அவனுக்கு
ஊரார் வைத்த
பெயர் கிறுக்கன் மாலை
நேரமாதலால் பறவைகள்
நேர்த்தியாக அரை வட்டமாக
கூடு திரும்பும் அவசரத்திலும்
இவனை கூச்சலிட்டு கேலி செய்து
போனது. கிறுக்கன் கேட்டான்
ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு
என்னை கேலி செய்கிறீர்கள்
நானும் உங்களைப் போல்தானே
ஆடையின்றி வாழ்கிறேன்...
* * * * * * Sunday * * * * * *
அவன்
திரையரங்கத்து
வளாகத்துக்குள் நுழைந்தான்
சீட்டு கொடுக்கும் இடத்தை
நோக்கி போனான் தடியோடு
எங்கிருந்தோ ஓடி வந்த காவலாளி
டேய் கிறுக்கா... ஓடுறா வெளியே
என்று கழுத்தை பிடித்து தள்ளினான்
இவனுக்கு குழப்பமாக இருந்தது
நமக்கு ஏன் அனுமதி இல்லை
நமது வாழ்வைத்தானே படமாக்கி
இருக்கின்றார்கள். காதல் திரைப்பட
சுவரோட்டி ஒட்டிய சுவற்றை பார்த்து
கேள்வி கேட்டான்.
* * * * * * Monday * * * * * *
அவன்
கல்லூரி அருகில்
நின்று ஆலோசித்துக் கொண்டு
நின்றான் இவர்களைப் போல்தானே
நாமும் உடையணிகிறோம் பிறகு
நம்மை மட்டும் எதற்கு கிறுக்கன்
என்று சொல்கிறார்கள்.
* * * * * * Tuesday * * * * * *
அவன்
தொட்டதும் அந்த
தொட்டால் சிணுங்கிச்செடி
தனது உடலை நாணத்தால்
சுறுக்கி கொண்டது.
அது மேலும் சொன்னது
ச்சீ இந்த மனிதர்களுக்கு
வெட்கமில்லை என்று...
* * * * * * Wednesday * * * * * *
அவள் பூவைப்
பறித்து கூடையில்
போட்டாள் இன்று போதும்
என்று கிளம்பியபோது...
இறுதியாக பறித்த பூ
தனது சகோதரியையும்
பறிக்காமல் நிறுத்தியது
தவறு என்று கதறியது
பூ பறித்தவளுக்கு கேட்காததால்
இவளை செவிடியோ என்று
ஐயம் கொண்டது அப்-பூ
* * * * * * Thursday * * * * * *
அவள், அவனை
ஆசையுடன்
பார்த்து சொன்னாள் இன்று
சுமங்கலி பூஜை இந்த தாலியில்
குங்குமத்தை வைத்து விடுங்கள்
அத்தான் என்று... மனைவி
சொன்னபடி குங்குமத்தை
வைத்து முடிக்கவும் கட், கட் என்று
அபசகுணமாக சொன்ன இயக்குனர்
இந்திரஜித் மேலும் சொன்னார்
டுடேய் ஷூட்டிங் ஓவர் என்று.
* * * * * * Friday * * * * * *
அந்த
வயலில் நெற்கதிரை
சுவைத்த மாட்டை வாஞ்சையுடன்
பார்த்தது நெற்கதிர். அது மேலும்
நினைத்தது இயந்திரத்தில் நைந்து
அரிசியாக மனிதனுக்கு உணவாகி
மலமாவதைவிட, மாட்டுக்கு உணவாகி
சாணமாக மீண்டும் வயலுக்கே
உரமாவதே வரம் என்று...
* * * * * * Saturday * * * * * *
கில்லர்ஜி அபுதாபி
பெயர் கிறுக்கன் மாலை
நேரமாதலால் பறவைகள்
நேர்த்தியாக அரை வட்டமாக
கூடு திரும்பும் அவசரத்திலும்
இவனை கூச்சலிட்டு கேலி செய்து
போனது. கிறுக்கன் கேட்டான்
ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு
என்னை கேலி செய்கிறீர்கள்
நானும் உங்களைப் போல்தானே
ஆடையின்றி வாழ்கிறேன்...
* * * * * * Sunday * * * * * *
வளாகத்துக்குள் நுழைந்தான்
சீட்டு கொடுக்கும் இடத்தை
நோக்கி போனான் தடியோடு
எங்கிருந்தோ ஓடி வந்த காவலாளி
டேய் கிறுக்கா... ஓடுறா வெளியே
என்று கழுத்தை பிடித்து தள்ளினான்
இவனுக்கு குழப்பமாக இருந்தது
நமக்கு ஏன் அனுமதி இல்லை
நமது வாழ்வைத்தானே படமாக்கி
இருக்கின்றார்கள். காதல் திரைப்பட
சுவரோட்டி ஒட்டிய சுவற்றை பார்த்து
கேள்வி கேட்டான்.
* * * * * * Monday * * * * * *
நின்று ஆலோசித்துக் கொண்டு
நின்றான் இவர்களைப் போல்தானே
நாமும் உடையணிகிறோம் பிறகு
நம்மை மட்டும் எதற்கு கிறுக்கன்
என்று சொல்கிறார்கள்.
* * * * * * Tuesday * * * * * *
தொட்டால் சிணுங்கிச்செடி
தனது உடலை நாணத்தால்
சுறுக்கி கொண்டது.
அது மேலும் சொன்னது
ச்சீ இந்த மனிதர்களுக்கு
வெட்கமில்லை என்று...
* * * * * * Wednesday * * * * * *
போட்டாள் இன்று போதும்
என்று கிளம்பியபோது...
இறுதியாக பறித்த பூ
தனது சகோதரியையும்
பறிக்காமல் நிறுத்தியது
தவறு என்று கதறியது
பூ பறித்தவளுக்கு கேட்காததால்
இவளை செவிடியோ என்று
ஐயம் கொண்டது அப்-பூ
* * * * * * Thursday * * * * * *
பார்த்து சொன்னாள் இன்று
சுமங்கலி பூஜை இந்த தாலியில்
குங்குமத்தை வைத்து விடுங்கள்
அத்தான் என்று... மனைவி
சொன்னபடி குங்குமத்தை
வைத்து முடிக்கவும் கட், கட் என்று
அபசகுணமாக சொன்ன இயக்குனர்
இந்திரஜித் மேலும் சொன்னார்
டுடேய் ஷூட்டிங் ஓவர் என்று.
* * * * * * Friday * * * * * *
சுவைத்த மாட்டை வாஞ்சையுடன்
பார்த்தது நெற்கதிர். அது மேலும்
நினைத்தது இயந்திரத்தில் நைந்து
அரிசியாக மனிதனுக்கு உணவாகி
மலமாவதைவிட, மாட்டுக்கு உணவாகி
சாணமாக மீண்டும் வயலுக்கே
உரமாவதே வரம் என்று...
* * * * * * Saturday * * * * * *
நல்ல பகடி... ஒரே ஆளே 7 நாட்களும் வரப்போகிறார் என்று நினைத்தபோது ட்விஸ்ட்.... பாதியில் வந்தார் வேறொரு மாது!
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஆறையும் ஏழையும் அதிகம் ரசிக்க முடிந்தது. ஆறாவது - திரையில் நடிக்க என்ன வேண்டுமானாலும் காட்சியில் நடிக்கிறார்கள். காசு காசு.. காசு.. ஆனால் இது பற்பல வருடங்களாக நடி/டப்பதுதானே!
பதிலளிநீக்குஉண்மை ஜி நன்றி
நீக்குவயல் அப்படி நினைக்கத் தொடங்கி அதுவும் நடந்து விட்டால் மனிதனின் கதி..?! - ஏழாவது.
பதிலளிநீக்குமூன்று வேளையும் மாத்திரைதான்...
நீக்குமுதலாவதை இன்னும் தட்டி கொட்டி நல்ல ஒரு கவிதையாக கொண்டு வர முயற்சிக்கலாமே...
பதிலளிநீக்குநன்று, நன்றி ஜி
நீக்குதொட்டால் சிணுங்கி , நெற்கதிர் சொன்னதை ரசித்தேன்.
பதிலளிநீக்குகவிதை நன்றாக இருக்கிறது.
கவிதையை ரசித்த மைக்கு நன்றி சகோ.
நீக்குஉலகத்தில் உள்ள அத்தனை பைத்தியக்காரர்களும் பைத்தியம் இல்லாதவனை பைத்தியம் என்று தான் கூறும் நூட் பீச்சில் முழு ஆடையில் இருப்பவனைப்பார்த்து.
பதிலளிநீக்குஉங்களுடைய சிறப்பு அம்சமான எதுகை மோனையை காணவில்லை. கொஞ்சம் சீர்படுத்தினால் மெருகேறும்.
// உலகத்தில் உள்ள அத்தனை பைத்தியக்காரர்களும் பைத்தியம் இல்லாதவனை பைத்தியம் என்று தான் கூறும்//
நீக்குஜெயகாந்தன் இதை மையமாக வைத்து 'அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்று ஒரு நாவல் எழுதி இருந்தார்.
வாங்க ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குசனிக்கிழமை பகுதியை மிகவும் ரசித்தேன். மற்றவையும் நல்ல முயற்சி
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது ரசிப்புக்கு நன்றி
நீக்குஅனைத்தும் நன்று. சனிக்கிழமைக்கான முயற்சி தனித்துத் தெரிகிறது.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குசிறப்பு நண்பரே சிறப்பு
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்கு