தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மார்ச் 18, 2024

ஆத்திர ஜாதி

ணக்கம் நண்பர்களே... ‘’நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

 
இதோ எனது பாடல்...

அடிக்க தெரிந்த கையே
உனக்கு அணைக்க தெரியாதா
உதைக்க தெரிந்த காலே
உனக்கு உணர்வு புரியாதா

மயக்க தெரிந்த முகமே
உனக்கு மயங்க தெரியாதா
மலர்ந்த பெண்மை என்னை
உனக்கு பழக தெரியாதா
கள்வா பழக தெரியாதா

அடிக்க தெரிந்த கையே
உனக்கு அணைக்க தெரியாதா
உதைக்க தெரிந்த காலே
உனக்கு உணர்வு புரியாதா

பறிக்க தெரிந்த உனக்கு
என்னை உரிக்க தெரியாதா
கடிக்க தெரிந்த உனக்கு
என்னை பிடிக்க தெரியாதா

படிக்க தெரிந்த உனக்கு
என்னை முடிக்க தெரியாதா
படர்ந்து விட்ட மணியே
உனக்கு பணிய தெரியாதா
மணியே பணிய தெரியாதா

உதிக்க தெரிந்த மலரே
உனக்கு உதிர தெரியாதா
சுழலும் அனல் காற்றே
உனக்கு சுவைக்க தெரியாதா

பிரிக்க தெரிந்த கள்வா
உனக்கு பித்தம் தெளியாதா
எதுவும் தெரியா முடுமை
உனக்கு இதுவும் தெரியாதா
முடுதார் எதுவும் புரியாதா

அடிக்க தெரிந்த கையே
உனக்கு அணைக்க தெரியாதா
உதைக்க தெரிந்த காலே
உனக்கு உணர்வு புரியாதா

பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி

வருடம்: 1963
படம்: ஆனந்த ஜோதி
பாடலாசிரியர்:  கண்ணதாசன்
இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசிலா

இதோ கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்

நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா

மயங்க தெரிந்த கண்ணே
உனக்கு உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே
உனக்கு மறைய தெரியாதா
அன்பே.. மறைய தெரியாதா

நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா

எடுக்க தெரிந்த கரமே
உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே
உனக்கு கசக்க தெரியாதா

படிக்க தெரிந்த இதழே
உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே
உனக்கு மறைய தெரியாதா
பனியே மறைய தெரியாதா

கொதிக்க தெரிந்த நிலவே
உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே
உனக்கு பிரிக்க தெரியாதா

பிரிக்க தெரிந்த இறைவா
உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா
உனக்கு என்னை புரியாத
தலைவா என்னை புரியாதா

நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=-BMQa7SlTjI
நன்றி – கில்லர்ஜி அபுதாபி.

22 கருத்துகள்:

  1. கண்ணதாசனின் அற்புதமான பாடல்களில் ஒன்று. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இந்த திரைப்படப் பாடல் எனக்குப் பிடித்தமானது. அதற்கேற்ற தங்களின் கற்பனை வரி பாடலும் நன்றாக உள்ளது. யோசித்து இணைத்த வரிகள் அருமை. அதையும் அத்த ராகத்துடன் சேர்த்து பாடிப்பார்த்தேன். அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  3. மெட்டுக்கு நல்லா பொருந்துர மாதிரி எழுதி இருக்கிறீர்கள் நண்பரே. நானும் பாடி பார்த்தேன் உங்க வரிகள் நன்றாகவே பொருந்துகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. வழக்க்ம் போல் உங்கள் மாற்றிப் போடும் வரிகள் நன்று கில்லர்ஜி.

    ரொம்ப அழகான பாடல் நினைக்கத் தெரிந்த மனமே....பாடல்.

    இதைத்தான் நீங்க என்னைப் பாடித் தர முடியுமான்னு கேட்டீங்க. உங்கள் வரிகளை. ஆனா உண்மையாவே என் தொண்டை, மூச்சுறுப்பும் முன்பு போல ஒத்துழைப்பு கொடுப்பதில்லை, கில்லர்ஜி கொரோனா வந்து போன பிறகு. சுவாசப் பயிற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன். சில சமயம் கொஞ்சம் பாட வருது. ஆனாலும் எனக்குத் திருப்தியாக இருப்பதில்லை. முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் பாடல் எழுதி வெகுகாலம் ஆகிவிட்டது.

      நீக்கு
  5. தங்களுக்கு நிகர் தாங்களே..

    அருமை..

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான பாடல் - உங்கள் வரிகளில் அமைத்த பாடலும் சிறப்பே.

    பதிலளிநீக்கு
  7. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் . நீங்கள் இயற்றிய பாடலும் அருமை . வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நலமா ? தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

      நீக்கு
  8. அதே டியூனில் உங்கள் வரிகளும் அருமை

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. நல்ல பாடல்.
    உங்கள்பாடலும் அருமையாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. பிடித்த பாடல் கேட்டு ரசித்தேன். நீங்கள் எழுதிய பாடலும் அருமை.

    தவிர்க்க முடியாத காரணத்தால் பதிவுக்கு வரவில்லை. தங்கையின் கணவர் இறைவனடி சென்று விட்டார் அதனால் வலை பக்கம் வரவில்லை. அவள் வீட்டில் அவளுக்கு ஆறுதலாக இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா ? எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நீக்கு