தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 05, 2024

பூஜையும், பூசையும்

ணக்கம் நட்பூக்களே... சுமார் இருபது வருடங்களுகு முன்பு கிராமம் மட்டுமல்ல, நகரங்களில்கூட எங்கெங்கு காணினும் பெண்களுக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லி சிலர் ஏர்வாடி தர்ஹாவுக்கு அழைத்துப் போவார்கள் அதற்கென்று டிகிரி படித்தவர்கள் போல சில ஊரில் பூசாரிகள் இருப்பார்கள், சவுக்கால் அடிப்பார்கள் இவர்கள் பேய் ஓட்டுபவர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள் ஏதோ ஸ்டேரிங் பிடிக்கும் டிரைவர்கள் போல...
 
இப்பொழுது இவர்களுக்கு என்னவாயிற்று ? பேய் பிடிப்பதில்லையா ? காலங்கள் மாறும்போது பேய்களின் வாழ்க்கைப்பாதையும் மாறிவிட்டது இவர்களை விரட்டியது யாரென்று விசாரித்தபோது தெரிந்தது வாட்ஸ்-ஆப் குழுவாம் ஆம் இதில் போடும் கடலையை கண்டு காண்டாகி பேய்கள் ஊரு விட்டு ஊரு மட்டுமல்ல, நாடு விட்டு நாடு மட்டுமல்ல, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்தோடி விட்டதாம் அங்காவது நிலைத்தோங்கட்டும் அவர்களின் வாழ்வு முருங்கை மரத்தோடு...
 
நமக்கு ஒன்று போனால் ஒன்று வரவேண்டுமே... ஆம் வானொலி போனதால் தொலைக்காட்சி வந்தது, தொலைபேசி போனதால் அலைபேசி வந்தது. அதைப்போல பேய் ஓட்டும் பூசாரிகள், கோடாங்கிகள் போனதால் இப்பொழுது மந்திரவாதிகள் நிறைந்து வந்து விட்டார்கள். ஆம் பில்லி, சூனியம், வசியம், செய்வினை, முகமாத்து என்று இதனுள் நிறைய விடயங்கள் போய்க்கொண்டு இருக்கிறது. எங்கெங்கு காணினும் இப்பொழுது அருள் வாக்கு சாமிகள்.
 
இவர்களில் பலர் சுமார் பதினெட்டு அகவைகூட நிரம்பி இருக்க மாட்டார்கள் இவர்களும் மந்திரவாதிகளாம். கேட்டால் கேரளாவுக்கு போனான் மூன்று மாதம் கழித்து வந்தான் தானொரு மந்திரவாதி என்கிறான். என்கிறார்கள் காவி அங்கவஸ்திரம், ருத்ராட்சமாலை, விபூதி பட்டை, ஆனால் கையில் ஆன்ட்ராய்ட் போன் வேறென்ன செய்வது ? நவீன உலகமாயிற்றே... நாட்டில் பல குடும்பங்கள் இன்று இவைகளில் சிக்கி சீரழிந்து கொண்டு வாழ்கிறது.
 
எனக்கு மட்டும் ஜக்கி வாசுதேவ் மாதிரி பிரதமரையோ, முதல்வரையோ சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் ? எனக்காக மட்டுமல்ல, இந்த சமூக மக்களுக்காக அவர்களிடம் மன்றாடியாவது நாட்டில் மந்திரவாதிகள் பூசாரிகள், கோடாங்கிகள் என்று சொல்லிக் கொண்டு வாழும் இவர்களை பிடித்து பொடாவில் போடுங்கள் என்று கேட்டுக் கொள்வேன். இன்று உறவுகள் எங்கும் எதற்கெடுத்தாலும் செய்வினையை நாடுகின்றார்கள். காரணம் நல்ல சிந்தைகள் மக்களிடம் இல்லை.
 
அதாவது கெட்டது செய்து ஒருவனை வீழ்த்தி விடுவதற்கு ஒரு மந்திரவாதி, பிறகு நல்லது செய்து வாழ வைக்கிறார்களாம் அதற்கு வேறொரு மந்திரவாதி, பிறகு நல்லதும் செய்வார்களாம், கெட்டதும் செய்வார்களாம் இதற்கு ஒரு மந்திரவாதி, பிறகு இன்று மாயாண்டி போய் முனியாண்டிக்கு செய்வினை செய்கிறார், பிறகு முனியாண்டியும் அங்கு போய் பார்த்து அறிந்து கொள்கிறார், அதை எடுக்கச் சொல்ல மந்திரவாதி எடுத்து விடுகிறார், முனியாண்டி சொன்னால் அதையே மாயாண்டிக்கே மந்திரவாதி திருப்பியும் விடுகிறார்.
 
இதற்கான கூலிகள் இருக்கிறதே அடேங்கப்பா சுமார் எழுபதாயிரம் வரை வாங்குகின்றார்கள். இன்றைய மக்களின் வாழ்வு எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைப்பாடுதான் யார் யாருக்கு செய்வினை செய்வார்கள் ? நானறிந்தவரை கணவன், மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், அம்மா மகளுக்கும், பங்காளிகளுக்குள் பகைமையை மூட்ட வீட்டுக்கு வந்த மருமகளும் இப்படி வரிசைகள் நீண்டு கொண்டு போகிறது. அம்மா எதற்கு மகளுக்கு செய்ய வேண்டும் ? என்ற வினா உங்களுக்கு வருமெனில் எமது பதில் ஏதோவொன்றை நினைத்து நல்லது நடக்குமென்ற அவசரப்புத்தியினால் இவைகளில் இறங்குவது முடிவு ? எப்படி சுபமாகும் ?
 
மதுரையில் நடந்த உண்மை நிகழ்வு எமது ரத்த உறவுதான். ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர், துபாய் போய் பத்து வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து திரும்பியவர், மனைவி வீட்டாரின் வழியாக மதுரையில் இடம் வாங்கி, வீடு கட்டி, கிரகப்பிரவேசம் நிகழ்த்தி, பிறகு அதே வளாகத்துக்குள் கடை கட்டி திறந்து, வியாபாரம் அமோகமாகி, மகன்களை பட்டதாரிகளாக்கி, அதாவது வாழ்வு அடுத்தடுத்து தொடர்ச்சியாக... உயர்வு நிலையாகிறது பிறரது கண்ணை உறுத்தாதா ? உறுத்திற்று யாருக்கு ?
 
வாழ்க்கையில் சறுக்கல் தொடர் சறுக்கல் வீட்டு வளாகத்திற்குள் அடிக்கடி எழுமிச்சம் பழம் கிடக்கிறது. எல்லா மனிதர்களுக்கும் போல எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற குழப்ப நிலை யாரோ சொல்லி ஏதேவொரு மந்திரவாதியிடம் போக அவன் சொல்கிறான். உனக்கு கெடுதல் செய்து உன்னை வீழ்த்த மாதா மாதம் உனது வீட்டு வளாகத்துக்குள் எலுமிச்சம் பழத்தை வீசுகின்றார்கள். யார் ? உனது வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரன்.
 
அவனுக்கும், எனக்கும் எந்த பந்தமும் இல்லையே நானொரு சாதி, அவனொரு சாதி. எதிர் வீட்டுக்காரன் என்ற நிலையில் நல்லா இருக்கீங்களா ? நல்லா இருக்கேன். அவ்வளவுதானே... மந்திரவாதி சொன்னதில் நம்பிக்கை இல்லை மற்றொருவரிடம் போனாலும் அவனும் இதையே சொல்லிட எப்படி கேட்க முடியும் ? சரியென்று இருபத்து ஐந்தாயிரம் செலவு செய்து எதிர் வீட்டுக்காரனுக்கு தெரியாமல் வீட்டுக்கு கேமரா பொருத்தி விட்டான். காலையில் எழுந்து பார்த்தால் எழுமிச்சம் பழம்.
 
காணொளியில் பார்த்தால் முதல்நாள் எதிர் வீட்டுக்காரன் இரவு பனிரெண்டு மணிக்கு சுற்றும், முற்றும் பார்த்து விட்டு வீட்டுக்குள் ஏதோவொன்றை வீசுகின்றான். பொறுமையாக இருந்து பதிவு செய்து கொண்டு மேலும் ஒரு மாதம் காத்திருக்க, மறுபடியும் இரவில் வீசுகின்றான், காலையில் பார்த்தால் எழுமிச்சம் பழம். நேரடியாக போய் எதிர் வீட்டுக்காரன் மந்திரவாதியிடம் பூஜை செய்து வாங்கி வந்த பழத்துக்காக அவனுக்கு பூசை போடப்பட்டது. தெரு மக்களிடம் ஆதாரத்தை காட்டி விசாரித்திட...
 
காரணம் பொறாமை போன வருசம் வந்த நீ மட்டும் நல்லா முன்னேறி வளர்ந்துக்கிட்டு போறே... நான் வந்து பத்து வருசமாச்சு கஷ்டப்படுறேன் அதனாலதான் இப்படி செய்தேன். அவன் சொன்னதை நம்பியே தீரவேண்டும் காரணம் அவன் உறவுக்காரன் இல்லை, முன்பகையும் இல்லை, நட்புகூட இல்லை இதுவும்கூட கர்மவினைதானோ... ?
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
அடுத்த வீட்டுக்காரி ஆம்பளப்புள்ள பெத்தா எதிர்த்த வீட்டுக்காரிக்கு என்ன ?

11 கருத்துகள்:

  1. பொறாமை பிடித்த மனிதர்கள்...   பிறர் முன்னேற்றத்தை காண சகிக்காதவர்கள்.  இவர்களை எல்லாம் எப்படி மாற்ற முடியும்?  கர்மம் பிடித்த வினை செய்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் திருத்தி எழுதினால் இது ஒரு செவ்வாய் சிறுகதை யாகிவிடும்.
    சில நிகழ்ச்சிகளுக்கு காரணம் புரியா விட்டால் செய்வினை என்ற பெயர் சூட்டி விடலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை JKC ஸார்...  என் மனதிலும் இதே எண்ணம் ஓடியது!

      நீக்கு
    2. யெஸ் அதே எனக்கும் தோன்றியது.

      இதே போல வெங்கட்ஜி அவர் தளத்தில் எழுதுவது கூடச் சிறுகதை போலவே இருக்கும் பல நிகழ்வுகள். அவரிடமே கூடச் சொல்லியிருக்கிறேன் கதையாக்காலாம் என்று.

      கீதா

      நீக்கு
  3. ஒரு படத்தில் நடிகர் செந்திலுக்கு யார் சந்தோஷமாக இருந்தாலும் பிடிக்காது.  அவர்கள் சந்தோஷமாக இருப்பதைஒளிந்துகொண்டு பார்த்து  நகத்தைக் கடிக்க ஆரம்பித்து விடுவார்!  அப்புறம் அவர்களுக்கு ஏதாவது கெடுதல் செய்து பிரித்து விடுவார்.  

    அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. இப்படியும் பொறாமை புடிச்ச ஜென்மங்கள்! என்னத்த சொல்ல? கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இப்படிப் பொறாமை பிடித்த ஜென்மங்கள் இங்கே எங்களது வட்டாரத்திலும் ...

    அங்கே இருக்க தீபாவளியா !..

    என்ற இவர்களின் வயிற்றெரிச்சலில் அமெரிக்காவிலும் அபுதாபியிலும் ரத்த சொந்தத்தில் பிள்ளைகள் தடுக்கி விழுகின்றனர்.. காய்ச்சலில் கஷ்டப்படுகின்றனர்...

    என்ன செய்ய இயலும்?..

    பதிலளிநீக்கு
  6. பொறாமை பிடித்த மனிதர்கள். போலி மந்திரவாதிகள், அவர்களை நாடும் மனிதர்கள் என இரண்டுமே அதிகரித்து தான் இருக்கிறது.

    கீதா ஜி - என்னையும் எனது பக்கத்தில் வரும் பதிவுகளையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. தொடர்ந்து எழுதுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. முன்பு போல வரவேற்பும் இருப்பதில்லை! பதிவுகள் எழுதுவதற்கே இப்போதெல்லாம் யோசனையாக இருக்கிறது! :)

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    தங்கள் உறவின் கதை பரிதாபமாக உள்ளது. இப்படியும் மனிதர்கள்.. உறவு என்ற குட்டையில்தான் இந்த பொ"றாமைகள்" தயக்கமின்றி குடியேறும். முன்பின் சம்பந்தமில்லாமல் இருக்கும் எதிர் வீட்டுகாரனுக்கு கூடவா? இதுவும் நம் போன ஜென்ம கர்ம வினைகள்தான். வேறு என்ன சொல்வது? ஆக, உறவுக்குப் பயந்து ஊருக்கும் பயந்தும் நம் வாழ்வின் முன்னேற்றங்களை நாமே தடை செய்து கொள்ள வேண்டியதுதான் போலும்...! என்ன துயரம் பிடித்த வாழ்வோ? நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. செய்வினை செய்வது தம்மையே கடுமையாகத் திருப்பித் தாக்கும். பொறாமையும் கோபமும்தான் அடிப்படைக் காரணங்கள்.

    எனக்குத் தெரிந்ததெல்லாம் செய்வினை, செயற்பாட்டுவினை என்ற தமிழ் இலக்கணம்தான்.

    பதிலளிநீக்கு
  9. பிறந்தவங்க, சம்பாதித்து வாழ்க்கையை ஓட்டணும். அதில் ஒரு தொழில்மான் குறி, மந்திரம் போன்றவை

    பதிலளிநீக்கு