?
ஏண்டா... நாதாரிப்பயலே... இப்படி எல்லாத்துக்கும் குதற்கமா கேள்வி கேட்டால் நான் பதிலுக்கு எங்கேதான்டா போறது... ? இந்த பக்கம் வராதே ஓடுறா... எங்கள் BLOG பக்கம் போயி கேளுடா... அங்கே சொல்லுவாங்க...
அங்கே கேள்வி கேட்டால் ஸ்ரீராம்ஜி பணம் தருவாராண்ணே ?
? ? ?
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சிவாதாமஸ்அலி-
சம்பளம்தான் இப்ப டாப்பு டக்கருல போயிருச்சே...
 
Chivas Regal சிவசம்போ-
எங்கள் பிளாக் ஸ்ரீராம்ஜி & கௌதமன்ஜி குரூப்ல, கேள்வி கேட்டால் பணம் கொடுக்கிறாங்களா ?

Share this post with your FRIENDS…

36 கருத்துகள்:

  1. அன்பின் வணக்க ம்..
    வாழிய நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சு முடிச்சு போட்டி அறிவாளி ஆயிடலாமா.. ண்ணே!..

      அருமை.. அருமை..

      நீக்கு
    2. வாங்க ஜி தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. கல்லூரி வயதில் ஒருவனுடன் பழகிக் காதலித்து விட்டு வேறொருவனுடன் கல்யாணம் என்றதும் பழைய காதலனுக்கு விஷம் கொடுத்த குணவதி தற்போது சிறையில்.. அங்கே கழிவறையில் அமிலத்தைக் குடித்து விட்டு தற்போது மருத்துவமனையில்!..

    கல்வியோ கல்வி..
    காதல் காதல்!..

    பதிலளிநீக்கு
  3. நல்லவேளை.. இவனுக்குக் கொடுத்த விஷத்தை வரப் போறவனுக்குக் கொடுக்காம இருந்தாளே..

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன் அனைத்தையும். எங்கள் ப்ளாக்கல கேள்வி கேக்கறவங்க ஐம்பது பைசாவுக்கு DD எடுத்து கேள்வியோட சேர்த்து அனுப்பணும் ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணி ஆர்டர்னா இதுவரை அனுப்பிக்கிட்டிருக்கேன். வந்து சேர்ந்ததா?

      நீக்கு
    2. டி.டி செலவே ஐம்பது ரூபாய் வருமே ஜி

      நீக்கு
  5. லாலாக்கு டோல் டப்பி நித்யஸ்ரீ பாடியதா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எனக்கு தெரியாததால் கூகுள் ஆன்ட்டியிடம் கேட்டேன். அவர் சொன்ன தகவல்தான் ஜி.
      அல்லது இதை பாடியது வேறு நபரா ? தெரிந்தால் சொல்லவும்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கேள்வியும் பதிலுமாக பதிவு அருமையாக உள்ளது. ஒவ்வொன்றையும் படித்து ரசித்தேன். அண்ணன் தம்பி பெயர்களை எப்படித்தான் நகைச்சுவையாக தேர்ந்தெடுக்கிறீர்களோ? அதிலிருந்தே நகைச்சுவை ஆரம்பமாகி விடுகிறது. எல்லாவற்றையும் ரசித்தேன். இப்படி வித்தியாசமாக யோசித்து எழுத தங்களால்தான் முடியும். வாழ்த்துக்கள் சகோதரரே.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. அழகான மனைவி... - இதற்கான பதில் கமா இல்லாத்தால் பகீர் என எண்ணவைக்கிறது. நமக்குனா அழகான அன்பான மனைவி வாய்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கமா போட்டு இருக்கிறேனே....

      நீக்கு
  8. எதுக்கு மனைவி மட்டும் கோதாது, அன்பான துணைவியிம் வேணும்னு எழுதியிருக்காரு? இந்தச் சந்தேகம் உங்களுக்கு வரலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனைவிக்கு ஒத்தாசையாக துணைவி இருக்கட்டும் என்ற பெருந்தன்மையாக இருக்குமோ...

      நீக்கு
  9. இப்படியா கேள்வி கேக்கறது ..................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      ஆம், தண்ணிக்குடத்துக்கு விவஸ்தையே கிடையாது போல...

      நீக்கு
  10. கேள்வியும் பதிலும் நன்றாக இருக்கிறது.
    இடக்கு, மடக்கு நகைச்சுவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  11. வெவரமான கேள்வி பதில் ரசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  12. நேத்தே வந்து பதில் சொல்லிட்டுப் போனேன். வரலை போல1 :( நக்கல் கேள்விகளும் அப்பாவியான பதில்களும் (இஃகி, இஃகி, இஃகி) அருமை. நேத்திக்கு என்ன சொல்லி இருந்தேன்னு நினைவில் வரலை! :( உங்களுக்குத் தான் இப்படி எல்லாம் தோணும். :)))))

    பதிலளிநீக்கு
  13. ரசிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  14. "லா லாக்கு டோல் டப்பிமா
    கண்ணே கங்கம்மா உன் இடுப்ப
    சுத்தி திரும்பி பாரம்மா..." இந்த பாடலுக்கான விளக்கம் உங்கள் தயவால் இப்போதுதான் தெரிந்துகொண்டேன்...

    இதேபோல வரலாற்றில் தடம் பதித்த பாடலான
    "முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
    முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா"
    பாடலுக்கும் அர்த்தம் சொல்லிருந்தால் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      டாய்லெட் சமாச்சார பாடல்கள் பற்றிய விவரங்கள் எமக்கு இன்னும் தெரியாது, தெரிந்து கொண்டு பதிவு போடுகிறேன்.

      நீக்கு
  15. வணக்கம் ஜி !

    பெண்டாட்டி புருஷன்
    ரெண்டாக இருந்தா
    மூணாகச் செய்யும் வளையல்!

    அதாவது புருஷன் பொண்டாட்டி பிரிந்திருக்கும் போது இந்த வளையல் அணிந்தால் அவர்கள் ஒன்று சேர்ந்து இருவரும் இன்னொரு உயிரைப் பிறப்பிப்பார்கள் என்னும் பொருளில்தான் பாடலாசிரியர் இப்படி எழுதி இருக்கிறான் ஆனால் அதற்கு ஜி கொடுத்த விளக்கம் ஹாஹாஹா ....அருமை ஜி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே...
      என்னோட அறிவுக்கு எட்டியது இம்புட்டுதான்...

      நீக்கு