வேகாமலே
போனது ஒன்று
வெந்து போனது மற்றொன்று
இதில் வெற்றி எப்படியென்று
விளங்கவில்லை எனக்கின்று
மனிதர்களில் இவர்கள் போலி
வந்தாலும் பணமெல்லாம் காலி
ரசிகனுக்கும் அறுந்துடும் தாலி
இவர்களுக்கு முடிந்தது ஜோலி
இவர்கள் ஜொலித்தது திரையில்
இரண்டு கத்திகள் ஒரே உரையில்
இறக்கி விடுவார்கள் தரையில்
மாட்டியும் விடலாம் சிறையில்
அரசியல் இவர்களுக்கு தெரியாது
அடுக்குமொழி பேசினால் புரியாது
கண்ணில் விரலிடுவது அறியாது
விளைவு வீட்டில் அடுப்பு எரியாது
கில்லர்ஜி தேவகோட்டை
சிவாதாமஸ்அலி-
கூத்தாடிகள் அரசியலுக்கு வரட்டும் வந்து அவமானப்படட்டும்.
வெந்து போனது மற்றொன்று
இதில் வெற்றி எப்படியென்று
விளங்கவில்லை எனக்கின்று
வந்தாலும் பணமெல்லாம் காலி
ரசிகனுக்கும் அறுந்துடும் தாலி
இவர்களுக்கு முடிந்தது ஜோலி
இரண்டு கத்திகள் ஒரே உரையில்
இறக்கி விடுவார்கள் தரையில்
மாட்டியும் விடலாம் சிறையில்
அடுக்குமொழி பேசினால் புரியாது
கண்ணில் விரலிடுவது அறியாது
விளைவு வீட்டில் அடுப்பு எரியாது
கூத்தாடிகள் அரசியலுக்கு வரட்டும் வந்து அவமானப்படட்டும்.
கரீட்டூஊஊஊஊ.. அண்ட் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)
பதிலளிநீக்குஅடடே வாங்க அதிரா நலமா ?
நீக்குபிறகு வந்து படிக்கிறேன். முதலில் நடிகர் (கூத்தாடி) விஜய்க்கு வாக்களித்துவிட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குவருக தமிழரே முதலில் "அந்த" வேலையை முடித்து வாருங்கள்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல வரிகள். அரசியல் தெரியாது. ஆனால், சுள்சுள்ளென்று இறங்கும் ஈட்டியைப் போன்ற வாசகங்கள். மக்கள் திருந்தினால், நல்லது. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குதானே தெரியாதவன் துணைக்கு, அதாவது சொல்லிக்கொடுக்க ஒரு ஆள் வைத்துக் கொள்கிறார்கள். அதற்கு ஒரு பெரும் கூலி!
பதிலளிநீக்குவாங்க ஜி
நீக்குஅது நமது பாமரப்பயல்களின் தந்தைமார்களின் உழைப்பு தானே ?
சினிமாவில் பேசுவது போலவே ராகம் போட்டு பேசுவது எரிச்சலைத் தருகிறது.
பதிலளிநீக்குஆம் எல்லாமே இயக்குனரின் செயல் வடிவம்.
நீக்குஎட்டு வருடங்கள் முன்பு அரசியலுக்கு வந்த கமலுக்கு இப்போதுதான் ஒருத்தி வழியாக ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு என்று தெரிகிறது!
பதிலளிநீக்குஇவர்கள் ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகவில்லை. அதற்குள் இரண்டாம் ஆண்டு கூட்டம் நடத்துகிறார்கள்!
Correctiom : எட்டு வருடங்கள் முன்பு அரசியலுக்கு வந்த கமலுக்கு இப்போதுதான் ஒரு வழியாக ரசிகர்கள் வேறு; வாக்காளர்கள் வேறு என்று தெரிகிறது!
நீக்குதமிழர்கள் பயித்தியங்கள் என்பது விஜய்க்கு மாத்திரம் தெரியாமல் இருக்குமா? காசு கொடுத்தால் ஓட்டுப்போடுவானுக அந்த இருபது சதம். அது போதாதா?
நீக்குஆம் உ.நா. னுக்கு சரியான புரிதல் வந்து இருக்கிறது ஜி
நீக்குதமிழரின் கருத்துக்கு நன்றி.
நீக்குஅரசியல் இங்கே பெரும் வியாபாரம். பணம் போட்டு பணம் எடுக்க அனைவரும் துடிக்கிறார்கள்.
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு ஜி.
வாங்க ஜி
நீக்குஇந்த கவிதையை நான் எழுதியது சுமார் ஒரு வருடம் முன்பு.
இந்த தேதியை செட்யூல் செய்து வைத்தது ஆறு மாதங்கள் முன்பு.
ஆனால் கவிதை இன்றைய தேதியில்கூட கள நிலவரத்தில் சரியாக பொருந்துகிறது ஜி.
பணம் இருக்கறவங்களுக்கு என்ன செய்வதென்று தெரியலை போல....நல்லது செய்யறதுக்கு அரசியல் வேணுமா என்ன? அப்படின்னு இவங்க எல்லாம் நினைச்சு வராங்க...ஒரு வேளை அரசியலில் வந்தால்தான் அதிகாரம் கிடைக்கும் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை வைத்து காரியங்களை நடத்திக்கலாம் என்றோ?
பதிலளிநீக்குநல்லாருக்கு கில்லர்ஜி.....டி ஆர் நினைவுக்கு வருகிறார்!
கீதா
வருக ஆம் உதவ நினைத்தால் ஆயிரம் வழிகள் உண்டு.
நீக்குதிரு.சிவகுமார், சூர்யா, கார்த்தி, ராகவா லாரன்ஸ், பாலா இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தா செய்கிறார்கள்.
ஆனால் இவர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
காரணம் மக்கள் மாக்கலாகவே வாழ்கிறார்கள்.
நீங்கள் எழுதிய கவிதை எக்காலத்திலும் பொருந்தும். அரசியலுக்கு வர விரும்புபவர்கள்
பதிலளிநீக்குமக்களுக்கு நல்லது செய்ய மட்டும் வர வேண்டும். அது எப்போது நடக்குமோ!
வருக சகோ ஆம் எனக்கும் இது ஆச்சரியமாக இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி