தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 18, 2015

பேராவூரணி, பேராசை பேச்சிமுத்து


பேரன்புடையோர்களே, இப்பொழுது பேராசையைக் குறித்து பேராவூரணி, பேரிண்ப பேச்சாளர் "பேராசை" பேச்சிமுத்து அவர்கள் பேரிடியாக பேருரை ஆற்றுவார்கள்.

தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ !

என்னுள் எழுந்தவை நான் மண்னுள் புதையும்முன் இந்த விண்ணில் விதைத்திட விரும்புகின்றேன்.


ஒவ்வொரு மனிதனும் சந்தோஷத்தை தேடுவதாக நினைத்துக் கொண்டு இருக்கின்ற சந்தோஷத்தை தொலைத்துக் கொண்டு இருக்கின்றான் நமது வேதனைகள் பெரும்பாலும் நம்மைப்பற்றி இருப்பதைவிட பிறரைச் சுற்றியே இருக்கிறது.


நமக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பது பிரச்சனை இல்லை, மற்றவனுக்கு கிடைத்து விட்டதே என்பதுதான் பிரச்சனை. ஆனால் அந்த பதவி உயர்வுக்காக அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ன ?  என்பதை நாம் நினைத்துப் பார்க்க மறுக்கின்றோம் லாட்டரிச் சீட்டில் பரிசு நமக்கு விழவில்லையே என்பதை விட, அடுத்தவனுக்கு விழுந்து விட்டதே ! என்பதுதான் நமக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கிறது இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நாம், லாட்டரிச்சீட்டு வாங்கியே இருக்க மாட்டோம் நமக்கு மட்டும் இறைவன் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்கிறானே ? மற்றவர்களெல்லாம் சந்தோஷமாகத்தானே வாழ்கிறார்கள். என நினைக்கிறோம் எல்லா மனிதர்களுக்குமே வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்து கொண்டே.... இருக்கிறது அது நம் கண்களுக்கு தெரிவதில்லை.


உதாரணத்திற்கு ஒருவர் போட்டிருக்கும் சட்டையை நாம் காண்கிறோம் அதை அழகாக சலவை செய்து போட்டு வருகிறார் நாம் அழகாக இருக்கிறதே என எண்ணுகிறோம். ஆனால் அந்தச்சட்டையின் உள்ப்புறத்திலுள்ள அழுக்கை நாம் பார்க்கிறோமா ? இல்லை இதைப் போலத்தான் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் பிரச்சனைகள். அதை இறைவன் மட்டுமே அறிவான்.


நமது, வேதனைகளுக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா ? நாம் பெரும் பாலும் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நம்மைவிட உயர்வானவர்கள் வாழ்க்கையைப் பற்றியே நினைக்கின்றோம் ஆனால் அவர்களைப் போல் நாமும் நல்ல எண்ணமுள்ளவராய் வரவேண்டுமென்பதை மறந்து விடுகிறோம். இதைத்தான்...


குமரகுருபரர் ஸ்வாமிகள் சொல்லியிருக்கின்றார்,
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை
"அம்மா" பெரிதென்று அக மகிழ்க !
இதையே பாமரனுக்கும் விளங்கும்படி
கவியரசு, கண்ணதாசன் சொன்னார், பி.பி.ஸ்ரீனிவாஸ் மூலம்,
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
இந்த வேதனைகளுக்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன ?

ஆசைதான், ஆசையை ஒழிக்க வேண்டும் ஆசையே துன்பத்திற்கு மூலதனம் என்றார், மகான் புத்தர் ஆசைப்படுங்கள் ஆசையே மனிதனை சாதிக்க வைக்கும் என்கிறார், டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்.


இதில் எது சரி ?
இரண்டுமே சரிதான்.


ஆம், நாம் ஒரு லட்சியத்திற்காக வாழவேண்டும். லட்சியத்திற்காக ஆசைப்படவேண்டும், நான் ராணுவத்தில் சேர்ந்து இந்த நாட்டுக்காக பாடுபடுவேன், மிகப்பெரிய ஜவான் ஆவேன் என்று ஆசைப்பட்டால் அது நியாயம். இந்த வகையான ஆசையைத்தான் ஆசைப்படுங்கள், என்கிறார், டாக்டர். அப்துல்கலாம் அவர்கள்.


ஆனால் நாம் எப்படி ஆசைப்படுகிறோம் ?

ஜவான் டீக்கடை முச்சந்தியில நாம, மூன்று மாடி வீடு கட்டணும் அப்படின்னு ஆசைப்படுறோம், முச்சந்தி என்பதே அரசாங்க இடம் இதில் வீடு கட்ட ஆசைப்பட்டால் ? இந்த வகையான ஆசையைத்தான் ஒழிக்க வேண்டும் என்றார், மகான் புத்தர்.


ஆகவே,
நியாயமான ஆசைமீது ஆசைப்படுவோம்
நியாயமான ஆசைக்கு ஒலி கொடுப்போம்
நியாயமான ஆசையே ஒளி கொடுக்கும்
நியாயமற்ற ஆசையை ஒழி ப்போம்

எண்ணம் நலமெனில், எல்லாம் நலமே,
Anyway
எண்ணுவோம் எண்ணமெல்லாம், நலமே.

என்று கூறி பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன், நன்றி, வணக்கம்.

காணொளி கேட்டு காண்பீர்.

64 கருத்துகள்:

 1. நல்லதொரு பதிவு நண்பரே! வாசித்துக் கொண்டே வரும் போது,பின்னூட்டத்தில் "உனக்கும் கீழே உள்ளவர் கோடி.....பாடிடலாம்னு நினைச்சுக்கிட்டு வந்தா நீங்க பாடிட்டீங்க...சரி போனா போகுது...ஆசையைப் பத்தி புத்தர் சொன்னதுக்குக் கூட ஒண்ணு சேர்த்துக்கலாம்....ஆசை இல்லாமல் இருந்தால் உந்து சக்தி இருக்காது வாழ்வதற்கான சக்தி இருக்காது, லட்சியங்களை அடைய முடியாது அதனால் ஆசைப் பட வேண்டும். நியாயமான, நேர்மையான , வலுமையுள்ள, பிறருக்கு உதவும் வகையிலான ஆசைகள் இருந்தால் தவறில்லை என்று கருத்துச் சொல்லலாம்னு நினைச்சா அடுத்த லைன்ல அப்துலகலாம் வந்துட்டாரு...அப்புறம் என்னத்த சொல்ல...கன்னத்துல விரல் வைச்சு, மோட்டு வளையப்பார்த்து சிந்திக்கற மாறி ஒரு போஸ்ல இருக்கோம் ஜி...ஹஹஹ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க நாங்களெல்லாம் தும்மும்போதே எச்சிதான் தெறிக்கும்னு முடிவு பண்ணுறவங்கே... தெரியுமுள்ள...

   நீக்கு
 2. என்ன அண்ணே ? திடீர்னு ந்ம்ம DD அண்ணா மாதிரி பதிவெழுத ஆரம்பிச்சிட்டிங்க . DD அண்ணே , இவரு மேல ஒரு கண்ண வைங்க .

  பதிவு அருமை . ஏற்கனவே மானிடம் , பகுத்தறிவுனு என்னன்னவோ சொல்லி சொல்லி நானே டயர்ட் ஆகிட்டேன் . அதுனால நோ கமெண்ட்ஸ் .

  தம+

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே ஆரம்ப காலம் முதல் நான் பாடலுக்காக காணொளி இணைப்பது வழக்கம் யாரும் அதைப்பார்ப்பதில்லை, இப்பொழுது பார்ப்பது புரிகிறது ஆகவே மீண்டும் தொடங்கி விட்டேன்.
   மேலும் பாடல் எனது ரத்தத்தோடும், சத்தத்தோடும் இணைந்தது.

   நீக்கு
 3. குமரகுருபரர் உரையெலாம் தெரிந்திருக்கிறது தங்களுக்கு!
  கண்ணதாசன் பாடலுடன் ஒப்பிட்டதும்.
  உங்கள் எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே என்று முடித்த விதமும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகம் தோன்றியபோது வந்த ஆதாம்-ஏவாளை பற்றி நீங்க தெரிஞ்சு இருக்கும்போது நேற்று வந்த குமரகுருபரரை ன் தெரிந்திருப்பதில் என்ன வியப்பு ?
   இப்பத்தான் தெரியுது என்னை ஒண்ணும் தெரியாத மண்ணுனு நினைச்சுக்கிட்டு இருந்தது.

   நீக்கு
 4. பேராவூரணி "பேராசை" பேச்சிமுத்துவின் பேச்சு சிந்திக்கவும்,சிரிக்கவும் வைத்த மிக அருமையான பேச்சு..
  -நன்றி-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா இந்த சிந்தனையிலேதான் மயங்கி ஓட்டுப்போடாமல் போயிட்டீங்களோ.... இனிமேல் கவனமாக எழுதுறேன்.

   நீக்கு
 5. //உனக்கும் கீழே உள்ளவர் கோடி
  நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//

  அற்புதமான வரிகள். ஆனால், இப்போது யார் அப்படி நினைக்கிறார்கள்? எல்லா சுய முன்னெற்ற நூல்களும் நமக்கு மேலே உள்ளவர்களைத்தானே பார்க்கச்சொல்கிறது. கீழே பார்த்தால் உன் வளர்ச்சி நின்று போய்விடும் என்று பயமுறுத்துகிறதே! இன்றைய மிதமிஞ்சிய ஊழல்களுக்கு கூட மேலே உள்ளவர்களை மட்டுமே பார்ப்பதுதான் காரணம்! 80பதை கில்லர்ஜி பாணியில் தெரிவித்துக்கொள்கிறேன்.
  த ம 3

  பதிலளிநீக்கு

 6. பேராசையைப் பற்றிய பேராவூரணி பேச்சுமுத்து அவர்களின் வெடி பேச்சு அருமை.
  என்ன திடிர்ன்னு தத்துவம் எல்லாம்.
  குமரகுருபரரர், புத்தர், அப்துல்கலாம்,கண்ணதாசன், சும்மா பிச்சி உதறீங்க.
  இப்படி தாங்க யாராவது நல்லது சொன்னா கிண்டல் பன்றது.
  எப்படி உறுப்புடும் இந்த சமுதாயம்.
  பேராசை என்பது ஒழிய இன்னும் எத்துனைப் பேர் சொன்னாலும் மாற மனசு வேனும். ஆசைப்படனும் தான். ஆனால் நம் ஆசை மற்றவர்களின் பொருள் மேல் எனும் போது என்ன செய்ய,,,,,,, அருமையான எடுத்துக்காட்டு, முச்சந்தியில் வீடு கட்ட ஆசைப்பட்டால்,,,,,,,,, உண்மை. நான் பார்த்து இருக்கிறேன். வலியவன் கேட்க ஆள் இல்லை என்ற எண்ணம். இன்று சாலைகள் ஆக்கிரமிப்பு இப்படி தானே,காணோளி கிடைக்கல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க விரிவான விளக்கவுரையை தாங்க, தாங்க, உங்களுக்காக விரைவில் வரும் தத்துவம்.

   நீக்கு
 7. எண்ணம் நலம் எனில் எல்லாம் நலமே!..

  அற்புதம்!.. காலையில் நல்லதொரு சிந்தனை!..

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஜி
  இப்படியான ஆசை யாருக்கு இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை என்பது உண்டு ஆனால் வித்தியாசமாக உள்ளது... நல்ல பேச்சு வாழ்த்துக்கள் த.ம 5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. பேச்சுக்கலை பற்றிய தெளிவு
  தங்களிடம் இருந்ததால் - இந்த
  பதிவு நன்றே மின்னுகிறது!
  நானும் பேச்சுக்கலை பற்றி
  "அரங்கில் (மேடையில்) பேசுவதற்குக் கற்றுக் கொள்வோம்" என எழுதியிருக்கேன்.
  https://yarlpavanan.wordpress.com/2014/05/31/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/
  நல்லெண்ணங்களை அழகாக
  மெல்ல உள்ளத்தில் ஏறும்படி
  சொல்ல வந்த முயற்சியை
  பாராட்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே வருடமும் தலைப்பும் கொடுத்தால் போய் விடுவேன் இதில் எப்படி போவது ?

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே.!

  பேராசை பேச்சிமுத்துவின் பேச்சுக்கள் பேரிடியாக இல்லாமல் பேருவகையாக இருந்தது ... நியாயமான ஆசைகளை நிறைவேற்ற நியாயமாக ஆசைப்படு என பாடல்களை உதாரணம் காட்டி அவர் சொன்ன விதமும் நன்று.. வாழ்க அவர் புகழ்.. வளர்க அவர் தமிழ் தொண்டு..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோதரி தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 11. த த த த த ...................
  தத்துவ தம்பியின் தகுதி தடம் புரண்டு ஓடாத தனி ரயில் பேச்சு இது!
  நல்ல வேகம் எடுத்து விட்டது! எக்ஸ்பிரஸ் வேகம் .
  இந்த ரயிலில் போகும் போது இன்னிக்கு போய் சேர்ந்திட்டா போதும்னு நினைச்சா அது ஆசை!

  க்ரெக்ட் டைம்க்கு போய் சேரனும்னு நினைச்சா அது பேரராசை!

  என்ன?

  பேராவூரணி பேராசை பேச்சுமுத்து அவர்களே!

  நான் சொல்லுவது சரிதானே நண்பா?
  பாட்டுக்கு இந்தா பிடி ஒரு ஷொட்டு!

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசையை அழகாக அலங்கரித்த வலைச்சர ஆசிரியரே வருக...

   நீக்கு
 12. ஆறு மனமே ஆறு
  இந்த பேராவூரணி பேராசை பேச்சுமுத்து பேச்சுக்கு ஆறு!
  (பேச்சை கேட்பது யாரு?)
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 13. என்ன ஆச்சு ?நல்லாத்தானே இருந்தீக சகோ...ஆனாலும் ரசித்தேனுங்கோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க என்ன தென்றல் இந்தப்பக்கம் வீசுது....
   //நல்லாத்தானே இருந்தீக //
   அப்படினாக்கா ? பதிவு சரியில்லை சரிதான் புரிஞ்சுபோச்சு.

   நீக்கு
 14. ஒரு முறை கடவுளோடு உரையாடும் போது நான் அவரிடம் கேட்டேன் “ உன்னை ஆச்சரியப் படுத்துவது எது” என்று. அதற்கு அவர் “ மக்கள் துயரம் வரும்போது ஏன் எனக்கு இது என்கிறார்கள். மகிழ்ச்சி வரும்போது ஏன் எனக்கு என்று கேட்பதில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் உண்மையின் பக்கம் வர விருப்புவதில்லை”பேராவூரணியாரின் பேச்சு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாவின் வருகைக்கு நன்றி நல்ல கேள்வியும், சிறந்த பதிலும் ஐயா.

   நீக்கு
 15. அருமையான சிந்தனைப்பகிர்வு! ஆசைதான் சீரழிக்கின்றது சில அரசியல்வாதிகளை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில அரசியல்வாதிகள் மட்டும்தானா ? நண்பரே...

   நீக்கு
 16. மதுரை பதிவர் திருவிழாவில் இப்படியெல்லாம், நீங்கள் பேசியதாக நினைவுக்கு வரவில்லையே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி நான் பேசும் பொழுது நீங்க பின்னாலே ''ஒதுங்க'' போயிட்டீங்கள்னு நினைக்கிறேன்.

   நீக்கு
 17. அன்புள்ள ஜி,

  ஆசைப்படு... பேராசைப்படாதே...என்று நல்லதொரு கருத்தை நயம்படச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ‘ஆசையை ஒழிக்க வேண்டுமென்ற ஆசை புத்தருக்கு இருந்தது’
  -என்று சொன்னவர் ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரி ஜான்.

  மயக்கமா கலக்கமா
  மனதிலே குழப்பமா
  வாழ்க்கையில் நடுக்கமா

  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
  வாசல்தோறும் வேதனை இருக்கும்

  வந்த துன்பம் எதுவென்றாலும்
  வாடி நின்றால் ஓடுவது இல்லை

  எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
  இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.........

  உனக்கும் கீழே உள்ளவர் கோடி
  நினைத்து பார்த்து நிம்மதி நாடு

  1931ல் டி.எஸ்.ரெங்கராஜனாக ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலி தனது முப்பதுகளில் சென்னை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்தபடியே சினிமாவுக்கு பாடலாசிரியராக முயன்றுள்ளார். ஆனால் வாய்ப்புக்கள் வரவில்லை. விரக்தியின் விளிம்பில் நின்று சென்னையிலிருந்து திருவரங்கம் திரும்பிவிட நினைத்தார். ஒருமுறை வறுமையின் காரணமாக தற்கொலைக்கு அவர் முயன்ற போது அவரைக் காப்பாற்றியது டீக்கடையிலிருந்து ஒலித்த இந்தப் பாடல். அது அவரது நண்பர் பி.பி.சீனிவாஸ் பாடிய ‘மயக்கமா கலக்கமா’. அப்பாடலைக் கேட்டு மனம் மாறி மீண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்தார். திரைத்துறையில் சாதித்து... காவியக்கவிஞராகிப் புகழடைந்து வரலாறானார்.

  நன்றி.
  த.ம. 10.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான பாடலை முழுமையாக கொடுத்து வாலிபக்கவிஞர் வாலியின் வாலிப பருவ வாழ்க்கை வரலாற்றை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள் மணவையாரே...

   நீக்கு
 18. தேவகோட்டை நண்பருக்கு, உங்கள் மனதில் கொதித்துக் கிடந்த உணர்வுகளை கோர்வையாக்கி பேராசை பேச்சிமுத்து வாயிலாக வெளிப்படுத்தி விட்டீர்கள். மேற்கோள் பாடல்கள் அனைத்தும் எப்போது கேட்டாலும் திகட்டாதவை. மயக்கமா கலக்கமா பாடலை முழுமையாக கேட்டால்தான் ரசிக்க முடியும். எனவே இனிமேல் வீடியோ காட்சிகளை இணைக்கும் போது பாடலை முழுமையாக இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தவறாக எண்ண வேண்டாம். இது என்னுடைய ஆலோசனை மட்டுமே.
  த.ம.12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நன்பரே தங்களது ஆலோசனையை ஏற்கிறேன், எனது கருத்து நான் சொல்லவரும் விடயம் மட்டும் வந்தால் போதுமென நினைத்தேன், முன்பு நான் 1 மணி நேர காணொளியெல்லாம் வெளியிட்டேன் அதை யாரும் காண்பதில்லை ஆகவே இப்படிச்செய்தேன் மேலும் நீங்கள் சொல்வதுபோல் செய்வது எனக்கு எளிது இதற்க்காக நான் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியதிருக்கின்றது.

   நீக்கு
 19. உயர்வுக்கு வழிவகுக்கும் அருமையான கருத்துக்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே நலம்தானே... இடைவெளி அதிகமாகிறதே....

   நீக்கு
 20. மிக அருமையான பதிவு. ஆசை யாரை விட்டது ? பேராசை மனிதனின் வாழ்வையே அழிக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம் ஜி... (http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html)

  கொடுத்துள்ள பதிவில் பாடல்கள் எப்படி...? + எப்படி...? என்று சொல்லுவீங்களா ஜி...?

  பதிலளிநீக்கு
 22. ஆமா என்னையிலிருந்து நீங்க புத்தரா மாறினீங்க தலைவரே! அந்த அமெரிக்கா பதிவுல ரொம்ப ஆசையெல்லாம் பட்டீங்க.
  சரி, எப்படியோ ஒரு நல்ல பதிவா போட்டிருக்கீங்க. படிக்க ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்க ஏன் புத்தராக மாறனும் நீங்க ஆசைப்படக்கூடாது 80ற்க்குதான் இந்தப்பதிவு.

   நீக்கு
 23. பேராசை பேச்சி முத்துவின் பேச்சை கேட்பதற்கு வழிவகை செய்தவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...

  பதிலளிநீக்கு
 24. அருமை! வழக்கம் போல!

  பதிலளிநீக்கு
 25. மீசைக்கார நண்பரின் பதிவு அருமையோ அருமை
  பேராசை பெரு நட்டம்தானே
  அருமை நண்பரே
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டிற்க்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 26. முத்திரை பதிக்கும் பதிவு..!
  தேர்வுநடப்பதால்தான் முன்போல் வந்து கருத்திட முடியவில்லை.
  ( அப்பப் பதிவு மட்டும் போட நேரம் இருக்குதா.....??? )
  வகுப்பில் மாணவன் கேட்டான்.

  ஏன் சார்,

  அவன் 80 மார்க் வாங்கிருக்கான் நான் 8 மார்க் வாங்கிருக்கேன்னு, அவனப்பாருங்க அவன் 4 மார்க் தான் வாங்கிருக்கான். அதப்பாத்து அட பரவாயில்ல நாம 8 வாங்கிட்டோம் நான் சந்தோஷப்பட்டா என்னத் திட்டிரிங்களே...!
  நீங்கதான சொன்னீங்க
  “ தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை அம்மா பெரிதென்றே அகமகிழ்க...ன்னு..!

  ஆசிரியர் சொன்னாராம் ..

  தம்பி அது அறிவுக்குப் பொருந்தாது...


  “தம்மின்
  கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெலாம்
  எற்றே இவர்க்குமுன் என்று “ ன்னுதான் குமரகுருபரர் இந்தப் பாட்டை முடிக்கிறார்.

  அதுனால் கல்வியிலயும் அறிவிலயும் மட்டும் அடுத்தவங்களப் பாத்து நாம படிச்சதெல்லாம் இவங்க முன்னாடி ஒண்ணுமே இல்லையேன்னு வருத்தப்பட்டு இன்னம் படிக்கப் பார்க்கனும் ன்னு“

  உங்களைப் போன்ற பல்துறை ஆர்வலர்களை அறிஞர்களைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது,

  “கற்றதெலாம் எற்றே இவர்க்கு முன் என்று “ என்பதுதான்.

  தொடர்கிறேன் அய்யா!

  த ம 10இன்8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, கவிஞரே.... நீங்க அடிக்கடி 8 எட்டுனு எட்டி, எட்டி சொல்வதைப்பார்த்தால் இதே ஏரியாவுல இருக்கின்ற சிவப்பு வர்ணப்படத்தைப்பற்றி சொல்கின்றீர்களோ 80 எனது சிற்றறிவுக்கு 8கிறதே....

   என்னைத்திட்டுவதாய் இருந்தால் பதிவிலேயே நேரடியாக எழுதி விடவும் அதை விட்டு ஆர்வலர், அறிஞர் என்று…. அறிய ஆர்வமில்லாத வார்த்தைகள் வேண்டாம் 80தையும் நினைவில் கொ(ல்)ளவும்.

   நீக்கு
 27. ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் பண்ணியிருக்கேன். ஆனாலும் பதிவு எனக்கு வரவில்லை! சாதாரணமாகவே ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் பதிவுகள் ஒருநாள் தாமதமாகத்தான் வருகின்றன.

  பதிவு பிரமாதம். முன்னேற்றத்துக்கு மேலே உள்ளவரைப் பார்த்து முன்னேற வேண்டும் என்றாலும் அது பொறாமையாக மாறக் கூடாது. நீங்கள் சொல்லி இருப்பது போல அடுத்தவனுக்கு வாழ்வு வந்தால்தான் நம்மால் தாங்க முடிவதில்லை. நம்ம வீட்டில் கரண்ட் போனால் சட்டென ஜன்னலைத் திறந்து பக்கத்து வேட்டைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் கரண்ட் போயிருந்தால்தான் நமக்கு நிம்மதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே... உங்களுக்கு வரவில்லையா ? அதனால்தான் இரண்டு பதிவுகளுக்கு வரவில்லையோ....
   மின்சார சமாச்சாரம் ஸூப்பர் உண்மைதான் வருகைக்கு நன்றி நண்பரே..

   நீக்கு
 28. பேராவூரணி பேச்சி முத்து நல்லா பேசியிருக்காரு அண்ணா...
  அருமை....
  ரெண்டு நாளா முயற்சிக்கிறேன் தங்கள் நம்பருக்கு போன் போகவில்லையே ஏன்... ?

  மொபைல் பிரச்சினையா?

  எப்ப கருதாவூரணி கந்தசாமியும்... தேனம்மை ஊரணி தேனப்பனும் பேசப்போறாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே அவர்கள் இரண்டு பேரும் விரைவில் வருவாங்க....
   மொபைல் மூன்று தினங்களாக லாக் அனேகமாக நாளை சரியாகி விடும் டூ ஆபீஸில் பதிவு செய்து வந்திருக்கிறேன் யூ.ஏ.ஈ மொத்தம் இப்ப அதுதானே பிரட்சினை.

   நீக்கு
 29. அருமையான கருத்துக்கள் அடங்கிய அழகான உரை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. அருமையான கருத்தை சொன்னீர்கள். அளவோடு ஆசை பட்டால் நலம் தான்.
  குமரகுருபர் பாடல், கண்ணதாசன் பாடல் பகிர்வு அருமை.
  எண்ணம் நலம் என்றால் எல்லாம் நலம் தான்.

  பதிலளிநீக்கு
 31. அருமையான கருத்துகள் ! நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் மதியழகன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

   நீக்கு