தீயனூர் காலை ஆறு மணி உரிச்ச மண்டையன் டீ ஸ்டாலில் அட்டும்,
தருத்திணியமும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.
வணக்கம் அட்டண்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தருத்திணியம் நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்கே ?
இருக்கேன்ணே.... சில சந்தேகங்கள் கேட்கணும் அதான்
வந்தேன்ணே...
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்
உங்களுக்கு ஏண்ணே அட்டுனு பேரு வச்சாங்க ?
அதுடாத்தம்பி எம்பேரு அழகு முத்து நம்மளைப் காலைல முதல்ல பார்த்துட்டு போறவனுக்கு அட்டுப் பிடிச்சு அன்றைக்கு பூராம் விளங்காது. அடிதடி போலீஸ் கேசுனு ஆகிப்போயிடும். அதனால் இப்படி பேரை எனக்கு வச்சுட்டாங்கடா... இன்றைக்கு காலைல நீ வந்து இருக்கே என்னாகுதோ பார்ப்போம், சரி உனக்கு ஏண்டா தருத்திணியம்னு பேரு வச்சாங்கே.. ? அப்படியே அண்ணனுக்கு டீ சொல்லு.
டே உரி அண்ணனுக்கும், எனக்கும் ஸ்பெஷல் டீ போடுறா... இப்படி
அடுப்பு பக்கமா உட்காருங்கண்ணே குளிருக்கு இதமா இருக்கும். எம்பேரும்
அறிவழகன்தான்ணே... நம்ம ஊருக்காரங்கதான் காலைல எம் மூஞ்சியில முழிச்சா
தருத்திணியம் தாண்டவம் ஆடுதுனு சொல்லி அப்படியே கூப்படுறாங்கே...
உங்கூடவும் கவனமாகத்தான் இருக்கணும் போலயே...
ஏண்ணே மாமியார் வீட்டு சோறு ருசியா இருக்குனு நம்ம
நடுத்தெரு நல்லமுத்து பொண்டாட்டி வீட்டோட இருக்கானே... இதைப்பத்தி கொஞ்சம் எடுத்து
சொல்லுங்கண்ணே ?
அடே வசியச்சோறு ருசியாத்தான்டா இருக்கும்.
என்ணணே அப்படீனாக்கா, பூச்சி மசால் பொடியால ருசிக்கலையா ?
அடேய் அதெல்லாம் சப்போர்ட்டுக்குதான்டா, அந்த வகையறா பூராம் இப்படித்தான்டா செய்யிவாங்கே..
சரிண்ணே அது எங்கேணே செய்வாங்க ?
எல்லாம் மஞ்சப்பட்டணம் மல்லிகாதான், ஏன் உனக்கு ஏதாவது செய்வினை செய்யணுமா ?
டேய் தருத்திணியம் இந்தா டீ குடிச்சுட்டு கெளம்பு காலைல
தரித்திணியம் பிடிச்ச பேச்சை பேசாம...
டே நீ என்னடா ஏதோ ஓசியில கொடுக்கிற மாதிரி சலிச்சுக்கிறே... டீக்கடைனா, நாலு பேரு நாலு வார்த்தை பேசுறாப்பலதான் வரும். இந்தாணே நீ டீயைக் குடிணே...
நீ காலைல வந்தாலே எப்போ என்ன நடக்குமோனு பதறுதுடா...
அதனாலதான்டா... சாமி டீயை குடிச்சுட்டு கிளம்பு.
உரிச்ச மண்டையன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த நேரத்தில் வந்த செங்கல் ஏற்றிய லாரி அடித்த திடீர் ஹார்ரனில் பதறிப்பறந்த சேவல் ஒன்று டீக்கடையின் உள்ளே பறக்க, தன்மேல் மோதியதில் நிலை குலைந்த உரி சட்டென சேவலைத் தள்ளிவிட, சேவல் பால் கொதித்த சட்டியை வெளியே தள்ளிவிட பக்கத்தில் குளிர் காய உட்கார்ந்திருந்த அட்டு மீது பால் கொட்டி அவன் அலறி அடித்து சட்டையை கழற்றினான். உடல் முழுவதும் வெந்து தணிந்தது காடு போல நின்றான்.
தருத்திணியம் சட்டென குடத்திலிருந்த தண்ணியை எடுத்து அட்டு
மீது கொட்ட, அவன் மேலும் அலறினான். டே மூதேவி தண்ணியை ஊத்தலாமாடா... உடனே
ஆம்புலன்ஸுக்கு போன் போடுடா... நீ வந்தாலே ஏதாவது நடக்கும்னு பயந்தேனடா...
விசயம் கேள்விப்பட்டு அட்டுவின் மனைவி அரளியம்மா வந்து
ஒப்பாரி வைத்தாள் பாட்டில் தருத்திணியத்துக்கு பாட்டு கிடைக்க,
இதைக்கேட்ட தருத்திணியம் மனைவி மூலிக்கன்னி அட்டுவிக்கு எதிராக ஒப்பாரி வைக்க... அவனுக்கும் பாட்டு கிடைத்தது.
கிராம மக்கள் கூட்டம் கூடிட எல்லோரும் வரும் ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தனர், அட்டுவை ஆஸ்ப்பெட்டலுக்கு அனுப்பி வைக்க....
ஆம்புலன்ஸ் வருமா ? வரும்.....
கில்லர்ஜி தேவகோட்டை
வாடாத்தம்பி தருத்திணியம் நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்கே ?
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்
அதுடாத்தம்பி எம்பேரு அழகு முத்து நம்மளைப் காலைல முதல்ல பார்த்துட்டு போறவனுக்கு அட்டுப் பிடிச்சு அன்றைக்கு பூராம் விளங்காது. அடிதடி போலீஸ் கேசுனு ஆகிப்போயிடும். அதனால் இப்படி பேரை எனக்கு வச்சுட்டாங்கடா... இன்றைக்கு காலைல நீ வந்து இருக்கே என்னாகுதோ பார்ப்போம், சரி உனக்கு ஏண்டா தருத்திணியம்னு பேரு வச்சாங்கே.. ? அப்படியே அண்ணனுக்கு டீ சொல்லு.
உங்கூடவும் கவனமாகத்தான் இருக்கணும் போலயே...
அடே வசியச்சோறு ருசியாத்தான்டா இருக்கும்.
அடேய் அதெல்லாம் சப்போர்ட்டுக்குதான்டா, அந்த வகையறா பூராம் இப்படித்தான்டா செய்யிவாங்கே..
எல்லாம் மஞ்சப்பட்டணம் மல்லிகாதான், ஏன் உனக்கு ஏதாவது செய்வினை செய்யணுமா ?
டே நீ என்னடா ஏதோ ஓசியில கொடுக்கிற மாதிரி சலிச்சுக்கிறே... டீக்கடைனா, நாலு பேரு நாலு வார்த்தை பேசுறாப்பலதான் வரும். இந்தாணே நீ டீயைக் குடிணே...
உரிச்ச மண்டையன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அந்த நேரத்தில் வந்த செங்கல் ஏற்றிய லாரி அடித்த திடீர் ஹார்ரனில் பதறிப்பறந்த சேவல் ஒன்று டீக்கடையின் உள்ளே பறக்க, தன்மேல் மோதியதில் நிலை குலைந்த உரி சட்டென சேவலைத் தள்ளிவிட, சேவல் பால் கொதித்த சட்டியை வெளியே தள்ளிவிட பக்கத்தில் குளிர் காய உட்கார்ந்திருந்த அட்டு மீது பால் கொட்டி அவன் அலறி அடித்து சட்டையை கழற்றினான். உடல் முழுவதும் வெந்து தணிந்தது காடு போல நின்றான்.
இதைக்கேட்ட தருத்திணியம் மனைவி மூலிக்கன்னி அட்டுவிக்கு எதிராக ஒப்பாரி வைக்க... அவனுக்கும் பாட்டு கிடைத்தது.
கிராம மக்கள் கூட்டம் கூடிட எல்லோரும் வரும் ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தனர், அட்டுவை ஆஸ்ப்பெட்டலுக்கு அனுப்பி வைக்க....
ஆம்புலன்ஸ் வருமா ? வரும்.....
ஹிஹிஹி.. என்னங்க இது.. மூட நம்பிக்கையை வளர்க்கறீங்க...
பதிலளிநீக்குவாங்க ஜி இந்த மூடநம்பிக்கையின் வளாகத்துக்குள் நீங்கள் என்றுமே வராதிருக்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
நீக்குசமீப காலமாக இதனுள் சிக்கி சீரழிந்து கொண்டு வருகிறேன். இது உண்மைதான் செய்தவரே ஒத்துக் கொண்டதால்தான் இது உண்மை என்பதை அறிந்தேன்.
தருத,திணியத,துக்கு, அட்டுவைவிடப் பவர் ஜாஸ்தி போலிருக்கே.. தலைப்பின் மூலம் அட்டுவுக்கு உடம்பெல்லாம் முடின்னு தெரிந்தது
பதிலளிநீக்குஹா.. ஹா.. அட்டுவின் இரகசியம் உண்மை தமிழரே...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. ஒருவர் செயல்களுக்கு ஏற்றார்போல பெயர்களை உருவாக்குவது உங்களுக்கே கை வந்த கலை. பாராட்டுக்கள்.. அடப்பாவமே..! இறுதியில் பெயர்களின் ராசிக்கு ஏற்றார்போல நடந்து விட்டதே..! பாவம்... சீக்கிரம் ஆம்புலன்ஸ் வந்து அவர் நல்லபடியாக குணமாகட்டும். இது கற்பனை என்றாலும், என் மனது பதறுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை இரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅப்படியே கிராமத்து சூழ்நிலை கிராமத்து பேச்சு வார்த்தை படிக்க நன்றாக இருந்தது கிராமத்துக்கே போன மாதிரி இருந்தது
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅட்டு, அரளியம்மா - பெயர்களே ஆத்தாடி...
பதிலளிநீக்குவாங்க ஜி எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது.
நீக்குதருத்திணியம் பேரே வித்தியாசமாக இருக்கே நண்பரே. அப்புறம் ஆம்புலன்ஸ் வருமா.... சொல்லுங்கள்
பதிலளிநீக்குவருக நண்பரே வந்தால் வாழ்வு.
நீக்குவெந்து தணிந்தது காடுன்னு தலைப்பைப் பார்த்ததும் ஒண்ணு பட விமர்சனமா இருக்குமோ நம்ம கில்லர்ஜி படம் எல்லாம் பார்க்கற ஆளு இல்லையேன்னு தோன்றியது. இல்லைனா கதையோ என்று தோன்றியது...
பதிலளிநீக்குஇப்படியான வெந்து தணிந்தது காடுன்னு புரிகிறது. கில்லர்ஜி இவ மூஞ்சியில் முழிச்சா கெட்டது நடக்கும் அப்படின்னு எல்லாம் சொல்றதுண்டுதான்பலரும். என்னையும் அப்படி ஓரிருவர் சொன்ன போது மனம் ரொம்பவே வேதனைப்பட்டது.
எனக்கு மூடநம்பிக்கை துளிக் கூட இல்லை ஜி.
கீதா
வருக நான் என்றைக்கு திரைப்பட விமர்சனம் எழுதினேன் ?
நீக்குஆனாலும் இப்படி பலரும் நினைப்பார்கள் என்று நினைத்தேன்.
தங்களது வருகைக்கு நன்றி
கிராமிய நடையில் வசனங்களும் வருணனைகளும் சிறப்பு.
பதிலளிநீக்குவருக கவிஞரே வருகைக்கு நன்றி
நீக்குகிராமச் சூழ்நிலை பேச்சு வார்த்தை..
பதிலளிநீக்குஅழகு.. அருமை..
இப்படித்தான் இருக்கின்றார்கள்..
வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅந்த ஆம்புலன்ஸ் வந்ததா.. இல்லையா?..
பதிலளிநீக்குவரும்... ஆனா வராது...
நீக்குகதையும் காரணமும் நல்லாயிருக்கு நண்பரே!!
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு மிக்க நன்றி
நீக்குநான் என்னமோ பாரதியைப் பத்தி எழுதி இருக்கீங்களோனு நினைச்சேன். ஏனோ தெரியலை, என்னால் இந்தப் பதிவை ரசிக்க முடியலை. மன்னிக்கவும். :(
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஆயுளும் ஐஸ்வர்யமும் நிறைந்து விளங்கட்டும்..
வாழ்க பல்லாண்டு..
தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இப்போதுதான் சகோதரர் துரை செல்வராஜ் தங்களுக்கு தந்திருந்த வாழ்த்துக்களை பார்த்தேன்.
தாங்கள் ஆரோக்கியத்தோடு வாழ இந்நாளில் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளும் கும் மனம் நிறைந்த நன்றி சகோ.
நீக்குஎங்கள் இணையதளம் வாயிலாக தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் எல்லையில்லா மகிழ்ச்சியை அடைகின்றோம். தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!...
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/
தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே...
நீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதங்களது வாழ்த்துகளுக்கு நன்றி சகோ
நீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகிராமத்து சூழலில் மூட நம்பிக்கை கதை. சுவாரசியமான தொடக்கம் முடிவு சற்று மனதுக்கு சங்கடம்.
தங்களது வருகைக்கு மிக்க நன்றி
நீக்கு