தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 03, 2018

ஏக் ஹஸார், தீன் ஸோ பந்த்ரா (1315)


புதாபியில் இருக்கும் பொழுது எனது கைப்பேசிக்கு, தொலைபேசி தலைமை தகவல் தொடர்புத்துறை அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தி வந்தது தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்து கொள்ளவும் என்று போனேன் ஐந்து நிமிடத்தில் பதிவு செய்து கொடுத்து விட்டார்கள், அடுத்த வாரம் எனது கைப்பேசி (Du No: 055) இணைப்பு துண்டிக்கப்பட்டது மீண்டும் போனால் சந்தைக்கடையைப் போல் கூட்டம் இது எனக்கு மட்டுமல்ல எமிரேட்ஸில் இருக்கும் பல்லாயிரம் பேருக்கும் எனத்தெரிந்தது காரணம் கேட்டால் ? இது சர்வரின் தவறு (சரவணபவன் ஹோட்டலில் வேலை பார்க்கும் சர்வர் அல்ல) என்று சொல்லி ஐ.டி.யை பதிவு செய்து செல்லுங்கள் என்றார்கள் சரியென்று இயந்திரத்தில் வரிசைச்சீட்டு எடுத்தால் எனக்கு வந்த இலக்கம் 1448 நிலுவையில் 960 போய்க்கொண்டு இருந்தது இதனிடையில் ஃபாரத்தில் முத்திரை பதிக்க ஒரு வரிசையும் போனது நானும் நின்று கொண்டிருந்தேன் எனக்கு முன் ஒரு பாக்கிஸ்தானி நின்றிருந்தான்ர் யதார்த்தமாக கவனித்திருந்தேன் காரணம் அவனது ஃபுல்தாடி நான் முத்திரையை குத்த அருகில் போகும்போது ஒரு சீட்டு கீழே கிடந்தது எடுத்தேன் எண் 1315 அவன் அலறிக்கொண்டு வந்தான் எனது சீட்டைக் காணோம் என்று நான் இதுவா ? எனக்கேட்க (எண் எனது அழகிய முகத்துக்கு நேராக இருக்கிறது) அவன் சீட்டைப் பார்க்காமல் எத்தனை ? எனக்கேட்டான், நான் எண்ணை சொல்ல, அவன் என்னுடையது இதில்லை என்று போய் விட்டான், எனக்குப் பின்னால் நின்றவர்கள் சிரித்துக்கொண்டே... உனது எண் பெரியது என்றால் நீ வைத்துக்கொள். நான் நினைத்தேன் இந்த எண்ணை நாம் உபயோகப்படுத்திக் கொண்டால் எப்படியும் ஒரு மணிநேரம் மிச்சமாகும் அவனை மீண்டும் பார்த்தேன் தேடிக்கொண்டிருந்தான் எப்படி ? கிடைக்கும் அதுதான் என் கையிலிருக்கின்றதே, எனக்கு பாவமாக இருந்தது எனக்கு மனது உறுத்தினாலும், சரி அவன் இனிபோய் இயந்திரத்தில் சீட்டு எண் எடுத்தாலும் எப்படியும் 1600க்கு மேல்தான் கிடைக்கும் நமது வேலை முடிந்ததும் நமது எண்னை அவனிடம் கொடுத்து எனக்கு அவசர வேலை இருக்கிறது நீ வைத்துக்கொள் என அவனிடம் கொடுத்து விடுவோம் என நினைத்தேன் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மின்பலகையில் 1315 வர கௌண்டரில் இருந்த பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சீட்டைக் கொடுத்தேன்.

அவள் ஊதாக்கலரில் ஜீன்ஸ் பேண்ட், லைட் கலரில் டி.சர்ட் போட்டிருந்தாள், ப்ரௌன் கலரின் கழுத்தில் டை மாதிரி கட்டியிருந்தாள், காதில் இரண்டு வளையல்கள் போல தொங்கி கொண்டிருந்தது, கழுத்தில் ஒரு பாசி போட்டிருந்தாள், அவள் கட்டியிருந்த டை மறைத்திருந்ததால் பாசியின் கலரைக் கவனிக்க முடியவில்லை, தலையில் மஞ்சக்கலரில் பிளாஷ்டிக் ரோஜாப்பூ வைத்திருந்தாள், மூன்று ஹேர்பின்கள் குத்தியிருந்தாள், விழிகளின் புருவத்தில்கூட அழகாக மை தீட்டியிருந்தாள், மூக்கின் வடக்கு திசையில் சிறிதாக கருப்பு மச்சம் ஒன்று, உதட்டிலும் சிவப்பு கலரில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள், கையில் ரோலக்ஸ் வாட்ச் கட்டியிருந்தாள், நெகத்தை நீளமாக வளர்த்து வார்ணீஷ் அடித்திருந்தாள், விரலில் வெள்ளியிலான மோதிரத்தில் M என்று கற்கள் பதித்திருந்தது, நேம் பேட்ஜில் பெயர் மைலீன் என்று இருந்தது, காலில் கொலுசோ, செருப்போ, போட்டிருக்கின்றாளா ? என்பதை கவனிக்க முடியவில்லை காரணம் டேபிள் மறைத்திருந்தது எட்டிப்பார்க்கும் உத்தேசமும் இல்லை காரணம் இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை இரண்டரை மணி நேரமாக ஒரே இடத்தில் நகராமல் காத்திருக்கின்றேனே அதன் வெறுப்பு.

அந்தப் பாக்கிஸ்தானி இந்தக்கூட்டத்தில் எங்கு நின்றானோ.. தெரியவில்லை மின்பலகையில் எண்ணை பார்த்ததும் ஓடி வந்து விட்டான், வந்தவன் பிலிப்பைனிக்கு அருகில் போய் எட்டி, எட்டி சீட்டைப்பார்க்க அவள் கோபமாகி ‘’கோ ட்டூ தட் சைட்’’ என்று சத்தமிட காரணம் பாக்கிஸ்தானியர் மேலிருந்து எப்பொழுதுமே ஒரு விதமான ஊழை நாற்றம் வரும் இது பிலிப்பைனி பெண்களுக்கு பிடிக்காது இவர்களுக்கு கக்குSoap இருப்பது தெரியாதுபோல இவன் சரியாக பேசத்தெரியாததாலோ, என்னவோ, பெரும்பாலும் பாக்கிஸ்தானியர்களுக்கு ஆங்கிலமும் வராது, இப்புறம் வந்து என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் நான் கவனிக்காதது மாதிரி Yes Madam என விபரம் சொல்லிக்கொண்டு இருந்தேன் இடையில் கவனமாக மீசையை முறுக்கிக்கொண்டே இருந்தேன் அவனுக்கு என்மீது சந்தேகம் வந்து விட்டது. எனது ஐ.டி.யை வாங்கி குறித்துக்கொண்டு அடுத்த 48 மணி நேரத்தில் இணைப்பு வந்தாலும் வரலாம் நமது ரமணன் ஐயா போலவே சொன்னாள். அப்பாடா வந்தவேலை முடிந்து விட்டது திரும்பினால் பாக்கிஸ்தானி என்னிடம் ஏதோ கேட்பதற்காக வர, நான் சட்டென மற்றொரு கைப்பேசியை எடுத்து (Etisalat No: 050) வராத அழைப்பில் Sir I applied for a project in America yesterday but the managing director did not approve that project. Shut up bloody nonsense I will kill you… இப்படி சத்தமாக கையை ஆட்டி ங்கொய்யாலே கொன்னேபுடுவேன் என்பது போல் பேசிக்கொண்டே வெளியே வந்து விட்டேன் கொஞ்ச தூரம் பின்னால் வந்தவன் நின்று விட்டான் நான் சீருந்தை முடுக்கி விட்டு எடுக்கும்வரை கைப்பேசி என் காதோடு... அவனை மீண்டும் பார்த்தேன் பாவமாக இருந்தது இவனுக்கு எப்படி ? எனது எண் 1448 டை கொடுக்க முடியும். சந்தேகம் ஊர்ஜிதமாகி சண்டைக்கு வந்து விட்டால் ?

ஆம் அந்த எண் அவனுடையதே அதாவது நான் உன்னுடையதா ? எனக்கேட்டும் அவன்தான் என்னுடையது இல்லை என்று போனான் தவறு என் மீதல்ல.... அதாவது அவன் எத்தனை எனக்கேட்டபோது நான் ஏக் ஹஸார், தீன் ஸோ பந்த்ரா என்றேன் அதற்கு அவன் என்னுடையது தேரா ஸோ, பந்த்ரா என்று சொல்லிவிட்டு உடனே போய் விட்டான் இரண்டுமே ஒன்றுதான் ஆம் அதாவது ஏக் ஹஸார் தீன் ஸோ பந்த்ரா என்றால், ஓராயிரத்து, முன்னூற்றி பதினைந்து, தேரா ஸோ பந்த்ரா என்றால் பதிமூன்று நூறுகளும், பதினைந்தும். உதாரணத்திற்கு இந்தியர்கள் ஏக் ஹஸார், ஆட் ஸோ (ஆயிரத்து, எண்ணூறு) என்று சொல்வோம், பாக்கிஸ்தானியர்கள் ஆயிரத்து எண்ணூறை, அட்டாரா ஸோ என்பார்கள் அதாவது (பதினெட்டு நூறுகள்) ஒவ்வொரு வார்த்தைகளின் ஜாலம் மாறி விடுவதால் சிலருக்கு பலனும் உண்டு அந்த சிலரில் அன்று நான்.

காணொளி

வியாழன், பிப்ரவரி 01, 2018

எழுத்து -100


எழுத்து
எனக்கு
எனது சுவாசம்போல
எப்பொழுதும்
எனது
எண்ணங்களை
எழுதிக்கொண்டே இருக்கணும்
எனது பொழுதுபோக்கு மட்டுமல்ல
எனது கொள்கையும்கூட நாளை
எனது பிறந்தநாள்
என்ன
எழுதலாம்
எதையாவது
எழுதுவோம் மனம்
எதை
எதையோ
எழுதச் சொன்னது
எத்திராஜ் கல்லூரியில்
எழுபத்து ஐந்தில் நடந்த
எழுத்துப் போட்டியில் நான்
எழுதிய
எத்தோப்பிய சாம்ராஜ்யம்
எங்கள் தேவகோட்டைக்கே சொந்தம்
என்ற கவிதையைப்பற்றி
எழுதலாமா இல்லை
எனது ஊரைப்பற்றி
எழுதுவோமா
எப்பவோ
எழுதிட்டோமே
எட்டையபுரத்து கவிஞனைப்பற்றி
எத்தனை தடவைதான்
எழுதுவது
எமது நண்பர்
எமனேஸ்வரம்
எழுத்தாளர்
எமகண்டனைப்பற்றி
எழுதலாமே
என்னத்துக்கு அவரைப்போயி
எவனையாவது திட்டி
எழுதுவோமா
எவனைத் திட்டலாம்
எல்லோரையும் திட்டி
எழுதியாச்சே
எவனும் இல்லையே
எருக்கஞ்செடியைப்பற்றி
எழுதலாமா
எதுவும் தோனலையே
எமனைப்பற்றியும்
எமன்
எருமை மாட்டுல
எதற்கு வருகிறார்
என்பதைப்பற்றி விரிவாக
எழுதுவோமா
எதற்கு அது அபசகுணமாக
எருமை மாட்டைப்பற்றி
எழுதுவோமா
எருமை மாட்டுல
என்ன இருக்கு
எதுவும் இல்லை
என்னைப்பற்றி
எதுவுமே இல்லையே
என்னத்தே கண்ணையாவைப்பற்றி
எழுதலாம்
என்னத்தே
எழுதி
என்னத்தே கிழிச்சு
என்ன இது
என்றைக்குமில்லாமல்
எனக்கா சலிப்பு
எழுத்து மீது
எனக்கே
என்மீது ஆச்சர்யம்
எப்படியோ உறங்கிப் போனேன்
எனது செல்லிலிருந்து
எங்கே
என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னைத் தந்தேனே
எழுந்து பார்த்தால்
எட்டு am மணி
எனது அலுவலக
எண்ணிலிருந்து அழைப்பு சட்டென
எதிர்ப்புறம் பாய்ந்தேன்
எந்த இடம் தெரியுமா
எனது TOILET Sorry inside not allowed

Chivas Regel சிவசம்போ-
துவுமே இல்லாமே தையாவது ழுதி ன்னை படின்னா னக்கு ன்ன வேலை இல்லையா ? ட்டு மணியாச்சு கடை திறந்திருப்பான் ன்னோட நண்பன் த்திராஜூ ழும்பூர் ட்டாம் நம்பர் கடையிலே ட்டணாவுக்கு ள்ளு உருண்டை வாங்கிகிட்டு னக்காக காத்திருப்பான்... கட்டிங்கோட ட்றா வண்டிய..

செவ்வாய், ஜனவரி 30, 2018

எண்ணம் நலமெனில்...


உலகையும், மனிதனையும், ஜீவராசிகள் அனைத்தையும் படைத்தது ஒரே இறைவனா ? இல்லை பல தரப்பட்ட இறைவன்களா ? பல இறைவன்கல்ள் இருப்பது எப்படி சாத்தியமாகும் ? ஏதாவது ஒரு இறைவன் மரணத்தை தவிர்த்திருக்கலாமே... ஒருவேளை எல்லா இறைவன்மார்களும் ஒன்றுகூடி மரணம் இல்லையெனில் எல்லா மானிடர்களும் ஆட்டு மந்தையைப்போல் ஒருபுறமே சாய்ந்து விடுவார்கள். இடப்பற்றாக்குறை வந்துவிடும் ஆகவே மரணம் பொதுவான விசயமாக இருக்கட்டுமென பேசி வைத்தார்களோ ? மதப்பிரிவினைகளை மனிதன்தானே வகுத்துக் கொண்றாடான் எல்லா மனிதர்களுமே ஒருநாள் மரணிக்கின்றோம் என்பது நிதர்சனமான உண்மை.

இன்று உலகெங்கிலும் மதக்கலவரங்களால் இனக்கலவரங்களால் மக்கள் கொல்லப்படுகின்றார்கள். ஒரு மதத்தினரின் வழிபாட்டு ஸ்தலங்களை மற்றொரு மதத்தினர் நாசப்படுத்துகின்றனர் அவர்களுக்கு இது தவறென்று தெரியாதா ? அல்லது அவன் சார்ந்த மதம் இப்படி செய்யச்சொன்னதா ? ஒருக்கால் சொல்லி இருந்தால் ? அதை கேட்க வேண்டிய அவசியமில்லை என அறிந்து கொள்ள முடியாத அறிவற்ற ஜீவியா மனிதன் ? வேறொரு வழியில் சிந்திக்கலாமே... நீ அவனது உடைமையை இடிக்கும் போதும், அவன் மற்றொருவனுடைய உடைமையை இடிக்கும் போதும், மற்றவன் உனது உடைமையை இடிக்கும் போதும் இறைவன்களால் தடுக்க முடியாதா ?

இந்த இடத்தில், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், உட்கார்ந்து கொல்லும் எனச்சொல்லி என்னைக் கொல்லாதே...

அன்பைப்போதி

இதை எந்த மதம் சொல்லவில்லை ? முன்பின் தெரியாத ஒரு நபரைப்பார்த்து நீ புன்முறுவல் பூத்துப்பார் அவரும் உன்னைப் பார்த்து சிரிப்பார். உனக்கு தெரிந்த, பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் அவரை அடித்துப்பார் அவரும் உன்னை அடிப்பார். ஆக நாம் கொடுத்தது நமக்கே திரும்புகிறது. ஒருவனுக்கு உதவிப்பார் உனக்கும் அந்த உதவிகள் ஏதாவது வகையில் என்றாவது கிடைக்கும். ஒருவனுக்கு தீங்கு செய்துபார் அதுவே உனக்கும் கிடைக்கும். இந்த இடத்தில், தர்மம் தலைகாக்கும் என்பதையும், தன்வினை தன்னைச் சுடும் என்பதையும் நினைக்கலாமே...

எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே...
Anyway
எண்ணுவோம் எண்ணமெல்லாம் நலமே.
- கில்லர்ஜி

சாம்பசிவம்-
எல்லாம் சரி, இதை சொன்னவருக்கு பேரே சரியில்லையே...

Chivas Regal சிவசம்போ-
உலகம் பூராம் மதப்பிரச்சனையில் அடிச்சுக்கிறாங்கே... இதுல நம்ம ஊருக்காரன் ஜாதிப்பிரச்சளையில அடிச்சுக்கிறாங்கே... நமக்கு நெப்போலியன் கிடைச்சாலும் சரி, சிவாஸ் ரீகல் கிடைச்சாலும் சரி வேறுபாடு நினைக்காம ஒரே நேரத்திலே ஏத்திக்கிறோம் இதான் நம்ம ஸ்டைல்.

சிவாதாமஸ்அலி-
அடடே இதைச் சொன்னவருக்கு பேரே ஒத்துப் போகுதே...

சனி, ஜனவரி 27, 2018

இஞ்சி முரப்பா


குண்டடத்திலிருந்து அம்பிளிக்கை செல்லும் பேருந்தில் பயணிக்கிறேன் அளவான குடும்பம் ஆம் அவர்களிருவர், அவர்களுக்கிருவர் அந்தக் குடும்பம் ஏறியது இரண்டு இருக்கைகள் கொண்டதில் நான் மட்டும் அமர்ந்திருந்தேன் வழியில் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இஞ்சி முரப்பா விற்றார் ஒரு பெரியவர் பொதுவாக நான் இப்படி திண்பண்டங்கள் வாங்கித்திங்கும் பழக்கம் கிடையாது இருப்பினும் இஞ்சி முரப்பாவை கண்டதும் நாவு ஊறியது வெகு காலமாகி விட்டதே சாப்பிட்டு என்று ஒரு பொட்டலம் வாங்கினேன் ஒரு சில்லு சாப்பிட்டு விட்டு கையில் வைத்திருந்தேன். அந்தக் குடும்பம் எனக்கு பின்புறம் அமர்ந்திருக்க அந்தக் குடும்பத்தின் மூத்தது பெண் குழந்தை ஐந்து வயது இருக்கும் அடுத்தது பையன் கைக்குழந்தை. பெண் குழந்தையை என்னுடன் மாமாவோடு உட்கார்ந்துக்கோ என்று சொல்லவும் என்னுடன் பேசிக்கொண்டே வந்தது என்று சொல்ல மாட்டேன் என்னை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தது எனக்கே குழப்பம் வழக்கமாக நாம்தானே கேள்வி கேட்போம் ? பக்கத்தில் இரண்டு ரவுடிகளை பாதுகாப்புக்கு ஆறு காவலர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் கொண்டு செல்கின்றார்கள். இந்தக்குழந்தை கேட்டது.
அங்கிள் இவங்க போலீஸ்காரவுங்களா ?
ஆமா ஏன் கேட்கிறே ?
நான் வேற மாதிரி நினைச்சேன்
எந்த மாதிரி ?
முனுஷிபாலிட்டியில குப்பை அள்ளுறவங்களோன்னு...
எனக்கு ஒருநொடி தூக்கி வாறிப் போட்டது காரணம் பக்கத்து இருக்கையில் இருக்கின்றார்கள் மேலும் சத்தமாகவே பேசுகிறது இந்தக் குழந்தை.
ஏன் அப்படி நினைச்சே ?
இவங்களும் அவங்களை மாதிரித்தானே காக்கி ட்ரெஸ் போட்ருக்காங்க...
டிக்கெட் கொடுக்கிறவர் கூடத்தான் இந்த மாதிரி இருக்காரு... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அவங்க காதுல கேட்டுச்சு உன்னை புடிச்சுக் கொண்டு போயிருவாங்க...
புடிச்சுட்டுப் போயி என்னை என்ன செய்ய முடியும் ? உங்களுக்கு பயமா ?
நான் இதற்கு என்ன பதில் சொல்வது அரபிக்காரங்கே கேள்வியையே திருப்பி விட்ருக்கோமே... இதை எப்படி சமாளிப்பது.... ? சரியென்று கையிலிருந்த இஞ்சி முரப்பாவை எடுத்துக் கொடுத்தேன்.
எனக்கு வேண்டாம்.
சாப்பிடு நல்லா இருக்கும் உடம்புக்கு நல்லது.
மாமா கொடுக்கிறதை வாங்கிக்க... அந்தக் குழந்தையின் அப்பா சொல்லியும் கேட்கவில்லை.
இப்படித்தான் இருக்கணும் வெளியாள் யார் தின்பண்டம் கொடுத்தாலும் வாங்க மாட்டியா ?
வாங்க மாட்டேன்.
இப்படித்தான் இருக்கணும் நல்லபிள்ளை.
சிறிது நேரத்தில் ஒரு காவலர் தனது பேக்கிலிருந்து பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து அவர்களுக்குள் ஆளுக்கு இரண்டாக கொடுத்தவர் இந்த குழந்தையிடம் கொடுக்கவும் உடன் வாங்கி கொண்டது.
யாரு கொடுத்தாலும் வாங்க மாட்டேனு சொன்னே இப்ப வாங்கி கிட்டே ?
இது பிஸ்கட்ல...
நான் கொடுக்கும்போது வேண்டாம்னு சொன்னே ?
ஹும் அதை மனுஷன் திம்பானா ?
? ? ? ? ?
ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன் அம்பிளிக்கை வரவும் குடும்பத்தினர் இறங்கினர் கடைசியில் அந்தக் குழந்தை ஒரு வார்த்தை சொல்லிச் சென்றது பாருங்கள் இன்னும் நெஞ்சை அறுக்குது.
அங்கிள் தைரியமாப் போங்க...
கையிலிருந்த இஞ்சி முரப்பாவை தின்பதா ? வேண்டாமா ? என்று நினைத்தவாறே இஞ்சி தின்ற சிங்கம் போல் பயணித்தேன். நீ எதற்கு குண்டடத்திலிருந்து அம்பிளிக்கை போனாய் ? என்று கேட்க நினைக்கின்றீர்களா ? கோயமுத்தூரியிலிருந்து மதுரை போனால் இந்த வழியில்தானே பேருந்து போகிறது.


Chivas Regal சிவசம்போ-
நமக்கு கொடுத்தாலும் நண்பர் நெல்லைத்தமிழன் மாங்காய் ஊறுகாய் கொடுக்காத நேரத்துல நாக்குல தேச்சுக்கிறலாம். ஆசுப்பத்திரிக்கு அய்நூறு ஓவா கொடுக்காதவங்கே... செத்துட்டா ஆயிரம் ஓவாய்க்கு ரோசா மாலை வாங்கி போடுவாங்கே... ஹூம் காலக்கொடுமையடி கருமாரி.

காணொளி

வெள்ளி, ஜனவரி 26, 2018

वनदे मातरम्

वन्दे मातरम्

31 States,

1618 Languages,

6400 Castes,

6 Religions,

6 Ethnic groups,

29 Major festivals,

1 Country

Be proud to be an Indian.

Happy Republic day to All My Indian’s

(Place: United Arab Emirates in Abu Dhabi, Indian Navy Ship with Me)


காணொளி

  நம் இந்திய தேசியகொடி பட்டொளி வீசி பறக்குது பாரீர்....