தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மார்ச் 05, 2024

அழகான மடு

 
ழகிய செம்மறி ஆடு
உனக்கு பெரியது மடு
வயிறு படுத்தும் பாடு
எனக்கும் பால் கொடு

நீயோ ராசிக்கார குட்டி
நானோ தோஷம் கட்டி
கிடைப்பது பால் புட்டி
வாழ்கிறேனே வெட்டி
 
உனக்கிருப்பது தாய்
எனக்கிருப்பது பேய்
பெண்ணழகு போய்
என்கின்றாள், பொய்
 
அழகு காம்பு வாடாது
கண்ணேறு கூடாது
ரவிக்கை போடாது
இருக்கிறாயே மூடாது
 
ஒரு முறை யேனும்
மறுபிறவி வேணும்
தாய் ஆவாய் நீனும்
சேய் ஆவேன் நானும்
 
நின் பாதமலர் தழுவி
வேண்டா மனித பிறவி
இறைவா நீயே கருவி
கொடுப்பாய் நீ தருவி
 
கில்லர்ஜி அபுதாபி 
Chivas Regal சிவசம்போ-
உன்னோட அடுத்த பிறவிக்குதான் கரீம்பாய் கத்தியோட நிற்கிறாரு...
 
காணொளி

23 கருத்துகள்:

  1. படமும் வரிகளும் நெகிழ்த்தியது. காணொளி சுவாரஸ்யம். ஐந்தறிவு ஜீவன்கள் என்னமாக பழக்க படுகின்றன!

    பதிலளிநீக்கு
  2. வரி படத்திற்கு ஏற்றபடி ரசிக்கும்படி இருந்தது

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கவிதையும், காணொளியும் , படமும் அருமை.
    முதல் படம் மனதை நெகிழ செய்கிறது.
    காணொளி மனிதன் எப்படி விலங்குகளை பழக்கபடுத்துகிறான் !
    தன் வயிற்று பாட்டுக்கு.

    வயுத்துக்காக மனுசன் இங்கே கயிற்றில் ஆடுறான் பாரு
    ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தான்டா சோறு//
    என்ற பாடல் நினைவுக்கு வந்தது, அது போல இந்த ஜீவன்கள் கயிற்றில் ஆடுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் மனதை நெகிழ்த்துகிறது. அதிலும் அந்த முதல் படம் பாலருந்தும் ஆட்டுக்குட்டியைப்பார்த்து ஏங்கும் குழந்தைபடம் பாவமாக இருக்கிறது. அதற்கேற்ற தங்கள் கவிதை வரிகள் நன்றாக உள்ளது.

    காணொளியும் மனதை வருத்தச் செய்கிறது. ஐந்தறிவு ஜீவன்களை எப்படியெல்லாம் பழக்குகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்றபடிக்கு அந்த ஆடு தன் விதியை நினைத்தபடி கம்பியில் நடந்து வருகிறது.

    இது போக கரீம்பாய் வேறு பயமுறுத்துகிறார். மொத்தத்தில் இவைகளின் வாழ்வே கஸ்டந்தான்...! இறைவனின் படைப்பில் தினமும் இவைகளுக்கு பெரும் சோதனைகள்தாம் போலிருக்கிறது..பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. படத்திற்கேற்ற பாடல் வரிகள். ரசித்தேன்.

    காணொளி - நன்று. எப்படி பழக்கி வைத்திருக்கிறார்கள் - இருந்தாலும் மனதில் வலி! அவற்றை இப்படியெல்லாம் செய்ய வைக்கிறாரே என!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. மனசுகஷ்டமாகிடுச்சு கில்லர்ஜி கடைசி வரிகள். பாவம் ஆடு!

    காணொளி பாருங்க நாம மனுஷங்க நம்மை விட அறிவில் கம்மியானதுங்கன்னு எப்படி ஆளுகிறோம்! அதுங்க என்னவோ ஆஹா நம்மை அன்பு செய்யறாங்கன்னு நினைச்சுக்குதுங்க. ஆனா அதை வைச்சு பணம் பண்ணறோம்னு அதுங்களுக்குத் தெரிவதில்லை.

    சிவாஸ் வரிகள் பார்த்ததும், எனக்கு வேறு பல சொல்ல வருது ஆனா வேண்டாம்னு தவிர்த்துப் போகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆகா...

    முதல் காட்சி அழகு..
    இதற்கான கவிதையும் அழகு..

    பதிலளிநீக்கு
  8. வரிகள் சோகமாக இருக்கிnrana. பாவம் ஆடு என்று சொன்னாலும், யதார்த்தம் வேறு தானே...

    காணொளியில், ஆடு குரங்கை வைத்துக் கொண்டு எவ்வளவு தெளிவாகச் செய்கிறது இரண்டுமே பயிற்சி அளிக்கப்பட்டவை போலும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. கவிதையும் முதல்படமும் மனத்தை நெருடுகிறது.

    வயித்துப் பிளைப்புக்காக மிருகங்களை வைத்து காட்சிப்படுத்தல் இதில் மிருகங்கள் பாவம் இல்லாவிட்டால் அவன் உழைப்பும் கேள்விக்குறிதான் யாரை நோவது?

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்க வைத்த கவிதை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு