நானும் காதலிக்க ஆசைப்பட்டதேன்-A
அவளிடம் சொல்லி வசைபட்டதேன்-B
கல்யாண
தரகரிடம் சொல்லி வந்தேன்-C
தெருப் பெண்ணை வளைக்க நினைத்தேன்-E
கடிதத்தோடு
மல்லிகைப்பூ இணைத்தேன்-F
அவள்
செருப்பைக் கழட்டினாள் நகர்ந்தேன்-G
எழுதிய
கடிதத்தை சுக்கு நூறாய் கிழித்தேன்-H
வீட்டுக்கு
வந்ததும் ஆசையை மறந்தேன்-I
தரகர்
வந்தார் திருமணத்தை மறுத்தேன்-J
கல்யாண
ஆசையை மறந்து வளர்ந்தேன்-K
நானும்
பிரதமராவேன் நெஞ்சம் நிமிர்ந்தேன்-L
அரசியல்வாதியாகி
நாயாய் அலைந்தேன்-M
பொது
மக்களுக்கு கடினமாய் உழைத்தேன்-N
சொத்துகளை
விற்று செலவு செய்தேன்-O
மக்கள்
மனதில் என்னை விதைத்தேன்-P
எதிரிகளின்
சூழ்ச்சிகளை கருவறுத்தேன்-Q
எதிரணியில்
சேர்பவர்களை வெறுத்தேன்-R
எனது
அணிக்கு வருபவர்களை மதித்தேன்-S
என்
கட்சி பலமானதை கண்டு மகிழ்ந்தேன்-T
மேடையில்
கிழவிகளை கட்டி அணைத்தேன்-U
நாமமிட்டு
குழந்தைக்கு முத்தம் கொடுத்தேன்-V
வெற்றி
பெற குறுக்கு வழியில் சதித்தேன்-W
எதிர்க்கட்சியினரை
வென்று சாதித்தேன்-X
எதிரணியின்
கூட்டத்தை கலைத்தேன்-Y
வாழ்க
கோஷத்தால் தூக்கம் கலைந்தேன்-Z
ச்சே இவ்வளவு நேரம்
கண்டது கனவா ? மனம் நொந்து எழுந்து கழிவறைக்கு சென்றான் சட்டசபையில் செக்யூரிட்டி வேலை
செய்யும் செல்வம்.
காணொளி
அப்போ அந்தக் காதல் என்னதான் ஆச்சுங்க...
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி...
நீக்குவருகை கண்டு மகிழ்ந்தேன்.
அதை சொல்ல வாய் திறந்தேன்.
ஏனோ எல்லாம் மறந்தேன்.
மீண்டும் ஒரு முத்திரை..
பதிலளிநீக்குகாணொளி கலகலப்பு..
பதிலளிநீக்குவாங்க ஜி காணொளி கொண்டமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்களின் தேர்வும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு வரிகளையும் தேன் கொண்டு எழுதியதை ரசித்தேன். பொதுவாக ஆசைகள்தான் நம் தூக்கத்தில் கனவாகிறது. ஆனால் கனவு பலிக்காது போலும்..!
எப்படித்தான் இந்த மாதிரியெல்லாம் யோசித்து சிறப்பாக எழுதுகிறீர்களோ..! . இந்த திறமை தங்களுக்கு மட்டுமே. உள்ளது. ஒவ்வொரு தடவையும் தங்கள் பதிவைப் பார்த்து வியந்து போகிறேன். மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரரே.. காணொளி பிறகு பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபதிவை இரசித்து படித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!
காணொளி அவசியம் பாருங்கள்.
உங்கள் வழக்கமான நையாண்டிப் பதிவு. யாரை நினைத்துனு தான் புரியலை. காணொளி சிரிப்பாய்ச் சிரிக்கிறது. அது சரி, வழிமறித்துக் காதலித்த பெண் என்னவானாள்? "தேனா"ய் இனிக்க வைத்திருக்கீங்க.
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குசெல்வம் கனவில் கண்டு உளறியதற்கு நான் எப்படி விளக்கம் தரமுடியும் ?
தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி.
அருமை. கவிஞருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபாவம் செக்யூரிட்டி செல்வம் இப்படியாச்சும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கட்டும்!!!!!
பதிலளிநீக்குகாணொளில அந்த ஆள் என்னாச்சு? ஏதாச்சும் பிரச்சனையா அவருக்கு? குடிபோதையோ?
கீதா
போதைதான் பாதையை மறைக்கிறது.
நீக்குகாதலும் அரசியலும் கனவில்...! அருமை...
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்...
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி
நீக்குகாதலில் தொடங்கி......அரசியலில் கனவு ....ஹா......ஹா.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஎப்போதும் நகைச்சுவை கலந்தவை...ஜீ வாழ்த்துக்கள்
நீக்குவருக கவிஞரே வருகைக்கு நன்றி
நீக்குஅத்தனையும் செல்வம் காணும் கனவா?
பதிலளிநீக்குகாணொளி சிரிப்பு.
பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்கு