வெள்ளி, ஜனவரி 30, 2015

ரத்த 6.


ஆண் மூட்டைப்பூச்சி-
நீ அடுத்த ரூம்ல, CHILDREN ஏரியாவா போயிட்டு சீக்கிரமா வீடு வந்துசேரு, நான் வேட்டைக்கு போயிட்டு வர்றேன்.
பெண் மூட்டைப்பூச்சி-
கவனமா போயிட்டு வாங்க நீங்களாவது, எனக்கு நிலைக்கணும் என் ஜாதகத்துக்கு எட்டாம் இப்படித்தான், முந்தா நாளு யேன் நாலாவது புருஷன் சொல்லிட்டுப் போனாரு, வேட்டைய முடிச்சுட்டு வரும் போதே, பாவிப்பய வழியிலேயே, நசுக்கிட்டானே..
ஆண் மூட்டைப்பூச்சி-
என்ன செய்யுறது, இந்தப் மனுசப்பயல்களே இப்படித்தான் ஜாதி, மதம்னு வெட்டிக்கிட்டு சாவாங்கே... ரத்தஆறு பூமியில ஓடும் அதெல்லாம் இவங்கெ கண்ணுக்கு தெரியாது, நாம குடிக்கிற ஒருசொட்டு மட்டும் பட்டுக்கிருச்சுன்னு, நசுக்கிடுவாங்கே..இந்த லட்சணத்துல சொல்றாங்கே இவங்கெளுக்கு 6 அறிவாம். ஹூம்...காலக்கிரகமடா, கந்தசாமின்னு போகவேண்டியதான்.
 
சாம்பசிவம்-
ஐயா, நீங்க எப்படி ? மூட்டை கடிச்சா, நசுக்க மாட்டியலா ?
KILLERGEE-
இல்லை, யாம் விரலால் சுண்டி விட்டு விடுவோம் பிழைத்துப் போகட்டுமென்று.
சாம்பசிவம்-
அதாவது, மத்தவனை கடிக்கட்டும்னு, கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது போல, சுண்டி விடுவோம்ன்னு சொல்றியலே சுண்டும்போது, எதுலயாவது மோதி மூஞ்சி மொகரை பேந்து செத்துப் போயிட்டா என்ன செய்வீங்கன்னு கேட்டா ? மண்டக்கணம் புடிச்சவன்னு சொல்வீங்க, அதான் கேட்க வேண்டாம்னு விட்டுட்டேன். (தனக்குள் இவண் பேரே, சரியில்லையே இவணை எங்கே ? கடிக்கப்போகுது)


புதன், ஜனவரி 28, 2015

மான்செஸ்டர்.

இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் ஒரு மாநகராட்சியின் நிலையை பார்த்தீர்களா ? பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்து வெளியே வருகிறது, ஒரு மாநகராட்சியே இப்படியிருந்தால் ? நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களின் நிலை ? கிராமங்களில் இந்தநிலை கிடையாது காரணம் அவர்களே சுத்தப்படுத்தி மிகுதியை கொளுத்தீவிடுவார்கள், இப்படியே போனால் சுகாதாரத்துக்கு ஸூவாஹா சொல்லும் நிலைமை வந்து விடும், புதுப்புது வியாதிகள் முளைத்து மருத்துவமனைகள் நிரம்பி வழிவதற்க்கும், விவசாய நிலங்களை அழித்து மருத்துவமனைகள் கட்டிக்கொண்டு போவதற்க்கும், தெருவுக்கு 10 மருந்துக்கடைகள் திறப்பதற்க்கும், போலிமருந்து நிறுவனங்கள் பெருகிவருவதற்கும், லட்சக்கணக்கில் செலவு செய்து குழந்தைகளை மருத்துவதுறைக்கு படிக்கச்சொல்லி வற்புறுத்துவதற்க்கும் காரணம் இங்கிருந்துதான் புறப்படுகிறது.... மூலகாரணம் பணம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பணம் கைமாறவேண்டும் அதற்க்காகத்தான் மனிதன் மனிதனை முந்திப்போக நினைக்கின்றான் இதன் விளைவு மனிதன் இறைவனிடமும் முந்திபோய் விடுகிறான், போகும்போது பணம் அவனுடன் வருவதில்லை இதற்க்கு ஒருசிலர் மட்டும் காரணமில்லை ஒட்டுமொத்த சமூகமும் இப்படித்தான்.... கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்க்கும், சுகாதாரத்தை தொலைத்து பணம் சேர்ப்பதற்கும் வித்தியாசம் என்ன ? பணம் சேர்ப்பது சுகாதாரமாய் வாழ்வதற்க்கு எனக்கூட வாதாடலாம், இதுகூட கையில இருக்கிற வெண்ணையை தொலைச்சுப்புட்டு நெய்க்கு அலைந்தகதை போலஆகிவிடும்.
 
CHIVAS REGAL சிவசம்போ-
அப்படீனா, பஸ் ஸ்டாண்டுக்கு முன்னால குப்பை கிடந்தால் ? தீ வச்சுட்டு போகச்சொல்றீங்களா, மாஸ்டர் ?
Video
(Please ask Audio Voice)


சனி, ஜனவரி 24, 2015

மதி, விதியின் வழியா ?

"என்விதி, அப்போதே தெரிந்திருந்தாலே...
கர்ப்பத்தில் நானே, கரைந்திருப்பேனே..."
- கவிஞர் வைரமுத்து
 
இது சாத்தியமா ? சாத்தியமென்றால் எத்தனை சிசுக்கள் தன்னைத்தானே கருவறையிலேயே கரைத்திருக்கும் ?
Including me & you is this Correct or no ? Yes, I know this is 100 % Correct.
பிறப்பு என்பது விதிதான், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
விதியின் வழியென வீதியில் போகும் மனிதன், சதியின் குழியில் வீழ்ந்தினும் இதுவும் விதி என்கிறான், மதிகொண்டு தடுத்திடு என்றால் தடுத்தினும் அதுவே விதி என்கிறான், தவறு மானிடா தவறு தவறினும் இப்படி நினவாதே ! உதாரணம்....  
இருபெண்கள் ஒருத்தி நல்லகுணமுடையாள், அழகானவள், ஒழுக்கமானவள், அன்பானவள், அறிவானவளும்கூட ஆனால் ஏழை. மற்றொருத்தி அகங்காரி, அன்பில்லாதவள், ஒழுக்கமற்றவள், அழகற்றவள் மட்டுமல்ல, அறிவற்றவளும்கூட ஆனால் பணக்காரி. இந்த இருவரைப்பற்றியும் உனக்கு நன்குதெரியும், இருவரில் ஒருவரை வாழ்க்கைத்துணைவியாக தேர்ந்தெடுப்பது உன்கையில் நீயோ இல்லாதவனாயினும் அறிவாளி, நீ யாரைத் தேர்ந்தெடுப்பாய் ? இரண்டாமாவளை தேர்ந்தெடுத்தால் நாளைய வாழ்க்கை எப்படியென தெரிந்த அறிவாளியான நீ இறைவன் அளிக்கும் குணத்தாளை மறந்துவிட்டு, மனிதன் அளிக்கும் பணத்தை பெரிதென நினைத்து பணக்காரியை மணக்கிறாய் பிறகு வாழ்க்கை கசக்கும்போது என் வாழ்க்கையை இறைவன் மாற்றி எழுதிவிட்டான் என்றால் ? யார் குற்றவாளி ? மாற்றியது இறைவனின் விதியா ? உனது மதியா ? அப்படியானால் பணக்காரியை யார் மணப்பது ? எனக்கேட்டு விடாதே ! இறைவன் அவளுக்கும் ஒருவாழ்வு வைத்திருப்பான், அந்த வாழ்க்கைதான் இது, எனச்சொல்லி விடாதே ! பணம் பணத்தோடு சேரும்போது இனம் இனத்தோடுதான் சேரவேண்டும், வாழ்க்கைத்துணையை கட்டுவது மட்டுமல்ல... வாழ்வின் அணையை கட்டுவதும் உன்செயலே...
 
இறைவன் கொடுத்த கண் பார்பதற்க்கு, எனதெரிந்த நீ...
இறைவன் கொடுத்த செவி கேட்பதற்க்கு, எனதெரிந்த நீ
இறைவன் கொடுத்த மூக்கு நுகர்வதற்க்கு, எனதெரிந்த நீ
இறைவன் கொடுத்த வாய் பேசுவதற்க்கு, எனதெரிந்த நீ
இறைவன் கொடுத்த கால் நடப்பதற்க்கு, எனதெரிந்த நீ...
இறைவன் கொடுத்த கை உழைப்பதற்க்கு, எனதெரிந்த நீ...
இறைவன் கொடுத்த மூளை சிந்திப்பதற்க்கு, எனதெரிந்து கொள்.
 
இது போல்தான் மானிடா எல்லா விசயங்களுமே... இறைவன் மதியைக்கொடுத்தது சிந்தித்து செயல்படவே.. நாம் சிந்தித்தால் நாட்டில் ரசிகர் மன்றங்கள் இருக்காது, கட்சி என்ற அமைப்புகள் இருக்காது, சாதிச்சங்கங்கள் இருக்காது, மதப்பிரிவினைகள் இருக்காது, அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும், கோடீஸ்வரர்களாக முடியாது, அவர்களும் உழைப்பாளிகள்தான். 
 
ஒரு விஞ்ஞானி போல்
ஒரு நீதிபதி போல்
ஒரு வழக்கறிஞர் போல்...
ஒரு மருத்துவர் போல்
ஒரு ராணுவவீரர் போல்
ஒரு காவல்துறை அதிகாரி போல்
ஒரு வங்கி அதிகாரி போல்...
ஒரு குமாஸ்தா போல்
ஒரு ஒட்டுனர் போல்
ஒரு நடத்துனர் போல்
ஒரு குதிரை வண்டிக்காரர் போல்...
ஒரு கைவண்டி தொழிலாளி போல்...
ஒரு புரோட்டா மாஸ்டர் போல்...
 
அவர்களும் ஒரு, உழைப்பாளிகள்தான். 
உழைப்பிற்க்கு பலனுண்டு உலகிலே... உழைத்தவருக்கு களைப்பு வரலாம் ஆனால் உழைத்த செல்வம் நம்மை களைவதில்லை.
  எங்கும் சமத்துவம் மலர.. இனியெனினும் முதலில் சிந்திப்போம்
 பிறகு அதன் வழியே உழைப்போம்.
நாடு பலமுடன் வளம் பெற அதில், நாமும் நம் குலமும், நலம் பெற.     
 
சாம்பசிவம்-
கருவுல, தொடங்கிய விசயம் உருமாறி பெருங்கொண்ட துருவங்களை 
தா(ங்)க்கி நிக்கிதே....
Video
(Please ask Audio Voice)


வியாழன், ஜனவரி 22, 2015

பொன்னமராவதி, பொறுக்கி பொன்னுச்சாமி.

பொன்னுச்சாமி, இவணது அப்பா அழகர்சாமி ABUDHABI, ADNOC இவரது ரத்தத்தை உறிஞ்சு கொ(ல்ல)ள்ள பதிலுக்கு இவர் பணத்தை உறிஞ்சு INDIA அனுப்ப, இவணுக்கு வேலையே ஊர்சுற்றுவது, பெண்களிடம் லட்டர் கொடுப்பது, அவர்கள் இவண் முகத்தில் காறித்துப்புவது, கண்ணத்தில் அறைவிடுவது லட்டரைக்கிழித்து எறிவது, பிறகு கிழித்தெறிந்த லட்டர்களையெல்லாம் பொருமையாக உட்கார்ந்து பொறுக்கி எடுத்துவிடுவது, இதனால் இவணை பொறுக்கி பொன்னுச்சாமி என்றே சொல்வார்கள், இதெல்லாம் சகஜமாகி விட்டது,
 ஒருநாள் கலாவுக்கு, லவ்லட்டர் கொடுத்தான் அவள் வாங்கி கொள்ளவும் இவணும் சந்தோஷமாக பதில் எழுதிக்கொண்டு வருவாள் எனமரத்தடியில் நின்றிருந்தான், இவணிடம் எப்பொழுதுமே லவ்லட்டர் ஸ்டாக் இருக்கும் ஜெனரலாக யாருக்கும் கொடுக்ககூடிய வகையில் கவிதை நடையில் எழுதிவைத்திருப்பான் அப்பொழுது அழகானஒருத்தி தனியாக வந்துகொண்டு இருந்தாள், இவண் சட்டென ஒருலட்டரை எடுத்து கொடுத்தான் அவள்வாங்கி நின்று படித்துவிட்டு சொன்னாள் "இனிமேல் எனக்கு லட்டர் கொடுத்தே தொலைச்சிடுவேன் உன்னை" போதாக்குறைக்கு எச்சியையும் காறித்துப்பிவிட்டு சென்றுவிட்டாள், இவண் கலாவுக்காக காத்திருந்தான்.
வீட்டுக்கு வந்த கலா அம்மாவுக்காக காத்திருந்தாள், கதவுதிறக்கும் சத்தம்கேட்டது திரும்பிப்பார்த்தாள் அம்மா மாலா வந்தாள், மாலாவுக்கு சிறுவயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டதால் இன்னமும் சின்னப்பெண் போலவே இருப்பாள், இருவரும் தெருவில் நடந்துபோகும்போது அக்கா-தங்கை போல இருப்பார்கள், தாயும் மகளும் தோழிகள்போலவே பழகுவார்கள் சட்டென லட்டரை அம்மாவிடம் கொடுத்து விட்டாள், லட்டரைப் படித்துப்பார்த்த மாலா கையெழுத்தை பார்த்தவுடன் கோபமாகிவிட்டாள் உடனே லட்டருடன் வெளியேறினாள்.
கலாவுக்காக, காத்திருந்த பொன்னுச்சாமி சற்றுமுன் திட்டி விட்டுப்போனவள் எதிரில் தன்னைநோக்கி வந்துகொண்டிருப்பதை கண்டதும் சந்தோஷமானான், "ஆகா பட்சி மடங்கிருச்சு" நேராக இவணிடம் வந்தவள் சொன்னாள் "இனிமே எம்பொண்ணுக்கு லட்டர் கொடுத்தே தொலைச்சிடுவேன் உன்னை" மீண்டும் மிச்சமுள்ள, எச்சியையும் காறித்துப்பிவிட்டு கோபமாக வந்துவிட்டாள் அம்மா மாலா. திரும்பும்போது சட்டீரெ சப்தம் கேட்டு திரும்பிப்பார்க்க மேலத்தெரு, மேகலா அவனை அறைந்து கொண்டிருந்தாள். 
Video
(Please ask Audio Voice)
 
ரூபன் & யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு நிர்வாகக்குழு உறுப்பினர் என்ற முறையில் பதிவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன் மேலும் விபரங்களுக்கு கீழே கிளிக்கவும்
 
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

செவ்வாய், ஜனவரி 20, 2015

பேசு மனமே பேசு

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம், மதுரை பதிவர் விழாவில் கலக்கலாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த எனது அன்புச்சகோதரி திருமதி. தமிழ்ச்செல்வியின் மகனை (K. விவேக்) தங்களில் பலருக்கும் தெரியுமென நினைக்கின்றேன் அவருடைய பிரதான தொழில் காணொளி தொகுப்பாளர் (Film Editor) முதன் முதலாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் படத்தின் பெயர்: ‘’பேசு மனமே பேசு’’ இதன் இயக்குனர் நண்பர் திரு. மா.வல்லவன் அவர்கள் இன்றைய சமூகத்திற்க்கு வேண்டிய நல்லதொரு விசயத்தை உள்ளடக்கிய இது குறும்படம் மட்டுமல்ல சிறு பாடமும்கூட 25 நிமிடம், 23 வினாடிகள் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் சரியாக 12 நிமிடம் 08 வினாடியில் ஒரு மனிதனின் உள்ளிருந்து வெளியே வந்து பேசும் மனசாட்சியாக நடித்திருக்கிறார் திரு. K. விவேக். இந்தக்காட்சிக்கான இடங்கள் மட்டுமல்ல இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளரும் மிகமிக அற்புதமான கோணங்களில் காட்சிகளை படம் பிடித்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் அவருக்கும் ஒரு சபாஷ் இந்தக் குறும்படத்தில் குழந்தை முதல் அனைவரும் சிறப்புடன் நடித்திருக்கிறார்கள் ஒரேயொரு சாராயக்கடை காட்சியில் தாதாவின் அல்லக்கைகளாக வரும் மூன்று நபர்களைத்தவிற (உள்ளதை உள்ளபடி உரைக்கும் உண்மையானவன் நான் ஆகவே இதனையும் எழுதினேன்) தாங்களும் இதனைக்கண்டு தங்களது கருத்துக்களை பதியும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இதன் YouTube இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன் இங்கு தெளிவாக காணமுடியும் நன்றி.
மனசாட்சியாக வெளிவரும் ’’விவேக்’’ மட்டும் நடித்த YouTube காட்சியை காண கீழே சொடுக்குக..
இந்த குறும்படத்தில் வரும் அம்மாவும் மகளும் உண்மையிலேயே அம்மாவும் மகளும் 80 குறிப்பிடக்தக்கது.
தங்களின் கருத்தை பதியலாமே YouTubeப்பிலும் கூட......
  ’’விவேக்’’ மட்டும் நடித்த காட்சி.
பதிவர் விழாவுக்கு வரும் பொழுது எண்ணமும், செயல்பாடும் கில்லர்ஜி, ஒருங்கிணைப்பு விவேக், தமிழ்வாணனின் கைப்பேசியிலிருந்து.....
அன்புடன் உங்கள்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

சனி, ஜனவரி 17, 2015

என் நூல் அகம் 3

 
மதுரை பதிவர் விழாவில் பதிவுலகில் அன்புடன் ‘’வாத்தியார்’’ என்று அழைக்கப்படும் திரு. பாலகணேஷ் அவர்கள் தனது ’’சரிதாயணம்’’ என்ற நூலை கொடுத்தார்கள் 80 குறிப்பிடத்தக்கது (வாத்தியார் மன்னிக்கவும் பதிவு பெரிதாக போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் வார்த்தைகளை சுருக்குகிறேன் ஆகவே என்பது என்பதை 80 என்று போட்டிருக்கிறேன் காரணம் எனக்கு வழவழனு எழுதுவது பிடிக்காது 80 நண்பர் திரு. துளசிதரன் அண்டு திருமதி. கீதா அவர்களுக்கு தெரியும் (உள் மனது - பேசாமல் என்பது அப்படீனே எழுதி இருக்கலாமோ... ரொம்ப நேரம் டைப்ப (Typing) வேண்டியதாகி போச்’’சே’’) செரி வெசயத்துக்கு வர்றேனுங்க.. இவுரப்பத்தி ன்நான் இன்னத்தே எழுதுறது ? வாத்தியப்பத்தி இஸ்க்கூலுபையனா ? அத்வும் ன்நானா ? இது ஓஓஓவர்ர்ர்ரு அப்பிடினு ஆஸ்திரேலியாக்கார்ரு நெனைச்சுட்டாரு.. போல, ஏன்னா ? என்க்கு கரையேறுது ச்சீ.. பொரையேருது அத்னாலே ன்நான் பட்ச்சி ரசிச்சதே ஒங்களோட பகிந்துகெறேன் அம்புட்டுத்தேன் அதாவதுங்கோ... ’’சரிதாயணம்’’ பொய்த்தகத்தே ய்யேந்தேன் வாங்குனோம்னு நினைச்சு நொந்து நூடூல்ஸ் ஆயிட்டேங்கோ... சம்பவம் இன்னா ? தெர்மா ? ’’சரிதாயணம்’’ பொய்த்தகம் மொலுக்கே வாத்தியாரு ‘’சரிதா’’வோட இடிக்கிற கூத்தை (?) இது அவுருக்கு சரிதா’’ன் என்க்கு ? பட்சிட்டு சிச்சு சிச்சு வயித்தெக் கலக்கி ஆசுப்பத்திரிக்கி போயி வயித்தியம் பாத்தினுக்கி மட்டும் எமராத்து தெரஹாம் 140/ ஆச்சுங்கோ, இது நம்மோட இனிய இந்திய ரூப்யாவுக்கு 2380/ ஆச்சுங்கோ, இத்வும் ன்நானு காருலே போயிவந்த பெத்துரோலு செலவுங்கோ, வைத்தியரு செலவு இல்லீங்கோ நானு ஜோலி செய்யிர ஆப்பீச்சுல இன்ஜூஞ்சு காரடு கொடுத்திகினாங்க, அத்னாலே வாத்தியாரு தப்பிச்சுகினாரு இல்லாட்டி அவுரு என்க்கு நெர்ய தரவேண்டிருக்கும்.. இது போதாதினு இவுரு பிண்டிங்காரவுங்களுக்கு பைசா கொடுகலினு நென்க்கிறேன் பாதி படிச்சி முட்சதும் மீதியே உல்டாவா பிண்டிங்கி அட்சுருகாங்க, இதுநாலே நானு காலை சொவத்துமேல வச்சிகினு தலையை கிழே வச்சிகினு பட்சேனுங்கோ... இத்ல மாத்துரோம் குட்டி குட்டியா பத்து கதை வுட்ருக்காருங்கோ... இந்தப்பதிவு கண்டுகினு வாத்தியாரு ஒட்னே என்க்கு 2380/ ரூப்யா மணியாடரு பண்ணங்கோ சொல்லிட்டேன் ந்நான் பட்சதை கீழே பாருங்கோன்னேன்...
 
கொலையின் விலை
இதில், நமக்கு கொலை செய்யப்போகிறவர் இவரா ? என்ற ஆச்சர்யம் மேலிடுகிறது...
எனக்கொரு மகன் பிறப்பான்
இதில், குழந்தைகளிடம் நமது ஆசையை வலியக்க திணிப்பது தவறுதானே என வலியுறுத்துகிறார்... அவருக்கே உரித்தான பாணியில்.
கிளி கிலி கிழி
இதில் வாத்தியார் (திரு. பாலகணேஷ்) அவர்கள் எழுத்து துறைக்கு வரும் முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலை பார்த்திருக்கிறார் 80 விளங்கியது  ஆனால் ? ஒரு நல்ல கௌரவமான பதவியில் இருந்து கொண்டு ஒரு கொலையும் செய்திருக்கிறார் 80 தை, (இதை நான் சொல்லவில்லை கதையில் தன்னை இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக்கொண்டு அவர் வரும் பொழுது என் சிற்றறிவுக்கு எட்டியது இப்பிடித்தாங்கோ) நினைக்கும் பொழுது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது காரணம் எனது நண்பர் அருண் அவர்கள் முன்பு ஐஸ்கிரீம் கம்பெனியில் வேலை செய்தவர் தற்போது மற்றொரு அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அவர் மீது பழியைப்போட்டது..... ‘’ச்சே’’ நமக்கெல்லாம் வாத்தியாராக இருப்பவர் குற்றத்தை ஒத்துக்கொண்டு போலீஸில் சரணடையாமல் டெக்னிக்கா வேலையை ராஜினாமா செய்து விட்டு, மின்னல் வரிகள் என்ற பெயரில் வலைப்பூ சுற்றுகி... Sorry வலைப்பூ தொடங்கி இருப்பது... நன்னாத்தோனலே...
மன்னவன் வந்தானடி Sorry தப்பா டைப்பிட்டேன் கொன்னவன் வந்தானடி
இதில், சதையில் Sorry கதையில் உண்மையிலேயே இப்படி ஒரு திருப்பதி Sorry திருப்பம் வரும்னு யாருமே எதிர் பார்த்திருக்க முடியாது அருமை.
குழந்தை
இதில், நவீனமான இந்தக்காலத்தில் (ரவீணா டண் டண் மாதிரி) புதுமையான மருமகளை காணலாம்...
அமைதியின் பின்னே...
இதில், ஒரு மனமொத்த கௌரவமான தம்பதிகளின் வாழ்வைப்பார்த்து பெருமிதமாக இருந்தது... ஏன் ? பொறாமையாககூட காரணம் நமக்கும் இவரைப்போல (திருவாளர். செல்வம்) இப்படியொரு வாழ்வு கிடைத்தால் ? எவ்வளவு செழிப்பாக வாழலாம்.... 80தை எண்ணிப்பார்க்கின்றேன். (ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, again ஒன்று, இரண்டு....)
கல்லுக்குள் ஈரம்
இதில், வரும் தாதா’’வை கண்டதும், எனக்கும் இவரைப் போலொரு மனதை தா ! தா ! என இறைவனிடம் கேட்கச்சொன்னது.....
நானும், ஒரு கொலைகாரனும்.
இதில், ஒரு மனசாட்சி உள்ள கொலைகாரனிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்... நான் இதை படித்துக்கொண்டு வரும்பொழுதே... அடுத்த கதைக்கு தாவி (?) விட்டேன் காரணம் எனக்கும் பயம்தான் இவண் என்னையும் போலீஸுல மாட்டி விட்டுறுவான் போல தெரிந்தது... ஏன்னா ? நமக்கு பெயரே சரியில்லைனு சிலபேர் சொல்றாங்க... (ஐயா, திரு. முத்து நிலவன் அவர்களே... உங்களை சொல்லலீங்கோ)
சங்கி – வெங்கி - பிங்கி
இதில், மங்கிகளை வைத்தும் ஒரு கதை.
 
அன்பின் வாத்தியார் அவர்களுக்கு.... எல்லாம் எழுதியவன் முக்கியமானதை எழுதவில்லையே.. எனநினைத்திருப்பீர்கள் தங்களை பாராட்டும், அகவையோ, பக்குவமோ எமக்கு போறா....
நான் இருக்கிறேன் அம்மா... இதை படித்ததும்.....
என் கண்கள் கசிந்தது உண்மை அவ்வளவுதான் எழுத முடிகிறது, பெட்டிக்கடை ராஜூ அண்ணா தங்களிடம் பேசாமலிருந்த பொழுது நான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. வாசகனை ஒரு எழுத்தாளன் தனது எழுத்தின் வசீகரத்தால் உணர்வுப்பூர்வமாய் கண் கலங்க வைத்து விட்டான் என்றால் (?) அந்தக்கண்ணீருக்கு விலை இவ்வுலகையே எடுத்துக்கொடுத்தாலும் இணையாகாது. வணங்குகிறேன் வாத்தியாரே.
 
இம்புட்டுதாங்கோ… வாத்தியைப்பத்தி வத்தி வைக்க... Sorry எழுத முடிஞ்சதுங்கோ... இதுக்கு மேலே வாத்தியாரைப்பற்றி எழுத வரலீங்கோ அத்னாலே ன்நான் இத்தோட வெடை பெறலாம்னு இருக்கோனுங்க, நன்றிங்கோ.
எனது மற்ற விமர்சனங்களை படிக்க கீழே இணைப்புகளை சொடுக்குக...
எமது அடுத்த விமர்சனம் திரு. கோவை ஆவியின் ’’ஆவிப்பா’’
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

Related Posts Plugin for WordPress, Blogger...