ஒப்புக்கு
அழுதாள் ஒச்சாயி
அதை ஒப்பாரி என்றாள் ஒரு தாயி
கண்ணீரை செதுக்கினாள் ஒச்சாயி
செந்நீராய் கொதித்தாளே செல்லாயி
கள்ளக்கணவனின் பாடை கட்டி
கள்ளி அழுதாளே தொண்டை கட்டி
கதறி துடித்தாளே கருப்பாயி
கறுவிக் கொட்டினாள் கடுப்பாகி
தாடையை கட்டினர் நாடிமுட்டில்
பாடையை கட்டினர் நடுரோட்டில்
கோவிந்தன் எடுத்தான் தீச்சட்டி
கோவித்து நடந்தான் கோமுட்டி
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்
அதை ஒப்பாரி என்றாள் ஒரு தாயி
கண்ணீரை செதுக்கினாள் ஒச்சாயி
செந்நீராய் கொதித்தாளே செல்லாயி
கள்ளக்கணவனின் பாடை கட்டி
கள்ளி அழுதாளே தொண்டை கட்டி
கதறி துடித்தாளே கருப்பாயி
கறுவிக் கொட்டினாள் கடுப்பாகி
தாடையை கட்டினர் நாடிமுட்டில்
பாடையை கட்டினர் நடுரோட்டில்
கோவிந்தன் எடுத்தான் தீச்சட்டி
கோவித்து நடந்தான் கோமுட்டி
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்
கள்ளக் கணவனுக்கும் ஒப்பாரியா.. சரிதான்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி
நீக்குகணவன் பதவி ஏற்பதை காண விரும்பாத மனைவி இருக்கையில்....
"இருக்கை"யில் அமர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டது யாரு...?
'கள்ளி அழுதாலே தொண்டை கட்டி' வரியில் ளே வரணுமோ...
பதிலளிநீக்குஆம் தகவலுக்கு நன்றி ஜி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநலமா? எப்படியிருக்கிறீர்கள்.? உங்களை முன்பு போல் அடிக்கடி பதிவுலகில் காண இயலவில்லையே..! வேலை பளுவோ.? உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும்.
கவிதை நன்றாக உள்ளது. இதில் ஒப்புக்கு அழுபவள்தான் உண்மையான மனைவியா? ஒச்சாயி, செல்லாயி, கருப்பாயி இந்த மூவரில் யாரவள்.? (சற்று புரியவில்லை அதனால் கேட்கிறேன்.)
எதையுமே வித்தியாசமாக யோசிக்கிறீர்கள். தாங்கள் வெளியிட்ட சென்ற பதிவின் குறுங்கவிகளையும் ரசித்துப் படித்தேன். மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ நலமா ?
நீக்குசெந்நீராய் கொதித்த செல்லாயிதான் அத்தோரிட்டியான மனைவி.
மற்றவர்கள் அடைக்கலம் தேடி வாழ்ந்தவர்களாகலாம்.
குறிப்பு- தத்துவம் சொன்னால் ரசிக்கணும்.
நகைச்சுவை கலந்த பதிவு. சிறப்பு
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கு நன்றிகள் பல!
நீக்குபல நாட்களுக்குப் பின் பதிவில் பார்க்கிறேன், அட! என்னையறியாமல் வந்த ரைமிங்!
பதிலளிநீக்குவாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குகள்ளம் எனும்போதே கணவன் என்பது வராதே. கள்ளக் காதலன் என்று தான் தமிழ் டெய்லி தந்தி கூறுவார்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா தற்சமயம் கணவன் நிலைக்கு நீதிமன்றமே மாற்றி விட்டதாம்.
நீக்குவாங்க ஐயா தற்சமயம் கணவன் நிலைக்கு நீதிமன்றமே மாற்றி விட்டதாம்.
நீக்குகவிதை கதை சொல்கிறது.
பதிலளிநீக்குநீங்கள் நலமா?
வருக சகோ
நீக்குநலம், நலமே விளைக....
ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குஇன்னும் நீளமாகச் சொல்லியிருக்கலாம்.
வணக்கம் ஐயா... பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. நலமாக உள்ளீர்களா?
பதிலளிநீக்குhttps://personalityfitting.com/