தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூன் 29, 2018

பிச்சை கேட்போமே...

பிச்சை கேட்போமே ஐயப்பா பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே ஐயப்பா பிச்சை கேட்போமே...
அன்பு வேண்டும் என பிச்சை கேட்போமே... – வாழ்வில்
ஆசை வேண்டாம் என பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே, ஐயப்பா பிச்சை கேட்போமே...
இன்பம் வேண்டும் என பிச்சை கேட்போமே... – வாழ்வில்
ஈனம் வேண்டாம் என பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே, ஐயப்பா பிச்சை கேட்போமே...
உண்மை வேண்டும் என பிச்சை கேட்போமே... – மனதில்
ஊனம் வேண்டாம் என பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே, ஐயப்பா பிச்சை கேட்போமே...
எண்ணம் நலமாக பிச்சை கேட்போமே... – வாழ்வில்
ஏமாற்றம் வேண்டாம் என பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே, ஐயப்பா பிச்சை கேட்போமே...
ஐயம் தீர்ந்திடவே பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே, ஐயப்பா பிச்சை கேட்போமே...
ஒளியாய் வாழ்ந்திட கேட்போமே... - மனதில்
ஓய்வு வேண்டாம் என பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே, ஐயப்பா பிச்சை கேட்போமே...
ஔசதமானவனே ஐயப்பா பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே ஐயப்பா பிச்சை கேட்போமே...
பிச்சை கேட்போமே ஐயப்பா பிச்சை கேட்போமே...

மேலே காண்பவை மார்கழி மாத எங்கள் வீட்டுக் கோலங்கள்
1989 ஐயப்பன் பஜனையில் சுண்டலுக்காக நானே எழுதி பாடியது

அவசரசெய்தி

நட்புகளுக்கு ஓர் துயரச்செய்தி நமது இனிய நண்பர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தந்தையார் திரு. சி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று நள்ளிரவு இயற்கை எய்தி விட்டார்கள் என்பதை வருத்தமுடன் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.

கில்லர்ஜி தேவகோட்டை.

81 கருத்துகள்:

  1. கோலத்தை வைத்து கோலம்...

    தரைக்கோலமும்
    தமிழ்க்கோலமும் அருமை...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களது முதலி வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  2. ஹையோ !!கொள்ளை அழகு கோலங்கள் எல்லாம் சூப்பர் .நான் ஆன்லைனில் எடுத்ததுன்னே நினைச்சேன் கடைசி வரி படிக்கும் வரை .எல்லாத்தையும் பேப்பர்ல செய்ய ஆசையா இருக்கு அட்டகாசமான டிசைன்ஸ் .

    அந்த முதல்படத்தில் இருக்கே அந்த பிச்சை பாத்திரம் அது எதனால் ஆனது >?
    என் பொண்ணு 5 வயசா இருக்கும்போது பாரிமுனையில் ஒரு பெரியவர் வைத்திருந்ததை பார்த்து அம்மா எனக்கு அந்த bowl வேணும்னு கேட்டா :) அப்போ விளங்கா குழந்தை பருவம் இந்த படத்தை பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இது ஆன்லைனில் எடுத்தது இல்லை. வாட்ஸ்-அப்பில் ஒரு பெண் லைனில் வரும்போது அனுப்பியது.

      இந்த திருஓடு எப்படி உருவாகிறது தெரியுமா ?
      கொப்பறைத் தேங்காய்கள் மரத்திலிருந்து கீழே விழுந்து பிறகு அதுவே விதையாகி முளைத்து இவ்வளவு பெரிதாக வளர்கிறது.

      இது அதிகமாக அந்தமான் தீவுகளில்தான் உற்பத்தியாகிறது. காரணம் அந்த மண்ணின் குணம் அப்படி.

      இது முழுமைபெற சில வருடங்கள் ஆகலாம் இதன் காரணமாகவே இதன் இன்றைய விலை இந்திய ரூபாய் மூவாயிரத்திலிருந்து ஐந்தாயிரம்வரை ஆகிறது.

      மேலும் தற்போது யாரும் திருவோடு தூக்கிக்கொண்டு தெருவோடு போவதில்லை அனைவருமே ஹாட்பாக்ஸ்ஸுக்கு மாறிவிட்டனர்.

      எங்கள் வீட்டுப்பரணிலும் ஆறேழு ஓடுகள் கிடக்கின்றது. யாருக்காவது கொடுக்கலாம் ஆனால் எல்லாம் ஐம்பொன்னில் செய்ததாக எமது தாத்தா ஞானி ஸ்ரீபூவு ஓலைக்குறிப்பு எழுதி வைத்துள்ளார் ஆகவே அதை யாருக்கும் கொடுப்பதில்லை.

      உங்கள் மகள் கேட்டது நல்ல காமெடி.

      நீக்கு
    2. ஹலோ அந்தக் கோலங்கள் வாட்சப்பில் வந்தவை ஹா ஹா ஹா ஹா ஹா...நம்ம கில்லர்ஜி அப்பூடித்தான் எழுதுவாராக்கும் ஏஞ்சல். எனக்கும் இக்கோலங்கள் வந்தன....செமையா இருக்குல்ல...

      கீதா

      நீக்கு
    3. கூட்டத்துல கட்டிச்சோற்றை அவுத்துட்டீங்களே....

      நீக்கு
    4. திருவோடு என்ற பேரை சுத்தமா மறந்து நானா பிச்சைப்பாத்திரம்னு எழுதினேன் .திருவோடு பற்றிய விளக்கம் அருமை ..தேங்காய் கொப்பரையா இத்தனை பெரிதா வளர்த்திருக்கு .வியப்பு .
      மகள் வெளிநாட்டில் பிறந்து வளர்த்ததால் அவளுக்கு நம் நாட்டு விஷயம்லாம் புதிது கோகொனட் vessel என்றுதான் சிரட்டையை கூட சொல்லுவா :) .



      நீக்கு
    5. ஹாஹ்ஹா கீதா :) நிஜம்மாவே கில்லர்ஜியின் மகள் போட்ட கோலாம்னே நினைச்சேன் :)

      @கில்லர்ஜீ ஐம்பொன் திருவோடா ?? வாவ் .பத்திரமா வையுங்க


      நீக்கு
    6. ஆம் இதை பாதுகாப்பதே பெரும்பாடாக இருக்கிறது. மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    உயிரெழுத்தில் தாங்களே இயற்றி பாடிய பாடல் அருமை. கோலங்கள் அனைத்தும், மிக அருமையாக உள்ளது. தங்களுக்கும், கோலங்கள் போட்டவருக்கும், (தங்கள் மகள் என நினைக்கிறேன்.) என்னுடைய பாராட்டுகளுடன் கூடிய வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ இது எனது மகள் போட்ட கோலம்தான் என்று பொய் சொல்லும் ஆசை இல்லை. பாடலை ரசித்தமைக்கு நன்றி

      நீக்கு
  4. ஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ நானும் வாறேன்ன்.. பிச்சை கேட்கத்தான்:))..

    பதிலளிநீக்கு
  5. உண்மையாகவோ கில்லர்ஜி.. இது நிலத்தில் போட்ட கோலமோ.. நம்பவே முடியவில்லை சூப்பராக இருக்கு...

    சுண்டலுக்காக:) ஹா ஹா ஹா நானும் சுண்டலுக்காக ஒரு தடவை ஒரு பஜனையில் போயிருந்திருக்கிறென்ன் ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கணினியில் போட்ட கோலம். ரசித்தமைக்கு நன்றி.
      சுண்டலுக்கு மயங்காதோர் உண்டோ ?

      நீக்கு
  6. மேலே தெருக்குரல் (ப்ளாஷ் நியூஸ்) படிக்கவும் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  7. அருமையான கோலங்கள் அதற்கு தகுந்த உங்கள் கருத்தும் சூப்பர்.. ஆமாம் இப்படி விதம் விதமா தினசரி சிந்திக்கிறீங்களே உங்கள் மூளை சுளுக்கி கொள்ளாதா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இரண்டு தினங்களாக லேசாக சுளுக்கு இருக்கிறது உங்களது கண்ணேறுதானோ ?

      நீக்கு
  8. என்னது... தெருக்குரல்?...
    ஒன்னையும் காணோமே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே வலதுபுறம் நகர்ந்து கொண்டு இருக்கிறதே... ஜி

      நீக்கு
  9. ஆ.... ஃ ன்னாவைக் காணோம்! அதை விட்டுட்டீங்க!


    ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி எல்லா எழுத்துகளும் இருக்கிறதே....

      நீக்கு
    2. ஸ்ரீராம் நானும் நினைத்தேன் உடனே எனக்குத் தோன்றியது இது...ஸ்க்ரோல் பண்ணி வரும் போது உங்க கமென்டையும் பார்த்துட்டேனா சரி இங்கேயே அதையும் போட்டுறலாம்னு இது இதான் ஓகேயானு தெரியலை..

      இஃதே எமது வேண்டுகோள் ஐயப்பா பிச்சை கேட்போமே..

      கீதா.

      நீக்கு
    3. ஆம் நல்ல யோசனைதான் நன்றி

      நீக்கு
  10. ஆமாம் அது என்ன நானூறு ஆண்டு கால பழமை வரலாறு? ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூலை ஒன்று தொடக்கம் ஜி

      நீக்கு
    2. ஸ்ரீராம் எனக்கென்னவோ இந்த கில்லர்ஜீ மேல சந்தேகமாவே கீது. உண்மைக்கதைனு வேற சொல்றதுனால....அந்தப் பழமை வரலாறுல கில்லர்ஜியோ கூடப் போய் உக்காந்து கதை சொல்லற மாதிரி வருமோனு டவுட்டு!!!! பார்ப்போம் ரொம்பவே எதிர்பார்ப்பைக் கிளறுகிறார்...

      கீதா

      நீக்கு
    3. விரைவில் ஆ........ரம்பம்.

      நீக்கு
  11. நல்ல கருத்துகள்.உண்மையை சொல்லுங்கள்.நீங்கள் பாடினீர்களா அல்லது படித்தீர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அன்று ஒருவர் சொன்னதும் இதுவே படித்தது அருமை என்று...

      நீக்கு
  12. ஆகா, தெருக்குரலையும் கண்டேன். இங்கே ஐயப்பன் மேல் பாடப் பட்டிருக்கும் பாடலையும் கண்டேன். அருமையான கருத்துப் பொதிந்த பாடல். கோலங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது. அச்சுப் பதித்தாற்போல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி

      நீக்கு
  13. முதல் படமும் மொத்த பாடலும் அருமை. உயிர் எழுத்துப் படங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். பொருத்தமா சேர்த்திருக்கீங்க. பாராட்டுகள்.

    தெருக்குரல் படிக்க ரசனையா இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே பாராட்டுகளுக்கு நன்றி.

      தெருக்குரல் ரசிக்க இயலுமா ? என்றால் நான் என்ன சொல்வது ? மைனாவுக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்றே ஜொள்ளுவேன் ஹி... ஹி...

      நீக்கு
  14. பிச்சை பாடல் அருமை.
    400 வருட முந்தைய உண்மை கதையா?
    அதுவும் தொடர் கதை!
    படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனது நண்பரின் வாழ்க்கை வரலாறு அந்த நண்பர் தாங்கள் அறிந்தவரும்கூட....

      நீக்கு
  15. மார்கழி கோலங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  16. வாழ்வில் அன்பு இருந்தால் போதும் அனைத்தும் நலமே!






    பதிலளிநீக்கு
  17. தெருக்குரல் கண்டேன். 400 ஆண்டுகளுக்கு முந்தைய உண்மை கதையா? நானும் படிக்க ஆவலாக காத்திருக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஆவலான காத்திருப்புக்கு நன்றி

      நீக்கு
  18. நுண்ணலை பேசியில் தான் இன்னமும் இருக்கிறேன்..

    கணினியில் இயங்க சில மணி நேரம் ஆகலாம்...

    நள்ளிரவு 12 மணியிலிருந்து ஒரே கவலை - போட்ட கருத்துரை போனது எங்கே என்று...

    சரி...

    திருவோடு இங்கே..
    பரதேசி எங்கே?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. / சரி...

      திருவோடு இங்கே..
      பரதேசி எங்கே?.. //

      ஹா...ஹா... ஹா... பரதேசி என்ற பெயரில் அமெரிக்க வாழ் மதுரைக்காரர் ஒருவர் தனி தளம் வைத்திருக்கிறார் துரை ஸார்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா துரை அண்ணா செம...

      ஆமாம் ஸ்ரீராம் பரதேசி வளைத்தளம் வைத்திருக்கிறார். ஆல்ஃப்ரெட். அவர் விசுவுக்கு (பதிவர்) அவர் அம்மாவுக்கு (எஸ்தர்) மிகவும் நெருக்கமான நண்பர். எல்லாருமே மதுரைக்காரர்கள்தாம்...

      கீதா

      நீக்கு
    3. அன்பின் ஜி நுண்ணலையில் கீழே ''வலையில் காட்டு'' என்று இருக்கும் அதை சொடுக்கினால் கணினியில் காண்பது போலவே வரும்.

      நீக்கு
    4. ஆமாம் ஸ்ரீராம்ஜி திரு. ஆல்பர்ட் இருக்கின்றாரோ...

      நீக்கு
  19. கேட்டதும்கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ,,,, வாழ்கநலம்

    பதிலளிநீக்கு
  20. மிக அழகிய கோலங்கள்..

    பாடல் வரிகளும் மிக அருமை...ரசித்தேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  21. கோலங்கள் ரொம்பவே அழகு. உங்கள் பாடலும் தான்.

    பதிலளிநீக்கு
  22. கோலங்கள் வாட்சப்பில் வந்தது என்றாலும் அதனை இணைத்து அதற்கு ஏற்றாற்போல் மிக மிக அருமையாக எழுதியிருக்கீங்க கில்லர்ஜி! சூப்பர்! மிகவும் ரசித்தோம் உங்கள் பாடலை.

    அந்தப் பழைய கதை 400 வருடங்களுக்கு முன்னான உண்மைக் கதை?!! அதைப் படிக்க ஆவலோடு இருக்கிறோம் நாங்கள்!! என்னவாக இருக்கும் என்றும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி யாகவா முனிவருக்கு உறவாய் இருப்பாரோ கீதா !

      நீக்கு
    2. அப்போ இனான்ய மொழியிலா எழுதப்போறார்? அட ஆண்டவா (அட கில்லர்ஜி)

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஹா ஹா....ஓ அப்படியும் இருக்குமோ!! அவர் தாத்தா வேற ஞானி ஸ்ரீபூவு அதனால இருக்கலாம் ஹா ஹா ஹா..ஒன்னு புரியுது ஸ்ரீராம் நிறைய "ஞானி"கள் நாம எபில வந்தாச்சு!!

      ஆனால் அந்த யாகவா முனிவர் நாகாவா முனிவர் ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. தில்லை அகத்தாருக்கு....
      பாடலை ரசித்தமைக்கு நன்றி.
      வரலாறு படிக்க ஆவலாய் இருப்பமைக்கு நன்றி.

      ஆமாம் ஊரணியோர ஞானிகளும் உண்டு.

      நீக்கு
    5. ஸ்ரீராம்ஜி...
      எனது மனைவியோட, பெரியப்பாவின் சம்மந்தியின் நாலாவது மனைவியின் மூன்றாவது மகனுடைய கொழுந்தியாள் வகையில் எனக்கும் உறவு வரும்.

      நீக்கு
    6. நெல்லைத் தமிழருக்கு....
      அக்மார்க் தமிழில் வரும் மனதை திடப்படுத்திக் 'கொல்'க...

      நீக்கு
  23. கரந்தை ஜெயக்குமார் சாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    அவர் தந்தையார் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆன்மா சாந்தியடையப் ப்ரார்த்திக்கிறோம். அன்னாரின் குணநலன்கள் பற்றி கரந்தையார் அவர் தளத்தில் இடுகை போடுவார் என நம்புகிறேன்.

    விரைந்து செய்தி பகிர்ந்த கில்லர்ஜி... பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  24. கில்லர்ஜி எங்கள் இருவரின் ஆழ்ந்த அஞ்சலிகள், ப்ரார்த்தனைகள். அவரது ஆன்மா சாந்தியடைய.

    பதிலளிநீக்கு
  25. கரந்தையில் திரு ஜெயக்குமாரை சந்தித்து இருக்கிறேன் அவரது தந்தையார் பற்றி அவர் அதிகம் ப்கிர்ந்ததில்லை அவரது தந்தையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

    பதிலளிநீக்கு
  26. காலையிலேயே Fb ல் பார்த்தேன்...
    Jk அவர்களின் தந்தையார் மறைவுச் செய்தியை...

    ஐயா அவர்களின் ஆன்மா அமைதி அடையவேண்டுவோம்..

    பதிலளிநீக்கு
  27. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  28. ஆஹா அழகான கோலங்கள்.இப்படி போட முதலில் பொறுமை வேணும்.
    உங்களுக்குள் எவ்வளவு திறமைகள் அருமையா எழுத்தியிருக்கிறீங்க வாழ்த்துக்கள் அண்ணா ஜீ.
    தெருக்குரல் பார்த்துவிட்டுதான் பதிவையே வாசிப்பது. முதலில் வேறு இருந்தது. 1ம் திகதி ஆ.
    ...........ரம்பமா.

    கரந்தை ஜெயக்குமார் அண்ணா,அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வருக ரசித்தமைக்கு நன்றி முதல் தேதி வருக....

      நீக்கு
  29. நண்பர் கரந்தை ஜெயக்குமாரின் தந்தை காலமான செய்தி காலையிலேயே முக நூலில் பார்த்து வருத்தம் தெரிவித்திருந்தேன்.

    அவர்தம் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  30. சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்கள் தந்தை காலமான செய்தி முக நூலில் பார்த்து வருத்தம் தெரிவித்து விட்டேன்.

    அஞ்சலிகள், ஆனமா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  31. கரந்தை ஜெயக்குமார் அண்ணா அவர்களின் தந்தையின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .பெரியவரின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதான் நானும் பார்த்தேன், அவரின் ஆத்ம சாந்திக்காக என் பிரார்த்தனைகள்.

      நீக்கு
  32. கோலம் உங்க வீட்டில் போட்டதுன்னு சொன்னா நான் நம்ப மாட்டேன், ஏன்னா இது நான் போட்ட கோலம் (யூட்யூப்ல இந்த கோலம் போட்டதை நான் பார்த்துட்டேன்... பார்த்துட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ? இதை வெளியில் சொல்லிடாதீங்க... சகோ.

      நீக்கு
  33. கோலம் நல்லா இருக்கேன்னு சொல்லவந்தா அதோட ரகசியமும் வந்திருச்சு. எனிவே, யூ-ட்யூபுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  34. கோலங்களுடன் இணைத்து ஐயப்பனை வேண்டி (!) பாடிய அகரமுதலி பாடல் சிறப்பு. கில்லர்ஜீயின் நவீன ஆத்திசூடி எனலாம். மிக நல்ல முயற்சி. திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அவர் தந்தையார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கிறேன். திரு ஜெயகுமார் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  35. கோலங்கள் எல்லாம் அழகு . எனக்கு நோட்டில் தான் போட வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை நோட்டிலாவது போட வருகிறதே...

      நீக்கு