மதுரை
பதிவர் விழாவில் இனிய தோழி கவிஞர். திருமதி. மு.கீதா அவர்கள் எழுதிய நூலை
கையொப்பமிட்டு கொடுத்தார் ‘’ஒரு கோப்பை மனிதம்’’
பருகினேன் பருகப் பருக...
அமிர்தமாய், அற்புதமாய்,
அருமையாய்,
அமர்க்களமாய்,
ஆனந்தமாய்,
ஆச்சர்யமாய்,
ஆர்ப்பாட்டமாய்,
ஆக்கரோஷமாய்,
இதமாய்,
இன்பமாய்,
இமயமாய்,
இனிமையாய்,
ஈரமாய்,
ஈட்டியாய்,
ஈகைகுணமாய்,
ஈர்ப்புசக்தியாய்,
உணர்வாய்,
உரிமையாய்,
உவமையாய்,
உண்மையாய்,
ஊர்கோலமாய்,
ஊசிகுத்தலாய்,
ஊசிவெடியாய்,
ஊமைக்காயமாய்,
எந்திரமாய்,
எல்லாமாய்,
எளிமையாய்,
எகத்தாளமாய்,
ஏணியாய்,
ஏற்றமாய்,
ஏமாற்றமாய்,
ஏகாந்திரமாய்,
ஐயமாய்,
ஐயனாய்,
ஐதீகமாய்,
ஐம்புலனாய்,
ஒளியாய்,
ஒலியாய்,
ஒருமையாய்,
ஒழுக்கமாய்,
ஓர்உயிராய்,
ஓதுவாராய்,
ஓஷோனாய்,
ஓங்காரமாய்,
ஔவையாய்,
ஔவ்தடமாய்,
இப்படி....
அனைத்து உணர்வுகளும் என்னுள் படரக்கண்டேன், சிறு சிறு கவிதைகளில் கூட பெரும்
பெரும் தத்துவங்களை சொல்லமுடியுமா ?
கீழே
சில ஏக்கா தருகிறேன்.
சிதைவு
கோடரிச்
சொற்கள்
வீழ்ந்தன
உறவுகள்
பேச்சு
மௌனமாயிருப்பதால்
நிகழாமலில்லை
பேச்சு
நா
நயம்
தோற்றே
போனது
நாணயம்
தவறிய
நா
நயம்...
சமத்துவம்
அரசியல்
ஆண்களுக்கு
அரிசியியல்
பெண்களுக்கு
ச்சீ
ச்சீ
ச்சீ....
வெட்கம்
கெட்டவர்கள்
திட்டிக் கொண்டே
திரையிட்டுக்
கொண்டது
குளியலறைக்
கண்ணாடி....
எம்மை
மிகவும் கவர்ந்தது
தோட்டிச்சி
பாட்டி
இந்த
பாட்டிகளை நானும் கூட எமது வாழ்வில் கண்டு கடந்து வந்து இருக்கிறேன் ஆனால் ? எமக்கு தோன்றவில்லையே காரணமென்ன ? ஒருவேளை எமக்கு தோண்ட(தலையில்)இல்லையோ ?
வியக்கின்றேன், வியக்கின்றேன். இந்தக் கவிஞரை பாராட்டும் தகுதி எமக்கில்லை,
எமக்கில்லை. ஆகவே......
ந்னான்
ப்போறேன், வடக்கே... ய்யேன் ஜோலியப் பாத்துக்கிட்டு.
மதுரை பதிவர் விழாவில் தோழி தேன் மதுரத் தமிழ் கவிஞர். திருமதி. பிரதிபா
கிரேஸ் அவர்களும் ‘’துளிர் விடும் விதைகள்’’ என்ற தனது நூலை கொடுத்தார்கள். நான் என்ன ? இவர்களைப்போல் கவித்துவம் தெரிந்தவனா ? என்ன எழுதுவது ? ஒன்றும் தோன்றவில்லை வேறு
வழியின்றி தோண்டினேன் எமது மூளையின் மூலையோரத்தில், அதில் கிடைத்த
துகள்களை
தூவியிருக்கிறேன் கீழே....
கவிதை படிப்பதின் முறையைக்கூட அறியாதவன் இப்பொழுதுதான் நண்பர் ‘’ஊமைக்கனவுகள்’’ மூலம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன், சரி இதன் மூலமாகவும் கவிதை படித்து
பழகுவோமே என இறங்கினேன் கடலில் மூழ்கி முத்தெடுத்தவன் நிலையானேன் ஆம் துளிர்
விடும் விதைகள் இது கீழிருந்து மேலோட்டம் நான் மூழ்கி மேலிருந்து கீழோட்டமானேன்
ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு நான் மீண்டும் சுயநினைவு பெற்று
மேல் நோக்கி வர நீண்ட நேரங்களானது அதாவது நூலை மூடும்வரை.
எதைச் சொல்ல, அதையா ? இதையா ?
(எதையாவது
சொல்லையா ? யாரது, இடையிலே ஆஸி. சொக்கனா ? ஏங்க ஒரு ஃபளோவா போயிக்கிட்டு இருக்கும்போது
குறுக்கே பேசுனா மறந்துட மாட்டேனே ? நீங்க பதிவு போடும் போது
நான் ஏதாவது சொல்றேனா ? கம்முனு குந்திகினு படிமே)
நானும் ரசித்தவை... பல அதில் சில உங்களின் பார்வைக்கு....
தமிழ்கொண்டே சென்றிடுவாய்
செவ்வாயோ
எவ்வாயோ எக்கிரகம்
சென்றிடினும்
தமிழ்கொண்டே சென்றிடுவாய்
!
அரிய இலக்கியம் படித்து, இதில் இலக்கியம் எதற்க்கு ? எனக்கேட்டு நம்மை குழப்பி விட்டு அவர் தரும் பதில்கள் அனைத்தும் அருமை.
புத்தாண்டை வரவேற்று...
தேன்மதுரத்
தமிழ் தித்திக்க
எட்டுத்திக்கும்
செந்தமிழ் கமழ
தமிழும்
தமிழரும் வளம்பெற
வருக
எம் இனிய புத்தாண்டே !
தூய்மை பேண...
நிலக்கடலை
கொறிக்கலாம் – ஆனால்
நீலக்
கடலை குப்பையாக்கலாமோ ?
நீ மட்டும் என்னுடனே...
மற்றவற்றை
நான் பார்த்துக்கொள்கிறேன்
நீ
மட்டும் என்னுடனே இருப்பாயா ?
தமிழே உதவ மாட்டாயா..
மென்மயிலிறகு
கொண்டு வந்து
கன்னத்தில்
இரண்டு போடவா ?
மேகம்... இதில் வந்த வரிகளை இவர் வானூர்தியில் பறக்கும்போது
எழுதியவையாகத்தான் இருக்ககூடும் வெண்பஞ்சு பொதிகளை வானூர்தி கீறிக்கொண்டு சிறிய
குலுக்கலுடன் பறக்கும் பொழுது அதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.
பிரமாண்டமாய்
உருவம் இருந்தாலும்
ஊடுறுவிச்
செல்லும் மென்மை !
உன் வாசம் நுகர்ந்தவுடன்... இதில் ஒரு பெண் தனது கணவனைக்குறித்து
எழுதுகிறாள் என நம்மை நினைக்கவைத்து முடிவில் மழையைக் குறித்தே என்பதை உணர்த்தி
நம்மை ஏப்ரல் மாதத்தில் முன்னிருத்தி விடுகிறார்.
பழகிய
மழையே
நீ
என்றும் அழகே
எப்பொழுதும்
இனிமையே !
விழிப்பாய் இரு தோழி !
வலை
விரிப்பார் வஞ்சகர் என அறிந்தும்
கலை
மானாய்ச் சென்று மாட்டுவது ஏன் தோழி ?
பெண்ணித்தை காப்பாற்றும் பெண் புலியாய் சமூகத்தில் உலாவும் காமக்கொடூரன்களை
நரியென்றும், ஓநாயென்றும் சாடியிருக்கிறார்.
நானாக நான் இருத்தலில்... குழந்தை கேட்கிறது..
நானாக நான் இருத்தல் எப்பொழுது ?
நானாக நான் இருத்தல் பிழையா ?
கையெழுத்தை... இதில்..
அஞ்சல்
ஆவணம்
அனைத்தும்
கணினியில்
தொலைத்து
விட்டேனே
கையெழுத்தை !
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் வாழ்த்திக்கொண்டே போகலாம் ஆனால் ? அதற்க்கும் தகுதி வேண்டுமே.. இது
எமக்கு இல்லாத காரணத்தால் நானும் தகுதி வளர்க்கப் போகின்றேன்.
கவிஞர் பிரதிபா கிரேஸ் அவர்களுக்கு, கவிச்சுவை களித்த நன்றியுடன் சிறிய
ஆலோசனை, தவறெனில் மன்னிக்க...
\\ நூலில்
கூடுதல் இடம் இருப்பது காலி
குறைத்திருக்கலாமே அளவை தோழி \\
இனிய
நெஞ்சங்களே.... உங்கள் ‘’வால்மீகி’’யில் தற்போது காண்க...
அன்புடன்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
தொடரும்
எமது நூல் அகத்தில்....
சரிதாயணம்
ஆவிப்பா.
கவிஞர்களின் நூல் அறிமுகம் அருமை அண்ணா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நண்பரின் வருகைக்கு நன்றி.
நீக்குஆஹா ! உங்களின் அனுபவத்தைப்பார்க்கும் போதே படிக்கவேண்டும் என்று தோன்றுகிறதே !!!
பதிலளிநீக்குவருக நண்பரே உங்களுக்கு படிக்கத் தோன்றியது உண்மையெனில் அது எனது எழுத்துக்கு கிடைத்த வெற்றியே....
நீக்குகவிதைப் புத்தகங்களைப் பொறுத்த வரையில் நிறையப் பக்கங்களில் காலி இடம்தான் இருக்கும். நான் டிசைன் செய்த புத்தகங்களில் படங்கள் வைத்து லே அவுட் செய்தபோது அவை கவிதையின் ஆழத்தைக் குறைத்து விடுகிறது என்று சில கவிஞர்கள் விமர்சித்தார்கள். ஆகவே அதைத் தவிர்க்க இயலாது ஜி. இரண்டு தோழிகளின் புத்தகங்களையும் அழகாக அறிமுகம் செய்திருக்கீங்க... நானும் படிச்சுட்டு எழுதலாம்னுதான் இருக்கேன். (எப்ப நடக்குமோ...? காட்ஸ் கிரேஸ்).
பதிலளிநீக்குவருக வாத்தியாரே.... என்மனதில் பட்டதை எழுதினேன் தங்களின் விளக்கவுரைக்கு நன்றி
நீக்குதாங்களும் எழுதுங்கள் படிக்கிறேன்.
வணக்கம்
பதிலளிநீக்குபுத்தகம் பற்றி உயிர்எழுத்தில் அடியேடுத்து மிக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்இரண்டு புத்தகம் பற்றி சொல்லிய விதம் நன்று படிக்க துாண்டுகிறது பகிர்வுக்கு நன்றி.
த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி,
நீக்குநண்பரே,
பதிலளிநீக்குஉங்களின் அனுபவங்களோடு இதுபோன்ற வாசிப்பும் சேர்ந்திருப்பதுதான், தங்களின் எழுத்தின் வெற்றி ரகசியம் என்பதை அறிந்து கொண்டேன்.
கவிஞர்களின் கவிதைகளை அறிமுகப்படுத்தி உள்ள உங்கள் ஆத்திச்சூடி அருமை!!
(இப்போதாவது லேட் பண்ணாம வந்தேனா?
இல்ல இதுவும் லேட்டா? )
நன்றி நண்பரே!!!!
கவிஞரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குதாங்கள் லேட்டா ? இல்லையா ? பார்த்துக்கொள்ளுங்கள்.
அருமையாக நூலறிமுகம் செய்து அசத்திட்டீங்க! நானும் இந்த நூல்களை படிக்க ஆவலுடன் உள்ளேன்! வாங்கிப்படிக்க வேண்டும்! நன்றி!
பதிலளிநீக்குசுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி
நீக்குஇரண்டு நுல்களின் விமர்சனங்களுமே அருமை.
பதிலளிநீக்குஅதுவும் முதல் பத்தியில் அ முதல் ஔ வரை - சூப்பர்.
ஹலோ, உங்களுக்கு "அதையா" இதையா?" எழுதினதுக்கு அப்புறம் என்ன எழுதுறதுன்னு தெரியலை, உடனே என்னை உதவிக்கு கூட்டிக்கிட்டீங்க. பரவாயில்ல நண்பருக்கு தானே உதவி செய்றோம்னு நானும் பெருந்தன்மையா வந்து உங்களுக்கு உதவி பண்ணினேன். இப்ப என்னடானா, கம்முன்னு குந்திக்கினு படிக்கனுமா? நல்லாயிருக்கே உங்க தேவகோட்டை நியாயம் .
வாங்க, வாங்க வந்தோமா ? கருத்துரை எழுதினோமானு இருக்கோனும் இப்படி குண்டக்க, மண்டக்க பேசப்படாது.
நீக்குநான் புத்தகம் படிக்கிறத விட்டு ரொம்ப காலமாச்சு......!!
பதிலளிநீக்குபுத்தகம் படிப்பது... மனதுக்கு இதமானது நண்பரே...
நீக்குஒரு கோப்பை மனிதம் பற்றிய உங்கள் விமர்சனத்தைக் கூட ,ஒரு கோப்பை வடிவில் டிசைன் செய்திருப்பதை ரசித்தேன் !
பதிலளிநீக்குத ம 4
பகவான்ஜி அவர்களின் விமர்சனத்தையும் ரசித்தேன் வாக்கோடு....
நீக்குஇன்னாது கோப்பை வடிவ கவிதையா!!! இந்த கில்லர்ஜி அண்ணா, பகவான் பாஸ் இவங்களுக்கு மட்டும் மூளை ஒருகிலோ ஆறுநூறு கிராம் இருக்குமோ!!!!
நீக்குபாம்பின் பாய்சன் பாம்பறியும் (பாம்பின் கால் என்று எத்தனை நாள்தான் சொல்லிக் கொண்டிருப்பது )
நீக்குகில்லர்ஜியின் கலைக் கானில் தெரிந்தது எனக்கும் தெரிந்தது ,அவ்வளவுதான் .கவிஞர் சொன்னது போல் நாங்கள் கோப்பையில் குடியிருக்கவில்லை !
நீங்கள் மூளை எடை எங்கள் இருவருக்கும் சேர்த்துதானே :)
செக் செய்ய வழியேதும் இருக்கிறதா :)
அருமையான நூல் அறிமுகம் நண்பரே
பதிலளிநீக்குநானும் படித்து மகிழ்ந்த நூல்களை
மீண்டும் தங்களால் படித்த உணர்வு
நன்றி நண்பரே
வருக நண்பரே.... தங்களின் கருத்துரைக்கு நன்றி.
நீக்குதம 6
பதிலளிநீக்குநன்றியுடன்.....
நீக்குரசனையான விமர்சனத்தில் வானூர்தியில் பறந்தேன் ஜி...
பதிலளிநீக்குடிக்கெட் செலவு இல்லாமல் பறந்தமை கண்டு மகிழ்ச்சி.
நீக்குகுண்டக்க..மண்டக்க எதுவும் பேசப்படாது என்று உத்தரவிட்டதால்..எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன் நண்பரேஃஃஃஃஃஃஃஃஃஃ
பதிலளிநீக்குநண்பா, அது குண்டக்க, மண்டக்க எழுதுற பார்ட்டிக்கு நீங்க ரண்டக்க, ரண்டக்க பார்ட்டி தைரியமாக எழுதுங்கள்.
நீக்குநுட்பமான நுண்ணறிவுமிக்கவரின்
பதிலளிநீக்குநூல் அறிமுகம்
1)துளீர் விடும் விதைகள்
2) ஒரு கோப்பை மனிதம் வெகு சிறப்பு!
விமர்சன வித்தையை எங்கு அய்யா!
கற்றீர்கள்?
எனக்கும் கொடுங்களேன் கொஞ்சம் டிப்ஸ்?
அருமை/அழகு/ ஆரோக்கியம்/அற்புதம்/
அதிசயம்/ அன்பு/ஆன்மீகம்/ஆட்டம்/ஆலாபனை/ஆஹா/ஆஹா/
ஓஹோ! ஒஹோ! பேஷ்! பேஷ்!
டிப்ஸை டிப்பன் பாக்ஸில் அனுப்புங்கள் கில்லர்ஜி!
நன்றி!
புதுவை வேலு
வருக, நண்பரே... வித்தை இதுல என்ன இருக்கு நண்பா...
நீக்குநரசுஸ் ஃகாபி குடிங்க...
வளைச்சு வளைச்சு சுவையை விலையில்லாமல் தரும் தங்களின் நேர்த்திக்கு இன்னொருமுறை இதே வாத்தியார் வேலைக்கு வருவீங்கல்ல?! வாங்க அப்ப எடைக்கு எடை தருவோம் இல்லையில்லை.... இருப்பதையெல்லாம் தருவோம்.. இல்லாட்டி உலக்கையோ உலகையோ வித்து உம் அன்புக்கு ஈடு செய்ய முயல்வோம்...
பதிலளிநீக்குஎன்ன நண்பா உலக்கையை எடுக்குறீங்க..... பயமா இருக்குல...
நீக்குதுளிர்த்த விதைகளையும், மனிதத்தின் சில மிடறுகளையும் எங்களுக்கும் பகிர்ந்து கொடுத்ததற்கு நன்றி நண்பரே !
பதிலளிநீக்குசாமானியன்
saamaaniyan.blogspot.fr
நண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்குஇப்படி யாரும் இதுவரை விமர்சித்திருக்க மாட்டார்கள் வித்தியாசமான
பதிலளிநீக்குமுறையில் அசத்திட்டீங்க சகோ ! அருமை அருமை ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஅன்பு நண்பர் ஜி,
பதிலளிநீக்குஒரு கோப்பையில் அகவரிசையில் குடியிருந்து கவிதையில் அசத்தி விட்டீர்கள். தேநீர் அல்ல பதநீர் குடித்த திருப்தி... நல்ல சுவை.
துளிர் விட்ட (க)விதைகள்... வீரியமிக்கதாக இருந்தன.
கீதம்... சங்கீதம்..., கிரேஸ்... தேன் மதுரம்!
அருமையான கவிதைக்கு வாழ்த்துகள்.
நன்றி.
மணவையாரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
நீக்குமிக்க நன்றி சகோ
நீக்குநண்பரே,
பதிலளிநீக்குஅருமையான அறிமுகங்கள் .
தொடரட்டும் உங்கள் சமூக பணி.
அ முதல் ஒள வரையிலுள்ள ஏதேனும் சில வார்த்தைகளாவது எங்களுக்காக கொஞ்சம் விட்டு வையுங்கள்.
கோ
வருக நண்பரே.... பாராட்டுகின்றீர்களா ? ’’பார்’’ ஆட்டுகின்றீர்களா ?
நீக்குதெரியவில்லை, புரியவில்லை என்று கூறிக்கொண்டே சிறப்பாக விமர்சனம் எழுதுவது உங்களால்தான் முடியும். அகராதியில் இனி சொற்களே இல்லை என்று கூறுமளவு அனைத்துச் சொற்களையும் தாங்கள் சிந்தித்து, பகிர்ந்து நல்ல விமர்சனங்களை எழுதியுள்ளமைக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கு நன்றி தமிழ் அகராதியில் தங்களுக்கு தெரியாததையா ? நான் சொல்லி விடப்போகிறேன்....
நீக்குஎதையுமே வித்தியாசமாக தருவீர்கள் என்று சொன்னது எத்தனை உண்மையாகிவிட்டது பார்த்தீர்களா ?அருமை அருமை சகோதரிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்திருக்கும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉண்மையோ ? பொய்யோ ? ஆனால் ? சகோதரிகள் சந்தோஷப்படவில்லை என்றே கருதுகின்றேன் காரணம் இன்னும் ஏரியாவுக்கு வரவில்லையே... நீங்கள் சந்தோஷப்பட்டது தெரிகின்றது... நன்றி
நீக்குரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சகோ..கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நண்பர்கள் என்று இருந்ததால் வலைப்பக்கம் வரமுடியவில்லை சகோ..மன்னித்துக்கொள்ளுங்கள் :))
நீக்குஅழகான அறிமுகங்கள்.கவிதைகளை வெகுவாக ரசித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகள் சொல்கின்றன.
பதிலளிநீக்குஐயா அவர்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி....
நீக்குஅடுத்த பதிவைக் காணோம் என்று பார்த்தபோது “லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வருவிங்க” என்றுதான் தோன்றியது நண்பரே!!......
பதிலளிநீக்குஇப்படித்தானே... நண்பா உசுப்பேற்றி விடுறீங்க......
நீக்குதங்களுக்குப் பிடித்தவற்றில்
பதிலளிநீக்குநான் விரும்பியதைக் கீழே தருகின்றேன்.
தமிழ் கொண்டே சென்றிடுவாய்
செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம் சென்றிடினும்
தமிழ் கொண்டே சென்றிடுவாய்!
மேற்காணும் அடிகளில் தான் - என்
கண்ணும் நோக்கி நின்றதே!
தங்களுக்குப் பொருத்தமான வரிகளைத்தான் தேர்வு செய்துள்ளீர்கள் நண்பரே.... நன்றி
நீக்குநன்றி ஐயா
நீக்குஅ, ஆ!! இ....இப்படி.....ஈ..எங்களால் எழுத முடியவில்லையே (ஈ ந்னு என்ன இளிப்பு) உங்களால் ஊதித்தள்ள் முடிகின்றதே! எப்படி எழுதுகின்றீர்கள்!! ஏணி வைத்தாலும் எட்டாத உயரம். ஐ! என்று சொல்ல வைத்த உயிர் எழுத்து வார்த்தை அலங்காரம் அருமை! ஒன்று புரிந்தது..... ஓ!!! போடு என்று போட வைத்த அருமையன புத்தக விமர்சனப் பதிவு! நண்பரே!
பதிலளிநீக்குமிக நன்றாக உள்ளது! அதான் சொல்லிப்புட்டோம்ல.....அப்புறம் என்ன!?
அடடே.... எங்க அப்பன் குதிறுக்குள்ளே ‘’இல்லை’‘னு சொல்லிக்கிட்டே எனக்கும் அ, ஆ, இ, ஈ சொல்லிக்கொடுத்துட்டீங்களே.... ஸூப்பரப்பூ...
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குமுதலில் என் மனமார்ந்த நன்றியை ஏற்றுகொள்ளுங்கள்.
என் தோழி கீதா அக்காவின் நூலுடன் என்னுடையதையும் சேர்த்து எழுதியது மகிழ்ச்சி. அவர்களுடைய கவிதைகளை அழகாய் அகர வரிசையில் பாராட்டியிருப்பது மிக்க அருமை சகோ.
//ஆழ்கடலின் அமைதிக்குள் நீந்துவது போன்ற உணர்வு// ஆழ்ந்து ரசித்தமைக்கு நண்டிர் சகோ, மகிழ்ச்சியாக இருக்கிறது. அதையும் இதையும் சொல்லிவிடுங்கள் :)
சரிதான் சகோ, நாம் வானூர்தியில் கிழித்துக் கொண்டு சென்ற மேகம் சாலையில் செல்லும்போதும் மேலே வந்து மகிழ்விக்கும்
வாழ்த்துவதற்கு எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு சகோ, இப்படிச் சொன்னால் எப்படி? வாழ்த்துங்கள் வாழ்த்துங்கள் அதுதானே வேண்டும் சகோ
தவறாக நினைக்க ஒன்றுமில்லை சகோ, ஆலோசனை சொன்னது மகிழ்வே..ஒரு பக்கத்திற்கு ஒரு கவிதை இருந்தால் நன்றாய் இருக்கும் என்பதால் இப்படி அமைத்தது.
கவிதைகளில் உங்களைக் கவர்ந்தவற்றைச் சொல்லி விமர்சனம் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சகோ..
ஆவிப்பா, சரிதாயணம் பற்றி படிக்கக் காத்திருக்கிறேன்..
வாங்க, வாங்க விஸ்தாரமான கருத்துரைக்கும் நன்றி...
நீக்குஅடுத்த விமர்சனத்திற்க்கு காத்திருப்பதற்க்கும் நன்றி.
வணக்கம் !
பதிலளிநீக்குமிக அருமையாக விமர்சித்துள்ளீர்கள் சகோதரா ! மென்மேலும்
வளர்ச்சி காண படைப்பாளிகளுக்கும் விமர்சித்த தங்களுக்கும்
என் உளமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .வாழ்க தமிழ் .
அம்பாளடியாள் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் அன்பான நன்றிகள்.
நீக்குவணக்கம் சகோ ஒரு வாரமாய் கம்பன் விழா,மணப்பாறையில் முதல் மேடைப்பேச்சுக்கு தயார் செய்தல்னு வரமுடியல..மன்னிக்கவும்..ஆஹா இப்படிக்கூட விமர்சனம் எழுத முடியுமா...அருமை..அருமை...உங்களின் எழுத்து வளமை மேலும் கூட்டுகின்றது எங்களின் நூல்களுக்கு பெருமை...நன்றி சகோ..
பதிலளிநீக்குவாங்க, வாங்க, வாங்க முகவரி கண்டு பிடித்து ஆட்டோவில் வந்து கருத்துரை தந்தமைக்கு ¾ கிலோ நன்றி.
நீக்குத.ம.15
பதிலளிநீக்குஇதற்க்கும் ¼ கிலோ நன்றி
நீக்குவிமர்சனம் சூப்பர் அண்ணா! அங்கிட்டு நம்ம அக்கா! இங்கிட்டு தோழி!! அடுத்து அண்ணனா!! கலக்குங்க!! நான் ஸ்டாப் ரூமில் சரிதாயணம் படிச்சுட்டு சிரித்த சிரிப்பை பார்த்து...அன்புட்டு டீச்சர்களும் மேரண்டுட்டாங்கன்னா பாருங்களேன்.உங்க விமர்சனைத்துகாக வெய்டிங்:)
பதிலளிநீக்குவாங்க, வாங்க, அக்கா, தோழி, இவர்களைப்பற்றி பொறணி எழுதியதாலும், அடுத்து அண்ணனைப்பற்றி பொறணி எழுதப்போவதாலும் வந்து படித்தமைக்கு(ம்) சேர்த்து 1 ½ கிலோ நன்றி
நீக்குகில்லர்ஜிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம்னு வந்தா... என் புக்கை ரசிச்சுப் படிச்சுட்டு வாய்விட்டுச் சிரிச்சதா சொல்ல தங்கச்சி புத்தாண்டுப் பரிசே தந்திருக்குது எனக்கு. ஜாலி... என் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பா.
நீக்குதங்களுக்கும், அப்படியே ஆகட்டும் வாத்தியாரே....
நீக்குஅருமையான ஆழ்ந்த கருத்துரை... அந்த நூல்களுக்கு அனைவரையும் ஈர்க்கும் அழகிய அணிந்துரை... வாழ்த்துக்கள் நூலாக்கம் செய்தோருக்கும் எடுத்தியம்பிய உமக்கும்.
பதிலளிநீக்குநண்பர் கிங்ராஜ் அவர்களின் வரவுக்கு நன்றி.
நீக்குகவிதை அறிமுகம் விமர்சனம்னு வந்தவுடனே அ,ஆ,இ எல்லாம் போடடுக் கலக்குறீங்க...? நீங்களே கவிதையும் எழுதலாம் கிலலரே! அழகான விமர்சனமே கவிதையின்ஆரம்பம்.. நாங்க படிக்க ரெடி. அப்ப நீங்க?
பதிலளிநீக்குவாங்க, வாங்க சொல்லிட்டீங்கள்ல இனி எழுதி கொள்(ல்)கிறேன்...
நீக்குவருகைக்கு நன்றி
அருமையாக உள்ளது, விமர்சனம் விமர்சனமாக உள்ளது, வாருங்கள் நண்பரே என் வலைக்குள்ளும்.
பதிலளிநீக்குசகோதரியின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன் தங்களின் கருத்துரைக்கு வாழ்த்துகள்.
நீக்குஇதோ புறப்பட்டு விட்டேன்.....
வணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குஅருமையான நூல்களை வாசித்து அதற்கு அற்புதமாக விமர்சனமும். படிக்க படிக்க திகட்டாமல் வழங்கியுள்ளீர்கள்.நீங்கள் குறிப்பிட்டிருந்த கவிதைகளை நானும் மிகவும் ரசித்துப் படித்தேன். சகோதரிகளின் புத்தகங்களை விரைவில் வாங்கி படிக்கும் ஆவலில் உள்ளேன். நன்றி!
உறவின் வருகையில்,உபசாரங்களின் பளுவில் தங்களின் பதிவுகளுக்கு உடன் கருத்திடாமைக்கு, வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய இப்புத்தாண்டில் அனைவரும் அனைத்து வளங்களும் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சகோதரியின் மனம் திறந்த பாராட்டுகளுத்து நன்றியும்.
நீக்குஎமது இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகளும்..
அண்ணாவுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
நீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...
பதிலளிநீக்குSame 2 you Dear....
நீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகவிஞர்களின் நூல் விமர்சனம் மிகச் சிறப்பு சகோதரரே!
கவிஞர்களுக்கும் உங்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
கவிஞரின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவருக தோழரே.... நன்றி.
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
பதிலளிநீக்குதங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ...
நீக்குதங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குSame 2 you Dear....
நீக்குதங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஆறுமுகம் அய்யா அவர்களின் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும்.
நீக்குலேட்டாகுது..ஆனா லேட்டஸ்ட இன்னும் காணோமே... புத்தாண்டில். வேலைப் பளுவோ.....?????
பதிலளிநீக்குJust wait, நண்பா...
நீக்குஎனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
பதிலளிநீக்குஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,
"புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"
என்றும் நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
நண்பரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
பொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
ஆஹா, கவிஞரின் வருகை கண்டு தேன் குடித்த வண்டு போல் மனம் பறந்ததே... இன்று.
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்கனின் எண்ணம் நிறைவேற வாழ்த்துகிறேன் நண்பா....
நீக்குஉங்களிடம் பிடித்த குணம் இது. நூல்களைப் படித்ததும் கருத்து வெளியிடுவதுதான் பலருக்கும் நம் நூல்களைப் படிக்கக் கொடுத்தாலும் படிதார்களா இல்லையா என்று தெரியாமல் இருப்பது. ஹூம் சொல்ல வேண்டாம். நான் உங்கள் தளத்தின் தொடர்பாளன். இதுவே என் டாஷ் போர்டில் வந்த கடைசி பதிவு. வந்தபதிவுகளுக்குல்லாம் படித்து கருத்தும் எழுதுகிறேனே
பதிலளிநீக்குஐயா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தாங்கள் கொடுத்த நூலை நான் முழுமையாக படித்தேன் என்பதை எப்படி ? வெளிப்படுத்துவது ஆகவே... எமது விமர்சனம்.
நீக்குஒரு பக்க விமர்சனத்தில் இரண்டு நூல்கள். கவிஞர் ஆசிரியர் M.கீதா அவர்களது நூலினைப் பற்றி A to Z என்பது போல அ முதல் ஔ வரை கூறியது, தங்கள் விமர்சனத்தின் தனிச் சிறப்பு.
பதிலளிநீக்குசகோதரி கிரேஸ் அவர்களது கவிதை நூல் பற்றிய உங்களது பார்வையும் அருமை. பெரும்பாலும் கவிதை நூல்களில் பக்கத்திற்கு ஒரு கவிதை என்று பிரசுரிக்கும் போது காலி இடம் விடுவது வழக்கம். சிலர் அந்த இடத்தில் சிறிய அளவில் மலர்கள் போன்ற இயற்கை கோட்டோவியங்களை போடுவார்கள்.
நண்பரின் வருகைக்கும் விஸ்தாரமான கருத்துரைக்கும், நாலைப்பற்றிய விளக்கவுரைக்கும் நன்றி தாங்களும் நன்றாகத்தான் எழுதியிருந்தீர்கள்.
நீக்குபகிர்ந்தவற்றில், மு.கீதா அவர்களின் கவிதைகள் அனைத்தும் அருமை! கிரேஸ் பிரதீபா அவர்களுடையவற்றில் கடைசிக் கவிதை கடைசிக் கவிதை செம்மை! விமர்சனத்திற்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குநண்பர் கில்லர்ஜி அவர்களுக்கும் மற்றுமுள்ள அன்பார்ந்த பதிவர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நண்பரின் வருகைக்கு நன்றியும், பொங்கல் வாழ்த்துகளும்....
நீக்கு