தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 19, 2015

கோயமுத்தூர், கோக்குமாக்கு கோபாலு.

அரிசிக்கும், அரசிக்கும் வித்தியாசம் சொல்லு ?
அரிசி மக்களுக்கும் உபயோகம், அரசி மன்னருக்கு உபயோகம்.
ஆசாரிக்கும், பூசாரிக்கும் வித்தியாசம் சொல்லு ? 
ஆசாரி மணியை வடிப்பாரு, பூசாரி மணியை அடிப்பாரு.
மெய்க்கும், பொய்க்கும் வித்தியாசம் சொல்லு ?
குடும்பத்தலைவி அழுதால் மெய், நடிகை அழுதால் பொய்.
காதலுக்கும், மோதலுக்கும் வித்தியாசம் சொல்லு ?
காதலாலே மோதல் வரலாம், மோதலால காதல் வராது.
காதலிக்கும், மனைவிக்கும் வித்தியாசம் சொல்லு ?
எது பேசினாலும், தேன்போல இனித்தால் காதலி, என்ன பேசினாலும் தேள்போல கடித்தால் மனைவி. 
அதிர்ஷ்டம், துரதிஷ்டம் வித்தியாசம் சொல்லு ?
அது இஷ்டத்துக்கு வந்தால், அதிர்ஷ்டம், துறத்திக்கொண்டு போனால் துரதிஷ்டம்.
இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம் சொல்லு ?
10 மாதம் கழித்து குழந்தை பிறந்தால் இயற்கை, 8 மாதத்துல ஆபரேஷன் செய்து எடுத்தால் செயற்கை.
மணமேடைக்கும், பிணமேடைக்கும் வித்தியாசம் சொல்லு ?
கழுத்துல மாலையோட நடந்து போனால் மணமேடை, மாலையோட தூக்கிகிட்டு போனால் பிணமேடை.
மகளுக்கும், மருமகளுக்கும் வித்தியாசம் சொல்லு ?
இருக்கிறதை, அள்ளிக்கிட்டு போறவ மகள், இருக்கிறவனை தள்ளிக்கிட்டு போறவ மருமகள்.
உலோக தங்கத்துக்கும், மாமாமகள் தங்கத்துக்கும் வித்தியாசம் சொல்லு ?
உலோக தங்கத்தை உரசினால் சேதாரமாகும், மாமன் மகள் தங்கத்தை உரசினால் சேர்மானமாகும்.
பலனுக்கும், பிரதிபலனுக்கும் வித்தியாசம் சொல்லு ?
காதலிக்கு, கேட்காமலே வாங்கிகொடுப்பது பிரதிபலனை எதிர்பார்த்து, மனைவி கேட்டாலும் வாங்கி கொடுக்காமலிருப்பது பலன் இல்லை எனதெரிந்து.
பலி கொடுப்பதற்கும், பழி வாங்குவதக்கும் வித்தியாசம் சொல்லு ?
நம்ம பணத்துல, ஆடுவாங்கி கொடுத்தால் அது பலி, பிடிக்காதவன் ஆட்டைப்புடிச்சு கொடுத்தால் அது பழி.
மகனுக்கும், மருமகனுக்கும் வித்தியாசம் சொல்லு ?
கொஞ்சம், கொஞ்சமா சுரண்டுவாரு மகன், மொத்தமா வரண்டுவாரு மருமகன்.
பணக்காரனுக்கும், பிச்சைக்காரனுக்கும் வித்தியாசம் சொல்லு ?
பிச்சைக்காரனுக்கு, நினைத்த இடமெல்லாம் தூக்கம் வரும், பணக்காரனுக்கு நினைத்தாலும் தூக்கம் வராது.
கோயிலில் நிற்கும் பக்தனுக்கும், திருடனுக்கும் வித்தியாசம் சொல்லு ?
கோயில் உண்டியல்ல, பணத்தை போடுறவன் பக்தன், அந்த பணத்தை எடுத்துக்கிறவன் திருடன்.
அன்றைய அரசியல், இன்றைய அரசியல் வித்தியாசம் சொல்லு ?
அன்றைய அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு உழைத்தார்கள், இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு மக்களுக்கும், சின்னவீடுகளுக்கும் உழைக்கிறார்கள்.
ORIGINALலுக்கும், DUPLICATEக்கும் வித்தியாசம் சொல்லு ?
ஸூட்டிங்கில, ORIGINALலா பல்டி அடிக்கிறவருக்குபேரு DUPMASTAR, சும்மா நடிச்சு காண்பிச்சவருக்கு பேரு ORIGINAL.
ABU DHABI க்கும், DUBAI க்கும் எழுத்து வித்தியாசம் சொல்லு ?
ABU DHABI யிலிருந்து, DUBAI எடுக்கலாம், DUBAI யிலிருந்து ABU DHABI முழுமையா எடுக்கமுடியாது.
ரயிலுல நாம ஏறுவதற்க்கும், ரயிலு நம்ம மேலே ஏறுவதற்கும் வித்தியாசம் சொல்லு ?
ரயிலுல நாமஏறினா போறஇடம் இராமேஸ்வரம், ரயிலு நம்ம மேலே ஏறினா போறஇடம் எமனேஸ்வரம்.
முட்டாளுக்கும், அறிவாளிக்கும் வித்தியாசம் சொல்லு ?
என்னத்தையாவது கேட்கிறவன் முட்டாள், எதையாவது சொல்லி சமாளிக்கிறவன் அறிவாளி.
சரி எனக்கு வேலையிருக்கு, நான் வர்றேன்.

33 கருத்துகள்:

 1. தத்துவங்கள் பிரமாதம். இன்னும் கொஞ்ச நாள் கோயமுத்தூர்லயே இருந்தீங்கன்னா, தத்துவத்தில உங்களை மிஞ்சறதுக்கு ஆளே இல்லை.

  பதிலளிநீக்கு
 2. சிரிப்பும் சிந்திக்கவும் வைக்கும் பகிர்வு இன்னும் டுபாய் வரவில்லைப்போலும்[[[[[[[[[[[[[[[

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஜி
  பாட்டுக்கு பாட்டு எதிர்ப்பாட்டு.. நன்றாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. செம காமெடி தான். ஆனா பல இடத்தில் இப்படி மனைவியின் காலைவாரலாமா கில்லர் அண்ணா!

  பதிலளிநீக்கு
 5. ஓஹோ.. இப்படியும் இருக்கின்றதா!..
  அபுதாபியை விட அங்கே வெயில் அதிகம் என்று சொன்னார்கள்!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 6. மிக அருமையான நகைச்சுவை பதிவு. சிந்திக்கவும் வைத்தது.
  த ம 5

  பதிலளிநீக்கு
 7. கேள்வி பதில் பிரமாதம்.
  ரசித்தேன் சிரித்தேன்.

  பதிலளிநீக்கு

 8. ‘வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி’ என பட்டம் பெறுவது போல் முனைவர் பழனி.கந்தசாமி ஐயா அவர்களே, நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் கோவையில் இருந்தால் தத்துவத்தில் உங்களை மிஞ்ச ஆளே இருக்கமாட்டார்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லிவிட்டார்கள். ம்.ம். அப்புறம் என்ன. தத்துவத்தில் ஜமாய்க்கவேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 9. சபாஷ் சரியான கேள்விகளும்..பொருத்தமான பதில்களும்.....!!!!!!!

  பதிலளிநீக்கு
 10. நண்பரே!
  எதையாவது கேட்டு தங்களிடமிருந்து ஏடாகூடமாக எதையாவது வாங்கிக் கொள்ளும்
  என்னைப் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி!
  மனைவியின் பேச்சு தேள்கடி!
  மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல!
  ராமேஸ்வரம், எமனேஸ்வரம்
  தத்துவ பதில்கள் சென்னை வெயில் படுத்தும் கொடுமையா சாமி!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 11. பெயரில்லா7/19/2015 4:07 பிற்பகல்

  அப்பா! கேள்வியால் .......
  நல்ல ஆராய்ச்சி தான்....
  ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 12. நல்ல கேள்வி.... நல்ல பதில்! :)

  ரசித்தேன்.

  த.ம +1

  பதிலளிநீக்கு
 13. நகைச்சுவை ...ரசித்தேன்.
  தம 10

  பதிலளிநீக்கு
 14. நல்ல நகைச்சுவையான பதிவு. கேள்வியும் பதிலும் அற்புதம் சகோ.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோ,
  மோதலாலும் காதல் வரும்,,,,,,,,,
  அனைத்தும் அருமை,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. நண்பரே...

  கோக்கு மாக்கு என்றாலும் மிக வளமான சிந்திக்கவும் வைக்கும் கற்பனை !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html#comment-form
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 17. ஆத்தாடி வர வர ஜி....... ம்..ம்..ம் சரி சரி சரி நடத்துங்க நடத்துங்க ......அணிஹ்டும் ரசித்தேன் ....!

  பதிலளிநீக்கு
 18. தத்துவங்கள் அருமை. நன்கு வித்தியாசமாக சிந்திக்கின்றீர்கள்.

  பதிலளிநீக்கு
 19. மோதலாலே வரும் காதலும் உண்டே!

  பதிலளிநீக்கு
 20. பரமக்குடி எமனேஸ்வரத்தில் செய்வினை வைப்பவர்கள் இருப்பதாக அறிகிறேன் ,எதற்கும் கோக்கு மாக்கு கோபாலை ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்லவும் :)

  பதிலளிநீக்கு
 21. நான் சொல்ல நினைத்ததியே புலவர் ஐயா சொல்லி விட்டார்.
  ஆகா!

  பதிலளிநீக்கு
 22. கேள்வியும் அதற்கு தந்த விடைகளும் கலக்கல்! எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கின்றீர்களோ! நகைச்சுவை மிளிர்ந்தாலும் சிலவற்றில் உண்மையும் நிழலாடுகின்றது! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் சகோதரரே.

  நலமா? கேள்விகளும் , அதற்கேற்ற ஆணித்தரமான பதில்களும் அருமையாகவும் சுவையாகவும் இருந்தது. இந்த மாதிரியெல்லாம் நகைச்சுவையாகவும், சிறப்பாகவும் சிந்திக்க தங்களால்தான் இயலும் . வாழ்த்துக்கள் .

  தாயகப் பயணம் உற்சாகத்துடன் மகிழ்வாக நலமே சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 24. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.
  த.ம.17

  பதிலளிநீக்கு
 25. ஹஹஹஹஹ கேள்வியும் நானே பதிலும் நானே நல்லாருக்கு...ஆனா மோதலினால் காதல் வராதா என்ன ஜி எந்த உலகத்துல இருக்கீங்க ஜி?!!!! அந்தக் காலத்துலருந்து இந்தக் காலம் வரைக்கும் மோதித்தானே ஜி காதலே வளருது...அதைத்தானே திரைப்படமும் சொல்லுது....அதுக்கு 1 மார்க் மைனஸ்....அடுத்த கேள்வி அந்த கோயில் அட என்னங்க நீங்க விவரம் தெரியாத பச்சைப் புள்ளயாட்டம்...கோயில்ல திருடறவனும் அந்த சாமிய வேண்டிக்கிட்டுத்தான் திருடறான்...நீங்க பார்த்தது இல்ல? வெள்ளைத் துண்டு போட்டு/இல்லைனா ஆரஞ்சு கலர், நெத்தி நிறைய விபூதி குங்குமம் போட்டு அவங்களும் பக்தன் தானுங்க..ஹ்ஹஹஹ் ஸோ 1 மார்க் மைனஸ் அப்படியாக 2 மார்க் மைனஸ்.....ஹஹஹஹஹ்ஹ்

  ரசிச்சோம் ஜி!! ரூம் போட்டு யோசிக்கிறீங்கனு சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 26. வெளுத்துக் கட்டியிருக்கீங்க!! எப்படி கில்லர்ஜீ இப்படி.....!!

  தமிழ்மணம் பட்டையை எங்க கில்லர்ஜீ காணோம்?

  பதிலளிநீக்கு
 27. மகன் மருமகன், ஒரிஜினல் டூப்ளிகேட்..

  அருமை.

  God Bless You

  பதிலளிநீக்கு
 28. எப்படி இந்தப் பதிவு இன்றுதான் என் டேஷ் போர்டில்? ரசிக்க வைத்த கேள்வி பதில்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு