தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
திங்கள், அக்டோபர் 29, 2018
வெள்ளி, அக்டோபர் 26, 2018
ஆ(ட்)சீர் வாதம் 2
விழாவுக்கு வந்தவர்கள் பேச
வேண்டுமே காரணம் இனி அடுத்த தேர்தல் வரும்வரை பேசுவதற்கு மேடை கிடைக்க
சாத்தியமில்லை மேலும் பேசுவதை நிறுத்திக்கொண்டால் பேசுவது எப்படி ? என்பது மறந்து போகவும் கூடும்
பேச்சுத்திணறினால் சில நிருபர்கள் அவசியமற்ற கேள்விகளை தொடுத்து மூஞ்சியில் தூ
என்று துப்பும் அளவுக்கு கோபத்தைக் கிளறி விடுபவர்களும் உண்டு சிலர் கடைசி
காலம்வரை கல்யாணமே செய்யாமல் வாழும் கண்ணகிகளாககூட இருப்பார்கள் சரி விடயத்துக்கு
போவோம். பிறகு விழா மேடைக்கு வருவார்கள் சிலர் மேடைக்கு வராமலேயே பேசுபவர்களும்
உண்டு
செவ்வாய், அக்டோபர் 23, 2018
ஆ(ட்)சீர் வாதம் 1
நட்பூக்களே... எனக்கு நீண்ட
காலமாகவே மனதில் ஒரு சந்தேகம் இருக்கின்றது அது அரசியல் தலைமைகள் கலந்து கொள்ளும்
திருமண விழாவில் சராசரி திருமண சடங்குகள் எப்படி நடக்குமோ ? அது
அங்கு மாற்றி அமைக்கப்படுகின்றது அங்கு மேடை போட்டு இருக்கும் பேசுவதற்கு ஒலி
பெருக்கி இருக்கும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை உண்மை மனதுடன் வாழ்த்துச்
சொல்ல வந்திருக்கும் சொந்த பந்தங்கள் மூன்றாம் நிலைப்பாட்டில் காவல் துறையினரால் சோதனை
செய்யப்பட்டு நிறுத்தப்படுவார்கள் சூழ்நிலையின் காரணமாக மணக்கோலத்தில் இருக்கும்
மணமக்களை ஆசீர்வாதம் செய்ய அவர்களுக்கு அனுமதி இருக்காது மறுநாள் வீட்டில்
செய்யலாம் என்பது வேறு விடயம்.
சனி, அக்டோபர் 20, 2018
படிக்காதவன்
மனித
வாழ்வில் ஒருவன் முன்னுக்கு வருவதற்கும், பின்னுக்கு போவதற்கும் காரணகர்த்தாவாக
கண்டிப்பாக இன்னொரு மனிதர்ன் இருக்க வேண்டும் இது
எல்லோருடைய வாழ்விலும் உண்டு. தனது வாழ்க்கைக்குகூட பிரயோசனம் இல்லாதவன் என்று
முத்திரை குத்தப்பட்டவன் மற்றவருடைய உயர்வுக்கு காரணமாக இருப்பான் இதில் பலரும்
அனுபவப்பட்டு இருக்கலாம். எனது அபுதாபி வாழ்விலும் பலரும் வந்து இருக்கின்றார்கள்.
சாதாரண சம்பளத்தில் இருந்த என்னை உயர் வழிக்கு கொண்டு வந்த பெருமை அபுதாபியில்
இருக்கும் நான் வேலை செய்த அலுவலகத்தில் இருந்தவர் ஒரு அரபி
செவ்வாய், அக்டோபர் 16, 2018
குடிகாரனின் வில்லுப்பாட்டு
நட்பூக்களே... தொங்குணான்டி பாளையம்
கோவில் திருவிழாவில் குலசை முத்தாரம்மன் முத்துலட்சுமி குழுவினரின்
வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யதிருந்தார்கள் அவர்கள் வந்த விமானம் டயர் பஞ்சரான
காரணத்தால் தாமதமானதோடு தங்களால் வர இயலாது என்பதை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்க, வேறு
வழியின்றி அவசரத்துக்கு உள்ளூர் வில்லுப் பாட்டுக்காரன் விடியாமூஞ்சி விருமாண்டியை
அழைத்து வந்து பாடச் சொன்னார்கள் அது மாலையானாலே மலையேறி விடும் இதோ அது பாடிய
வில்லுங்கப்பாட்டு... அவசரம் என்பதால் அவரது குழுவினர்
கிடைக்காத காரணத்தால் பின்னணி நாமும் சேர்ந்தே பாடுவோம்.




