தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், பிப்ரவரி 05, 2025

மும்பை வாலா

மேலேயுள்ள புகைப்படத்தில் இருக்கும் குடும்பம் யாருடையது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். வாழ்க வளத்துடன் இதிலுள்ள நான்கு பெண்மணிகளில் ஒருவர் மட்டும் தலைவிரி கோலமாக இருப்பதின் காரணமென்ன ? அதுதான் குடும்பப் பெண்களுக்கும் திரைப்படக் கூத்தாடிகளுக்கும் உள்ள வேறுபாடு. இது நடைமுறைகளுக்கு சரிப்பட்டு வராது ஆகவேதான் மும்பை வாலாவாகி விட்டது.
 
நமது நாட்டு பெண்மணிகள் இப்படி தலைவிரி கோலத்தைதான் விரும்புகின்றனர். பழங்கால புகைப்படங்களில் பார்த்து இருப்பீர்கள். கணவர் நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்து இருப்பார், மனைவி பக்கத்தில் நின்று கொண்டு இருப்பார். அல்லது நிறைய பெண்மணிகள் இருந்தால் தரையில் காலை மடக்கி உட்கார்ந்து கொண்டு இருக்கும் வகைகளும் உண்டு. இங்கு அப்படியே நேர்திசை காரணம் காலம் மாறிவிட்டது என்றொரு வார்த்தையை போட்டுக் கொள்ளலாம்.
 
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர் அவருக்கு இதில் விருப்பமேயில்லை காரணம் தொழிலின் முழுவிபரமும் அறிந்தவர். ஆனால் மகன் சூர்யாவுக்கு வயசுக்கோளாறு புரியாத வயது குடும்பமானம் விமானம் ஏறக்கூடாது என்ற கொள்கையாளர் நம்ம மார்க்கண்டேயன். நிபந்தனையோடு சம்மதம் சொன்னார். திருமணம் முடிந்ததும் வாக்குறுதி அரசியல்வாதிகளின் சொல் போலாகி விட்டது. மீண்டும் நடிக்க வந்து விட்டார் மருமகள். எது நடக்ககூடாது என்று நினைத்தாரோ... அதுவே நிகழ்ந்து விட்டது.
 
பிள்ளையார் சுழியாக மும்பை நகர்வு, தனிக்குடித்தனம், குழந்தைகள் ஹிந்தி படிக்க வேண்டும், தமிழ் அவசியமில்லை, அடுத்து சொத்து பிரச்சனை வரும், சிகரமாய் திகழும் அகரம்கூட தகரமாய் மாறலாம். பணம் பெறுக, பெறுக குடும்பம் சிதறித்தான் போகும் போல திரைத்துறையில் நல்ல மனிதர் சிவகுமாரின் குடும்பமே இப்படி என்றால் விஜயகுமாரின் குடும்ப நிலை எப்படி இருக்கும் ? நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் இது ஏட்டுக்குத்தான் கூட்டுக்கு உதவாது போல...
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
சாம்பசிவம்-
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏதடா... படைக்கும் நெஞ்சிலே துயரம் யாவுமே அண்ணன் தம்பிகள்தானடா...

8 கருத்துகள்:

  1. Mmmmm. Ennamo Pongal. Nadappathu annum sari illai.

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே ஏதோ திட்டமிட்டுதான் நடக்கிறதோ...

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாடலைக் கோர்த்திருக்கீங்க. அது சரி... இந்த மாதிரி பதுவுக்காக நல்ல மனிதர் சிவகுமாரைப் போட்டோ எடுக்கறேன்னு மொபைலைத் தூக்கிடாதீங்க. விசிறி அடித்துவிடுவார். ஆமாம் இன்னமும் அவர் பெயர் சூர்யாவா? இவர்தானே அகில இந்திய ஸ்டார் ஆகறேன்னு மாமியார் வீட்டுக்கு தனிக்குடித்தனம் போனவர்?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. , தாத்தா, பாட்டி அவர்களின் குழந்தைகள், அவர்களின் வாரிசுகள் இப்படி மூன்று தலைமுறைகளுக்கும் மேலாகவே ஒன்று சேர்ந்து வாழ்ந்த குடும்பங்கள் என கூடி களித்து இருந்தது அந்த காலம்.

    இப்போது ஏதோ ஒற்றுமையாக இருக்கிற வரை சேர்ந்து இருப்பவர்களை பார்த்து "சந்தோஷந்தான்" என்றுதான் நினைக்க வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் பணம் படுத்தும் பாட்டை வேறு எதுவும் செய்ய முடியாதென்பது உண்மை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பாடல் நல்ல பாடல் எல்லா காலத்துக்கும் ஏற்ற பாடல்.
    சேர்ந்து வாழ்ந்தாலும் உத்தியயோக காரணமாய் வெவ்வேறு ஊர்களில் வாழ்வார்கள், பண்டிகை நாளில் கூடி களித்து இருப்பார்கள்.

    ஒரே தொழில் பார்ப்பவர்களும்(வியாபாரம்) அவர் அவருக்கு குடும்பம் என்று ஆனவுடன் அவர்கள் குழந்தைகள் படிப்பு, குழந்தைகளின் விருப்பம் என்றும், மனைவி விருப்பம் என்றும் எல்லாம் மாறி விடும்.

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜி இது அவங்கவங்க கணக்கு. திட்டமிடல்.

    நமக்கு நம்ம வீட்டு விவகாரங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு