கலாவதி மெடிக்கல்
ஷாப்பை மூடி சீல் வச்சுட்டாங்களாமே ?
ஆமா காலாவதி ஆன மருந்துகளை விற்றாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
ஒரிஜினல்
ஜூவல்லர்ஸை மக்கள் அடிச்சு உடைச்சிட்டாங்களாமே ?
ஆமா டூப்பிளிகேட் கவரிங் நகைகளை விற்றாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
சிட்பண்டு
நடத்துனானே பாண்டுரங்கன் அவன் வீட்டுக்கு எதுக்கு தீ வச்சாங்களாம் ?
பண்டு பணத்தோட சிட்டா, பறந்துட்டானாம்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
அப்பாத்துரை
மகன்கள் இருவரும் எதுக்கு சண்டை போடுறாங்க ?
அண்ணாத்துரை பேரை தம்பிக்கும், தம்பித்துரை பேரை அண்ணனுக்கும் வச்சதுக்காக...
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
வயல்ல அளக்கப்போன
இடத்தில அதிகாரிகள் சண்டை போடுறாங்களே ஏன் ?
அளந்தவனுக்கே அனைத்தும் சொந்தம்னு சர்வேயர் சொல்றாராம்.
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
அவரு எதுக்கு
மாட்டை நீதி மன்றத்துக்கு ஓட்டி வந்து வாசல்ல உழுதுக்கிட்டு இருக்காரு ?
உழுதவருக்கே நிலம் சொந்தம்னு வக்கீல் வர்க்கீஷ் அந்த விவசாயிகிட்டே சொன்னாராம்.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
அந்த டிரைவர்
எதுக்கு பேருந்தை அவரு வீட்டுல கொண்டு போய் நிறுத்துறாரு ?
இது உங்கள் சொத்துனு பின்னாலே எழுதி இருந்துச்சாம்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
கல்யாண வீட்ல
அந்த முண்டாசு கட்டுனவரு கலாட்டா பண்ணுறாரே ஏன் ?
தாய்மாமனை கூப்பிடுங்கோனு சொல்றபோது வாய் தவறி நாய்மாமன்னு சொல்லிட்டாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
மாப்பிள்ளை
எதுக்கு ஐயரிடம் வாக்குவாதம் செய்யிறான் ?
நான் வாங்கிய மாங்கல்யத்தை நீங்க எப்படி ‘’மாங்கல்யம் தந்து நானே’’னு சொல்லலாம்னு கோபப்படுறான்.
? ? ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
மணப்பெண்ணு
மணமேடைக்கு வரும்போது குத்தாட்டம் ஆடிக்கிட்டே வருதே இது நல்லாவா இருக்கு ?
சுமாராத்தான் இருக்கு அடுத்த கல்யாணத்துக்கு சிறப்பா ஆடும்னு நினைக்கிறேன்.
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
கில்லர்ஜி தேவகோட்டை
சாம்பசிவம்-
ஐயரு அப்படி சொன்னது தப்புத்தானே..
ஆமா காலாவதி ஆன மருந்துகளை விற்றாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
ஆமா டூப்பிளிகேட் கவரிங் நகைகளை விற்றாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
பண்டு பணத்தோட சிட்டா, பறந்துட்டானாம்.
? ? ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
அண்ணாத்துரை பேரை தம்பிக்கும், தம்பித்துரை பேரை அண்ணனுக்கும் வச்சதுக்காக...
? ? ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
அளந்தவனுக்கே அனைத்தும் சொந்தம்னு சர்வேயர் சொல்றாராம்.
? ? ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *
உழுதவருக்கே நிலம் சொந்தம்னு வக்கீல் வர்க்கீஷ் அந்த விவசாயிகிட்டே சொன்னாராம்.
? ? ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *
இது உங்கள் சொத்துனு பின்னாலே எழுதி இருந்துச்சாம்.
? ? ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *
தாய்மாமனை கூப்பிடுங்கோனு சொல்றபோது வாய் தவறி நாய்மாமன்னு சொல்லிட்டாங்களாம்.
? ? ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *
நான் வாங்கிய மாங்கல்யத்தை நீங்க எப்படி ‘’மாங்கல்யம் தந்து நானே’’னு சொல்லலாம்னு கோபப்படுறான்.
* * * * * * * * * * 09 * * * * * * * * * *
சுமாராத்தான் இருக்கு அடுத்த கல்யாணத்துக்கு சிறப்பா ஆடும்னு நினைக்கிறேன்.
? ? ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *
ஐயரு அப்படி சொன்னது தப்புத்தானே..
காணொளி
மாங்கல்யம் தந்துனானே வை சிறந்த ஜோக்காக சிபாரிசு செய்கிறேன்!
பதிலளிநீக்குதங்களது சிபாரிசுக்கு நன்றி ஜி
நீக்குகாணொளி கண்டேன். முன்னரும் பார்த்திருக்கிறேன். குழந்தை உண்டாகி இருக்கிறார் என்று தெரிந்த உடன் என்ன செய்வார்?!!
பதிலளிநீக்குஇந்த பாப்பாவும் குதிக்கும் போல ஜி
நீக்குஅடுத்த கல்யாணத்துக்கு சிறப்பா ஆடும்.... ஹாஹாஹா
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது ரசிப்புக்கு நன்றி
நீக்குஆகா...
பதிலளிநீக்குஅப்படி போடு.. போடு..
ஆமாம் ஜி இதுதான் திருமண வீட்டில் உகந்த பாடல்
நீக்குஅடுத்த கல்யாணத்துக்கு இன்னும் சிறப்பா ஆடும்..
பதிலளிநீக்குஅடடா!..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குசொல்லாடல் அருமை...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குகாணொளி: மகிழ்ச்சி அடேங்கப்பா...!
பதிலளிநீக்குதங்களது மகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சி ஜி
நீக்குயோசிக்க வைக்கும் குறும்பு!
பதிலளிநீக்குவாங்க மேடம் வருகைக்கு நன்றி
நீக்குஅனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகாணொளி மணபெண்ணின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சி.
உண்மையான கல்யாணமா? அல்லது சினிமா, நாடகத்திற்கு எடுத்த காட்சியா?
வருக சகோ இது புலனத்தில் உலாவிய உண்மைத் திருமணம்தான்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. எல்லாவற்றையும் ரசித்துப்படித்தேன். திருமணத்தில் தாலி கட்டும் போது கூறும் மந்திரத்திற்கான (மாங்கல்யம் தந்து நானே) விளக்கம் கண்டு சிரித்தேன். :))) இறுதி ஜோக்கும் சிரிப்பை வரவழைக்கிறது. வித்தியாசமாக யோசித்து தாங்கள் எழுதும் எழுத்துக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
காணொளி கண்டேன். திருமணத்திலாவது அந்தப் பெண்ணிற்கு அடக்கம் வேண்டாமா? என்னவோ விந்தையான உலகமாக அந்தக் காலம் மனிதர்களை மாற்றிவருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ
நீக்குபதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
"மாங்கல்யம் தந்து நானே" ஹா...ஹா... ஹைய்யோ... ஹைய்யோ.... படிச்சதும் அப்படியே ஷாக் ஆகிட்டேன்... இப்படியெல்லாம் யோசிக்க உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது?...
பதிலளிநீக்குவருக நண்பரே "எனக்குள் ஒருவன்" செய்கிற சேட்டையாக இருக்கலாம்.
நீக்குமாங்கல்யம்தந்து நானே!!! ஹையோ இதுசிரிச்சு முடிலை...செமையா ரசித்தேன் இதை.
பதிலளிநீக்குகாணொளி எனக்குப் பார்த்ததும் தோன்றியது அட! பொண்ணு என்ன ஜாலியா சந்தோஷமா தாலிகட்டிக்கொள்கிறாள் என்று. சிலரெல்லாம் ரொம்ப டென்ஷனோடு, சந்தோஷமே இல்லாம இருப்பாங்க....இந்தப் பொண்ணு செம மகிழ்ச்சியா வாங்கிக்காறாங்களே. ஒரு வேளை காதல் திருமணமோ? முன்னரே அறிமுகமானவங்க போல இருக்கு....அல்லது விரும்பிய சொந்த அத்தை/மாமன் அல்லது உறவுப் பையன்.....எனக்குப் பிடித்திருந்தது ஜி.
கீதா
வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஅவர்களது மகிழ்ச்சி நிலைத்து நிற்கட்டும்.