வணக்கம்
இந்தியா மட்டுமல்ல உலகம் அனைத்திலுமே அந்த நாட்டு நாணயங்களையோ, ரூபாய்த்தாள்களையோ
அழித்தல் வேலையில் ஈடுபடக்கூடாது. திரைப்படங்களில் அப்படி காட்சிகள் இடம் பெற
வேண்டிய நிலையிருந்தால் அதற்கான துறைகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அந்த மாதிரியான
ரூபாய்த்தாள்களை போலியாக அச்சடித்து. தீ வைப்பார்கள், அதனை அழிப்பது போல்
காட்சிகள் எடுப்பார்கள். இது உலகலாவிய சட்டம்.
நமது
இந்தியாவில் கோயில் கும்பாபிஷேகமோ, வீட்டு கிரஹப்பிரவேஷமோ நிகழ்ந்தால் இந்திய
நாணயத்தை அதாவது காசுகளை யாகத்தில் தீயில் போட்டு பூஜை புனஸ்காரங்கள்
செய்கின்றார்கள். பிறகு அந்த நாணயத்தை செலவு செய்யாமல் வீட்டில் வைத்துக் கொண்டால்
தமது வீட்டில் செல்வம் பெருகும். என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலான மனிதர்கள்.
வாழ்கின்றார்கள்.
இத்தோடு
மட்டுமல்ல காளி கோயில் போன்ற இடங்களில் தனக்கு பிடிக்காதவர்கள், தனக்கு கேடு செய்த
பிறர் நாசமாகப் போகவேண்டும் என்பதற்காக... காசுகளை வெட்டி போடுகின்றார்கள். நான்
சொல்ல வருவது இப்படி அரசின் நாணயங்களை பொதுவெளியில் வெட்டிப் போடுவதும்,
யாகசாலையில் தீயில் போடுவதும் சட்டப்படி குற்றம் இல்லையா ? இதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வழிமுறைகள் இல்லையா ? என்பதுதான் எமது கேள்வி.
அவர்கள்
நாசமாக போகின்றார்களா ? இல்லையா ? என்பது நமக்கு முக்கியமில்லை அது இறைவனின் விதிப்படியே
நிகழும். சமீபத்தில் ஓர் காணொளி கண்டேன் அதில் ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவரிடம்
நல்ல மனிதர்களின் சாபங்கள் பலிக்குமா ? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில். சாபம் விடுபவர் எப்படி
நல்ல மனிதராக இருக்க முடியும் ? சரிதானே ?
கில்லர்ஜி
அபுதாபி
சிவாதாமஸ்அலி-
இந்த வேலையை அரசுதான் தடுக்க வேண்டும் ஆனாலும் செய்ய மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு தங்களது பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே குறிக்கோள்.
Chivas Regal சிவசம்போ-
வெட்டுறதுக்கு முந்தி காசை வெளியில வீசிட்டு போங்களேன் மூதேவிகளா... நாலு பேரு எடுத்துட்டு போகட்டுமே...
இந்த வேலையை அரசுதான் தடுக்க வேண்டும் ஆனாலும் செய்ய மாட்டார்கள் காரணம் அவர்களுக்கு தங்களது பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதே குறிக்கோள்.
வெட்டுறதுக்கு முந்தி காசை வெளியில வீசிட்டு போங்களேன் மூதேவிகளா... நாலு பேரு எடுத்துட்டு போகட்டுமே...
யாகத் தீயில் காசு போடுகிறார்களா என்று தெரியாது. ஆனால் பழைய நீர் நிலைகளில் காசை விட்டெறிவதைப் பார்த்திருக்கிறேன். அதேபோல பிறருக்கு கெடுதல் செய்ய காசு வெட்டிப் போடுவதும் கேள்விப்பட்டிருக்கிறேன். வதந்தி என்று நினைத்துக் கொள்வேன்.
பதிலளிநீக்குயாகத்தீயில் காசுகளை (அதாவது கொஞ்சம் சில்லறையாக..மொத்தமே 20-30 ரூபாய் கூடத் தேறாது) போடும் வழக்கம் உண்டு (தங்கம், வெள்ளி போடும் அளவு வசதி இல்லீங்கோ). இது பெரிய விஷயம் கிடையாது.
பதிலளிநீக்குஆனால் நீர் நிலைகளில் காசு, துணிகளை வீசியெறிவோருக்கு கடுங்காவல் தண்டனை கொண்டுவந்தால் நல்லா இருக்கும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.
/பிறகு அந்த நாணயத்தை செலவு செய்யாமல் வீட்டில் வைத்துக் கொண்டால் தமது வீட்டில் செல்வம் பெருகும். என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலான மனிதர்கள். வாழ்கின்றார்கள்./
இது ஒரு நம்பிக்கைதான். யாகங்களில் காசுகள், பட்டு துணிகள், தின்பண்டங்கள் அவல் பொரி, மலர்கள் போடுவதை நானும் அறிவேன். இறைவனுக்கு அனைத்தையும் சமர்பிப்பதற்கான ஒரு சம்பிரதாயம். நல்லதை வேண்டும் நல்ல மனதுடன் செய்வது..
காசு வெட்டி போடுவது ஒருவரை அழிப்பதற்காக வேண்டிக் கொள்வது. அது தீமையல்லவா? ஆனால், இதுவும் ஒரு நம்பிக்கைதான் போலும். யாரையும் யாராலும் மாற்ற இயலாது. அவரவர் கொள்கைகள் அவரவருக்கு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.