தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 07, 2023

செல்வனூர், செல்ஃபி செல்வி


செல்ஃபி மோகம் இன்று மனிதர்களை பாடாய்ப்படுத்துகிறது. செல்வி இவள் ஒரு செல்ஃபிக்காரி எந்த இடத்திலும் செல்ஃபி எடுக்கும் ஆவல் கொண்டவள். இடம், பொருள், ஏவல் தெரியாது. மரண வீட்டுக்கு போனாலும் எடுப்பாள், திருமண வீட்டுக்கு போனாலும் எடுப்பாள், அது ஏன் காலையில் கண்மாயில் ஒதுங்கப் போனாலும் எடுத்து வருவாள்.
 
மலை உச்சிக்கு போனாலும் எடுத்து வருவாள், மழையில் நனைந்தாலும் எடுத்து வருவாள் , இதனாலேயே இவளை செல்ஃபி செல்வி என்று அழைப்பார்கள். எடுத்து வந்ததை உடனே முகநூலிலும் அப்பேட் செய்து விடுவாள். இவளது புகைப்படத்தை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் அலைகிறது. இதற்கெல்லாம் காரணம் நாட்டில் வேலையற்ற வெட்டி வீணர்கள் பெறுகி விட்டதே...
 

இவளுக்கும், இலுப்பக்குடி இருளப்பனுக்கும் பெரியோர்களால் பார்த்து பேசி முடித்து திருமணம் நடந்தது. காலையில் மணமேடையிலேயே செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்தாள். இருளப்பன் இருட்டட்டும் என்று பொறுமை காத்தான். இரவும் வந்தது பால்ச்செம்போடு உள்ளே வந்தவள் செல்ஃபி எடுத்தாள் இனிமேல் இப்படி எடுக்காதே என்று சொன்ன கணவனை எனக்கு செல்ஃபிதான் முக்கியம் என்றாள்.
 
இரவு முழுவதும் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருந்தாள் செல்வி முதல் தினமென்று விட்டு விட்டான், மறுதினம் இருளப்பனின் நண்பன் நல்லமுத்து அலறியடித்து வந்தான், ‘’டேய் இருளு என்னடா இது ?’’ அவனது செல்லில் காட்டிய புகைப்படங்களை கண்டு அதிர்ந்தான் இருள். இரவு எடுத்ததை முகநூலில் அப்பேட் செய்திருந்தாள் செல்வி.
 

அதிர்ந்து போனவன் செல்வியிடம் கேட்டதற்கு இது எனது சுதந்திரம் என்றாள் விட்டான் ஒரு அறை. உடனே போய்ப்பார்த்தாள் ஓர் வழக்கறிஞரை... இதோ நீதி மன்றத்துக்கு நடந்து கொண்டு இருக்கிறது இரண்டு குடும்பங்கள். இதற்கு காரணம் பொருப்பற்ற இந்த சமூகம் மட்டுமல்ல, முட்டாள்தனமாக நாம் வளர்த்த பிள்ளைகளும் மட்டுமல்ல, நம்மை ஆளும் அரசாங்கமும்தான்.
 
இதோ திருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் விடுதிகளில் தங்குவது தவறில்லையாம். நாமெல்லாம் சிந்தித்து வாக்களித்து இருந்தால் இந்த இழிநிலை வருமா ? சரி நமக்கு அது தேவையில்லாத விடயம். அது சிந்திக்கும் மூளை சம்பந்தப்பட்டது.
 

கில்லர்ஜி தேவகோட்டை

Chivas Regal சிவசம்போ-
மாடு விரட்டும் போதுகூட செல்ஃபி எடுக்கிறானே எருமை மாடு இவனுகளை என்ன செய்யிறது ?
 
சிவாதாமஸ்அலி-
அலைபேசி தவறி கீழே விழுந்தால் மொட்டையும் சிதறி விடுமே...
 

இதையும் சொடுக்குக... https://www.youtube.com/watch?v=3q8eCNMAw-4



Share this post with your FRIENDS…

30 கருத்துகள்:

  1. செல்பியால்
    சீர் கெட்ட சிந்தாமணி!..

    பதிலளிநீக்கு
  2. சுத்த அல்பிகள்!  இரண்டாவது காணொளி ஏற்கெனவே பார்த்து கடுப்பாகி இருக்கிறேன்.  இன்று மறுபடியும்!

    பதிலளிநீக்கு
  3. செல்பியால் உயிரிழந்தோர் லிஸ்ட் எடுத்தால் ஒரு பதிவு காணாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அறியாமைவாதிகள் வேறென்ன சொல்வது ?

      நீக்கு
  4. கடவுளோடுகூட செல்பி எடுக்கறாங்க. என்னத்தச் சொல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே கோயிலுக்குள் அலைபேசியை அனுமதிப்பது தவறுதான்.

      நீக்கு
  5. மிகவும் வேதனை தரும் போக்கு...

    பதிலளிநீக்கு
  6. திருந்தாத ஜென்மங்கள் ₹%₹%₹%₹% லாபம்?..

    பதிலளிநீக்கு
  7. கணினி யுகத்தில் கலி புருசனின் அவதாரம் இப்படித் தான் இருக்கும்..

    கவலையே பட வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  8. கஶ்டம்தான் சார். இதுவும் ஒரு நோய் போல முற்றிவிட்டது.
    நடிகர் சிவக்குமார் அவர்களைப் போல யானைக்கும் செல்ஃபி எடுத்தால் கோபம் வருது போல?
    ரெண்டு நாள் முன்னாடி, செல்ஃபி னால குலதெய்வ பூஜைக்கு சென்ற நம்ம மூக்குத்தி அம்மனுக்கும் மூக்கு மேலயே கோபம் வந்து ஊடகச் செய்தி ஆனதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
    காணொளிகளை பார்க்கும் போது வேதனை அதிகமாகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இந்த செல்ஃபி படங்கள் எடுக்கும் மோகத்தினால் மக்கள் மனம் கெட்டுத்தான் போகிறார்கள். உயிருக்கு ஆபத்தாக அது கொண்டு போய் விடுவதை கூட எண்ணி அவர்கள் கவலைப் படுவதில்லை. மக்கள் என்றுதான் இதிலிருந்து விடுபட போகிறார்களோ தெரியவில்லை.

    படங்கள் மற்றும் காணொளிகள் கலக்கமூட்டுகின்றன. இதற்கு ஆண்டவன்தான் துணையாக ஏதாவதொரு மாறுதலை தர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. செல்பி பழக்கம் கொடுமை.

    பதிலளிநீக்கு
  12. நிதர்சனத்தை பிரதிபலிக்கும் அந்த ரெண்டு காணொளிகளையும் ஆஸ்கார் அவார்டுக்கு பரிந்துரைக்கலாம்... பேஷ்.. பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆசையை நிறைவேற்றுவோம்.

      நீக்கு
  13. இந்த செல்ஃபி மோகத்தினால் உயிரிழந்த இளம் தம்பதிகள் நிறையவே இருக்காங்களே! என்றாலும் இன்றைய இளைஞர்கள்/இளம்பெண்கள் திருந்துவதாய்த் தெரியலை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் காரணம் அடிப்படை கல்வி சரியில்லை.

      நீக்கு
  14. இவ்வளவு மோசமான செல்ஃபி மோகமா? மொபைல் ஸ்லோகம் நல்லதொரு கற்பனை. யானைகளுக்குக் கோபம் வந்தால் என்ன செய்யும் என்பதைக் காட்டி விட்டன. அப்படியும் செல்ஃபி மோகம் எனில் உயிரைக் கொடுக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      இந்த செல்ஃபியால் பல இடங்களில் பலருடைய உயிர் போயிருக்கிறது.

      நீக்கு