தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2024

நினைவஞ்சலி

 

ணக்கம் நட்பூக்களே...இப்பொழுது எங்கெங்கு காணிணும் நினைவஞ்சலி சுவரொட்டிகள், நெகிலி பதாகைகள் என்று சுவர்களில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதாவது இறந்ததற்கு சுவரொட்டி அடிக்கின்றார்களோ... இல்லையோ மறுவருடம் முதல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மட்டுமல்ல, அப்பத்தாவின் பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலி என்று சுவரொட்டிகள் ஒட்டுகின்றார்கள்.
 
ஒருமுறை பேருந்தில் பயணித்தபோது பார்த்தேன் வருடம் 2022 அப்பத்தாவின் இருபத்து ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி மிகப்பெரிய நெகிலி பதாகையில் அப்பத்தா வண்ண புகைப்படத்தில் இருந்தது. பெயர் மூன்று வர்ணங்களில் அதாவது கட்சியின் கரையாம். அதாவது அப்பத்தா இறந்தபோது இந்த பதாகைகள் கலாச்சாரம் இவ்வளவு கிடையாது அன்று வருடம் 1996 ஆக இருந்திருக்கும். இவங்கே எல்லாம் பகுசிக்கு பஞ்சர் பார்க்கிறவங்கே... உண்மையான பாசம் இருக்காது.
 
நானும் பல நபர்களை பார்த்து விட்டேன். வாழும்போது நேசிக்காதவர்கள் இறந்தவுடன் ஆடம்பரமாக அமர்களப்படுத்தி இடுகாடு கொண்டு செல்கின்றார்கள் இதை இறைவன் ஏற்றுக்கொள்வானா ? என்பதை யாரும் உணர்ந்து பார்ப்பதில்லை.
 

அதைப்போல் நினைவஞ்சலியில் இறந்தவர் என்றோ வட்டச் செயலாளராக, வண்டு முருகனாக இருந்திருப்பார். அதையும் சுவரொட்டியில் போடுவார்கள். இதனைப்போல திருமண அழைப்பிதழில்கூட போட்டு இருக்கின்றார்கள். பதவி மோகம் இறந்தவர்களை விட்டாலும், இருப்பவர்களை விடாது போலும்.
 
இதோ இந்த பதிவு எழுதும்போது வாயிலில் எனக்கு மிகவும் பிடித்த நிலக்கடலை வண்டி சென்றது சரியென்று பத்து ரூபாய்க்கு வாங்கினேன் தின்று கொண்டே பதிவை எழுதினேன் முடிவில் பார்த்தால் இதோ கடலை மடித்து கொடுத்த பொட்டணத்தில் இருந்ததுதான் மேலேயுள்ள புகைப்படம். என்ன பொருத்தம் பார்த்தீர்களா ?  
 
ஓர்முறை மதுரை கல்பாலத்தின் அடியில் கம்மங்கூழு குடிப்பதற்காக சென்றேன் பாலத்தின் தூணில் நினைவஞ்சலி சுவரொட்டி அகவை இருபதுதான் போட்டு இருந்தது எனக்கு பார்த்ததும் மனதுக்கு வருத்தமாக இருந்தது மிகவும் சிறிய வயதிலேயே போய் விட்டானே என்று கடைக்காரரிடம் சொன்னேன்...
 
ஆமா தம்பி கட்சி, கட்சினே திரிவான் தலைவருக்கு கட்டவுட் கட்டுனான் தவறிப் போயி மேலேருந்து கீழே விழுந்துட்டான் ஒரு மாசம் ஆஸ்பெட்டல்ல இருந்தான் பாவம் பொழைக்கலை
 
இவனுக்காகவா வருந்தினேன் ? இப்படி பிறவிகள் இருந்தும் பயனென்ன ? அவனது பெற்றோர்களுக்காக வருந்தினேன் வேறென்ன செய்வது ? இந்த சாவுகளின் அடிப்படை காரணம் வேலை இல்லாமைதான். அரசுதான் இதற்கான தீர்வை எடுக்க வேண்டும். எப்படி எடுக்கும் ? இந்த வகையான கோஷமிடும் கூட்டங்கள்தானே இவர்களுக்கு தேவை. திரு.சீமான் அவர்கள் சொல்வது போல் இனி வாய்ப்பு இல்லை ராஜா.
 
கில்லர்ஜி புதாபி
 
சிவாதாமஸ்அலி-
காலம்தான் மாறுது காட்சி மாறவேயில்லை.
 
Chivas Regal சிவசம்போ-
எல்லாப்பயலும் பகுசிக்கு பஞ்சர் பார்க்குறாங்கே...

19 கருத்துகள்:

  1. நினைவஞ்சலி என்று எ பி யில் கண்டபோது எ பி ஆசிரியருக்கு நினைவஞ்சலி என்று நினைத்தேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இந்த விபரம் தாங்கள் சொல்லியே அறிந்து கொண்டேன்.

      நீக்கு
  2. நேற்று மயானத்தில் சில 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர்கள் பார்த்தேன்.  அதில் ஒன்று 12/8 அன்று மறைந்து போனதாய்ச் சொல்லி சூர்யா என்கிற இருபது வயது இளைஞனின் படம்.  பெரிய ப்ளெக்ஸ் போர்ட் எல்லாம் இல்லை.  சாதாரண போஸ்டர்.  எனக்கும் அந்த இளைஞன் என்ன காரணத்தினால் இப்படி இளவயதில் மறைந்திருப்பான் என்கிற எண்ணம் எழுந்தது.  என்ன மரண வரம் பெற்று இந்த பூமிக்கு வருகிறார்களோ....படைப்புத் தொழிலில் ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்களுக்கு ஆயுள் கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு அன்றைய தினம் ஜனித்தவர்களில் இந்த இளைஞன் கடைசி ஆளாக இருந்து, அன்றைய தினத்தின்  கோட்டாவில் மிச்சம் இருந்த நாட்களை அவனுக்கு வழங்கி இருப்பார்கள் என்று கற்பனை ஓடியது.

    பதிலளிநீக்கு
  3. இந்த அஞ்சலி போஸ்டர்களால் பிரயோசனம் இல்லை. இதனை செத்தவர்கள் பார்த்து மகிழ முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செத்தவர்கள் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர் ஆயினும் அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நம்பிக்கை. செத்தவர்களின் புகழ் பரவுகிறதோ இல்லையோ போஸ்டர் அடித்தவர்கள் புகழ் பரவுகிறது அல்லவா? அது தான் தேவை.
      Jayakumar

      நீக்கு
    2. வருக தமிழரே இதெல்லாம் பகட்டுக்காக செய்வதே...

      நீக்கு
  4. தேவையில்லாத பகட்டு... நம் ஊரில் இப்படியான போஸ்டர்கள், பேனர்கள் அதிகம். வடக்கில் இப்படியெல்லாம் யாரும் செய்வதில்லை.

    பதிலளிநீக்கு
  5. மலையாளம் செய்தித்தாள்களில் சரம அறியிப்பு என்று ஒரு முழு பக்கம் இருக்கும். அதில் லோக்கல் ஆக இறந்தவர்களின் பெயர், வயது, விலாசம், புகைப்படம், மற்றும் அவரது குடும்ப விவரங்கள் எல்லாம் இலவசமாக பிரசுரிக்கப்பட்டிருக்கும் அடக்கம் செய்யப்படும் நேரம், இடம் முதலியவையும் குறிப்பிடப்பட்டிருக்கும். . இச்சேவை இலவசம்.

    கண்ணீர் அஞ்சலி தமிழ் செய்தித்தாள்களிலும் உண்டு.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது மேலதிக விளக்கங்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. என்ன செய்வது! எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் உலகம்! நினைவு அஞ்சலி தெரிவித்தால் இருக்கும் போது சரியாக பார்க்கவில்லை என்றும் இறந்த பிறகு நினைவு அஞ்சலி போஸ்டர் கூட ஓடடவில்லை! என்றும் குறை சொல்லும் உலகம்! வாழ் ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்! வையகம் இதுதானடா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. நினைவஞ்சலி போஸ்டர்கள் அடித்து ஒட்டுவது அவர்களுக்கு மன ஆறுதலை தருகிறது போலும். முன்பு தினப் பத்திரிக்கையில் விளம்பரம் செய்வார்கள், சுற்றத்தார் மற்றும் , நட்புகள் தெரிந்து கொள்ள. இப்போதும் வருகிறது.
    ஆனால் காலையில் கண் விழிக்கும் போது இந்த மாதிரி சுவரில் ஒட்டப்பட்டு இருக்கும் செய்திகள் மனதை வருத்தபட வைக்கும். அதுவும் சிறு மலர்கள் உதிர்ந்து விட்டது என்று சிறு வயது மரணம் மிகவும் கலங்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவை வருத்தத்துடன் படித்தறிந்தேன். இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒவ்வொரு வருடங்களும் அடித்து வெளியிடுவதால் என்ன உபயோகமோ? உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு கூடப் பிறந்தவர்களும், பெற்ற மகன், மகளும் மற்ற சுற்றத்தவர்களும் ஏதாவது மனவுளைச்சலை தந்து விட்டு, போன பிறகு நினைவாக ஏதோ பாசம் மிகுந்தவர்கள் போல் காட்டிக் கொள்வது வீண் படாடோபந்தான். வேறு என்ன சொல்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. உயிருடன் இருக்கும் பொழுது நல்ல முறையில் பாதுகாத்தலே சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு