தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஏப்ரல் 15, 2024

தஞ்சாவூர், தம்பி தட்டுக்கெட்டான்

ணக்கம் வரதராஜன்ணே நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தட்டுக்கெட்டான் நல்லா இருக்கேன்டா.. நீ எப்படி இருக்கே ?
 
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகம் அதான் கேட்கலாம்னு வந்தேன்
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
 
பெரியவங்கல்லாம் எண்ணம் போல் வாழ்க்கைனு சொல்றாங்களே இது உண்மையாண்ணே ?
ஆமாடாத்தம்பி நாம நல்லதையே நினைக்கணும் அப்பத்தான் கடவுள் நினைச்சதை நிறைவேற்றுவாரு...
 
அப்படீனாக்கா... நானும், என்னோட குடும்பமும் நல்லா இருக்கணும்னு கடவுள்கிட்டே வேண்டிக்கிட்டு பிரதமர் பதவியை எனக்கு கொடுனு வேண்டிக்கிட்டா நடக்குமாண்ணே ?
இது மோடிக்கு அடியில வெடி வக்கிற வேலையிலடா... வேற ஆசைப்படலாமே... பத்து வருசமா கட்சியில இருக்கேன் நானே தலைவர் பதவிக்கு ஆசைப்படலையேடா...
 
அப்படீனாக்கா ஸ்பைடன் பதவியை கேட்கலாமாண்ணே ?
ஏண்டா நீ சாதாரண பதவிக்கு ஆசைப்பட மாட்டியாடா ?
 
சாதாரண பதவி என்னண்ணே இருக்கு ?
சிவலோக பதவி இருக்குடா...
 
என்னண்ணே நீங்க என்னை சாகச் சொல்றீங்க... அப்புறம் அண்ணியை யாருணே பார்த்துக்கிருவா ?
டேய் எம் பொண்டாட்டியை நான் பார்த்துக்கிருவேன்டா... நீ போயி சாவு எனக்கு பிரச்சனை இல்லை
 
நீங்கதான் அரசியல் கூட்டம்னு சொல்லிக்கிட்டு வருசம் பூராம் வெளியூர் போயிடுறீங்க நான்தானே அண்ணிக்கு தினம் காய்கறி வாங்கி கொடுக்குறேன்.
இவ்வளவு நாளா நீ இப்படித்தான் வண்டியை ஓட்டுறியா ?
 
ஊருல நாலு பேருக்கிட்டே கேட்டுப் பாருங்கண்ணே நான் எப்படி அண்ணியை பார்த்துக்கிறேனு...
டேய்  நிறுத்துடா... இனிமேல் நீ வீட்டுப்பக்கம் வராதே நான் கட்சியை விட்டே விலகப் போறேன்டா...
 
என்னண்ணே உங்க தலைவர் மாதிரியே ஒதுங்கிடுவீங்க குடும்பத்தை நாம பார்த்துக்கிறலாமேனு பார்த்தேன். இப்படி குண்டைத் தூக்கி போடுறீங்க...
ஓடுறா இனிமேல் இந்த வாசல்படியை மிதிக்காதே... ச்சே முதல்ல கடசி ஆபீஸ் போயி உறுப்பினர் கார்டை கேன்ஷல் செய்யணும்.
 
தம்பி தட்டுக்கெட்டானை விரட்டி விட்டு கட்சி அலுவலகம் நோக்கி நடையை கட்டினார் அண்ணன் வரதராஜன்.
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
அரசியல் ஒரு சாக்கடைனு சொல்றது இங்கே இருந்துதான் உருவாகுது போலயே...

7 கருத்துகள்:

  1. வரதராஜன், இனி அரசியலுக்கு வராத ராஜனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே வரலாம், வராமலும் போகலாம்.

      நீக்கு
  2. கவுண்டமணி, செந்தில் பேசுவது போல கறப்னை செய்து படித்தேன்.
    நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. ஒரு படத்தில் கவுண்ட்டமணி மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க தான் மல்லிகைப்பூவும் அல்வாவும் வாங்கிச் சென்று தருவதாகச் சொல்வார்.  அதையே கவுண்ட்டர் மனைவியிடம் செந்தில் செய்து அடி  வாங்குவார்.  அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் அது "வைதேகி காத்திருந்தாள்" திரைப்படம்.

      தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு